Follow by Email

Saturday, 31 December 2011

NEW YEAR PALAM... KADAKAM / நியூ இயர் பலன்கள் கடகம்

NEW YEAR PALAM... KADAKAM /  நியூ இயர் பலன்கள் கடகம்

நீங்கள் கடக்க ராசியில் பிறந்தவரா?  சந்தோசமும், சந்தேகமும் சம பங்கு நிறைந்தவர்கள்.  எப்ப பார்த்தாலும் கனவுதான்.  கற்பனா உலகத்திலேயே இருப்பீங்க. 

யாரு என்ன நினைக்கிறாங்க என்பதை பற்றி கவலை படுவதில்லை. உங்களுக்கு எது சரியோ... அதை துணிந்து செய்வது உங்கள் கூட பிறந்த குணம். பெரும்பாலும் ஊருக்காக உழைப்பிங்க. உங்களுக்காக உழைக்கும் போது சறுக்கும். 

உங்களுக்குள்ளே ஒரு கவிஞன் இருக்கான். ஒரு சிந்தனாவாதி இருக்கான்.  ஒரு கலாரசிகன் இருக்கான்.  அவ்வளவு ஏன். ஒரு அரசியல்வாதி, ஒரு ஆன்மிகவாதி, இப்படி பல்வேறு குணம் ஒளிந்து கிடக்கிறது. 

நீங்க கொஞ்சம் சங்கோஜ  பேர்வழி.  யாரிடமும் எடுத்த எடுப்பிலேயே  சகஜமாக பழகுவதில்லை.  ஆனா பழகிட்டா? உங்களை போல் நல்ல நண்பர்கள் யாரும் இல்லை. 

தனிமை பிடிக்கும்.  தடாலடியாக பேசுவது இன்னும் பிடிக்கும். யாசிப்பதில்லை. யோசிக்க வைப்பவர்கள்.  உங்களை கலா ரசிகர்னு சொன்னேன்.  அப்படின்னா வேடிக்கையா  பேசுவதை பற்றி சொல்லவும் வேண்டுமா.  அதிர சிரிக்காம அற்புதமா பேசுவீங்க. 

கொஞ்சோண்டு சந்தேக குணம் இருக்கு. சந்திரன் வளரும் தேயும்  குணம் உள்ளதால் உங்கள் அன்பும் அப்படிதான் என்கிறது ஜோதிடம். அப்படியா? 

சரி வருஷம்  பிறக்கிறது. பலன்கள் என்ன என்பதை பார்ப்போம். 

உங்களுக்குள் பல கேள்விகள். பிறக்கும் ஆண்டு பிரமாதமாக இருக்குமா? அது பிரகாசமாக இருக்குமா? கணக்கு போட்டபடி கனவுகளும் லெச்சியமும் நிறைவேறுமா?  வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா? வீடு வாகன யோகம் பலிதம் ஆகுமா? இப்படி 1000 கேள்விகள். 

இப்போதைய நிலையில் நல்லவைகள் நடந்து கொண்டுதான் இருகின்றன. சந்தோசமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இந்த பாழாய்ப்போன சந்தேகம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது. 

காரணம் ஏதேனும் ஒரு தடை. இடர்பாடுகள் வந்து விடுகிறது.  தொழில் மேன்மை, உத்தியோக மேன்மை, குடும்ப மேன்மை என்று ஒரு புறம் இருந்தாலும். சின்ன மனக்குறை, கொஞ்சம் பெரிய அளவில் பணக்குறை வருகிறது. 

அலைச்சல் திரிச்சல் அதிகம்.  ஆனால் ஆதாயம் குறையவில்லை. எதிரி தொல்லை, கடன் தொல்லை, நோயதொல்லை எதுவும் இல்லை. ஆனால் சந்தேகம் மட்டும் மறையவில்லை.

சரி புத்தாண்டு எப்படி இருக்கும்?

சனி சரி இல்லை. குரு சரி இல்லை. இருந்தாலும் பெய்ய குறை இல்லை.  தொழில் ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படும் தருணம்.  வேலையில் வேதனை, வேலை இல்லாத வேதனை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

குரு மாறுதலுக்கு பிறகு ஒரு தனித்தன்மை, பரிபூரண சுதந்திரம் வந்துவிடும்.  உங்கள் தைரியம் தன்னம்பிகை கூடும்.  வெட்டி யோசனை, வீண் அலைச்சல் இனி இருக்காது. உங்கள் கை விட்டு போனதும், கை நழுவி போனதும் திரும்ப வரும்.

A / C ரூமில் இருந்தாலும் மனசு புழுங்கியது.  இனி அப்படி இல்லை.  செல்வம் செல்வாக்கு அதிகரித்தல், குடும்ப குழப்பம் குறைந்து சந்தோஷ சம்பவங்கள் நடத்தல். பிள்ளைகளால் மேன்மை பெறுதல் இப்படி பல நம்மைகள் நடக்கும். 

உங்களை பொறுத்தவரை வியத்தகு முன்னேற்றம் விரைந்து வந்து கொண்டிருகிறது.  திருமண யோகம், மறுமண யோகம், கை கூடும்.  வீடு வாகன யோகமும் காத்திருகிறது.  ஒட்டி கொண்டிருந்த சந்தேகத்தை வெட்டி எறிவீர்கள்.

சின்ன பயம், பதட்டம், குழப்பம் இருப்பினும் சரியாகிவிடும்.  மருந்தை மறந்து விருந்து சாப்பிடலாம்.  கடல் கடந்து போகும் பாக்கியமும் இருக்கிறது.  கணவன் மனைவி உறவில் கசப்புகள் மறைந்து விடும்.  குறைகள் நிறைகளாகும்.

ஆன்மிக பலம் அதிகரிக்கும். நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்.

 


Tuesday, 27 December 2011

yogam

kiragamaaligaa  yogam / கிரகமாலிகா யோகம் 

யோகங்கள் பல. அவற்றில் சில யோகங்கள் தான் பிரபலமானவை. காரணம் பலன் தருவதில் பல மடங்கு பலம் வாய்ந்தது.    அதில் ஒன்றுதான் கிரகமாலிகா யோகம்.  கிரகமாலிக யோகம் என்பதே கிரகங்களின் அணிவரிசைதான். 

சரி கிரகங்கள் எப்படி இருந்தால் யோகம்?

சேர்ந்தால் யோகம். பார்த்தால் யோகம். ஓரிடத்தில் இருந்தால் யோகம் என்று பட்டியல் இட்டுக்கொண்டே வந்தால் வீடு தோறும் கிரகங்கள் இருந்தால் யோகம்.  

அதுதான் கிரகமாலிகா யோகம். 

வீடு என்பது ராசியை குறிப்பது. இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் யோகம் தருகிறது. அதிலும் நன்மை தரும் யோகமும் உண்டு. தீமை தரும் யோகமும் உண்டு.

நன்மை தரும் யோகம் என்பது செல்வ விருத்தியை மட்டும் இல்லாமல் சமுகத்தில் புகழை தருவதும், அந்தஸ்தை தருவதும், அதிக்காரத்தை உயர்த்தி தருவதும், மந்திரிக்கு இன்னையான வாழ்க்கையை மாற்றி தருவதும் யோகம்தான். 

தீமைதரும் யோகம் என்பது வேறு. அதை எந்த வழியில் பெற்றார் என்பதுதான் கேள்வி.  நல்வழியில் பெறாமல் தீய வழியில் பெறுவதும் ஒரு வகை யோகம்தான்.  அது சண்டாள யோகம். 

மற்றவரை வஞ்சித்து மோசடி செய்து, தீய வழியில் ஈடுபட்டு மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட வைப்பது.  இதை நல் யோகமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

என்றாலும் அதுவும் யோக வரிசையில் இடம் பெறுகிறது என்பதே உண்மை. 

இருப்பது  ஒன்பது கிரகங்கள்.  இதில் ராகு கேது இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏழாம் இடத்தில் அமர்வது வாடிக்கை. இதில் எந்த மாற்றமும் இருக்காது.  அடுத்து வரும் பட்டியலில் ராகு கேது தனித்து இருக்கலாம். அதை கணக்கில் எடுக்க வேண்டாம். மற்ற கிரகங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

பொதுவாக கிரகங்கள் கெடிகார முள் எப்படி சுற்றுகிறதோ, அந்த வரிசையில் தான் சுற்றும். கிரக அணிவகுப்பு என்பது லக்னம் முதல் இருந்தால் யோகம் என்பது இளமையில் இருந்தே வரும்.

மாறாக ஏழாம் இடத்திருக்கு பின் இருந்தால் அந்த யோகம் வாலிபம் கடந்த பிறகு வரும். போகட்டும்... இனி இந்த யோகா வரிசையை காண்போம்.

  • ஒன்பது கிரகங்களும் ஒன்பது வீடுகளில் இருந்தால் அதற்கு கிரகமாலிகா யோகம் என்று பெயர்.  

உங்களுக்கு இந்த யோகம் இருக்கா?

அப்படின்னா  கண்ணுல படுற சாமியை பார்த்து உங்க கன்னத்தில் போட்டுகிற ஆசாமி நீங்க.  புரியலையா? பக்திமான்தான். கிட்டத்தட்ட சாமியார்.  குடும்ப வாழ்க்கை உங்களுக்கு  அவ்வளவா பிடிக்காது.  பின்னால ஆசிரமம் வச்சாலும் ஆச்சர்யம் இல்லை.

  • தொடர்ந்து எட்டு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிக யோகம் என்றே பெயர்.

உங்களுக்கு இந்த யோகம் இருக்கா?

அப்படினா நீங்க யாருக்கும் பணிஞ்சு போக மாட்டிங்க.  துணிச்சல் அதிகம்.  இரக்க குணம் கொஞ்சம் கம்மி. யாராவது ஏதாவது சேட்டை பண்ணினா போட்டு தாக்கி விட்டுடுவிங்க.

இந்த அமைப்பு உங்களுக்கோ அல்லது யாருக்கு இருந்தாலும்,  அரசியலில் இருந்தால் அமோகம் போங்கோ.  எந்த நாட்டு அரசியல்வாதியா இருந்தாலும் ஆதாயம் இல்லாம போகுமா.  குறுகிய காலத்தில கோடிஸ்வரனா மாறலாம்.

சினிமா துறையில ஒரு பேச்சு இருக்கு.  தூங்கும்போது காலை ஆட்டிகிட்டே தூங்கணும்.  இல்லேனா செத்து போயிட்டதா செய்தி பரவிடும்னு.  அரசியலில் அது  எப்படி  தெரியுமா?  தூங்கும் போது கண்ணை தொறந்து கிட்டே தூங்கணும்.  இல்லேனா செத்து போயிட்டதா செய்தி பரவிடும்.

ஏன்னா எதிரிகள் அதிகம்.  சிக்கினா சிட்டடையை போடுறது, அகப்பட்டா ஆட்டையை போடுறது அரசியலில்  சகஜம்தானே.  ஆனால் எதிரிகளை, எதிர்பாளர்களை முறியடிக்க விதியை மாற்றி சதி வலைகள்  பிண்ணுவார்கள் என்கிறது சாஸ்திரம்

அரசு அலுவலராக இருந்தால் கையும் நீளம், பையும் நீளம். லஞ்ச லாவண்யத்தில் முழ்கி திளைப்பார்கள்.  வியாபார துறையில் இருந்தால் கடத்தல், பதுக்கல், கலப்படம், என்று லாபம் ஒன்றையே குறிகோளாக கொண்டு செயல் படுவார்களாம்

சட்ட திட்டத்திருக்கு அஞ்சதவராக கட்டு படாதவராக, பெயரை கேட்டா அஞ்சி நடுங்குகிற அளவிற்கு இருப்பார்.

  • லக்னம் முதல் ஏழு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  பெரும்பாலும் வியாபாரம்தான். முதலாளிதான். முதல் போட்ட அத்தனை பேரும் முதலாளி இல்லை. 

பல இடங்களிலே முதலாளி தொழிலாளியா இருப்பார். தொழிலாளி முதலாளியா இருப்பார்.  

என்ன காரணம்?

நிர்வாக திறன் இல்லாதது தான் காரணம்.

எங்க முதலாளி தங்க முதலாளின்னு பாட்டு பாடிட்டு போய்டுவாங்க.  அதுக்காக கொடுமை படுத்துறது இல்லை.  திட்டி வேலை வாங்கிறது இல்லை.  திட்டம் போட்டு செயல்படுறது.

பாம்பை முட்டைல கொல்லனும், புலியை குட்டில கொல்லனும்ன்னு தெரிஞ்சு இருக்கணும்.  அதுதான் நிர்வாக திறன்.  இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால் மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அன்பானவராம், பண்பானவராம், கருணையானவராம்.  வாழ்க்கை பாதை வசந்த காலமாகவே இருக்குமாம், கசந்த காலம் என்பது காணாமல் போயிடுமாம்.

அன்பான நண்பர்கள், ஆரோக்கியமான உறவினர்கள், இணக்கமான குடும்ப உறுபினர்கள் என்று சகல நிலைகளும் சிறப்பாக இருக்கும்.  மொத்தத்தில் தொட்டது துலங்கும், மண்ணள்ளி போட்டாலும் பொன்னாக மாறும்.

  • லக்னம் முதல் ஆறு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  ராகு கேது தவிர்த்து மற்ற கிரகங்கள் இந்த வரிசையில் வரும். 

இந்த அமைப்பு உங்களுக்கு இருக்கா? இருந்தால் நீங்க புதுமைவாதி.  சிந்தனைவாதி.

அடிக்கடி கோவபட்டால் கோவத்திற்கு மரியாதை இல்லை...
கோவமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லைன்னு.... தத்துவ முத்துக்கள் உதிர்பீங்க.

அப்பறம்.....

என் நினைவாக உன்னிடம் ஒன்றும் இல்லை
ஆனால்
என்னிடம்   உன் நினைவைத்தவிர
வேறு ஒன்றும் இல்லைன்னு கண்ணதாசன், வைரமுத்து மாதிரி கலக்கலா கவிதை எழுதலாம்.   வாழ்நாள் சாதனையாளராக வரலாற்றில் இடம் பெறலாம்.

  • லக்னம் முதல் அஞ்சு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  பரம்பரை பணக்காரர்கள் உருவாக காரணம்.  செல்வா செழிப்பில் மிதக்க வைக்கும். 

வீடு வாகன யோகம், திருமண யோகம், திருமணத்தால் யோகம், பிள்ளைகளால் யோகம், உற்ற உறவுகளால் யோகம் என்று பல்வேறு பாக்கியங்களுக்கு அடித்தளம் போட்டு தருகிறது. மொத்தத்தில் சீரும் சிறப்புமாக,  செல்வ செழிப்புமாக வாழ வைக்கும்.

லக்னம் முதல் நான்கு வீடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  என்ன..... சபல புத்தியாம். கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்களாம். Sunday, 25 December 2011

2012 mithuna raasi new year palan / மிதுன ராசி நியூ இயர் பலன்கள்

2012 mithuna raasi new year palan /  மிதுன ராசி நியூ இயர் பலன்கள்

பிறவி மேதாவிகளே வணக்கம். அறிவு தொழிச்சாலைகள் உருவாக்குற இடம் மிதுனமோ என்று யோசிக்கிற அளவிற்கு அதிமேதாவிகள் உருவாகிற ராசி மிதுனம். 
கருவிலேயே கல்வி வாசனை வருமாம். உயர் குலத்தில் பிறந்து, உயர் நிலையில் வாழும்  உத்தமர்களாம். அனுபவ அறிவு அதிகம். சபை கோழைகள் என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மட்டும்.

வாதம் செய்தால் வக்கீல், அறிவுரை செய்தால் ஆசிரியர்.  புதிய விஷயங்களை கற்று கொள்வதில் மாணவன். இது இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மட்டும் பொருத்தும்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க தெரிந்தவர்கள். எதையும், நயமாகவும், நாணயமாகவும் பேசுகிற நீங்கள், தேவைபட்டால் கோபத்தை வெளிக்காட்டவும் தயங்க மாட்டீர்கள்.

கிடைத்த வாய்ப்புகளை விடாமல் பிடித்து கொள்விர்கள். பிடிக்காதவர்களை கண்டால் விலகுவிர்கள். சரி புது வருடம் எப்படி இருக்கும்,  சனி பகவான் மாறிவிட்டாரே, இனி கால சக்கரம் எப்படி சுழலும் என்பதை பாப்போம்.

கடந்த காலங்களில் திட்டமிட்ட பணிகள் எல்லாம் பட்டு பட்டு என்று முடிந்தது. உங்கள் புகழும் செல்வாக்கும் பல மடங்கு உயர்ந்தது.  விளக்கை பிடித்து கொண்டு கிணற்றில் விழுந்த கதை எதுவும் அரங்கேற வில்லை.

சிக்கலின் ஆரம்ப முனையை கண்டு பிடித்து அங்கேயே சரி செய்தீர்கள்.  செய்ய வேண்டிய சீர்திருத்தம், ஆற்ற வேண்டிய கடமைகள் எதுவுமே இதில் விதி விலக்கில்லை.

இதில் இப்போது மாற்றமில்லை. சனி மாறியதால் எந்த மாற்றமும் வரபோவதும் இல்லை.  உங்களுக்கு வரவேண்டிய பாக்கியங்களில் தடை என்பதோ, தாமதம் என்பதோ கிடையாது.

இதில் தன பாக்கியம், சரிர பாக்கியம், சௌபாக்கியம் முதலிடம் பெரும்.  செய்தொழில் அடுத்த இடம்  பெரும். சேர்ந்தவரால் ஆதாயம் வரும். பல வகையில்  லாபம் அதிகரித்து, உங்கள் லெட்ச்சியம் நிறைவேரபோகிறது. இந்த வருடம் சங்கடமின்றி சந்தோசமாக வலம் வரலாம்.


நீங்கள் எடுக்கிற எல்ல முயற்சிகளிலும் வெற்றிதான்.  நஷ்ட வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள் இனி அபரிதமான லாபத்தை பார்க்க முடியும்.

குடும்ப வாழ்க்கை சீராகும். பொது வாழ்க்கை பரபரப்பாகும்.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.  உங்களுக்கே சுப காரியம் நடக்க வேண்டி இருந்தால் தடை இல்லாமல் நடக்கும்.

இதுவரை  குரு மன நிமதியை கொடுத்தார். பண வசதியை கொடுத்தார்.  பதவி யோகத்தை கொடுத்தார்.  சரிவில் இருந்த நீங்கள் சரியான இடத்தை பிடித்திர்கள்.  கற்பனையில் ஓடிய பந்தய குதிரை நிசத்தில்ஓடியது.

கூட்டு புழுவாக இருந்த பலர் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறக்க முடிந்தது.  இது தொடரும். உங்களை பொறுத்தவரை ஏறுமுகம்தான்.  அந்த ஆறுமுகன் தயவால் நல்லதே நடக்கும்.


Saturday, 24 December 2011

அதிஷ்டம் எப்போது வரும்?

அதிஷ்டம் எப்போது வரும்?

3 , 6 ,8 ,12 ல் அமர்ந்த கிரகங்களின் தசா புத்தியில் திடீர் தன வரவுகள் வரும்.

எப்படி?

சூரிய திசையாக இருந்தால் செவ்வாய் புத்தி, குரு புத்தியில்.

புதன் திசையாக இருந்தால் சுக்கிர புத்தி, சனி புத்தியில்

குரு திசையாக இருந்தால் செவ்வாய் புத்தியில்

சுக்கிர திசையாக இருந்தால் புதன் புத்தி, சனி புத்தி, ராகு  புத்தியில்

சனி திசையாக இருந்தால் புதன் மற்றும் சுக்கிர புத்தி

ராகு திசையாக இருந்தால் சுக்கிர புத்தி, செவ்வாய் புத்தி, புதன் புத்தியில் திடீர் அதிஷ்டம் வரும்.  மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்.

Friday, 23 December 2011

உடல் பருமன் உஷார்

Uadal paruman uzhaar /  உடல் பருமன் உஷார் 

ஒல்லி பிச்சான் உடம்பாக சிலர் இருப்பார்கள். ஒட்டடை குச்சி மாதிரி இருக்கே என்று சிலர் கேலி பேசுவார்கள்.  ஆனால் ஒல்லிபிச்சான் உடம்பு நல்லதே. 

களுக்கு மொழுக்குன்னு இருக்கணும் என்பதற்காகவே கண்டதை தின்று குண்டான பலர், மற்றவர் பார்வைக்கு கேலி பொருளாக ஆனது மட்டும் அல்ல, உடல் ரீதியாகவும் மனோரிதியாகவும், பல்வேறு இடையுருகளை சந்திக்க நேரிடும்.

பொதுவாக உடல் பருமனை குறைக்க என்ன வழி என்பதை உடலியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா? 

இப்ப இருக்கிற பொதுவான முக்கியமான பிரச்சனை  உடல் பருமந்தான். சின்ன குழந்தையில் இருந்து, வயதானர்கள் வரை இந்த உடல் பருமனால் அவஸ்த்தை படவேண்டிஇருக்கிறது. 

மருத்துவ ரீதில் பார்த்தால், உயர் ரத்த அழுத்தம், டென்சன், சக்கரை வியாதி, மூட்டு பிரச்சனை, மலட்டு தன்மை, இதய நோய் எல்லாம் உடல் எடையால் ஏற்படுவதுதான். 

சக்கரை வியாதி என்பது பரம்பரை வியாதியாக இருந்தாலும், உடல் பருமனால் வயதில் சிறியவர்களுக்கு கூட இந்த நோய் வருகிறது.  பலரை நிம்மதி இல்லாமல் செய்கிற அளவிற்கு அசுர சக்தியாக உடல் பருமன் இருக்கிறது. 
அதற்கு டாக்டர்கள் தரும் டிப்ஸ் என்ன?

அளவா எந்த உணவை சாப்பிட்டாலும் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது. மணிக்கு ஒரு தரம் நொறுக்கு தீனியை தின்று கொண்டிருந்தால் உடல் பருமனுக்கு அதுதான் வினையாக மாறுகிறது. 

முறையான உடற்பயிற்சியும், முறையான உணவையும் சாப்பிடனும். முறையான உடற் பயிற்சிக்காக ஜிம், நடை பயிற்சி, யோகாசனம் போன்றவற்றை செய்பவர்கள் இருக்கிறார்கள். 

அது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள உதவும் என்றாலும், விடாமல் செய்ய வேண்டும். விட்டால் மீண்டும் உடல் பருமன் விஸ்வருபம் எடுக்கும். 

சிலர் உடம்பை இலைக்க வைக்கிறேன் பேர்வழி என்று பட்டினி கிடப்பார்கள். அப்படி செய்வதால் உடல் பொலிவை இழந்து வயதான தோற்றத்தை காண்பிக்கும்.  இதை தவிர்க்க வேண்டும். 

சரி என்ன செய்வது? 

பட்டினி கிடைக்காமல் அளவான உணவு, கொழுப்பு குறைந்த உணவு,  தவறாத உடல் பயிற்சி அவசியம்.   கெமிக்கல் நிறைத்த கடை சாப்பாடு  தவிர்க்க வேண்டும். இவற்றை கடை பிடித்தால் உடல் பருமனை ஒரு கை பார்த்து விடலாம்.


Wednesday, 21 December 2011

NEW YEAR PALAN....RISHABHAM நியூ இயர் பலன்கள் ரிஷபம்

                   NEW YEAR PALAN....RISHABHAM  நியூ இயர் பலன்கள் ரிஷபம்

அட நீங்க யாரு... சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஆயக்கலைகள் 64 க்கும் அத்தரட்டி பெர்சனே அவர்தான். 

அதனால் என்ன?
நீங்க சுதந்திர பிரியர். காற்று மாதிரி ஓடுவதும், புதிய விஷயங்களை தேடுவதும் உங்களுக்கு பிடிக்கும். கடின உழைப்பாளி. மாடு மாதிரி உழைபிங்கலாம்.  இருக்காதா பின்னே. காளைமாடுதானே உங்க சின்னம்.

சின்னதா சவால் விட்டு பெரிசா சாதிக்க பிடிக்கும். வெற்றி என்பது எளிதல்ல தோல்வி என்பது முடிவல்ல என்ற வாசகத்திற்கு, தலைமை ஏற்று செயல்படுவீர்கள். 

வந்தால் வரவில் வை. போனால் செலவில் வை... என்ற சித்தாந்த வாதிகள்.  பிறர் ரசிக்க பேசும் நீங்கள் ருசிக்க சாப்பிடுவிங்க.  பளிச்சென ஆடை அணிய பிடிக்கும்.  எந்த காரியத்தை தொட்டாலும் முடிக்கும் வரை தூங்க மாட்டிங்க. 

தோல்வியை பார்த்து பயம் இல்லை என்றாலும், விதியை நொந்து கொண்டு விரத்தியின் விளிம்பிற்கே போவீங்க.  சுக்கிரன் ஆசுர குரு என்பதால் உங்களிடம் கொஞ்சம் அசுர குணமும் இருக்கும்.

பணம் தேட பிடிக்கும், பணமும் உங்களை தேடி வரும். உங்கள் பலம் என்ன என்பது உங்களுக்கே பல சமயம் தெரியாமல் போகலாம்.  தன பலத்தோடு, தேவை படும்போது தெய்வ பலத்தையும் நாடும் உங்களுக்கு புத்தாண்டு பலன்கள் எப்படி என்று பாப்போம். 

சனி மாறினால் சரித்திரம் மாறுமாம். சனிதான் மாறிவிட்டாரே சரித்திரம் மாறுமா? தரித்திரம் விலகுமா? புதிய சாதனை எதுவும் இந்த புத்தாண்டில் படைக்க முடியுமா.... இதானே  . இதானே... உங்கள் கேள்வி. 

நிச்சயம்... கண்டிப்பாக... உறுதியாக வியத்தகு மாற்றம் ஏற்பட போகிறது. செய்தொழில் வியாபாரம் விரிதிக்கும். ஒன்னு பத்தாகும்.  கடந்த காலங்களில் உங்களை விட்டு போனதெல்லாம் திரும்ப வரும். 

அது காசு பணமா? சந்தோசமா? நிம்மதியா? செய்தொழிலா? உடல் ஆரோக்கியமா? என்பது உங்கள் ஜாதகம் சார்த்த விஷயம்.  மொத்தத்தில் மாற்றம் என்பது சத்தியம். 

உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் மாறும். வேலையே விடும் விபரீத யோசனை மறைத்துவிடும். பொருளாதார நெருக்கடிகள் குறைத்துவிடும். 

தடைப்பட்ட பிரமோஷன், புது வேலை, பதவி இறக்கம் மறைந்து உங்க காட்டுல அடை மழை பெய்யபோகுது.  கடந்த காலங்களில் அளவிட முடியாத அளவிற்கு துன்பம், உறவு பகை, வீண் விரையம், வழக்குகள், விருந்துக்கு வைத்திருந்த பணத்தை மருந்துக்கு செலவிட்ட கொடுமை எல்லாம் இருந்தது.  இனி மாறும். 

நல்லவர்களே எதிரியான நிலை இருக்காது. குடும்பத்தில் சந்தோசம் கூடும். கடன் வாங்கிய நீங்கள், கடன் கொடுக்கும் அளவிற்கு கையில் காசு பணம் புழங்கும். புது மனிதனாக, புது சரித்திரம் படைக்க போறீங்க. 

உங்கள் தைரியம், தன்னம்பிகை அதிகரிக்கும். கேள்விக்குறிகள் ஆச்சிரியக்குரியாக மாறும். சகோதர சகோதிரிகள் ஆதரவு அதிகரிக்கும். இதுவரை மூடிக்கிடந்த கதவுகள் திறக்கும்.

வெளிநாட்டு தொடர்பு, வழக்குகளில் வெற்றி. வீடு வாகன சேர்க்கை. குறைந்து போயிருந்த குடும்ப மகிழ்ச்சி கூடும். இதுவரை குரு நல்ல நிலையில் இல்லை.  அதனால் வீண் விரையங்களும், அதிகமான செலவுகளும் உங்களை பந்தாடியது.

நீங்களும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருந்திங்க. இப்போதும் சரி மே மதம் நிகழும் குரு பெயர்ச்சியும் சரி, உங்களுக்கு சரிஇல்லை என்பது உண்மைதான்.  ஆனால் சனிதான் சரியாக இருக்கிறாரே.

அதனால் குருவால் பெரும் பாதிப்பு இருக்காது. சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நடக்கவே நடக்காது என்று தள்ளிப்போன மறுமண வாய்ப்புகள் தேடி வரும்.

மாணவர்கள் நல்ல பெயர் எடுக்கலாம். மொத்தத்தில் புத்தாண்டு உங்களுக்கு நல்ல வருடம்தான்.


பூஜை அறை ரகசியம்!/ pooja aarai rakasiyangal

பூஜை அறை ரகசியம்!/  pooja aarai rakasiyangal

ஒரு நிமிஷம் இதை படிங்க.

புது வீடு வாங்கிட்டிங்களா..
.
வீடு எப்படி இருக்கு?

நான் வீடு எப்படி இருக்குனு கேட்டது, வீட்டோட அழகை பற்றி அல்ல.  அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.  வீட்டு சூழ்நிலைகள் எப்படி இருக்கு. இதுதான் கேள்வி.

புரியலையா? சரி... புரியுற மாதிரி கேட்கிறேன். 
உங்களுக்கு 1000  வேலை இருக்கு. ஓடியாடி உழைத்துட்டு வீட்டுக்கு வர்றிங்க. வீட்டுக்கு வந்ததும் மனசுல நிம்மதி இருக்கா.  சந்தோசம் வருமா? ஒரு நிறைவா இருக்கா? 

அல்லது.....

வீட்டுக்கு வந்தாலே அடிச்சு போட்ட மாதிரி அசதி, எதையோ இழந்த மாதிரி ஒரு தவிப்பு, காரணமே இல்லாம கவலை, புரியாத புதிரா மனோநிலை இப்படி இருக்கா? 

முன் பதிலை சொன்னால் வாஸ்து பலம் இருக்குன்னு அர்த்தம். பின் பதிலை சொன்னால் வாஸ்து பலம் அவுட்டுன்னு அர்த்தம்.  வாஸ்து என்பது வெறும் மனம் சார்ந்த விஷயம் அல்ல. அது அறிவியல். 

இப்போ உங்களுக்கு என்ன வயசு?  சரி... ஓடுற பாம்பை தாண்டுற வயசா இருக்கலாம்.  கல்லை தின்னாலும் செரிமானம் ஆகும்னு சொல்லற மாதிரி திட காத்திரமான, ஆரோக்கியமான உடல் வாகை பெற்றவராக இருக்கலாம். 

இதெல்லம் வெளியே உலாவுற வரைதான். வீட்டுக்கு போனதும் கையை வலிக்குது, காலை வலிக்குது, தலையை வலிக்குது, சுரம் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்லற மாதிரி சூழ்நிலை வந்தால் வாஸ்து சரி இல்லைன்னு அர்த்தம். 

அதோட.... வீட்டு உறுபினர்கள் அதாவது.... அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, பிள்ளைங்க உறவு எப்படி இருக்கு?  அவங்க நடவடிக்கைகளை கவனிச்சிங்களா? 

பழகும் விதத்திலே ஒரு பணிவு, பேசும் விதத்திலே ஒரு கணிவு தெரியுதா? எல்லாத்தையும் விட போலி இல்லாத அன்பு புலப்படுத்தா? 

உங்க ஆத்துகாரம்மா..அத்தான். அத்தான்னு கொஞ்சுதா? அட நீங்க பொண்ணா...வீட்டுக்காரர் செல்லம், சக்கரை கட்டின்னு நொடிக்கு 100 தரம் சொல்றாரா? வெளியே போன பிள்ளைங்க வீட்டுக்கு நேரத்தோட வருதா? 

சொன்னால்... பிள்ளைங்க வீட்டுக்கு வந்தால் வாஸ்து பலம் இருக்குன்னு அர்த்தம். 

அதில்லாமல் வேற்று கிரகவாசி போல், வேற்றுமையோடு இருந்தால், கர மிளகாயை கடிச்ச மாதிரி காரணமே இல்லாமல், முகத்தை கடுகடுன்னு வைத்திருந்தால், எதிர் கட்சி வக்கீல் மாதிரி, எதிர்த்து எதிர்த்து பேசினால் வாஸ்து பலம் இல்லைன்னு அர்த்தம். 

என்னையா இது.... மொட்ட தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சு போடுறேன்னு  பார்கிறிங்களா? சம்பந்தம் உண்டு.  சரி.... வாஸ்துன்னா என்ன?
இயற்கையொடு மனிதன் ஒத்து போகவேண்டியத்தின் அவசியத்தை சொல்வதுதான்  வாஸ்து.  ஜோதிட சாஸ்திரத்தை தோண்ட தோண்ட சுரங்கம் என்பது மாதிரி, எப்படி நீண்டு கொண்டே போகிறதோ, அதை போல் வாஸ்து சாஸ்திரத்தையும் வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. 

அதில் இருந்து ஒரு துளியை பாப்போம். 

பூஜை அறை......

இறைவன் இருப்பிடம் கோவில். எங்கும் நிறைந்த இறைவன் தங்கும் இடமாக கோவிலை சொல்வது ஏன்? கேள்வி வருதா?  இதோ பதில். 

தீக்குசுக்குள் நெருப்பு ஒளிந்து கிடக்கிறது. உரசினால்தான் உயிர் பெரும்.  அதைபோல் தான்  இறைவன் எங்கும் நிறைந்து இருந்தாலும், இறைஅருளை  பெற கோவிலுக்குத்தான் போகவேண்டும். 

ஆனால் குடும்பத்தையே கோவிலாக பார்க்கும் பழக்கம் வழக்கம் இந்துக்களுக்கு  உண்டு. அதனால்தான் குடும்பம் ஒரு கோவில் என்றார்கள். தான் வசிக்கும் வீட்டிலேயே மினி கோவிலையே அமைத்தார்கள். 

அது பூஜை அறை.....

சிலர் பூஜை அறையை தனி அறையாக அமைத்திருப்பார்கள்.  சிலர் சுவற்றில் சுவாமி படங்ககளை மாட்டி வைப்பதுண்டு. சிலர் அலமாரியில் வைத்திருப்பர்கள்.  எப்படி இருந்தாலும் அதற்கென இடமும் அமைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
பொதுவாக பிரம்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய வீட்டின் ஹால் பகுதியில் அதாவது மைய பகுதியில் பூஜை அறையை அமைப்பதுதான் நல்லது.  அமைத்தால் செல்வம் பெருகும். புகழ் உயரும், ஆரோக்கியம் வளரும், ஆயுள் கூடும், பல்வேறு பாக்கியங்கள் வெறும் வாக்கியமாக இல்லாமல் வாழ்க்கையில் வரும்.

அப்படி அமைக்க முடிய வில்லையா...?

வடகிழக்கு மூலையில் அல்லது தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம்.

பொதுவாக சாமி படங்களையும் விக்கிரகங்களையும் கிழக்கு பார்த்து வைத்து மேற்கு நோக்கி வழிபடுவதுதான் சிறந்த முறை.  இன்னும் சொல்லப்போனால் இல்லறத்தில் இருப்போர், குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் இந்த முறையில் தான் வழிபட வேண்டும். மற்ற திசைகளை நோக்கி வழிபடுவது நல்லதல்ல.

உதாரணமாக சாமி படங்களை தெற்கு நோக்கி வைத்து வடக்கு பார்த்து வழிபடும் முறை சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் உரியது.

இல்லறத்தில் இருந்து விலகியவர்களும், பிரம்மசாரி வாழ்க்கை வாழ்பவர்களும்,  திருமண பந்தத்தை வெறுத்தவர்களும், முக்தி பெறுவதற்கான  சக்தி பெரும் திசை.

பில்லி,  சூன்யம், செய்வினை, மாந்திரிக காரியங்களுக்கு வடக்கு நோக்கி படங்களை வைத்து தெற்கு நோக்கி வழிபடும் முறை கடை பிடிக்கபடுகிறது.  குடும்ப வாழ்க்கையில் இருப்போருக்கு இந்த முறை நல்லதல்ல.

பொதுவாக பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்துவிட்டு படங்களை மேற்கு நோக்கி வழிபடும் பழக்கம் பரவலாக இருக்கிறது.  இது தவறு.

இந்த விழயங்களை கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் என்பது மாற்றம் இல்லாமல் வரும்.  ஆத்துகாரம்மா அன்போட பேசும். வாழ்கையில் நிம்மதி இருக்கும்.Monday, 19 December 2011

குரு சிஷ்யன்


அனந்தபுரி.....

இயற்கை அன்னை செயற்கை இல்லாமல் செய்த அற்புதமான இடம். அந்த இடத்தில்தான் ஒரு ஆசிரமம் அமைத்திருந்தது.  அங்கு பல மாணவர்கள் தங்கி பல்வேறு வித்தைகளை கற்று வந்தார்கள்.

இவ் வேலையில் ஒரு நாள்.  குருகுல வாசம் முடிந்து மாணவர்கள் அனைவரும் குருவிடம் ஆசி பெற்று தங்கள் ஊருக்கு புறப்பட தயாரானார்கள். ஒவ்வருவராக குருவிடம் ஆசி பெற்று சென்ற பிறகு கடைசியாக ஒருவன் குருவிடம் வந்தான். 

அவன் சிவனந்தன்.

குருவின் பாதம் பணிந்து எழுந்தான்.  அவனுக்கு ஆசி வழங்கிய குரு அசையாமல் நிற்பதை கண்டார். அனைவரும் புறப்பட ஆயத்தமான பிறகும் இவனிடம் எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

சிவனந்தன் பேராசையும், பெரும் கோபமும், அவசர புத்தியும் கொண்டவன் என்பதை குரு அறிவார். எனவே ஒரு கணம் குழப்ப அலைகள் எழுந்து ஓய்ந்தன. மெதுவாக பேச்சை துவங்கி நேரடியாக அந்த கேள்வியை கேட்டார். 

என்ன சிவானந்தா என்னிடம் ஏதாவது எதிர் பார்கிறாயா?

சிவனந்தன் தயங்கியபடியே பேச துவங்கினான்.  ஆம் சுவாமி.... நான் மேலும் சில காலம் உங்களுக்கு பணிவிடைகள் செய்து, தங்களிடம் இருந்து கூடு விட்டு  கூடு பாயும் கலையை கற்று கொள்ள விரும்புகிறேன். 

அதற்கு நிறைய பக்குவம் வேண்டுமப்பா.  இப்போதைய சூழ்நிலையில் அது உனக்கு சரியாக வராது.  காலம் வரும்போது கற்று கொள்ளலாம் போய்வா என்றார். 

சிவநந்தனோ விடாமல் பிடிவாதம் செய்தான். குரு சிறிது நேரம் யோசித்தார். ஆத்திரகாரனாகவும், அவசரக்காரனாகவும் இருந்தாலும், குருவுக்கு செய்யும் பணிவிடைகளில் எந்த பங்கமும் செய்யாதவன் என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. 

சரி... ஒரு வார காலம் என்னுடன் இரு. கற்று தருகிறேன் என்றார். மகிழ்ச்சியோடு  ஒத்துக் கொண்டான். 

ஒரு வாரம் ஓடியது. ஆனால் குருவோ எதையும் கற்று தரவில்லை. குழப்பமடைந்த சிவனந்தன் குருவிடம் அதை பற்றி நினைவு படுத்தினான். 

அவரோ முன்பு கூறியது போல் ஒரு வாரம் பொறு என்றார்.  மறு முறையும் ஏமாற்றம். குரு எதையும் கற்று தரவில்லை. மீண்டும் அதே கேள்வி, அதே பதில். 

இப்போது சிவனந்தனுக்கு இயற்கை குணம் விழித்து கொண்டது. கோபம் தலைக்கு ஏறியது.  ஒரு நாள் குருவிடம் பேசுகிறோம் என்ற நினைவே இல்லாமல் கோவமாக இதைப்பற்றி கேட்டான். ஆனால் குருவோ சிரித்துகொண்டே  நிதானமாக பேச துவங்கினார். 

நீ இன்னும் பக்குவப்படவில்லை என்பதை இப்போது உணர்கிறாயா? 

அணிமா? லகிமா? கரிமா? பிரகாம்மியம்? பிராப்தி. வசித்துவம், ஈசத்துவம் என்னும் அஷ்டமா சித்திகளின் வரிசையில் கூடு விட்டு கூடு பாயும் கலையும் ஒரு சித்தியே. 

பக்குவமற்ற ஒருவனுக்கு இவ்வித்தை வசப்பட்டால் அது இந்த சுமுதாயதிற்கும், ஏன் கற்று கொண்டவனுக்கும் கூட பயன் இல்லை.  எனவே ஊர் திரும்பும் ஏற்பாடுகளை செய் என்று அறிவுரித்தினார். உடனே சிவனந்தன் திடுக்கிட்டு போனான். 

அப்போதுதான் குரு இதுநாள்வரை சோதித்து பார்த்த விபரம் புரிய வந்தது. எங்கே வித்தையை கற்று கொடுக்காமல் விரட்டிவிடுவாரோ என்று பயந்தவன்  அவர் காலில் விழுந்து மன்றாடினான்.

குருவே தங்களிடம் பேசிய முறை தவறுதான். ஆனால் என் கோபத்திற்கான நியாயமான காரணத்தை உணர்ந்து மன்னித்து அருள வேண்டும் என்று கெஞ்சினான்.

சிவனந்தா நெருப்பில் நியமான நெருப்பு, அநியாயமான நெருப்பு என்று பாகுபடுத்தி பார்க்க முடியுமா.  விளக்கில் இருக்கும் சாந்தமான நெருப்பு, தவறி குடிசையில் படுமானால் ஆக்ரோசமாய் பற்றி எரிந்து குடிசையை சம்பலாக்கவே  செய்யும். கோபமும் நெருப்பு போன்றதுதான்.

இல்லறம் மேற்கொள்ளபோகும் உனக்கு இந்த வித்தையால் எந்த பயனும் இல்லை.  மாறாக உனக்கும் மற்றவர்களுக்கும் தீமையை அளித்து விடும்.

எனவே இப்போது திரும்பி செல்.  உரிய காலம் வரும்போது இது போன்ற வித்தையை கற்று கொண்டு சுமுதாயதிற்கு நன்மை செய் என்றார்.

ஆனால் சிவனந்தன் குருவின் கருத்தை ஆமோதிக்காமல் தன் மனக் கருத்தை அவரிடம் எடுத்துரைக்க துவங்கினான்.

சுவாமி... நீங்கள் உங்களின் உடலை விட்டு வெளியேறி அடிக்கடி விண்ணுலகம்  சென்று வருவதை பார்த்திருக்கிறேன். அப்படி அறிந்து  கொண்ட நாள் முதலே எனக்கும் அதுபோல் விண்ணுலகம் சென்று வரும் விருப்பம் வந்துவிட்டது .  எனவே தான் அந்த கலையை கற்றுக் கொள்ளும் ஆவல் வந்து விட்டது.

மெதுவாக கண்களை மூடி தியானித்த குருவின் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தன.  கண் விழித்து குழப்பத்துடன் பேசினார்.

அப்பனே...உனது ஜனன ஜாதகப்படி உனக்கு கேது பகவானின் தசை இந்த வினாடி முதல் துவங்கி விட்டதாக அறிகிறேன். உனக்கு கேது தசை அசுப பலனை அளிக்கும் என்றே கருதுகிறேன்.

என்ன நடக்கும் என்பதை அறிய முடியாதபடி கேது என் ஞான திருஷ்டியை மறைக்கிறார்.  அதனால் நான் உணர்வது என்னவென்றால்,  பெரிய ஆபத்து உனக்கு காத்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

அதோடு கேது பகவான் என் போன்ற சன்னியாசிகளை உருவாக்குபவர். பாம்பாட்டிகளை   உருவாக்குபவர், செப்பிடு வித்தை காரர்களை உருவாகுவது,  குஷ் ட ரோகிகளை உருவாக்குவது என்று பல்வேறு காரக பலன்கள் அவருக்கு இருக்கிறது.

இந்த நேரத்தில் இது போன்ற ஆபத்தான வித்தைகளை கற்று கொள்ள நினைப்பது ஆபத்தானது. சொல்வதை கேள்.

குரு எவ்வளவு எடுத்துரைத்தும் சிவனந்தன் கேட்பதாக இல்லை. திரும்ப திரும்ப அந்த கலையை கற்றுக் கொள்ளும் மன போக்கிலேயே பேசினான்.

சரி.... நீ விண்ணுலகம் சென்று வர வேண்டும் அவ்வளவுதானே, அதற்கு கூடு விட்டு கூடு பாயும் கலையைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

என்னுடைய தவ வலிமையால் உன்னை விண்ணுலகம் அனுப்புகிறேன். ஆனால் ஒரு எச்சரிக்கை  என்று நிறுத்தினார்.

சொல்லுங்கள் சுவாமி....
விண்ணுலகம் செல்லும் நீ... அங்கு யாரிடமும் பேசக்கூடாது. எதையும் தொடவோ, எந்த செயலையும் செய்யவோ முற்பட கூடாது. எந்த சந்தேகம் வந்தாலும் கிழே வந்து என்னிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்.

முக்காலம் உணரும் என் ஞான திருச்ட்டியை கேது பகவான் மறைக்கிறார் என்றால், உனக்கு ஏதோ விபரிதம் நடக்கப் போகிறது என்றுதான் உள்மனம் சொல்கிறது. ஆனால் நீயோ பிடிவாதம் பிடிக்கிறாய்.

அதனால் நீ சென்றதும் உடனே திரும்பி வந்துவிட வேண்டும் என்று கூறினார். எப்படியோ விண்ணுலகம் போக வேண்டும் என்ற ஆவலில் இருந்த சிவனந்தன் உடனே ஆமோதித்தான்.

உடலில் இருந்து உயிரை பிரித்து விண்ணுலகம் செல்லும் வலிமையை கொடுத்ததோடு இல்லாமல், அங்கிருந்து திரும்பி வரும் மந்திரத்தையும் உபசேசித்து அனுப்பி வைத்தார். உடலை விட்டு பிரிந்த சிவனந்தன் விண்ணுலகம் சென்றடைந்தான்.

அங்கே.....

கோடிக்கணக்கான விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் கண் கொள்ள காட்சியை கண்டான். உண்மையில் வியப்படைந்தான்.  அவனுக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டானது.

அந்த சமயம் அவ்வழியே ஒரு இளம் துறவி வந்தார். ஆர்வ துடிப்பில் இருந்த சிவனந்தன் அதை பற்றி அவரிடம் கேட்டான்.

அதற்கு இளம் துறவி இப்படி சொன்னார். இது தேவரகசியம். இருந்தாலும் சொல்கிறேன், இங்குள்ள ஒவ்வொரு விளக்கும் பூலோகத்தில் வசிக்கும் மனிதர்க்குரியது.

விளக்கில் என்னை தீர்ந்து அணையும் போது அவ்விளக்கிற்குரிய மனிதன் இறந்து விடுவான் என்றார் அந்த இளம் துறவி.

உடனே சிவனந்தனுக்கு பேராசை குணம் விழித்துக் கொண்டது.  இளம் துறவியை  பார்த்து கேட்டான்.... இதில் என் விளக்கு எனது சுவாமி.

மகனே பொறு.  மகத்தான தவவலிமை பெற்றவர்கள் மட்டுமே வரக்கூடிய இவ்விடத்திற்கு, மானிட பிறவியான நீ வந்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.  அது உன் குருவின் திருவருள் என்பதும் புரிகிறது.

என்றாலும் மேல் விவரங்களை கேட்காமல் உடனே பூலோகத்திற்கு செல்.  இதுதான் நல்லது. இளம் துறவி சிவனந்தனுக்கு புத்திமதிகள் கூறினார்.  சிவனந்தன் வழக்கம் போல் பிடிவாதம் செய்தான்.

மகனே நீ தும்பை சித்தரின் மாணவன் என்று அறிகிறேன்.  அவர் மீதுள்ள மதிப்பால் கூறுகிறேன், வேண்டாம் உடனே திரும்பி செல்.

மீண்டும் மீண்டும் தனக்கு உரிய விளக்கு எது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலிலேயே பிடிவாதம் பிடித்ததால்,  அவனுக்கு உரிய விளக்கை அடையாளம் காட்டிவிட்டு பொய் விட்டார்.

விளக்கின் அருகில் போய் பார்த்த சிவனந்தனுக்கு அதிர்ச்சி.  காரணம் அவ்விளக்கில் எண்ணெய் தீரும் நிலையில் இருந்தது.  விளக்கில் எண்ணெய் தீர்ந்து அணைத்தால், அவ்விளக்கிற்குரிய மனிதன் இறந்து விடுவான் என்று அந்த இளம் துறவி கூறினாரே.  அப்படியானால் நானும் வெகு விரைவில் இறந்து விடுவேனா.

இதை பற்றி குருவிடம் கேட்டால் ஏதாவது தர்ம நெறிகளை கூறி தடுத்து விடுவார். அதனால் அதற்கு இங்கேயே எதாவது உபாயம் தேடவேண்டும், என குறுக்கு வழி சிந்தனை செய்தான்.

உடனே ஒரு யோசனை தோன்றியது, அருகில் இருந்த விளக்கில் நிறைய எண்ணெய் இருந்தது.  உடனே அதில் இருந்த எண்ணையை எடுத்து தன் விளக்கில் ஊற்றிவிட்டு, உடனே பூலோகம் திரும்பினான்.

பின் தன் உடலில் புகுந்து கொண்டான்.  அதன் பிறகு சிறிது நாழிகையில் அவன் விரல்கள் சிவந்து அரிக்க தொடங்கியது.  பயந்து போனவன் குருவிடம் சென்று விபரம் கூறினான்.

அவரும் நடந்த விபரங்களை தன் ஞான திருஷ்டியால் நடந்த விபரங்களை அறிந்து கொண்டு பரிதாபமாக பார்த்தார்.

நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி செய்து விட்டாயே, விண்ணுலகில்  துறவி உருவில் வந்த கேதுபகவான் கூட முதலில் உன்னை எச்சரிக்கை செய்யவே செய்தார்.

எப்போதுமே கிரகங்கள் கெட்ட காலம் வரும் போது நல்லவர்கள் உருவில் புத்திமதிகள் சொல்லவே செய்யும்.  ஆனால் அதை உதறி தள்ளி விட்டு அவஸ்த்தையில் சிக்கி கொள்வது மானிட குலத்திற்கே உள்ள மாண்புதானே.

கேதுபகவான் எச்சரித்தும் கேட்காமல் ஒரு குஷ்ட ரோகி விளக்கில் இருந்து எண்ணையை எடுத்து உன் விளக்கில் ஊற்றி விட்டாய்.  விளைவு.... அவன் எவ்வளவு காலம் நோயால் பாதிக்க பட வேண்டும் என்ற விதி அமைப்பு இருக்கிறதோ அத்தனை ஆண்டு காலம் நீயும் இந்த நோயால் துன்பப்பட வேண்டி வரும்.

இனி என்னால் செய்வதற்கு ஒன்றும் இல்லை. நீ கேதுபகவானை வணங்கி துன்பத்தில் இருந்து விடு பட வழி இருக்கிறதா என்று யோசி என்று அவனை அனுப்பி வைத்தார்.

குருவை அடைவது முக்கியமல்ல.  குருவின் சொல்லை கேட்க வேண்டும்.  அதோடு அவசரம் கூடாது.  இது ஒரு படிப்பினை.

 

NEW YEAR PALAN/ புத்தாண்டு பலன்கள்

NEW YEAR PALAN/     புத்தாண்டு பலன்கள்

மேஷம்

நீங்க யாரு? செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். வேஷம் போட தெரியாதவர்கள். உயர்ந்த எண்ணமும் உறுதி கொண்ட மனமும் உங்களுக்கே சொந்தம்.  அன்பை விரும்புவிங்க. வம்பை வெருப்பிங்க.  வந்தா விடவும் மாட்டிங்க. 

திட்டமிடல் உங்க கூட பிறந்தது. வெற்றி பெரும் வரை ஓய மாட்டீங்க. முதலிடம் என்பது உங்கள் ராஜ கனவு.  சூடானவர், ஆனால் சுவையானவர்கள். வரம் தரும் சாமி எது என்பதை கண்டு பிடித்து வணங்குவீங்க. 

யாசிப்பதில்லை.  மற்றவரை யோசிக்க வைப்பவர்கள்.  நீங்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை.  முன் கோபம் என்பது உங்கள் கூட பிறந்தது. சலிப்பில்லாமல் உழைபீங்க.  

நன்றே செய்யணும் அதை இன்றே செய்யணும் என்பது உங்கள் தாரக மந்திரம். உங்கள் வாழ்க்கை பதையில் சவால்கள் இருந்தாலும், சந்திக்க துணிந்தவர்கள்.  

சரி புத்தாண்டு எப்படி இருக்கும்? 

கண்டக சனி ஆரம்பமாகி விட்டது. இனி தொழில், உத்தியோகம், வருமானம், குடும்ப நலம், சுக சௌகரியம், உறவுகளில் பகை, ஆரோக்கியம், அன்றாட வாழ்க்கை இப்படி எதாவது ஒரு பாதிப்பு இல்லாமல் இருக்காது.  

அலைச்சல், திரிச்சல் அதிகமாகும். ஆதாய முயற்சிகளில் ஒரு தேக்கம் இருக்கும். எல்லாமே இருக்கிற மாதிரி தெரிந்தும் கூட, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. 
அதற்காக நல்லதொரு மாற்றம் இல்லாமலும் போகாது. மனக்குறை மட்டும் மாறவே மாறாது.   கடவுள் கூட கண் திறக்கலையே, இனி மீள முடியுமா? கௌரவமாக வாழ முடியுமா? போனது வருமா? நிம்மதியும் சந்தோசமும் நீடிக்குமா? 

வேலையில் நெருக்கடி தணியுமா? வேண்டாத சிந்தனைகள் மறையுமா?  குடும்பத்தில் குழப்பம் விலகுமா? பிள்ளைகளின் எதிர் காலத்திற்காக உருப்படியாக எதையாவது செய்ய முடியுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது. 

பலவற்றிருக்கு பதில் தெரியாது.  கால சக்கரம் சுற்றி கொண்டுதான் இருக்கும் . உங்களுக்கு மட்டும் அது பயம் காட்டும்.  மே மாதம் நிகழும் குரு பெயர்ச்சிக்கு பிறகு எல்லாமே வந்து வந்து போகும். 

காசு பண கஷ்டம் குறைய, கடன்கள் மறைய சிறிது காலம் ஆகும். சந்தேகம் நீங்கி சந்தோசம் பிறக்க அவகாசம் தேவைப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை.  உடன் இருப்போரோடு கவனம் தேவை. 
அகலக்கால் வைக்கும் முயற்சி வேண்டாம்.  கடன் வாங்கி கடன் கொடுக்கும் முயற்சி அறவே வேண்டாம்.  வீட்டில் பகை வராமல் பார்த்து கொள்ளுங்கள். 
உடன்பாடில்லாத ஒரு விஷயம் ஒதுங்கி போனாலும் வாக்கு கொடுத்த வகையில்  வம்பு ஓன்று தேடி வரும்.
சாமுத்திரிக லட்சணம்


ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்தே அவரின் குணம் மற்றும் செயல்பாடுகளை சொல்லும் கலைக்கு சாமுத்திரிக லச்சணம் என்று பெயர்.  இது ஒரு பழமையான கலையாகும்.  இங்கே பெண்களின் குணத்தை  சொல்லும் ஒரு பகுதியை பார்ப்போம். 
பெண்ணின் கழுத்து இளைத்து சிறியதாக இருந்தால் அவர் முன்கோபியாக இருப்பார். 

பெண்ணின் கழுத்து உயரத்திற்கு ஏற்ற மாதிரி இல்லாமல் இருந்தால் எப்பொதும் கவலை பட்டுக்கொண்டே இருப்பார்கள். கவலையே இல்லாமல் இருந்தாலும் காரணம் கண்டு பிடித்தாவது  கவலை படுவார்கள்.

கழுத்து பகுதி மிக குறிகியதாக இருந்தால் இளமையில் விதவையாவார்.  வாலிபத்தில் வாழ்க்கை பறிபோகும். 
கழுத்து பகுதி மிக நீளமாக இருந்தால் ஒழுக்க குறைபாடு உள்ளவர்.  நடத்தை சரி இல்லாமல் இருப்பார்கள்.  கட்டிய கணவனுக்கு துரோகம் செய்வார்கள். 

முகவாய் வட்டமாகவும், சதைபிடிப்பாகவும் , ரோமங்கள் இல்லாமலும், வடுக்கள் இல்லாமலும் இருந்தால் நல்ல யோகமுல்லவர். வாழ்நாள் முழுவதும் வசதி குறையாமல் வாழ்க்கை அமையும்.  தொட்டது துலங்கும். 

வாய் பகுதி அகலமாக இருந்தால் நம்பிக்கை குறைவானவர்.  நம்பிக்கை மோசடி செய்வார். இவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க முடியாது. மண் குதிரையை நம்பி ஆற்றீல் இறங்கிய கதையாக போய்விடும். 

முகவாய் சதை பிடிப்பில்லாமல் மெல்லிய ரோமங்கள் இருந்தால் தீய செயல்கள் செய்வார். சண்டைக்காரி என்று பெயர் எடுப்பார். 

கன்னம் வட்டமாக சதை பிடிப்பாக இருந்தால் எதையும் திட்டமிட்டு செய்வார்கள். அமைதியானவர். அன்பானவர். நம்பிக்கைக்கு உரியவர். 

கன்னத்தில் ரோமங்கள் இருந்து, தட்டையாக சதை பிடிப்பு இல்லாமல் இருந்தால் எதையும் சிந்திக்காமல் செயல்படும் குணம் உள்ளவர். 

முகம் நல்ல வெளுப்பாகவும், கண்கள் நல்ல பால் வண்ண நிறத்திலும். வசீகரமான பார்வையும்  இருந்தால் பாக்கியசாலிகள் எனலாம்.  வாழ்க்கை சிறப்பாக அமையும்.  நிலையான செல்வ சிறப்பை பெறுவார்கள்.  கணவனின் அன்புக்கு பாத்திரமாக அன்னோன்னிய தம்பதியாக வாழ்வார்கள். 

வாய் சதுரமாக இருந்தால் பிறரை பழிவாங்கும் எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். 

வாய் பெரியதாக இருந்தால் நம்ப முடியாத குணம் உடையவராக இருப்பார். எப்போது காலை வாருவார்கள் என்று சொல்ல முடியாது.  அவர்களிடம் மிகவும் கவனமாக பழக வேண்டும்.
வாய் சிறியதாக. அழகான உதடுகளை பெற்றிருந்தால் அன்பானவர். அதிஷ்ட்டம் நிறைத்தவர். கணவனுக்கு பிடித்த மனைவியாக திகழ்வார்கள். 
கீழ் உதடு தடித்து பெரியதாக இருந்தால், முன் கோபம், முன் எச்சரிக்கை இல்லாமல் செயல் படுவது, எடுத்து எறிந்து பேசும் குணம், பிடிவாத போக்கு உடையவர்.  காம சிந்தனை அதிகம் உள்ளவர். 

உதடுகள் சிவந்து பவழம் போன்று இருந்தால், அட்டகாசமான வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரிய நிலையில் செல்வ செழிப்போடு வாழ்வார்கள். 

உதடுகள் கருப்பாகவும் அழகில்லாமலும் இருந்தால், இளமையில் வதவையாவார். உறவுகள் பகையாகும். வாழ்கையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டிவரும். 

மேல் உதடும், கீழ் உதடும் ஒரே அளவாக இருந்தால் பணக்காரி என்று பெயரெடுப்பார்.  

சாதாரண நிலையில் உதடுகள் இரண்டும் ஒட்டாமல் இருந்தால், நம்ப முடியாதவர், நம்பிக்கை துரோகம் செய்வார். 

மேல் உதட்டில் ரோமம்கள் நிறைத்து இருந்தால் கணவனுக்கு கட்டு படாதவர். தன்னிச்சையாக செயல் படுவார்.  சுதந்தர பிரியர். எதற்கும் துணிந்தவர். 

பற்கள் வெண்மையாக அழகாக ஒரே வரிசையாக இருந்தால் பெரும் பாக்கியசாலி  என்றே சொல்லலாம்.  உதடுகள் ரோஜா நிறத்திலும். வில் போன்ற  அமைப்பிலும் இருந்தால் வாழ்க்கை வளமாக அமையும்.  வசதி வாய்ப்புகள் பெருகும். மனதில் சந்தோசம் அதிகரிக்கும், மிகவும் பொருத்தமான  கணவரை அடைவார்கள். 

பல்வரிசை சரியாக அமையாமல் இருந்தால், பிடிவாத குணம் பெற்றிருப்பார்.  விட்டு கொடுக்கும் குணம் சுட்டு போட்டாலும் வராது.  பல் ஈறுகள் கருப்பாக இருந்தால் திருட்டு குணம் உள்ளவர்.  திருடுவார். 

முன் பற்கள் மட்டும் பெரியதாக இருந்தால் யோகம்.  ஆனால்  மத்திம வயதில் இல்லறத்தை இழக்க வேண்டிவரும்.  

பற்கள் மஞ்சள் நிறமாகவும், கருப்பாகவும் இருந்தால் உடல் உறவில் தணியாத  தாகம் உள்ளவர். 

பற்கள் பெரிதும் சின்னதுமாக ஒழுங்கு இல்லாமல் இருந்தால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிவரும்.

அடுத்த கட்டுரையில் மேலும் பல விவரங்களை பார்போம். 


Sunday, 18 December 2011

வீட்டில் பணபெட்டியை எங்கே வைப்பது?

விட்டில் பண பெட்டியை எங்கே வைப்பது?நான் கஷ்ட்டப்பட்டு உழைக்கிறேன், எவ்வளவு பணம் வந்தாலும் தங்க மாட்டேங்குது.  அதுக்கு ஒரு செலவு தயாரா இருக்கு - ஒருவர் 

எனக்கு தேவைகள் அதிகமா இருக்கு, அதனால எப்பவும் பற்றாக்குறைதான் -மற்றொருவர் 

நம்ம விட்டுல மகாலக்ஷ்மி தங்கிக்க இடவசதி இல்லையோ என்னவோ - ஒரு நக்கல் 

இப்படி ஆளுக்கு ஒரு அபிப்ராயங்கள் இருக்கிறது. இதன் சாராம்சம் என்ன என்று பார்த்தால் சேமிப்பு இல்லை என்பதை தவிர வேறு இல்லை.

உங்கள் விட்டில் எப்பவும் காசு பணம் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம் என்ன என்பதை பார்போம்.

உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும்.  அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.

வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் மாதிரி போய் கிட்டே இருக்கும். வரவுக்கு மிறிய செலவு வரும். 

தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும்

உங்கள் விட்டு பூஜை அறையில் சாமி படங்ககளை மேற்கு திசை நோக்கி .வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும்.
அட சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்திர்களானால் பணம் வருவதும் போவதும்மாக இருக்கும் தங்கவே தங்காது.

பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு.

The way to win 4d lotteryநம்பர் லோட்டேர்யில் பரிசு வாங்குவது எப்படி?

அன்பு நண்பர்களே வணக்கம்.  இந்த பிளாக்கர் மூலம் ஆன்மிகம், ஜோதிடம், தத்துவம், தன்னம்பிக்கை, குட்டி கதைகள், கவிதைகள் நம்பர் டிப்ஸ் என்று பல்வேறு தலைப்புகளில் தினம் ஒரு கட்டுரை வெளியாக இருக்கிறது.  அதை உங்கள் மெயில் மற்றும் பேஸ்புகில் பெற உடன் மெம்பராக மாறுங்கள்.  

அது எங்கள் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். உங்கள் நண்பர்கள் , உறவினர்கள், இந்த தளத்தில் உறுப்பினராக மாற உங்கள் மேலான ஆலோசனைகளை சொல்லுங்கள்.  ஓகே இனி தலைப்புக்குள் போவோம். 

நம்மை சுற்றி செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.  அது முன்னோர் தேடியதாக இருக்கலாம். அல்லது சுய முயற்சியில் தேடியதாக இருக்கலாம். செய்தொழில் உத்தியோக ரிதியில் வருவாய் வரலாம். 

சிலருக்கு திருமணத்தால் யோகம் வருகிறது. சிலருக்கு திரும்பிய பக்கமெல்லாம் வருவாய் வருகிறது.  ஆனால் அதிஷ்ட்டதில் இருந்து வருவாய் வருவதாக இருந்தால் அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். 

அதுவும் நம்பர் லாட்டரயில் பம்பர் பிரைஸ் பெறுவதற்கு உண்மையில் அதிஷ்ட்ட காற்று அடிக்கா விட்டால் வரவே வராது.  ஒரு நம்பரில் மிச்சாகும் அல்லது நான்கு நம்பரும் இருக்கும் இடம்மாறி இருக்கும். 

அல்லது ஒரு நம்பரை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்கள், எடுக்காத நாள் பார்த்து அந்த நம்பர் வரும்.  நீங்கள் 100 % யோகம் பெறுவதற்கு ஒரு தொடர் கட்டுரை வெளியட இருக்கிறோம்.  தொடர்ந்து படித்து வாருங்கள்.  மகாலக்ஷ்மி உங்களை தேடி வருவாள். 

உதாரணமாக மேக்னத்தில் வரும் நம்பர் டோடோவில் வரும்.  குடாவில் வரும் நம்பர்கள் மேக்னத்தில் வரும்.  குடாவில் எந்த நம்பர் வரும் என்றால் சிங்கபூர் லோட்டேரி முடிவுகள் தான் பெரும்பாலும் மாறி வருகிறது. 
இதை தொடர்ந்து கவனித்து வந்தால் தெரியும்.  பெரும்பாலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நம்பர்கள்தான் அடுத்த லோட்டேரி இல் மாறி வரும்.  அல்லது புதன்கிழமை வரும் நம்பர்கள் அடுத்த புதன்கிழமை மாறிவரும்.  சனிக்கிழமை வரும் நம்பர்கள் மறு சனிக்கிழமை மாறி வரும்.  

சரி இனி உதாரணத்தை பார்போம்.  மேக்னம் தில் 7472 என்று வருவதாக வைத்து கொள்வோம்.  அதே நம்பர் டோடோவில் எப்படி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது? 

ஏழு ஒன்றாக மாறலாம்.  அல்லது ஏழு நான்காக மாறலாம்.  அதன்படி பார்க்க போனால் 1412 என்றோ, 4211 என்றோ, 4121 என்றோ மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.  அல்லது 4442 வாக மாறும்.  அல்லது ஒரு நம்பரை மாற்றி 7473 என்றோ, 7437 என்றோ வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.  

பெரும்பாலும் ஆறு ஒன்பதாக மாறுகிறது, மூன்று எட்டாக மாறுகிறது,  நான்கு ஏழாக மாறுகிறது.  அல்லது ஏழு நான்காக மாறுகிறது.  இது டோடோவில். 
மேக்னத்தின் கதையே வேறு.  உதாரணமாக வேறு லோட்டேரியில் 8676 என்று வந்தால் 8075 என்றோ, 7508 என்றோ வரும்.  அதாவது நம்பர்கள் நேரிடையாக ஏறாமல் நம்பர்கள் குறைத்தோ, அல்லது அதிகரித்தோ தான் வரும்.

அதாவது மக்னத்தில் ஆறு மற்றும் எட்டு என்பது ௦ என்று மாற அதிக வாய்ப்புகள் உண்டு.  அடுத்து அந்த மாதத்தில் பிறந்த முக்கிய தலைவர்கள் பிறந்த நாளை கவனத்தில் கொள்ள வேண்டும்.  
அதாவது ஒருவர் 1954 இல் பிறந்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம்.  சில சமயம் நேரிடையாக வரும்.  அந்த தேதியில் வராது.  ஒன்று ஒரு வாரம் முன்பு வந்து விடும்.  அல்லது ஒரு வாரம் கழித்துதான் வரும்.  அப்படி வந்தாலும்  9154 என்று வரலாம்.  அல்லது 5411 என்று வரலாம்.  54 என்பது அவர் பிறந்த வருடம். 11 என்பது நடப்பு வருடம்.  

இது இப்படியும் மாறலாம்.  5457 என்றோ, 5754 என்றோ, 5745 என்றோ வரலாம்.  1954 இல் பிறந்தவருக்கு தற்போதைய வயது 57 அதுதான் காரணம். 

அடுத்து டோடோவுகு வருவோம்.  உதாரனமாக 7356என்று ஒரு நம்பர் முதல் பிரிசு வருகிறது என்று வைத்து கொள்வோம்.   அந்த நான்கு நம்பரில் மூன்று நம்பர் அடுத்து வரும் ஆறு ரேசுக்குள் வரும்.  

உதாரனமாக 735 கடைசி நம்பர் மட்டும் மாறும்.  அல்லது 756 கடைசி நம்பர் மட்டும் மாறும்.  அல்லது 736 கடைசி நம்பர் மட்டும் மாறும்.  அல்லது 356 கடைசி நம்பர் மட்டும் மாறும்.  563 கடைசி நம்பர் மட்டும் மாறும்.  இது உங்களுக்கு நான் தரும் சின்ன உதாரணம் தான்.  இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கிறது.  நாளை தொடர்ந்து பேசுவோம்.
  
தொடரும்..........

Saturday, 17 December 2011

சிவ வழிபாடு செய்வது எப்படி ?

சிவ வழிபாடு செய்வது எப்படி ?


வேண்டுதல், பிராத்தனை, வழிபாடு என்பது ஒரு மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு.  அந்த வகையில் சிவ வழிபாடு பற்றி பார்போம். 

முதலில் கொடி மரத்தை வணங்கி,  பின் பலி பிடத்தை வணக்க வேண்டும். பலி பிடம் என்பது நந்தி தேவருக்கு பின் உள்ளது. இது அந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி யாரோ அவரின் பாத கமலனக்களை குறிக்கும் விதமாக தாமரை வடிவில் இருக்கும்.


இந்த பலி பிடம் பாசத்தை உணர்த்துகிறது.  அதாவது மனித வாழ்வில் இயல்பான காம, குரோத, லோப, மோக, மத மாச்சரியங்களை பலி கொடுப்பதாக உறதி செய்து கொள்ள வேண்டும்.

நமது ஆணவம், அகங்காரம் பற்றுகளை பலி இட்ட பின்னரே தெய்வ சித்தி கிட்டும். கோவிலின் எட்டு மூலைகளிலும் அஷ்ட திக் பாலகர்களான இந்திரன் அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், எசாணன் முதலியவர்களுக்கு தலைமை பிடமாக இருப்பது பலி பிடமாகும். 

கொடி மரத்திற்கு அடுத்து பலி பிடத்தை வணங்கி நந்தி தேவரிடம் வருகிறோம். 

யார் இந்த நந்தி?

உத்தமமான முனிவர் கிலாதர்.  அவர் பத்தினி சித்ரவதி அம்மையார்.  இந்த முனி தம்பதியரின் தவப்பயனால் கைலைநாதன் ஸ்ரீ சைலம் போக என்று அன்பு கட்டளை இட்டார். 

பரம்பொருளின் உத்தரவு படி ஸ்ரீ சைலம் வந்தார்கள். புத்திர பாக்கியம் வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள். கடும் தவம் புரிதார்கள். 
கருணை கடலான சிவபெருமான் அருளால் சூரியனை போன்ற பிரகாசமான மகன் பிறந்தான்.  அன்னை சிதிரவதி அம்மையார் பாசத்தை பொழிந்து மகனை சீராட்டி தாலாட்டி வளர்த்தார்.  சகல கலைகளையும் தந்தை கிலாதர முனிவர் கற்பித்தார். 

வளர்ந்து வாலிபத்தை தொட்டார் நந்தி.  எல்லா தாயாருக்கும் உள்ள கவலை சித்ரவதிக்கும் வந்தது. பருவத்தே திருமணம் செய்ய ஆசை பட்டாள்.  ஆனால் நந்தி பகவானோ தவ கோலம் பூண்டார். 
பெற்று வளர்த்து சீராட்டி பாராட்டி வளர்த்த தாய் தந்தையரை வணங்கி.... என்னை ஆசிர்வதியுங்கள்.  நான் பரம் பொருளை காண கடும் தவம் செய்ய போகிறேன் என்றார் ரிஷி குமாரன் நந்தி. 

காலம் போடும் கணக்கை புரிந்து கொண்ட முனி தம்பதிகள் ஆசிர்வதித்தார்கள்.   எல்லா வளமும் பெற்று மங்கலம் பெருகுக என்று வாழ்த்தினார்கள். 

விடை பெற்ற நந்தி  அக்கினியில் பல ஆண்டுகள் நின்று கொண்டே தவம் செய்தார்.  மெய் வருத்த செய்த தவத்தின் பயனாக பரமேஸ்வரன் நேரில் வந்தார். 

 மகனே... எனது ஆணை எங்கும் நிறைத்தது.  அதுபோல் இன்று முதல் உனது அதிகாரமும் எங்கும் நடக்கும்.  அதனால் அதிகார நந்தி என்று சொல்லபடுவாய் என்று ஆசிகள் கூறினார். 

நந்தி தேவன் அதிகார நந்தி என்று பெயர் பெற்ற பின்னாலும் கடும் தவம் செய்தார்.  அந்த தவத்தின் பயனாக மீண்டும் வரங்கள் தந்தார். 
அனைத்து பூதங்களுக்கும் உன்னை தலைவனாக ஆக்குகிறேன்.  சிவ ஞானத்தை  உலகிற்கு போதிக்கும் ஆசிரியனும் நீ.  எனக்கு வாகனமாகவும், கைலயில் காவல் தெய்வமாகவும் நீயே இருப்பாய்.  அதனால் என்னை போலவே  நீயும் நித்தியனாக இருப்பாய் என்று வரமளித்தார். 

நந்தி சைவர்களுக்கு குரு.  நந்தி என்றாலே எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பார் இருப்பவர் என்று பொருள்.  இவரின் அனுமதி பெறாமல் சிவ தரிசனம் செய்வது தவறு.  அப்படி வணக்கினால் சிவனருள் கிட்டாது. 

பொதுவாக சிவ ஆலையத்தில் நந்தி தேவர் எப்பொதும்சிவனை துதித்து வணங்கியபடியே இருப்பதால்,  சிவனுக்கும் நந்திக்கும் இடையே செல்வதை தவிர்க்க வேண்டும்.  நந்தி தேவர் வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்வதே பிரதானமாக இருக்கிறது. 

திரயோதசி அன்று மாலை சூரிய அஸ்த மனத்திருக்கு முன்னதாக ஒன்னரை மணி நேரம் பிரதோஷ காலமாக கருதபடுகிறது.  அந்த நேரத்தில் தான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே,  அண்டத்தின் மீது நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார். 

இவ்வேளையில் உலகில் உள்ள அனைத்து சீவன்களும் சிவபெருமானுக்குள் ஒடுங்கி விடுவதாக புராணம் சொல்கிறது.  பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும் சிவனையும் துதிப்பது 1000 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். 

கல்வி, செல்வ வளம் பெற்று, கடன் தொல்லை, வறுமை, மனக்கவலை நீங்கி குறிப்பாக மரணபயம் அற்று வாழ பிரதோஷ வழிபாடு சிறப்பு.  நந்தி தேவர் மந்திரம். 

தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமைகி 
தன்னோ நந்தி பிரசோதயாத் 

நந்தி தேவரை வணங்கி அனுமதி பெற்று சிவதரிசனம் செய்த பிறகு சண்டிகேசுவறரை வணங்க வேண்டும். 

யார் இந்த சண்டிகேசுவரர்?

இவர் ஒரு சிவனடியார். சிவ சன்னதியில் சிறு இடைவெளி விட்டு இடது புறத்தில்  சிறிய ஆலயம் அமைக்க பட்டிருக்கும்.  இவருக்குயென தனியாக மாலையோ நெய்வேதியமோ கிடையாது. 
மூலஸ்சாணத்தில் சார்த்திய மாலையும், மிதமுள்ள நெய்வேத்தியமும் தான் இவருக்கு உரியது. 
எப்போதுமே தவ நிலையில் இருந்து சிவ பெருமையை நெஞ்சுருக பிரதித்து கொண்டிருப்பார்.  அவரை வணக்கும் பொது சிவனருள் பரிபோரனமாக கிடைக்க வேண்டும் என்று இவரிடம் கேட்க வேண்டும். 

பின் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி கொடி மரத்திருக்கு முன்னாள்  நமஸ்காரம் செய்தால் சிவதரிசனம் நிறைவு பெறுகிறது.

Friday, 16 December 2011

WHETHER THE WORLD WILL DESTROYED ON 2012

 WHETHER THE  WORLD  WILL  DESTROYED  ON  2012 /  
 2012 இல் உலகம் அழியுமா?  

2012 
உலகம் அழியும் என்ற ஒரு வரி செய்தி உலகம் முழுவதும் விவாத பொருளாக மாறிவிட்டது.  இந்த வருடத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

திரை இட்ட இடமெல்லாம் வசூல். இது ஏதோ ஆர்வ கோளாரில் அணிவகுக்கும் மக்கள்  அல்ல. அதிர்ச்சியான தகவலை ஆராய வந்தவர்கள்.  ஜோதிடம் பார்க்க வரும் பலர் தங்களின் எதிர் காலத்தை பற்றி கேட்கிறார்களோ இல்லையோ உலக ஜாதகத்தை பற்றித்தான் முதல் கேள்வியே எழுப்புகிறார்கள்.

இதற்கெல்லாம் கரணம் இல்லாமல் இல்லை. எதிர் காலத்தை கணிக்கும் சில நிபுணர்கள், அடுத்து நடக்க போகும் சம்பவங்களை பல 100 வருடங்களுக்கு எழுதி வைத்து இருக்கிறார்கள். 

அதில்தான் 2012 ல் உலகம் அழியப்போகிறது என்ற அதிர்ச்சி  தகவல், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போ  அடித்தட்டு மக்களுக்கு அதைவிட நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பது கனவு.  மிடில் கிளாசில் இருப்பவர்களுக்கு இன்னும் மேலே போகவேண்டும். கார் வாங்கணும், வீடு வாங்கணும், லைப் ஸ்டைல் மாறனும், இப்படி பல கனவு.

கோடியில் புரளும் கோமான்கள் கூட, டாட்டா,  பிர்லா, அம்பானியை முந்தணும்  என்று கனவு.  அட சின்ன வயசு பையன்களை எடுத்துகிட்டா  கமலா நல்லா இருக்கா, விமலாவும் நல்லா இருக்கா, யாரை பிராக்கட் போடுறதுன்னு தெரியலை.  இப்படி ஒரு குழப்பம்.

ஆக... வாழ நினைக்கிற மக்களுக்கு மருந்து மாதிரி கசக்குது இந்த செய்தி. நியாயம்தான்.

சரி...உலகம் அழியுமா?

இந்த கோடி மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தேடுவோமா?

இந்த உலகம் எப்படி  தோன்றியது? யாரால் தோற்றிவைக்கபட்டது? எத்தனை யுகங்கள் கடந்து வந்திருக்கிறது என்பதை எல்லாம் நம்  புராணம் மற்றும் இதிகாசங்கள் சொல்லாமல் இல்லை.

மனிதன் சிந்திகவே தலைபடாமல் ஆட்டு மந்தை கூட்டமாகவே அலைந்து கொண்டிருந்த காலத்திலேயே அறிவின் உச்சத்தில் நின்று பேசியது நம் ரிக் வேதம்.

மனிதன் இறப்புக்கு பிறகு என்ன ஆகும் என்று யோசித்தானே தவிர, பிறப்புக்கு முன் எங்கே இருந்தான் என்று யோசித்தே கிடையாது. அதையும் சொன்னது ரிக் வேதம்.

வேதத்திற்கு பின் வந்த புராணங்களில்   உலகம் அழியும் நாள் குறிக்கப்பட்டது, அது கலியுகத்தின் முடிவில்தான்.  ஆனால் கலியுகம் என்பது பல ஆயிரம் வருடங்கள் கொண்டது. அது துவங்கி 5000 ஆண்டுகள் மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறது.

அப்படியானால் இப்போதைய செய்தி....

மிகைபடுத்தப்பட்ட செய்தி.  இன்றைய இயற்கை பேரிடர்களுக்கு மனித செயல்பாடும் ஒரு காரணம்.  இன்றும் பூமியை துளைத்து பெட்ரோல் எடுக்கிறோம், தண்ணீரை எடுக்கிறோம், இயற்கை எரிவாயுவை எடுக்கிறோம்,

அதனால் ஏற்படும் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய பூமி அடுக்குகள் நகர்கிறது.  அதனால் பூகம்பம் போன்ற பேரிடர்களை சந்திக்க வைக்கிறது.  அதனால் ஏற்படும் அதிர்வுகள் கடலுக்கு அடியில் ஏற்பட்டால் சுனாமியாக மாறுகிறது.

அதோடு ஓசோன் மண்டல பாதிப்பும் அடுத்து வரும் ஆபத்துகளுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.  சரி.... எதிர் காலத்தை பற்றி பேசும் ஜோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது.

உலக பேரழிவுகளுக்கு காரணமான கிரககங்கள் நான்கு. இதில் சனி செவ்வாய் முக்கியமானவர்கள். குரு ரகு அடுத்த இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பாதிக்கபடும் போதுதான் உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

ஜாதகத்தில் வரும் ராசிக்கட்டம் 360 டிகிரியை கொண்ட ஒரு வட்ட வடிவம். அதை 12 சம பகுதிகளாக பிரித்து ராசி என்றார்கள் நம் முன்னோர்கள்.  அதுதான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். இந்த 12 ராசிகளும் உலக வரை படத்தை சொல்லும்.

அதாவது ஒவ்வொரு டிகிரிக்குள்ளும் பல நாடுகள் டிகிரி கணக்கில் இடம் பெரும். அந்த டிகிரிக்குள் வரும் நாடுகளை குறிக்கும் ராசியில் இந்த கிரகங்கள் சம்மந்தம் பெரும்போதுதான், அந்த நாடுகளில் பெருமளவில் பொருள் சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.

12 ராசிகளும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்று பிரிக்கபட்டிருக்கிறது.  உதரணமாக மேஷ ராசி நெருப்பு ராசி.  இந்த ராசியில் சனியும் செவ்வாயும் சேரும்போது தீ விபத்துகள் நிகழும்.

காட்டு தீ உருவாக காரணம் இதுதான். பெரும் பொருள் சேதம் ஏற்படும். உயிர் இழப்புகளை தரும்.  அதைபோல் குருவும் ரகுவும் ஒன்றிணைவது தவறு.  சாத்வீக கிரகமான குருபகவான் கர்ம வினை கிரகமான ராகுவோடு இணையும் போது பெரும் உயிர் இழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.

கடந்த 2009 ம் ஆண்டில் இருவரும் இணைந்து மகர ராசியில் இருந்தார்கள். அந்த டிகிரியை குறிக்கும் நாடுகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்.

அந்த ஆண்டில் அங்கு நடந்த உயிர் இழப்புகள் நாம் அறித்ததே.  ஆனால் 2012ல் உலகம் அழியும் என்று சொல்லபடுகிற நாளில் இதுபோன்ற கிரக அமைப்புகள் இல்லை.

அதோடு இந்து சாஸ்திரம் வலி உறுத்தும் கால அளவிற்கு இன்னும் பல ஆயரம் ஆண்டுகள் இருக்கிறது.  அதனால் யாரும் பீதி அடைய தேவையில்லை.

சதா சுற்றி கொண்டிருக்கும் கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் போது அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

மொத்தமாக உலகம் அழியும் என்று சொல்ல முடியாது. எனவே யாரும் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  தமிழ் காதல் கவிதை

சொல் அல்லது கொல்

என்னை பற்றி
கண்ணே உனக்கு தெரியுமா
சின்ன அறிமுகம் செய்தால்
உனக்கு புரியுமா

கொஞ்சம் அழகு
கொஞ்சம் சிகப்பு
கொஞ்சம் இளமை இருக்கிறது

உள்ளகதவை மெல்ல திறந்தால் 
உள்ளே உன் முகம் இருக்கிறது 

கொஞ்சம் கோபம்
கொஞ்சம் சாந்தம்
கொஞ்சம் ஆணவம் இருக்கிறது

நெஞ்சில் உந்தன் என்ன அலை தான்
ஒவ்வொரு கணமும் அடிக்கிறது 

கொஞ்சம் பணிவு
கொஞ்சம் துணிவு
கொஞ்சம் கர்வம் இருக்கிறது

கொள்ளை போன உள்ளம் உந்தன் 
கொலுசு ஒளியில் துடிக்கிறது 

கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் கணிவு இருக்கிறது

உன்னை தவிர வேறொரு பெண்ணை 
உள்ளம் நினைக்க மறுக்கிறது 

கொஞ்சம் காசு
கொஞ்சம் வசதி
கொஞ்சம் வறுமை இருக்கிறது

கொஞ்சும் கிளயுன் தஞ்சம் கேட்டு 
நெஞ்சம் பாடாய் படுகிறது 

கொஞ்சம் அறிவு
கொஞ்சம் ஆற்றல்
கொஞ்சம் திறமை இருக்கிறது

தூக்கம் போன இரவில் உந்தன் 
நினைவே துணையாய் இருக்கிறது 

கொஞ்சம் இரக்கம்
கொஞ்சம் திமிரு
கொஞ்சம் பண்பு இருக்கிறது

வண்ண கிளியென் வாழ்வே உந்தன் 
சொல்லில் தானே இருக்கறது 

கொஞ்சம் பாசம்
கொஞ்சம் நேசம்
கொஞ்சம் வேஷம் இருக்கிறது

நீ காதல் சொல்லும் காலம் எப்போ 
கண்ணே மனசு வலிக்கிறது

கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் வருத்தம்  இருக்கிறது

நெஞ்சில் இன்னும் நீர்த்து போகா 
நினைவே நிழலாய் தொடர்கிறது 

கொஞ்சம் நினைப்பு
கொஞ்சம் தவிப்பு
கொஞ்சம் நெருடல் இருக்கிறது

இழந்து போகா நம்பிக்கை மட்டும் 
என்னுள் இன்னும் இருக்கிறது 

காதல் பெண்ணே 
காதல் பெண்ணே
மனதை திறந்து சொல்லிவிடு

நெஞ்சில் நானும் இல்லை என்றால் 
நீயே என்னை கொள்ளி இடு

Thursday, 15 December 2011

காதல் கவிதை


  
சில உறவுகள்
கை குலுக்கி முடிந்ததும்
காணாமல் போகும்
சில சந்திக்கும் பொது மட்டும் சிந்திக்கும்
சில தேவை படும்போது தேடும்
சில உயிர் வரைக்கும் உணரும்

கடைசி வாக்கியம் ஆனவளே
இபோதெல்லாம்
என் தோட்டத்தில்
ரோஜாக்கள் பூப்பதே இல்லை
என் வானத்தில்
வெண்ணிலாவுக்கு கூட
விடுமுறை
என் சமுத்திரத்தில்
இப்பொது
முத்துக்கள் விளைவதில்லை
முட்கள் முளைக்கிறது

ஏன் தெரியுமா
வெளிச்சமாக இருந்த நீ
விலகி போனதால்

போ ....
போகிறேன்
விரல் இல்லாத போது
வீணை எதற்கு
நதிகள் இல்லாத போது
படகு எதற்கு
நீ இல்லாத போது
நான் எதற்கு
போ..
போகிறேன்

என் பிரியமானவளே
என் நினைவாக
உன்னிடம்
எதுவும் இல்லை
உன் நினைவை தவிர
வேறு எதுவும்
என்னிடம் இல்லை

கடைசியாக ஒன்று
பிறவிகளில் எனக்கு
நம்பிக்கை இல்லை.
ஒரு வேலை நான் பிறந்தால்
நீ
இருந்தால்
வைரமுத்து சொல்வது போல்
நான் கேட்பேன்
நீ
உண்மையாக நேசித்தாயா

ஓர் மௌனத்தின் வார்த்தை வலிகள்


இதல்லாம் அழகு
நிலா
பூ
மழை
தென்றல்
மழலை
கவிதை
அனைத்திலும் நீ

என் மனக்கதவை திறக்க
மந்திரம் போட்டவளே
அன்று ஒரு நாள்
உன்னை பார்த்தேன்
இமைகளை இழந்தது கண்கள்
யோசிக்க மறந்தேன்
இல்லை இல்லை
சுவாசிக்க மறந்தேன்.

நீ பார்த்தாய்
மின்னல் கீற்று ஒன்று
என் ஜன்னல் திறந்தது

அந்த பூகம்ப வினாடியில்
நீ நீயாக இருந்தாய்
நான் தான் நானாக இல்லை
கால்கள் இரண்டையும்
கட்டாயமாக பெயர்த்து நகர்ந்தேன்

 ஏன்.... ஏன்....
என்ன ஆனது எனக்கு
இமயமலை என்றல்லவா இறுமாந்திருந்தேன்
என் ஆணி வேர் வரைக்கும் அசைத்தவளே

எனக்கு தெரியும்
நீ நேசிக்கவில்லை
உன் பார்வை பூக்களை
பரிசாய் பெறுவதற்கு
ஓடி வருவேன்.
நீயோ வேற்று கிரகவாசி போல்
விலகி செல்வாய்

அடியே
உன் உதடு சுழிக்கும்
அந்த ஓவிய சிரிப்பை
என்னை பார்த்ததும்
ஏனோ ஒளித்து வைகிறாய்

போடி போ
கருவறை தாண்டும் முன்னே
கல்லறையை பார்த்தது
என் காதல்

இருக்கட்டும் ....
பூக்கள் நேசிக்கவில்லை
என்பதற்காக
வண்டுகள் வருந்துவதில்லை

கரைகள் நேசிக்கவில்லை
என்பதற்காக
அலைகள் அழுவதில்லை

வானம் நேசிக்கவில்லை
என்பதற்காக
நிலவு வ ருந்துவதில்லை
நீ நேசிக்கவில்லை
என்பதற்காக
நான் வருந்தவில்லை

என் உயிர் தொட்டவளே
ஓன்று சொல்வேன்
நீ என்னை நேசிக்க மறக்கலாம்
ஆனால்
உன்னை நேசித்த உள்ளத்தை  மட்டும்
உன்னால் மறக்க முடியாது
என்னை போல.
கவிதை ஆக்கம்:  ஸ்ரீ கிருஷ்ணர்