Follow by Email

Thursday, 31 January 2013

கமல் எனக்கு எதிரி இல்லை.!!விஸ்வருப விஷயத்தில் தமிழக அரசின் பிடிவாத போக்கு மாறி இருக்கிறது. இதை உண்மை  என்றும் அப்படியே எடுத்துக்கொள்ளவும் முடியாது. மேல் முறையீட்டு வழக்கில் அரசின் வாதம் என்பதை பொறுத்தே  ஒரு முடிவுக்கு வர முடியும்.

எது எப்படியோ... இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதை உங்களுக்கு தருகிறேன்.  தமிழக முதல்வரின் அறிக்கை என்பதால் ஏற்றுக்கொள்வோம்.


இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, மாநில டி.ஜி.பி., ராமானுஜம், தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கடந்த சில நாட்களாக, விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எதையும் முறையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதையடுத்து, இதற்கு விளக்கமளிப்பது எனது கடமை. 

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது முதல் கடமை. இதை சிலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்களது வேலைகளை செய்ய வேண்டும். 

விஸ்வரூபத்திற்கு அனுமதி அளித்திருந்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையின் காரணமாகவே அப்படம் தடை செய்யப்பட்டது. 

அதை மீறி, அது திரையிடப்பட்டிருந்தால், வன்முறை ஏற்பட்டிருக்கும். தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியாகும் 524 தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 31 ஆயிரத்து 440 போலீசார் தேவை. 

ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 91 ஆயிரத்து 807 தான். அசம்பாவிதங்களை தடுப்பது தமிழக அரசின் கடமை. நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே படம் தடை செய்யப்பட்டது. 

ஜெயா டி.வி., அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த டி.வி.,யில் எனக்கோ, அ.தி.மு.க.,வுக்கு எந்த பங்கும் இல்லை. மேலும், கமல் மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. 

கடந்த 1980ம் ஆண்டுகளில் நடந்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறும் விஷயங்கள் மிகவும் கேலியானது. அப்படி ஒரு கடிதத்தையே நான் எம்.ஜி.ஆருக்கு எழுதவில்லை. 

எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த எனக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்த கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பேன். 

வேட்டி கட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவார் என கமல் பேசியதாலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. நான் கடந்த 30 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். யார் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். 

நாட்டிலுள்ள 100 கோடி மக்களே பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். கமல் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர் எனக்கு போட்டியாளரும் இல்லை. எனவே இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது உண்மையல்ல. 

சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. 

கமல் பெரிய முதலீட்டில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை விமர்சித்திருக்கும். 

அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது. இருதரப்பும் சுமூகமாக பேசி இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ள முன்வந்தால், தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday, 30 January 2013

விஸ்வருபம் - இதுவரை


விஸ்வருபம்  பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு செல்கிறதே தவிர அடங்கியப்பாடில்லை. 

விஸ்வரூபத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளது என சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து படத்தை தடுப்போம், பிரச்சனை செய்வோம் என்றன. தமிழக உள்துறை செயலாளரிடம் தடை மனு தந்தார்கள். 

அரசும் தடை விதித்தது. இஸ்லாமிய இயக்கங்கள் மாபெரும் வெற்றி என குதித்தார்கள். தமிழகம் தவிர்த்து பிறயிடங்களில் படம் வெளியானது. 

இஸ்லாமிய இயக்க தலைவர்கள் குறைபட்டுக்கொண்டது போல் இஸ்லாத்தை தாக்கும் காட்சிகள் படத்தில் கிடையாது என தமிழகத்துக்கு வெளியே இருந்து கருத்துகள் வந்தன. 

ஆனாலும் சில இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாம் பற்றி எப்படி படம் எடுக்கலாம் என பேசப்பேச கருத்தாளர்கள், நடுநிலைவாதிகள், இஸ்லாத்தை சகோதரத்துவத்தோடு பார்த்த பொதுமக்கள் ‘அவர்களை’ வெறுப்பாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 

உயர்நீதிமன்ற தனி நீதிபதி படம் பார்த்து ஆட்சேபகரமான கருத்துக்கள் இல்லை என 29ந்தேதி இரவு 10 மணிக்கு படம் வெளியிடலாம் என தீர்ப்பு தருகிறார். 

மறுநாள் காலை படம் தமிழகத்தின் சிலயிடங்களில் திரையிடப்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தியேட்டர் அதிபர்களை மிரட்டி படத்தை நிறுத்தினார்கள். 

டிவிஷன் பெஞ்ச் முன் தமிழகரசின் தலைமை வழக்கறிஞர் தடைக்கேட்கிறார். தலைமை நீதிபதியும் வழங்;குகிறார். 

சில இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜெ அரசு விஸ்வரூபத்துக்கு எதிராக கிளம்ப வேண்டிய அவசியம்மென்ன ?. பின்னணியென்ன ?. 

சில இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாத்தை பற்றி பத்திரிக்கைகள், மீடியாக்கள், எழுதினாலோ, பேசினாலோ, கருத்து சொன்னாலே அவர்களை மிரட்டுவது, கும்பலாக சென்று போராட்டம் செய்வது, அவர்களை அநாகரிகமாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இது சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மறுக்கப்பட முடியாத உண்மை. 

கமல் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளான தாலிபான்கள் - அமெரிக்க படை மீதான மோதல் பற்றி 100 கோடி செலவில் படம் எடுக்கிறார். 

அதில் அந்த தீவிரவாதிகள் தொழுவது, குரான் ஓதுவது போன்ற காட்சிகள் வருகின்றன. இதனை பிடித்துக்கொண்டு எதிர்ப்பு என்ற கோஷத்தை கையில் எடுத்துள்ளார்கள். 

தற்போது பிரச்சனையை கையில் எடுத்துள்ள இயக்கங்களின் நோக்கம் மதம்மல்ல, படத்தை எதிர்க்க வேண்டும் தங்களை பிரபலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே தவிர இதன்பின்னால் வேறு ஒன்றும்மில்லை. 

ஜெ கமலுக்கு எதிராக களம்மிறங்க காரணம் ?. 

100 கோடி ரூபாய் செலவில் தீவிரவாதிகள் பற்றி எடுக்கப்பட்ட படத்துக்கு எப்படியும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என துப்பாக்கி படத்துக்கு நேர்ந்த நிலையை கண்ட கமல் முதல்வர் ஜெ வின் ஜெயா டிவிக்கு டிவி ஒளிப்பரப்பு உரிமையை விற்க முடிவு செய்தார். 

அதன்படி பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஜெ டிவி நிர்வாகம் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்க தொடங்கினார். விலை பேச்சுவார்த்தை நடந்த போது, இரு தரப்பு பிரச்சனைகள் கமல் முன் நின்றன.

ஆவை இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பு, அடுத்து தியேட்டர் பிரச்சனை. விஸ்வரூபம் முதலில் டி.டி.எச்சிலா?, தியேட்டரிலா? என்ற பிரச்சனை நடந்து வந்தது. 

தியேட்டர் அதிபர்கள் ஓன்றுகூடி கமலை எதிர்த்தபோது கமல் சட்ட போராட்டத்துக்கு தயாரானார். ஜெ அரசாங்கம் கமல்க்கு ஆதரவு என்பது போல் காட்டியது. 

தியேட்டரில் தான் முதலில் என்ற முடிவுக்கு வந்தபோது ஜெவுடனான சாட்டிலைட் உரிமை பேச்சுவார்த்தையும் முறிந்திருந்தது. 

அடிமாட்டு விலைக்கு கேட்டதால் படத்தை ஸ்டார் விஜய்க்கு விற்றுவிட்டார் கமல். இதில் ஜெவுக்கு கமல் மேல் ஆத்திரம். 

இந்தநிலையில் தான் சில இஸ்லாமிய இயக்கங்கள் விஸ்வரூபத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. படத்தை தடை செய்ய வேண்டும்மென குதித்தன. 

உள்துறை செயலாளரிடம் மனு தந்ததும் இதற்காகவே காத்திருந்த ஜெயா அரசின் அதிகாரிகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி விஸ்வரூபத்துக்கு தடை போட்டனர். 

ஒரே நேரத்தில் 32 மாவட்ட கலெக்டர்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என இரண்டு வாரம் தடை போடப்பட்டது.

நீதிமன்ற விவாதத்தில் தமிழகரசின் தலைமை வழக்கறிஞர் படத்தை தடை செய்ய வேண்டும் என எடுத்து வைக்கப்பட்ட வாதங்களே எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல எனச்சொல்லாமல் சொன்னது. 

சில இஸ்லாமிய இயக்கங்கள் மட்;டுமே இந்தப்படத்தை தடுக்கிறார்கள் என இருந்ததை இல்லையில்லை நாங்களும் தடுக்கிறோம் என்பதை வெட்டவெளிச்சமாக்கியது தமிழகரசின் செயல்பாடுகள். 

ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என கமலை சில இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து பேசியபின் அறிவித்தார். இருந்தும் தமிழ்நாடு தவ்ஹ{த்ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி போன்ற சில அமைப்புகள் மீண்டும் தலைமை செயலகம் சென்று மனு தந்தள்ளார்கள். 

விஸ்வரூபம் படத்தின் மூலம் ஜெ சாதித்துக்கொண்டது. 

 விஸ்வரூபம் படத்தை தடை செய்து நான் இஸ்லாமியர்களுக்கு நண்பன் என்ற முகமுடி போட்டுக்கொண்டார். இதனால் அதிமுக ஆதரவு இஸ்லாமிய அமைப்புகள், சில தீவிர பிற்போக்குவாத இஸ்லாமிய அமைப்புகள் சந்தோஷப்படுத்தி வரும் நாடாளமன்ற தேர்தல் கூட்டணியில் ஒரு கட்சியை இணைத்துக்கொண்டார். 

 தன் சேனலுக்கு சாட்டிலைட் உரிமையை தராத கமல்ஹாசனை தன்னிடம்முள்ள முதல்வர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார். 

எந்த படமாகயிருந்தாலும் நான் கேட்ட விலைக்கு கிடைக்கனும் என திரைத்துரைக்கு விஸ்வரூபம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 விஸ்வரூபம் படத்துக்கு எதிராக சில இஸ்லாமிய இயக்கங்கள் குரல் கொடுத்தன. அவர்களை தன் நடவடிக்கையால் ஒன்றிணைத்த ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவு தந்ததன் விளைவாக வாய்க்கு வந்தப்படி பேசிவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனைத்தான்   ஜெ விரும்பினார். 

இஸ்லாமிய இயக்க தலைவர்கள் தங்கள் மோசமான பேச்சுகளின் வாயிலான இஸ்லாமியர்கள் ‘மோசமானவர்கள்‘ என்ற பிம்பத்தை மாற்று மதக்காரர்களிடம் பதியவைத்துவிட்டார்கள். 

 இந்த உண்மைகளை உணராமல் ஜெ தங்கள் மதத்தை காக்க வந்த இறை தூதராக போற்றி புகழ்கின்றனர் இஸ்லாமிய இயக்கத்தினர். 


நன்றி : மனசாட்சி பிளாக் ஸ்பாட் .காம் 

வெற்றி பெறுவோம் கமல் பேட்டிவிஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம், நீதி கிடைக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள  தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன்  வரும் 1 ம்தேதி, மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. 

அதற்காக, நான் மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்பட மகிழ்ச்சியில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். 

எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். 

தாங்கள் இங்கு பெருந்திரளாக கூடியுள்ளதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். 

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில், கமல் ரசிகர்களை சந்தித்தார். 

இதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக கமல் தன பேட்டியில் சொன்னதை  தொடர்ந்து, கமலின்  ரசிகர்கள் தங்களால் இயன்ற  நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட் டிராப்ட்களை, கமலிடம் அளிக்க அங்கு வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வருபம்-விஜயகாந்த் பேட்டிவிஸ்வரூபம் படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவது தெரிந்த விஷயம். இதுநாள் வரை, வாய் திறக்காமல் இருந்த விஜயகாந்த் நேற்று மாலை கமலை சந்தித்தார். கமலுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தவர் அளித்த பேட்டி இது. 

படத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்தை விட்டே வெளியேறப் போவதாகக் கமல் கூறியுள்ளது என் மனதை வருத்தப்பட வைத்துள்ளது. 

சினிமாவுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட மகா கலைஞனை தமிழக அரசு புண்படுத்திவிட்டது. அவர் எங்கும் போகக் கூடாது.

இந்த நெருக்கடிக்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த அரசு விளக்கியே தீர வேண்டும்.

கமல்ஹாஸன் தன் படத்தை ஆளுங்கட்சி தொலைக்காட்சிக்கு விற்க மறுத்தது காரணமா? 

ஒரு விழாவில் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக அமர்வதை விரைவில் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னது காரணமா? 

அல்லது அரசின் நெருக்கடிக்கு பணியாமல் சட்டத்தை நாடியது காரணமா? 

இதனை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த அரசு என்று கூறியிருக்கிறார்.

தாமதமாக வந்தாலும் கேள்வி சரிதான். 

விஸ்வருபம் - சிந்திக்க சில நிமிடம்

அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே, அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக ).. 

விஸ்வரூபம் பிரச்சினையின் "உண்மை ரூபத்தை" தற்போது அறிந்திருப்பீர்கள். 

நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும். 

விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ? 

அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ? அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ? 

திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே... டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ? 

அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ? 

நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்.... நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ? " 

இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்" என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ? 

நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை. ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது. 

ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது. நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல, ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை. 

இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள். இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும். 

தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது. 

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது. இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை. 

அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள். 

அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள், உண்மையானவர்களை உணருங்கள். 

ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள். 

கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள். ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். 

நாம் என்றும் நாமாக இருப்போம். மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்....!

mohamed fareed-inthonosiya

நன்றி - தினமலர் 

விஸ்வருபம் - மத்திய அரசுகவனம் செலுத்துகிறது.விஸ்வருபம் படம் சம்மந்த பட்ட அனைத்து முடிவுகளும் கோர்ட்டின் கையில் இருப்பதால், என் கருத்தை இப்போது சொல்லவில்லை. வழக்கு முடியட்டும். இதை பற்றி விரிவாகவே பேசுவோம்.

இப்போது இப்பிரச்சனை தொடர்பாக , மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷின்டே, வெளிப்படையாகவே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

நமக்கு  ஒரு அரசியல் சட்டம் உள்ளது. இது ஒரு சுதந்திர நாடு. பரிபூரண கருத்துச் சுதந்திரம் உள்ளது. விஸ்வரூபம் படம் மாநில அரசால் தடை செய்யப்பட்டது குறித்து, மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது என்றார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில், சில மாநில அரசுகளிடம்  இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. 

இவை தொடர்பாக நாம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம். குறிப்பிட்ட இந்த திரைப்பட தடை விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்து வருகிறோம். சில தகவல்களை சேகரித்துள்ளோம்  என்றார்.

அனேகமாக இது தொடர்பாக கவர்னரிடம் விளக்கம் கேட்கலாம் என்றே தெரிகிறது. 

Tuesday, 29 January 2013

விஸ்வருபம் - நல்லதே நடக்கும் நம்புவோம்!!


முதலில் முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பால் தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. . 

இதனை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பேசி தீர்த்துக்கொள்ள வழிகள் இருந்தால் ஆராய வேண்டும் என்று அறிவுரை சொன்னது.  ஆனால் கமல் அவ்வழியை தவிர்த்தார். 

காரணம்... இவ்விஷயத்தில் தமிழக அரசு தவறு செய்து விட்டது என்று அவருக்கு சொல்லப்பட்டது. 

அது மட்டும் அல்ல, தணிக்கை குழு ஆராய்ந்து  சான்றிதழ் அளித்த பிறகு அதை தடை செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் சொல்லப்பட்டது. அதனால் அதிகாரிகளுடன் பேசுவதை கமல் தவிர்த்தார். 

படத்தில் தடை செய்கிற அளவிற்கு ஏதும் காட்சிகள் இருக்கிறதா என்று நீதிபதி படத்தை பார்த்தார்.  

அதன் பிறகு  இன்று விசாரணை துவங்கப் பட்டபோதுதான் விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வாதம் வைக்கப்பட்டது.

அதுமட்டும் அல்ல, தணிக்கை குழுவை சேர்ந்த நான்கு பேர் மட்டுமே ஒரு படத்தை பார்த்து சான்று அளிப்பதை ஏற்க முடியாது.

அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார் தலைமை வக்கீல் நவநீத கிருஷ்ணன்.

தமிழகம் முழுவதும் படத்தை தடை செய்கிற அளவிற்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதா? அப்படி  என்னதான் நடந்தது என்று தமிழக அரசு விளக்க வேண்டுமென   கமல் தரப்பில் வக்கீல் பி.எஸ்.ராமன்  எதிர்கேள்வி எழுப்பினார்.

பின் மதிய இடைவேளைக்கு பின் கோர்ட் கூடியது. அப்போது கமல் தரப்பு வக்கீல் இப்படம் கேரளா மற்றும் ஆந்திராக்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

குறிப்பாக கேரளாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலபார் என்ற பகுதியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதோடு சட்டப்படி சென்சார் செய்த படத்தை தடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.

மேலும் படத்தில் இந்திய முஸ்லிம் அமைப்புகளை பற்றி எந்த ஒரு தவறான காட்சிகளும் இல்லை.

முஸ்லிம் அமைப்பினரை புண்படுத்தும் காட்சிகள் ஏதும் இல்லை. இதை நீதிபதி அவர்களும் அறிவீர்கள் என்று குறிப்பிட்டார்.

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை வாதம் வேறு வகையில் திசை திரும்பியது. இந்த வழக்கை தொடுக்க கமலுக்கு உரிமையில்லை.

படத்தை எடுத்து விநியோகம் செய்த பிறகு அவருக்கு படத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என்றார்.

தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல் அரசின் வதம் தவறானது. படத்தின் அணைத்து அம்சங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் வெளியிட தகுதி இல்லாத 14 காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே படம் திரையிட அனுமதி வழங்கப்பட்டது என்றார்.

இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று இரவு 10.00 மணிக்கு தீர்ப்பு வழங்க படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லதே நடக்கும் நம்புவோம்.


விஸ்வருபம்- கமலுக்கே சொந்தமில்லை. ஒரு தடாலடிஒரே காமடிதான் போங்கள்.  விஸ்வருபம் படத்தை தடை செய்தது தவறு என்று கமல் கோர்ட் கதவை தட்டி இருக்கிறார்.  

இது என்ன கூத்தா இருக்கு இந்த படம் கமலுக்கே சொந்தமிலை என்று அரசு தரப்பு வக்கீல் போட்டார் பாருங்கள் ஒரு போடு. 

அது என்ன? 

அதுதான் படத்தை எடுத்து  வியோகஸ்தர்களுக்கு விற்று விட்டாரே. அதன் பிறகு இது என் படம் என்று சொல்ல கமலுக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிறார். 

சரிதான் போங்கள். என்ன ஒரு வாத திறைமை. 

விஸ்வருபம் தடை - அடடா..இதுதான் உண்மையா?


விஸ்வருபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது தெரிந்த விஷயம். 

இது நாள் வரை இஸ்லாமிய அமைப்பினர் வேண்டுகோளுக்கு இணங்கவே படம் தடை செய்யப்பட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள்.  

ஆனால் இப்போது தான் உண்மை வெளியே வந்திருக்கிறது. 

அதாவது...!

விஸ்வருபம் படத்திற்கு மத்திய தணிக்கை குழு  சான்றிதழ் அளித்திருந்தாலும், அது முறையாக இருக்கிறதா என்று  சரிபார்க்கவே இரண்டு வாரங்களுக்கு படம் தடை செய்யப்பட்டது என்று தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது. 

படத்தை தடை செய்தது தவறு என்று தான் கமல் கோர்ட்டை நாடி இருக்கிறார்.  

மத்திய தணிக்கை குழு ஆராய்ந்து படத்தை வெளியிடலாம் என்று சொன்ன பிறகு, பல இடங்களில் படம் வெளியான பிறகு இப்படி ஒரு வாதம் தமிழக அரசால் வைக்க படுகிறது.  

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்... இன்னும் என்னென்ன வாதம் வருகிறது என்று. 

Monday, 28 January 2013

படத்தை தடை செய்யும் உரிமை தமிழக அரசுக்கு இல்லை.உலக நாயகன் கமல்ஹாசன் கைவண்ணத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் விஸ்வருபம் படத்திற்கு தமிழக அரசாங்கம் இரண்டு வார கால தடை விதித்துள்ளது. 

ஆனால் விஸ்வருபம் படத்தை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

டில்லியில் இது தொடர்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது. 

படங்களை வெளியிட அனுமதி அளிப்பது தொடர்பான விஷயத்தில் தணிக்கை குழுவின் கருத்து மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இயக்குனர் பிரகாஷ் ஜா வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. 

ஒரு படத்தை தடை செய்வது என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் வரவில்லை. குறிப்பாக தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு ஒரு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 246, ஏழாவது அட்டவணை பட்டியல் ஓன்று பதிவு 1, சினிமா படங்களை திரை இடுவதற்கு சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது.

எனவே ஒருமுறை மத்திய தணிக்கை குழு படத்தை திரையிட அனுமதி அளித்த பிறகு பிற அனைத்தையும் அது கட்டுப்படுத்தும்.

திரைப்பட காட்சி சட்டத்தின் அனைத்து வழிவகைகளையும் உச்ச நீநிதிமன்றம் ஆராய்ந்தது. இந்த ( தணிக்கை குழுவின் ) அதிகாரத்தை அரசியல் சாசன சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கி உள்ள சட்டம் ஒழுங்கு அதிகாரத்திற்கு எதிர் நிலையில் வைத்துள்ளது.

எனவே தமிழக அரசு  பிரகாஷ் ஜா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை மிக கவனமாக ஆராய வேண்டும்.

ஏனனில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக அது மோதுகிற வகையில் அமைந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: மக்கள் ஓசை, மலேசியா

Sunday, 27 January 2013

குடியரசு தினம் அன்றும் - இன்றும்


பாவிகளுக்கு முடிவு கட்டுங்கள்!


இந்தியா என்றில்லை, உலகம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. 

உலகை அச்சுறுத்தும் தீவிரவாதத்திற்கு பின்னால் இருப்பவர்களின் ஒரே நோக்கம், அமைதியை குலைப்பது, அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பது, வகுப்பு ஒற்றுமையை, சகிப்புத்தன்மையை குறைப்பது, தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிப்பது என்பதுதான். 

இதற்கு தெரிந்தோ, தெரியாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

சில ஆயிரங்களில் இருக்கும் தீவிரவாதிகள் தான் கோடிக் கணக்கானவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வருகிறார்கள். 

இருக்கட்டும்.


இப்போது இந்தியாவில் தீவிரவாத சிந்தனைகள் மட்டும்மல்ல, மத ரீதியான உணர்வுகளும், ஜாதி வெறியும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

கல்வியும், அறிவும் வளர்ந்த அளவிற்கு பகுத்தறிவு வளர்ந்திருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. அகலமாக  வேண்டிய அறிவு மனப்பான்மை, ஜாதி  மதம் என்று  சிக்குண்டு குறுகிய வட்டத்திற்குள் மனிதன் வந்து விட்டான்.

காரணம் என்ன?

தங்கள் சுயலாபத்திற்காக, அரசியல் நோக்கத்திற்காக முளை சலவை செய்து, ஒன்றும் அற்ற அப்பாவிகளை பலிகடாவாக்கி கொண்டே போகிறார்கள் அரசியல் பிழைப்புவாதிகள்.

தேசியக்கட்சிகள் அரசியலில் பிழைத்திருக்க மாநில கட்சிகளின் தயவு தேவை. மாநில கட்சிகள் அரசியலில் பிழைத்திருக்க, குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க அலையும் சாதி சங்க தலைவர்களை நாடுவதால் வந்த வினை.

எந்த ஜாதியில் பிறந்த மனிதனாக இருந்தாலும், வாழும் காலத்தில் ஆயிரம் பிரச்சனைகளோடு அல்லாடுகிறான். வறுமையில் வாடுகிறான். வாழ்க்கையோடு போராடுகிறான்.


அப்போதெல்லாம் வராத சாதி சங்கம், இனஉணர்வு, சக மனிதனால், அதாவது மாற்று ஜாதி மனிதனால் பாதிக்கப் பட்டால் போதும், சாதி சங்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது அக்கறை.

எரிகிற வீட்டில் புடுங்கிய வரை லாபம் என்கிற மாதிரி, அதை வைத்து ஆதாய அரசியல் நடத்தவும், தங்களை வளப்படுத்திக்கொள்ளவும் ஜாதி சங்கங்கள் முயல்கின்றன.

இதற்கு உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மனிதன் சிக்குவதுதான் விபரீதம். தங்களை காக்க கடவுளே நேரில் வந்த மாதிரி பின்னால் கூட்டம் சேர்க்கவும், போராடவும் செய்கிறார்கள்.

இதனால் தான் வன்முறை, உயிர் இழப்பு என்பதும் பின்னால் தொடர்கதையாகி விடுகிறது.

அதுமட்டுமல்ல... வேலிக்கு ஓனான் சாட்சி என்கிற மாதிரி, ஜாதிய உணர்வுகளை பெரும் போராட்டமாக வெடிக்காமல் தடுக்க வேண்டிய அரசுகளே ஜாதி சங்கத்தை வளர்க்கும் போது, ஜாதி உணர்வு எப்படி குறையும்?

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நிலைமை மாறி, ஒற்றுமையில் வேற்றுமை என்கிற உணர்வு வரக்காரணம் அரசுகளும், அரசியல்வாதிகளும் தான்.


இதற்கு முற்றுப் புள்ளி எப்படி வைப்பது?

சுயலாப அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் மனது வைத்தால் தான் நடக்கும்.

கொள்கை பிடிப்பில்லாமல் பதவி வெறிபிடித்து அலையும் அரசியல் வாதிகளிடம் இந்த பெரும்தன்மையை எதிர்ப்பார்க்க முடியுமா?

ஜாதி கட்சிகளோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை, நாட்டு நலன், தேசிய நலன் பற்றி சிந்திக்கும் கட்சிகளோடு மட்டும்தான்  எங்கள்  உறவு என்று சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது?

அந்த சாதிக்காரனுக்கு நாலு மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கு, இந்த ஜாதிகாரனுக்கு ஏழு மாவட்டத்தில் வலுவான அமைப்பு இருக்கு.

அதனால் இந்த தொகுதியில் இந்த ஜாதிக்காரனை நிறுத்து என்று லாப நஷ்ட கணக்கு பார்க்கும் அரசியல்வாதிகள் மாறுவார்களா?

அது நடக்கப் போவதில்லை. மக்கள் மாறினால்தான் உண்டு.ஜாதி பெயரை சொல்லி ஓட்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டியது நீங்கள் .

உணர்வுகளை தூண்டிவிட்டு, கூட்டம் சேர்த்து, அந்த கூட்டத்தை காட்டி குளிர் காய நினைப்பவர்களை தனிமை படுத்தி தண்டிக்க வேண்டியது நீங்கள்.

உங்கள் வீட்டு பிள்ளையாய், உங்கள் சேவகனாய், உங்களுக்காக உழைத்து  உயிர் கொடுக்க காத்திருக்கும்  உத்தமர்களை அடையாளம் கண்டு அநாதையாக்க வேண்டியது நீங்கள்.

இது ஜாதி உணர்வுகளுக்கு மட்டுமமல்ல, மத உணர்வுக்கும் பொருந்தும்.மனிதனுக்கு மதம் பிடிக்கலாம். மதம் பிடிக்க கூடாது.  பிடித்தால் என்ன நடக்கும் என்பதை உலகமே உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது தீவிரவாதம் என்ற பெயரில்.

இப்போது மத தீவிரவாதம் காலுக்கு அடியில் இருக்கும் கன்னி வெடி மாதிரி உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.

ஊருக்கு நாலு பெயரை வைத்திருக்கும் மதவாத கட்சிகள் தங்களை பிரம்மாண்டமாக காட்டிக்கொள்ள முயல்கின்றன.  இதற்குள்  சிந்திக்க தெரிந்தவர்கள் சிக்கிவிட கூடாது.

அரிப்பெடுத்து அலையும் இந்த ஆதாயவாதிகள் அடுத்த பாராளுமன்ற தேர்தலை குறி வைக்கிறார்கள்.

அதற்காக கூட்டம் சேர்க்கவும், தங்களை மத காவலர்கள் போலவும்,  போலி வேஷமிட்டு அலைகிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

இவர்களை வளர விட்டால் நச்சு பாம்புக்கு பால் வார்த்த மாதிரி நாடு நாசமாய் போய்விடும்.  இந்த  பாவிகளுக்கு முடிவு கட்டுங்கள்! பாரதம் உருப்படும்.

ஓன்று மட்டும் சொல்வேன். ஓன்று பட்ட இந்தியா துண்டாக  மதம் தான் காரணம் என்பதை மறந்து விட வேண்டாம்.

Friday, 25 January 2013

விஸ்வருபம்- மலேசியாவில் தடை


விஸ்வருபம் திரைப்படம் இன்று மதியம் 12.00 மணி காட்சிகளோடு முற்றிலும் தடை செய்யபட்டிருக்கிறது மலேசியாவில். 

படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருப்பதாக படம் எடுக்கப்பட்ட இந்தியாவிலேயே தடை செய்யப்பட்டிருப்பதால், நாங்களும் அந்த முடிவுக்கு வருகிறோம் என்று மலேசிய அரசாங்கம் சொல்லி இருக்கிறது. 

இதை விட கொடுமை.... அதற்குள் தியேட்டர் பிரிண்ட் போடப்பட்டு cd ஒரு சில கடைகளில் விற்பனை செய்யபடுகிறது. 

படம் பார்த்தவர்கள் சொல்லிய வகையில் படம் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது எனவும், ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு பட காட்சிகள் இருப்பதாகவும் சொன்னார்கள்.  


Thursday, 24 January 2013

விஸ்வரூபம் 15 நாள் தடைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கிறது…
இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து கமலின் விஸ்வரூபம் படத்தை 15 நாட்களுக்கு தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது. 

நிமிடத்திற்கு ஒரு ட்வீட்டை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் எழுதி வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் வந்த எதிர்ப்புக் குரல்களில் சில…

தமிழ் திரைத்துறையினர் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் இறங்க வேண்டும். இல்லையேல் எவனும் படமெடுக்க முடியாது.

கமல் படத்திற்கு தடை. செய்தியறிந்த தாலிபன், அல்-கொய்தாக்கள் தங்கள் ஆயுதங்களை தூக்கியெறிந்தனர். உலகம் அமைதியானது.

தேசியக்கொடியை வெவ்வேறு கோணங்களில் புகைப் ‘படமெடுக்கலாம்’ என்றிருக்கிறேன். அதன் 3 நிறம்சார்ந்த மதங்கள் தடை விதிக்காமலிருக்க வேண்டுகிறேன்

மற்ற மாநிலங்களில் வெளியாகி, சொந்த மாநிலத்தில் தடை என்பதில் வெட்கப்பட வேண்டியது கமல் அல்ல.

இஸ்லாமிய தீவிரவாதிகளை படம்தோறும் அர்ஜூன விஜயகாந்கள் அடித்து துவைத்தபோதெல்லாம் வராத எதிர்ப்பு இன்றுவருவதன் பின்னிருப்பது விளம்பர அரசியல்.

லாஸ் ஏஞ்சல்ஸ்-ல இருந்து திரும்பி வரவேண்டாம். அங்கேயே செட்டிலாகிடுங்க கமல் சார். இவனுகளுக்கு அலெகஸ்பாண்டியன்தான் லாயக்கு.

அத்தனை கோடி மக்கள் சார்ந்த ஒரு மார்க்கத்தின் நிலையை, 32 புனிதர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் போலும்

கழிவறையை உபயோகிப்பது எப்படி என ஒரு படமெடுக்கலாம் என்றிருக்கிறேன். சாதி, இன, மத அமைப்புகள் ஆசிர்வதித்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல படமெடுத்தாலே கொடியை தூக்கிட்டு வந்திடறாங்க! லட்டு தின்னு,பண்ணு தின்னுனு படமெடுத்தா பரவாயில்லை போலிருக்கு!

தசாவதாரத்திற்கு இந்து அமைப்புகள், விஸ்வரூபத்திற்கு இஸ்லாம் அமைப்புகள் எதிர்ப்பு # அவரு அலெக்ஸ்பாண்டியன் மாதிரி 1 எடுத்தாதான் அடங்குவாய்ங்க

நான் ஆந்திரா போயாவது விஸ்வருபம் படம் பார்த்தே தீருவேன்.

Don’t Worry கமல், விடா முயற்சி ‘விஸ்வரூப’ வெற்றி!! வெற்றி நமதே!!

ஒரு கலைஞனை எந்த அளவுக்கு ஒரு சமூகம் தடுக்கமுடியும்,கமல் பீனிக்ஸ் பறவை,வருவார்

விரைவில் சென்ஸார் போர்டு அலுவலக கிளைகள்
அரசியல் கட்சிகள், மதவாத அமைப்புகள், சாதிக்கட்சிகளின் அலுவலகளில் அமைக்கப்படும் எனத் தோன்றுகிறது.. 

நன்றி : டிஜிட்டல் சினிமா 

கி. வீரமணி வேண்டுகோள்


விஸ்வரூபம் பட பிரச்சனையில் இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சனையை பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவராலும் ‘உலக நாயகன்’ என்றழைக்கப்படும் பெருமைமிகு நடிப்புத்துறை கலைஞர் கமலஹாசன், 

தமிழ் நாட்டின் அரிய கலைச் செல்வம். சிறுவயதிலிருந்து இன்றுவரை வளர்ந்துள்ள ஒப்பற்ற கலைத்துறை மாற்றுச் சிந்தனையாளர், மனிதநேயர், பகுத்தறிவாளர்.

அவர் பல வகையில் புதுமையைப் புகுத்த எண்ணுபவர்; எனவே, எதிர்ப்புக் காட்டுவது பழைமையையே கெட்டியாகப் பிடித்துள்ள நம் நாட்டவருக்கு இயல்பேயாகும்.

அவரது ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படத்திற்கு, இஸ்லாமிய சகோதரர்களையும், அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஆங்காங்கு இஸ்லாமிய சகோதரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக நமது அன்பான வேண்டுகோள்: 

இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்து கொண்டு, நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படிச் செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.

அடிப்படையில் நண்பர் கமலஹாசன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்; யார் மீதும் வெறுப்பு கொள்பவர் அல்ல.

எனவே, அவரது திரைப்படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல, அவர் ஈடுபட்டுள்ள கலைத்துறை, திரையரங்க உரிமையாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும், பேராதரவினையும் பெறவேண்டியவர்.

இன்று அவர் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை பற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

பேசித் தீர்வு காண முடியாத பிரச்சினையாக இது ஆகக் கூடாது. பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம், பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம். 

எனவே, இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவயப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சினையை ஒருவருக்கொருவர் பேசித் தீர்ப்பதோடு, சமூகத்திலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு இடமின்றி நடந்து கொள்வதே அவசர அவசியம். 

இது தான் இரு தரப்பினருக்கும் நமது அன்பு வேண்டுகோள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வருபம் தடை - அநியாயம்


உலக நாயகன் கமலுக்கு ஏற்பட்டிருப்பது  சறுக்கலா? விடபட்டிருப்பது சவாலா? என்ற ஆராட்சி இப்போது தேவை இல்லை. 

ஒரு மாபெரும் கலைஞன் அவமானப்படுத்தபட்டிருக்கிறான்.  ஒரு துளி கூட நியாயமே இல்லாத சேவை வரிக்கு எதிராக ஓன்று திரண்ட தமிழ் திரையுலகம், இப்போது பார்வையாளர் வரிசையில் இருக்கிறது. 

கமல்...!

வித்தியாசமான கலைஞன். நடிப்பில் பல்கலைகழகமாக திகழ்ந்த ஐயா சிவாஜிகணேசனை கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் உண்டு.

எந்த மனிதனும் சிவாஜி மாதிரி நடைமுறை வாழ்க்கையில் இருப்பதில்லை. அவர் ஓவர் ஆக்ட் செய்கிறார் என்று வாதிட்டவர்கள் உண்டு. அந்த மாபெரும் நடிப்பு சக்ரவத்தியையையே  ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கமலை விமர்சிப்பதில்லை.

அவரின் ஆரம்ப கால படங்கள் பல மசாலா படங்கள் வரிசையில் வந்தது.  என்றாலும்  அதையே தொடர்கதையாக கொள்ளாமல், தனித்துவமாக படங்களை தந்தவர் கமல்.

கமலை புத்திசாலி என்பதை விட, மெத்த படைத்த மேதாவி என்பது பொருந்தும்.

பத்து வருடங்களுக்கு பிறகு செய்ய வேண்டியதை முன்னமே யோசிப்பவர் கமல். இதுதான் இவரின் பலம். இதுதான் இவரின் பலவீனம்.

இன்னமும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாதிரி,  குப்பை படங்களை தருகிற தமிழ் திரையில், துருவ நட்ச்சத்திரமாக ஜொலிப்பவர் கமல்.

இதையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.  ஒரு ஆதங்கம்.. இப்படி வார்த்தைகளாக வருகிறது.


இப்போது விஸ்வருபம் பலவகையில் சர்ச்சைக்களை சந்தித்த வண்ணமே இருக்கிறது.

பல தடைகளை தாண்டிய விஸ்வருபம் இப்போது மதவாத போர்வையில் சிக்கி தவிக்கிறது.

சிறு நெருப்பு கிடைத்தாலும் அதை ஊதி பெரிசாக்க நினைக்கும், அரசியல்வாதிகளும், மதவாதிகளும் இப்போது படத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள்.

கமல் ஓன்று மூளையற்ற முட்டாள் அல்ல. ஒரு மதத்திற்கு  எதிராக கருத்துக்களை சொன்னால் படத்திற்கு எதிர்ப்பு வரும் எனபது அவருக்கு தெரியும்.

படத்தின் ட்ரைலர் வெளியான காலம் முதலே இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான படம் என்பது போல் ஒரு புரளி கிளம்பி விட்டது.


எனக்கு கிடைத்த தகவலின் படி, விஸ்வருபம் ஆப்கன்தீவிரவாதிகளை பற்றிய படம்.

அங்கு பெண்களுக்கு எதிராக, மதசட்டம் என்ற போர்வையில்  நடந்த கொடுமைகளை பதிவு செய்கிறது விஸ்வருபம் .

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ட்ரோன் அட்டாக் (உளவு விமான ஏவுகணை தாக்குதல்கள்) ஆபரேஷன்களுக்கு  எதிரான கருத்தை கூறுகிறது. இதில் அப்பாவி மக்களும் கொல்லப்படுவதை விஸ்வரூபம் படம் பல  இடங்களில் சொல்கிறது. வசனங்களிலும், அந்த சாயல் இருக்கிறது.

கமலே சொல்கிறார்.   இப்படம் இஸ்லாமியர்களைப் சிறுமை படுத்துவதாக அமையாது. பெருமைப்படுத்துவதாகவே அமையும் என்று அதையே இப்போதும் கூறி வருகிறார். இருந்தும் எதிர்ப்பு.

படத்தில் சர்ச்சையான  காட்சிகள்   இருந்தால் சென்சார் அனுமதி கிடைத்திருக்காது.

வெறும் வார்த்தை வசனங்களையே துண்டிக்கும் சென்சார், மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் அனுமதி கொடுத்திருக்காது. அதுதான் உண்மை.


வீண் புரளிகளை கிளப்பி, அதன் அடிப்படையில், ஒன்றும் அற்ற அப்பாவிகளை தூண்டி விட்டு, போராட்டம் நடத்த வைத்து, படத்தை வெளியிடாமல் செய்வது பெரும் பாவம்.  இஸ்லாமிய சகோதர்கள் இந்த மாயவலையில் சிக்கிவிட  கூடாது.

அப்படி இருக்காலாம், இப்படி இருக்கலாம் என்ற ஊகங்களுக்கு பலியாகி விடக்கூடாது.

தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் இது போன்ற போராட்டங்கள் தவறான வழிகாட்டலுக்கு முன் உதாரணமாய் இருந்து விடக்கூடாது.

ஹிந்து மதத்தில் இருக்கும் திவீரவாதம் பற்றி கூட பேசப்படும் இந்த நேரத்தில் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை பற்றி சொல்லும்  போது, அகிம்சா சக்கரவர்த்திகள் என்று சொன்னால் அது கேலி கூத்தாக இருக்கும். நெருப்பை நெருப்பு என்றுதான் சொல்ல முடியும்.

தீவிரவாதிகள் ஹிந்துக்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிருஷ்துவர்கலாக இருந்தாலும் சரி, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் படங்களில், உண்மையைத்தான் பேச முடியும்.

இது படம். நம் கண் முன்னாள் நடந்த ஒரு சம்பவத்தை  பதிவு செய்கிறது. முதலில் வெளி வரட்டும். அதில் மதத்தை இழிவு படுத்துவது போன்ற சர்ச்சையான காட்சிகள் இருந்தால்,  திருக்குரானையோ,  நபிகள் நாயகத்தையோ இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருந்தால் எதிர்ப்பது நியாயம்,  முறை.  படத்தை தடை செய்யுங்கள் என்று கேட்டால் கூட அதில் நியாயம் இருக்கிறது.

பொத்தாம் பொதுவாக, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள் என்று வாதிடுவது தவறு.

இந்திய முஸ்லிம் சகோதர்களை தீவிரவாதிகள்  என்று சொல்லவில்லை. ஆப்கன் தான் கதை களம். அங்கு இருப்பது யார்? இருந்தது யார்? அதுதான் படத்தில் சொல்லபட்டிருக்கிறது.

எதிர்க்கும் இஸ்லாமிய சகோதர்கள், கமல் என்ற மாபெரும் கலைஞனின் மனகாயத்தை அதிகப் படுத்தக்கூடாது.

ஒரு பட தயாரிப்பளாராக, ஒரு படத்தின் இயக்குனராக, அதில் நடித்த நாயகனாக பெரும் உழைப்பை, பொருளை மூலதனம் செய்திருக்கிறார்.

அவர் சினிமாவிற்கு  செய்திருக்கும் சேவை மிகபெரியது. நன்றி கெட்ட திரை உலகம் அதை மறந்திருக்கலாம். நீங்கள் மறக்க கூடாது.

உங்களுக்காக பிரத்தியோக காட்சிகள் கூட காட்டப்பட்டிருக்கிறது.  அதில் மாற்றங்கள் வேண்டுமானால் சொல்லுங்கள். மொத்த படமும் தடை என்பது அநியாயம். இதை மனசாட்சி  உள்ள எந்த மனிதனும் சொல்ல முடியாத வார்த்தை.

Tuesday, 22 January 2013

புத்தாண்டு பலன்கள்!!


மேஷம் 

அது அதற்கு ஒரு கவலை. ஐயாவிற்கு பல கவலை என்று சொல்லமுடியா விட்டாலும், ஓரளவு அனுகூலமாக இருக்கும். 

 உங்கள் செயலும் சொல்லும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மலையை கில்லி எலியை பிடிக்க முயற்சிக்கப் போவதில்லை. 

இருப்பினும் வேண்டாத சிந்தனையை அறவே  விடவே முடியாது. இதுவரை இருந்த மன உளைச்சல் மறைமுக எதிர்ப்பு குறைந்த மாதிரி இருக்கும். ஆனால் மறையாது.

புத்தாண்டு பஞ்ச் 

துரத்தி வந்த ஆபத்தொன்று தொலைவில் நிற்பதும், அருகில் வந்த அதிர்ஷ்ட  வாய்ப்பொன்று அடுத்தவர் கைக்கு போவதும் கண் கூடு.

ரிஷபம் 

அள்ளி கொடுத்தால் சும்மா... அளந்து கொடுத்தால் கடன்.  கிரகங்களின்  எண்ண ஓட்டம் இதுதான்.

அதாவது... இதனால் ரிஷப   ராசிகாரர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் கிரகங்கள் அளந்து தான் கொடுக்கும்.

இருப்பினும் முக்கியமானவர்களிடம் இருந்து முன்னேற்றமான தகவல் வரும்.புரியாமல் இருந்த பல விவகாரங்கள் புரிய வரும்.

புதிய சிந்தனையில், புதியவர் கூட்டணியில்  புது ரூட்டில் பயணம் செய்யலாம். இருந்தாலும் பைபாஸ் ரோட்டில் பயணம் அல்ல. சிக்னல்கள் நிறைந்த சிக்கலான பாதை என்பதை மறந்து விட வேண்டாம்.

                                                                      புத்தாண்டு பஞ்ச் 

உடன்பாடில்லாத ஒரு விஷயம் ஒதுங்கி போனாலும் வாக்கு கொடுத்த வகையில் வம்பு ஓன்று தேடி வரும்.


மிதுனம் 

ஆல் பழுத்தால் அங்கே அங்கே கிளி. அரசு பழுந்தால் இங்கே  கிளி என்பது போல், உங்களிடம் ஆதாயம் பெற்றவர்கள் அருகில் இருக்கப் போவதில்லை.

அன்பானவர்களின் அலச்சியப்போக்கு தொடரப் போகிறது. அதோடு தட்டிக் கொடுக்காத நிர்வாகத்தின் தலைக்கணம் ஒரு புறம், தட்டிக் கேட்க முடியவில்லையே என்ற தவிப்பு புறம் தொடரும். ஆனாலும் நல்ல பொழுது விடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 


எதிர்கால லச்சியம் ஓன்று ஈடேறாமல் போவதும்,அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து ஆதாயம் பெறுவதும்  நடக்கும்.


கடகம் 
கறக்கிறது ஆழாக்கு உதைக்கிறது பல்லுபோகவாம்.  நான் உங்கள் பணியிட அமைப்பை சொல்றேன்.

நீங்க அமைதியா, பொறுமையா, இருக்கீங்க. இருப்பிங்க, இருக்கணும். அதையே கீபப் பண்ணுங்க.

பல்லக்கில் போன உங்களுக்கு இந்த வருடம் பல்லக்கு தூக்குகிற வருடமாக இருக்கும்.

சந்தோசத்தை தேடி தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். சந்தேகங்களுக்கு விடை தெரியாது.

அதனால் வாயை திறக்காமல் இருந்தால் வாய்ப்புகள் வாசலில் நிற்கும். அசட்டு துணிச்சலால் ஆபத்தை தேடிக்காதிங்க.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 

உடன் பிறந்தோரின் உதவி கிடைப்பதும், உறக்கமில்லாத இரவுகள் தொடர்வதும் இவ்வருட சிறப்பு.


சிம்மம்

வாழைப்பழம் கொண்டுபோனவன் வாசலில் இருந்தான். வாயை கொண்டுபோனவன் நடுவீட்டில் இருந்தானாம்.

அந்த கதையா எந்தனையோ ஏமாற்றங்களை சந்தித்ச்சாச்சு. உள்ளவனே நல்லது செய்யலை.

இந்த வருடம் அதை மாற்றி அமைக்கும். காணக்கிடைக்காத பொற்காலமே கண்ணெதிரே தெரியும். வாழும் கலையில் வல்லவரான  உங்களுக்கு வாழ கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்ந்து பாருங்க.

                                                                         புத்தாண்டு பஞ்ச் 

நீண்டநாள்  கோரிக்கை ஓன்று நிறைவேறுவதும், வலுவிழந்த வழக்கொன்று வாசலுக்கு வருவதும் இவ்வருட சிறப்பாக இருக்கும். 

கன்னி 

கள்ளன் செய்த சகாயமே காதை அறுக்காமல் தோட்டை கழட்டியதுதான்னு  சொல்ற மாதிரி, இழப்புகள் பலவற்றை சந்தித்தாலும் முற்றிலும் இழந்தது விடவில்லை.

வருட கடைசி  வரைக்கும் இந்த வார்த்தை மாறாமல் இருக்கும். நோயை கொடுத்து பாயில் படுக்க வைக்கிற சனி, எதிர் காலத்திற்காக எதையும் செய்ய விடமாட்டார்.

புதிய வாய்ப்புகள் வந்தாலும் அதையும் ஒரு எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்வார்.

                                                                   புத்தாண்டு பஞ்ச் 

நஷ்டத்தில் லாபமும் , கஷ்டத்தில் சுகமும், கடைசி வரை கடவுள் இருப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கும். இது மாறவே மாறாது. 

துலாம்

அரிசி கொண்டு போய் அக்கா வீட்டில் விருந்து சமைச்சு  சாப்பிட்ட மாதிரி ஆதாய விஷயங்களில் அவ்வளவு திருப்தி வராது.  

ஏமாற்றப்படுவோமா என்கிற பயம், மிரட்டும் வழக்குகள், இனம் புரியாத கவலை, எதிர்கால கேள்விக்குறி  என்று ஒரு புறம் நெருக்கடிகள் தோன்றினாலும் வாயில்லாத பூச்சியாக வாழவேண்டி இருக்காது.

கடைசி நேரத்தில் கண்டத்தில் இருந்து தப்பித்த மாதிரி திடீர் அதிர்ஷ்டக் காற்று அடிக்கும்.

                                                                      புத்தாண்டு பஞ்ச் 


சரிவுகள் இல்லை என்றாலும் உறவில் பிரிவுகள் இருக்கும். பழைய வில்லங்க விவகாரம் ஒன்றில் தீர்வு வருவதும், புதுக் கவலை ஓன்று மிரட்டிப் பார்ப்பதும் இவ்வருட விசேசம்.


விருச்சிகம்

முடிச்சவிழ்த்து கொடுத்ததும் இல்லாம இளிச்சவாயன் பட்டமும் கிடைத்தது ஆனாலும் தலை தப்பியது.

அபரீதமான வசதி வாய்ப்பும் வந்தது. விட்டுப் போன VIP அந்தஸ்தும் கிடைத்தது. 

வேண்டியதை சேகரித்து வேண்டியவரை அரவணைத்து, விரும்பிய வாழக்கையை வாழ்ந்தீர்கள். இப்போது அதற்கு ஆபத்து புத்தாண்டு வடிவில் வருகிறது. 

அலைச்சல் திரிச்சளுக்கு பிறகு ஆதாயம் கிடைத்தாலும் அதிர்ச்சியும் காத்திருக்கும். அதோடு சுபகாரியம் நடத்தல், உறவுகள் நெருக்கமாதல், தொழில் வகை முன்னேற்றம் என்பதில் எல்லாம் சிக்கல்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். 

                                                                   புத்தாண்டு பஞ்ச் 

உற்ற உறவுகள் குற்றம் சொல்வதும், சண்டைக்காரர்களுடன் சமாதானம் ஆவதும் இவ்வருட சிறப்பு.

                                                                               தனுசு 


ஏறமுடியாத மரத்தில் எண்ணாயிரம் மாங்காய் காய்த்த மாதிரி இருந்தது இதுவரை.

பெரிய கஷ்டங்களை சந்திக்கா விட்டாலும், ஏளனபிரவியாக மாறிவிடக்கூடாது என்பதில் தான் குறிக்கோளே இருந்தது. அதற்க்கு ஒரு விடிவு காலம் பிறந்த மாதிரி மாபெரும் சபையில் மாலைகள் விழும் மகத்தான ஆண்டாக இது இருக்கும்.

தேவைக்கு ஏற்ப பணம் தேடி வரும். குடும்பத்திலும் குடும்ப தலைவனாய் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்யலாம்.

உங்கள் சக்திக்கு மீறி சுப காரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை தேடி வரும்.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 

கடன் தொல்லையில் விடுபட்டாலும், உடன்பாடில்லாத விஷயங்களில்  உடன்பட வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.


                                                                                  மகரம் 

குதிரை குருடா இருந்தாலும் கொள்ளு  திங்கிறதிலே குறை இல்லை. என்பது உண்மையாக இருக்கும்.

சில எதிர்பாராத தோல்விகளும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். கூடவே சில யோகங்களும் வரும் என்பதை மறுக்க முடியாது.

விருந்துக்கு போகும்போதே மருந்தும் சாப்பிட்ட மாதிரி அந்த சந்தோசங்களுக்கு இடையே சங்கடமும் தேடி வரும்.

சில விஷயங்கள் பிடிபடாது. எதிலும் துணிந்து இறங்க, துணைக்கு அழைப்பது இறை சக்தியாக இருந்தாலும் நடக்கும் போது நடக்கட்டும் என்று மனதை சமாதானம் செய்து கொள்வீர்கள்.

இருப்பினும் ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும் என்பது போக போகப் புரியும்.

                                                                             புத்தாண்டு பஞ்ச் 

பெரிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதும், புதிய அதிஷ்டம் ஒன்றை சந்திப்பதும் நடக்கும்.                                                                                கும்பம் 

அவரை போட்டால் துவரை முளைத்தது. துவரை போட்டால் அவரை முளைத்த கதையில் மாற்றம் வரும்.

உங்கள் சொந்த முயற்ச்சியின் மூலம், செய்கிற தொழில் மூலம், பூர்வீக சொத்துக்கள் மூலம், பிள்ளைகளின் அந்தஸ்து உயர்வதின் மூலம், பணமும் பதவியும், உதவியும், தேடி வரப்போகிறது.

உங்களை உதாசீனம் செய்தவர்கள், நீங்கள் உயர்ந்து நிற்பதை பார்ப்பார்கள். நீங்கள் உதவாக்கரை அல்ல, உதாரண புருஷன் என்பது புரியும்.

                                                                           புத்தாண்டு பஞ்ச் 

ஒதுங்கி போன உதவி கரம் ஓன்று திரும்பி வருவதும், விரும்பிய விருப்பம் ஓன்று கசப்பில் முடிவதும் கண்கூடு.


                                                                                   மீனம்

உயிரோடு இருக்கும் போது ஒரு முத்தம் தராதவள் செத்த பிறகா உடன் கட்டை ஏறப்போரா  என்பது உண்மையாகும்.

சென்ற ஆண்டின் சோகங்கள், துரத்தி வந்த துயரங்கள், நிறைவேறாத கோரிக்கைகள், அருகில் வராத அதிஷ்ட வாய்ப்புகள், இந்த ஆண்டாவது வருமா என்பது உங்கள் எதிர்ப்பார்ப்பு.

கவலையை விடுங்கள். ஆரம்பம் என்று ஓன்று இருந்தால் முடிவு என்று ஓன்று இருக்கத்தானே செய்யும். முடிவு சுபமாக இருக்கும் நம்புங்கள்.

                                                                         புத்தாண்டு பஞ்ச் 

ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதி படுவதும், அதிஷ்ட வாய்ப்புகளால் ஆனந்த படுவதும் இவ்வருட சிறப்பு.

Sunday, 20 January 2013

தெரியுமா உங்களுக்கு!அரசு நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் தான் இயங்கும். இது எழுதப்படாத விதி. 

ஏன்?

பொதுமக்களுக்கு சேவை செய்வதாலும், மானியம் அளிப்பதாலும்  வருகிற நஷ்டமா?

அப்படித்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறோம். அரசுகளும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் கதையே வேறு. 

இப்ப ஒரு கதையை தெரிஞ்சுக்கோங்க. 

ஏர்இந்தியா தன் ஊழியர்களுக்கு கூட மாதாந்திர சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கொடுத்து ஏற்றிக்கொண்டு பறந்ததால் வந்த நஷ்டமா?

இல்லை. ஏர்இந்தியாவிற்கு கடன் பாக்கி வைத்தவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதால் தான் இந்த திண்டாட்டம்.

அடப்பாவிகளா... ஏர்இந்தியாவிற்கே பாக்கி வைக்கிற அளவிற்கு வில்லாதி வில்லன் யார்?

குப்பனும்  சுப்பனுமா கடன் பாக்கி வைத்தவர்கள்.   கோடிகளில்  கொழிக்கும்  தொழில்அதிபர்களும், மத்தியஅரசும்தான் அது.

ஏர்இந்தியா மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், ஏர்இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை 1000 கோடியை தாண்டுகிறது. இந்த அளவிற்கு பாக்கி வர என்ன காரணம்.

அரசு சார்பில் பயணம் செய்தவர்கள்  டிக்கெட்  தொகையும்,  பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் பயண டிக்கெட் கட்டணம் தான் அது.


அதுமட்டும் அல்ல. தன் விமானங்களில் ஐந்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறது ஏர்இந்தியா.

ஏன்?

வி.வி.ஐ.பி.களின் பயணங்களுக்காக தமது ஹாங்கர்களில் நிறுத்தி வைத்திருக்கிறது ஏர் இந்தியா. இவை சாதாரண ரூட்களில் பயணிகளுக்காக ரெகுலராக உபயோகப்படுத்தப் படுவதில்லை.

காரணம், இந்த விமானங்களின் உட்புற  அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர், ஜனாதிபதி மற்றும் வி.வி.ஐ.பி. பயணிகள் பயணம் செய்வதற்கு தனி கேபின்கள், குளியலறை வசதி, கன்பிரன்ஸ் ரூம் என்று இந்த போயிங் விமானங்களின் உட்புறம் முற்றிலும்  மாற்றப்பட்டுள்ளன.

அதனால் இதை மற்ற விமானங்கள் போல பயன்படுத்த முடியாது. அந்த உள்கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று தெரியுமா? இதோ?

பயணம் செய்கிறார்களோ இல்லையோ.. சும்மா தேமேன்னு நிப்பாட்டி வச்சிருந்தாலும் மாதாமாதம் வாடகை கட்ட வேண்டும். அப்படி கட்ட வேண்டிய தொகைதான் 1000 கோடிக்கு மேல் இருக்கிறது. 

இப்ப தெரியுதா ஏன் ஏர்இந்தியா நஷ்டத்தில் ஓடுதுன்னு. 


Friday, 18 January 2013

நான் பிரதமரானால்???


இந்தியா பாகிஸ்தானை பொறுத்தவரை, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. 

அன்று முதல் இன்று வரை இந்திய தலைவர்கள் பாகிஸ்தானை நட்புடன் நோக்குவார்கள்.  எரிச்சல் மூட்டுகிற மாதிரி எது செய்தாலும் பொறுத்து போவார்கள். 

அது எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சகித்து கொள்வார்கள்.  

இந்தியாவில் குற்றங்கள் செய்துவிட்டு பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரியும் குற்றவாளிகளை பற்றி வாய் திறக்காமல் இருந்தாலும் மவுனம் காப்பார்கள்.    

தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, பயிற்சி கொடுத்து, இந்தியாவில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு உதவி செய்தாலும் வெறுமனே அறிக்கை விட்டு விட்டு போய் விடுவார்கள்.  

இந்திய கரன்சிகளை கள்ள நோட்டுக்களாக அடித்து பொருளாதாரத்தை சீர் குலைக்க இந்தியாவிற்குள் உலாவ விட்டாலும் சரி, இந்திய தலைவர்கள் அமைதி காப்பார்கள். 

இரு நாட்டு எல்லையில் அத்து மீறல், துப்பாக்கி சூடு, வீரர்கள் மரணம் என்று எத்தனை பிணங்கள் விழுந்தாலும் சகிப்பு தன்மைக்கு அளவே இருக்காது. அப்படி ஒரு நல்ல தலைவர்கள் இந்தியாவில் இருப்பவர்கள். 

ஆனால் பாகிஸ்தான் தலைவர்கள்  அப்படி இல்லை. அவர்கள் நாட்டு இறையாண்மைக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள். 

எல்லையில் எது நடந்தாலும் அப்படியா... அப்படி ஒரு சம்பவமே நடக்கலையே.. என்பார்கள்.  அப்பறம் கொஞ்ச நாள் கழித்து விசாரித்து பார்க்கிறோம் என்பார்கள். அப்பறம் அதை பற்றியே பேச மாட்டார்கள். 

இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யார் உதவி கேட்டாலும் பணமும் பயிற்சியும் கொடுத்து, தங்கள் சொந்த பொறுப்பில் அனுப்பி வைப்பார்கள். 

குண்டு வெடிப்பு, ஆள் கடத்தல்,  தீவிரவாத நடவடிக்கை  என்று இந்தியாவில் செய்து விட்டு பாகிஸ்தானுக்குள் தப்பி வந்தால், சகல மரியாதையோடு தங்க இடம் கொடுத்து, பாதுகாப்பு அளித்து, வெளி உலகத்திற்கே தெரியாமல் பாதுகாப்பார்கள். 

இந்தியாவோடு நல்லுறவை விரும்புகிறோம் என்று அவ்வப்போது அறிக்கை விட்டு பாசத்தை பொழிவார்கள். 

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற மாதிரி தீவிரவாதிகளின் தோளில் ஒரு கை போட்டுக்கொண்டே, மறுகையால் நட்பு கரம் நீட்டுவரர்கள்.

இதுநாள் வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

இப்போது போர் விதிமுறைகளை மீறி, இந்திய சிப்பாய்களை கொன்று, ஒருவர் உடலை சிதைத்து, மற்றவர் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய் இருக்கிறது பாக்கிஸ்தான் ராணுவம். 

இதுநாள் வரை இந்தியா பாகிஸ்தான் நேரடி  யுத்தம் மூலமாகவும், எல்லையில் நடந்த சண்டைகள் வழியாகவும் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்களை பலி கொடுத்திருக்கிறோம்.  

இன்னும் காஷ்மீரில் தீவிரவாத தொல்லைகள் ஒழிந்த பாடில்லை. எல்லை தாண்டிய பயங்கரவதத்திற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியவில்லை.  

நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதன் பின்னணியில் பாக்கிஸ்தான் இருக்கிறது என்பது உலகறிந்த ரகசியம். 

இருந்தும் இந்தியா அமைதியாக இருக்கிறது. வெறும் அறிக்கைகளும், கண்டனங்களும், பொறுத்து கொள்ள முடியாது, சகித்து கொள்ள முடியாது, தக்க சமயத்தில் பதிலடி கொடுப்போம் என்று வெற்று சவடால்கள் மட்டுமே கேட்கிறது. 

இது மட்டும் போதுமா? பாக்கிஸ்தான் பணிந்து விடுமா? தன் தவறுகளை திருத்தி கொள்ளுமா? எல்லை தாண்டிய குற்றங்களுக்கு முற்று புள்ளி வைக்குமா?

இது வெறும் பகல் கனவு.  ஒரு போதும் இது நடக்காது.

இது இந்திய தலைவர்களுக்கு தெரியாதா?

தெரியும். இது நாளையும் தொடரும் என்று தெரியும்.

தெரிந்தும் ஏன் ஆக்க பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட   சந்தேகம்   இல்லை. உலக தலைவர்கள் பலருக்கும் வந்த சந்தேகம் தான்.

தன் சொந்த நாட்டின் இறையாண்மைக்கு இப்படி தொடர்ந்து ஒரு நாடு தொல்லை தரும் போது, இப்படி  சோப்பிளாங்கியாக இருக்கிறதே இந்தியா என்று வாய் விட்டு சொல்லா விட்டாலும், மனதிற்குள் நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

உலகின் எந்த மூளையில் உள்ள சிறு நாடாக இருந்தாலும் இந்த அளவிற்கு பொறுமையாக இருக்குமா என்றால் இருக்கவே இருக்காது.

இந்நிலையில் நான் இந்தியாவின்  பிரதமராக இருந்தால் என்ன செய்வேன்? இதோ என் பதில்?

சொந்த மந்திரி சபையில் ஊழல் பெருச்சாளிகள் பெருகி விட்டதை தடுப்பதை பற்றியோ!

வாங்கும் சக்தியை இழந்து தடுமாறும் மக்களை காக்க, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதை பற்றியோ!

மாநிலங்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சனையாக இருந்தாலும் சரி, நதிநீர் போன்ற பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஆக்க பூர்வமாக சிந்தித்து நடவடிக்கை எடுப்பது பற்றியோ!

அந்நிய முதலீடு என்ற பெயரில் இந்தியாவிற்குள் கால் பாதிக்கும் வெளிநாட்டு கம்பெனிகளை  கட்டுப்படுத்துவது பற்றியோ!

ஒரு மாநிலத்தின் அடிப்படை மின் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றியோ!

பொருளாதார வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு என்பதை பற்றியோ!

சுண்டைக்கா  நாடானா இலங்கை எத்தனை மீனவர்களை கொன்று குவித்தாலும் கண்ணை முடிக் கொண்டிருப்பதை பற்றியோ நான் பேசவில்லை.

அதை பற்றி பின்னால்  யோசிக்கலாம். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பது மட்டும் தான் இப்போதைய பணி, மற்றவற்றை பின்னால் பார்ப்போம்.

காரணம்  நாம் நிறைய  பாதிக்கக்பட்டிருக்கிறோம். நம்  சொந்த நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீரில் குண்டு வெடிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் தீவிரவாதிகளுக்கு  பயந்து அகதிகளாக வெளியேற வேண்டிய கட்டாய சூழல் இப்போதும் நிலவுகிறது. 

இன்றும் காஷ்மீருக்கு பல சலுகளை அளித்து பல்லாயிரம் கோடிகளை கொட்டி பாதுகாப்பு செய்து கொண்டிருக்கிறோம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாட்டின் பாதுகாப்புக்கே கேள்வி குறி எழுந்து விட்டது. அதனால் இதற்கு தீர்வு காண்பது முக்கியம்.

இது தான் என் நடவடிக்கை 

எல்லையில் இப்போது நடந்திருப்பது மனித நாகரீகத்தை மீறிய, போர் நடை முறைகளை மீறிய செயல்.  

  1. அந்த கொடூர செயலை செய்த வீரரை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்.  அவர் எங்கள் நாட்டு பிரஜை. அவரை இந்தியா வசம் ஒப்படைக்க முடியாது என்பது தான் பாகிஸ்தானின் பதிலாக இருக்கும். 

அப்படி இருந்தால் போர் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்ற கைதியை ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படும்.

2.   இதற்கு பாகிஸ்தான் உடன் பட தவறினால்...இந்தியாவின் நட்பு நாடு, வியாபார கூட்டாளி என்கிற அந்தஸ்து விளக்கிக் கொள்ளப்படும். ஏற்றுமதி இறக்குமதி, பொருளாதார வர்த்தக உடன்படிக்கைகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும். 

(இதனால்  ஏற்ப்படும் இழப்பை சரிகட்டவும், மாற்று வழி தேடவும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் தேடவும், இழப்புக்களை சரிகட்டவும் குழு அமைக்கப்படும்)

3.   பாகிஸ்தானோடு தூதரக உறவு துண்டிக்கப்படும். பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் உடன் நாடு திரும்ப வேண்டுகோள் விடுக்கப்படும். 

அதே போல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் பிரஜைகள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வரும். 

4.  தரை வழி, வான் வழி, கடல் வழி போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்படும். 

5.  உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்படும்.

அதில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தீராத தீவிரவாத பிரச்சனைகளால் இந்தியா பல பிரச்சனைகளை சந்த்திருக்கிறது. பல்லாயிரம் மதிப்பு மிக்க உயிர்களை இழந்திருக்கிறோம். பல்லாயிரம் கோடி பொருட் சேதத்தை சந்திருக்கிறோம்.

இருந்தும் இதுவரை பொறுமை காத்தோம். பொறுமைக்கும் சோதனையாக  இப்போது நடந்திருக்கும் நாகரீகமற்ற செயலை தாங்களும் அறிவீர்கள். இது இந்தியாவின் பாதுகாப்பிற்கும்  இறையாண்மைக்கும், 120 கோடி மக்களுக்கும்  சவால் விடபட்டிருக்கிறது.

எனவே தன்னை தற்காத்துக்  கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டு.  தேச பாதுகாப்பை உறுதிபடுத்த தேவையான அனைத்து நடவடிக்களையும் மேற்கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டு. இதை சர்வதேச சமுகம் உணரும் என்றே நம்புகிறோம்,  என்ற தகவல் அனைத்து நாடுகளுக்கும் சொல்லப்படும்.

6.   இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருப்பது எல்லை தாண்டிய தீவிரவாதம். எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைத்து, பயிற்சி எடுத்து, கட்டிக்காக்க கஷ்டமாக இருக்கும் நீண்ட எல்லைகள் வழியாக ஊடுருவும் தீவிரவாத முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் அக்னி என்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க முயல்வார்கள் என்பது உண்மையே. உயிர் சேதம், பொருள் சேதம், பொருளாதார விரையம், உலக  நாடுகளின் நெருக்கடி என்றெல்லாம் யோசிக்காமல் முழு யுத்த தயார் நிலையில் இருந்தே தீர வேண்டும்.

ஒரு வேலை பாகிஸ்தான் இந்தியா மீது எதிர் தாக்குதல் நடத்தினால், சற்றும் யோசிக்காமல் பாகிஸ்தானை ஈவு இரக்கமில்லாமல் தாக்கி, ஆசாத் காஷ்மீர் வரை முன்னேறி செல்லவேண்டும்.

சிறிய நிலப்பரப்பை வைத்திருக்கும் பாகிஸ்தான் தாக்கு பிடிக்க முடியாமல் அணு ஆயுத மிரட்டலை விடுத்தால், சந்திக்க தயார் என்றும், இந்தியாவும் எதிர் தாக்குதல் நடத்தும் என்றும் சொல்ல வேண்டியதுதான்.

அப்படி ஒரு சூழல் வந்தால் உலக வரைபடத்தில்  பாகிஸ்தான் இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் அதற்கு அவசியம் இருக்காது.

இப்போது கொடுக்கும் அடி, எதிர் காலத்தில் இந்தியாவோடு எந்த சச்சரவுக்கும் போக கூடாது என்ற உணர்வை தருகிற மாதிரி தாக்குதல் வியூகம் அமைய வேண்டும்.

பாகிஸ்தான் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து விட்டால், காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விட்டால், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கு  பயன்படும். இல்லாவிட்டால் தினம் தினம் கோடிக்காணக்கான பணத்தை கொட்டித்தான் தீரவேண்டும்.