ads

Thursday, 25 April 2013

சீனா நம்பத்தகுந்த நண்பன் இல்லை!!




அந்த காலத்தில் நாடு பிடிக்கும் ஆசையில் வெறிபிடித்து திரிந்த மன்னர்கள் மாதிரி, எல்லைகள் தோறும் தொல்லைகளை வளர்ந்துக் கொண்டே போகிறது சீனா. 

முரட்டு ராணுவ பலத்தை வைத்திருக்கிற தைரியத்தில் அண்டை நாடுகளுடன் அனுசரித்து போவதே இல்லை.

இந்தியா விஷயத்திலும்  இதே கதைதான். உங்களுக்கு தெரியுமா? 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஓரம் உள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் கடந்த 3 ஆண்டுகளில் சீனா இதுவரை 600 முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்பது. 



குறிப்பாக கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரத்து 800 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் தான் சீனா, பலமுறை அத்துமீறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 சீன ராணுவத்தினர், ஊடுருவதும் பின் அங்கு தற்காலிக முகாம்களை அமைத்து கொள்வதும், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும்  தன் பழைய நிலைக்கு திரும்புவதுமாக   அட்டூழியம் செய்து வருகின்றனர்.



இது தொடர்பாக இந்திய தேசிய ஆலோசகர் சிவசங்கரமேனன் சீன ஆலோசகருடன் நடந்த பல சுற்று பேச்சு வார்த்தையின் போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை சீன ராணுவத்தினர் எல்லை மீறும்போதும், இந்திய ராணுவ உயரதிகாரிகள் கொடிநாள் கூட்டம் போட்டு சீனாவின் அத்துமீறல்களை கண்டித்து வருகின்றனர்.



கொடிக் கூட்டம் என்பது, ஒரு நாட்டின் பகுதிக்குள், இன்னொரு நாடு ஊடுருவும் போது, பதட்டத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் முதல் நடவடிக்கை.

இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, இக்கூட்டம் நடக்கும். பிரச்னை சிறியதாக இருந்தால் பிரிகேடியர்கள் அளவிலும், பெரிதாக இருந்தால் கமாண்டர்கள் மட்டத்திலும் கூட்டம் நடக்கும். 



இதற்கிடையில், கடந்த வாரம் சீன மக்கள் விடுதலைப்படையைச் சேர்ந்த சுமார் 20 ராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவிய தகவல் வெளியானது. 

இதை மத்திய அரசோ, ராணுவ அமைச்சகமோ சொல்லவில்லை. ஊடகங்களில் செய்தி வெளி வந்த பிறகு உறுதி படுத்தினார் அமைச்சர். 

அதாவது வடக்கு லடாக் பகுதிக்குள் நுழைந்த ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 6 மைல் (10 கிலோ மீட்டர்) தூரத்துக்கு வந்தனர். 

மலைப் பாங்கான ஒரு இடத்தில் வெட்டவெளியில் அவர்கள் முகாம் ஒன்றையும் அமைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய ராணுவத்தின் 5-வது பட்டாலியன் படைப்பிரிவு ஒன்று அங்கு விரைந்தது. 

சீன ராணுவம் அமைத்த முகாமில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்திய ராணுவம் தற்காலிக கூடாரம் அமைத்துள்ளது.

சீன ராணுவத்தினர் நுழைந்துள்ள இடம் இந்திய பகுதிக்கு சொந்தமானது என்ற பேனர்களை இந்திய வீரர்கள் அசைத்துக் காட்டியும் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில், இந்த அத்துமீறல் தொடர்பாக ஜம்மு, காஷ்மீர் மாநில உள்துறை மந்திரி சாஜத் கிச்லூ மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவசர கடிதம் எழுதினார்.

இதனையடுத்து, இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் அவசரம் பயணமாக இன்று ஜம்மு விரைந்தார். 

ஆக்கிரமிப்பு நடந்த பகுதியில் 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர் சீன ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா விஷயத்தில் இந்தியா இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிருக்கிறது.  சீனா நம்பத்தகுந்த நண்பன் இல்லை என்பது மட்டும் உண்மை.

1 comment:

  1. பாகிஸ்தான்,இலங்கை தான் நம்பமானவர்கள்

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...