Follow by Email

Tuesday, 30 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-9


டக்ளஸ் தேவானந்தா, தமது ராணுவப் பிரிவு ஆட்களிடம், அமெரிக்கர்களான அலன் தம்பதிகளை உடனடியான விடுவிக்கும்படி கூற, ஒருவழியாகத் தகவல் போய், யாழ்ப்பாணம் ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் அலன் தம்பதியினர் சனிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் கிளம்பிச் செல்லும்போது கூறியது -

“எங்களைக் கடத்தியவர்கள் பயங்கரவாதிகள் அல்ல – விடுதலைப் போராளிகள்.  பயங்கரவாதிகள் என்றால் எங்களைக் கொன்றிருப்பார்களே”

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கர்களான அலன் தம்பதியினரைக் கடத்திச் சென்றதும், பின்னர் இந்திய அழுத்தத்தால் அவர்களை விடுதலை செய்ததும், தமிழகத்தில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பெரியதொரு அரசில் சறுக்கலை கொடுத்தது.

அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கொதித்துக் கொண்டிருந்தார்.  அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் கியூ பிராஞ்ச் அவருக்குக் கொடுத்திருந்த எச்சரிக்கை.

“ஈழ விடுதலை இயக்கங்களின் போக்கு சரியில்லை. இவர்கள் தமிழகத்தில் இருந்துகொண்டு இதே பாணியில் செயல்பட்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசில் இருந்து அதிக சிக்கல்கள் வரலாம்” என்று மோகன்தாசால், எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் தாங்கள் கடத்திச் சென்றவர்களுக்கான பணயத் தொகையைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததை மோகன்தாஸ் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக்காட்டி, “இந்தக் கடத்திலின் பின்னணியில் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு இருக்கலாம் அல்லது, குறைந்த பட்சம் தமிழக அரசின் ஆசியாவது இந்தக் கடத்தலுக்கு இருக்கலாம் என்று மத்திய அரசு குற்றம்சாட்ட முடியும்” என்றார்.

“அதை காரணமாக வைத்து மத்திய அரசு தமிழக அரசை ஆட்சிக் கலைப்புக்கூடச் செய்யலாம்” என்றும் உஷார் படுத்தினார்.

உண்மையில், தமிழகத்தில் அந்த காலப் பகுதியில் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் டில்லியில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.  அது எம்.ஜி.ஆருக்கும் நன்றாகத் தெரியும்.

ஆட்சிக் கலைப்பு முயற்சிக்கு டில்லியில் அழுத்தம் மேல் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது தி.மு.க.

இந்த இடத்தில்தான் தமிழக அரசியலில் ஈழத் தமிழர்களை வைத்து நடந்து வந்த தமிழக அரசியல், முதல் தடவையாக ஒரு யூ-டர்ன் அடித்தது.

தெரிந்தோ, தெரியாமலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் அதற்குக் காரணமாகப் போய்விட்டது.

இப்படிச் சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதியினரின் கடத்தல் விவகாரத்துக்கு முன்பும், பின்பும் தமிழகத்தில் இருந்த உள்ளூர் அரசியல் நிலைமைகளையும், உள்ளூர் தலைவர்களின் பேச்சுக்களையும் பார்த்தாலே புரிந்துவிடும் – நிலைமை எப்படி மாறியது என்று.

அலன் தம்பதியினரின் கடத்தலுக்கு முன்னர் அரசியலில் இரு துருவங்களான எம்.ஜி.ஆரும், கலைஞரும், “ஈழத் தமிழருக்கு அவர் செய்வது போதாது.  நான்தான் அதிகம் செய்திருக்கிறேன்” என்று கூறியே அரசியல் செய்து கொண்டிருந்தார்கள்.

“கருணாநிதி தனக்குத் தானே தமிழின தலைவர் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார். ஆனால் அவரோ, அவரது கட்சியான தி.மு.க.வோ ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்வதில்லை” என்று பேட்டி கொடுத்தார் எம்.ஜி.ஆர். (தினமணி)

“எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.  அதற்காக ஈழத்தமிழர்களுக்காக அவர் கவலைப்படுவதாக நடிக்க வேண்டுமா?

நண்பர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில், அவரது சண்டைக் காட்சிகள் தான் பெயர் வாங்கிக் கொடுக்கும். சோகக் காட்சிகளில் அவரது நடிப்பு எடுபடுவதில்லை. அதுபோலவே முதல்வராக இருந்தபடி ஈழத்தமிழருக்காகக் கவலைப்படுவது போல நடிப்பது சோபை இழந்து காட்சிதருகிறது” என்று கிண்டலாக எழுதினார் கலைஞர். (முரசொலி)

ராமேஸ்வரத்திலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குத் தனது ஆதரவாளர்களுடன் செல்லப்போவதாக பழ நெடுமாறன் அறிவித்தபோது, மத்திய அரசின் உத்தரவுப்படி ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இருந்த பெரிய, சிறிய படகுகளையெல்லாம் அப்புறப்படுத்திவிடும்படி உத்தரவிட்டது தமிழக அரசு.


தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு


இந்தியாவாகும் மலேசியா - ஸ்பெஷல் ரிப்போர்ட்


மலேசிய அரசியல் களம் எப்போதுமே ஒரு மாறுபட்ட தன்மை கொண்டது. உலக அரசியல் பேசாத ஒரு நாடு என்றால் அது மலேசியாதான். 

அவரை பற்றி இவரும், இவரை பற்றி அவரும் அறிக்கை விடுவார்கள், மற்றபடி மாறும் உலக சூழ்நிலை, அதில் மலேசியாவின் பங்கு என்பதை பற்றி யாரும் மூச்சு விடுவதே இல்லை.

சில தமிழ் தலைவர்கள்  அதிக பட்சம் இலங்கை தமிழர்களை பற்றி பேசுவார்கள். 

தமிழகத்தில் இன உணர்வோடு பேசி போராடும் தமிழ் தலைவர்களை சுயநலவாதிகள் என்று வர்ணிக்கும் இலங்கை தமிழர்கள் மாதிரி, மலேசிய தமிழ் தலைவர்கள் இந்தியாவை குற்றம் சொல்வதோடு  சரி. 

தங்கள் நாட்டு தலைமையை எதிர்க்க, இலங்கை தமிழர்களுக்கு  ஆதரவு குரல் கொடுக்க சொல்ல தைரியம் இருக்காது. 

அதிகபட்சம்  ராஜபெச்சே கொடும்பாவியை எரித்து விட்டு தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள்.

போகட்டும்.எதிர்வரும் மே 5ம் தேதி பொதுத்தேர்தலை சந்திக்கிறது மலேசியா.

இந்தியா என்றில்லை. எந்த நாட்டு  அதிபர்  வேட்பாளாராக இருந்தாலும் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யப்போகும் நலத்திட்டங்களை சொல்வது வழக்கமான ஒன்றுதான். செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதும் வழக்கமான ஒன்றுதான்.

இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரிசான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது.

தேர்தல் நெருங்கிய பிறகு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார் நஜீப். இது அவருக்கு நல்ல பெயரை தேடி தந்தாலும், மாகாதீர் முஹமட்டுக்கு எதிரான கோவம், வெறுப்பு, முகமதுநஜீப்பை பூதம் மாதிரி விழிங்கி விடும் போலிருக்கிறது. .1957 இல் சுதந்திரம் பெற்ற பிறகு இதுநாள் வரை ஆட்சியில் இருக்கும் பாரிசான், இப்போது அக்னி பரீட்சையை சந்திக்கிறது என்பதுதான் உண்மை.துங்கு அப்துல் ரகுமான், நுன் அப்துல் ரசாக், துன் உசேன் ஆன், மகாதீர் முகமட், அகமது படாபி, என்று மாறி இப்போது முகமது நஜீப் வசம் ஆட்சி இருக்கிறது. ஆனால் இந்த முறை வலுவான எதிரியை களத்தில் சந்திக்கிறது பாரிசான்.

கே. அடிலான் கட்சியின் தலைவர் அன்வர் தான் அந்த வலுவான எதிரி.

மகாதீர் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் அன்வர். கட்சிக்குள் அவர் வலுப்பெறுவதை விரும்பாத மகாதீர், அன்வரை பழிவாங்கும் விதமாக  ஓரின புணர்ச்சி  வழக்கை போட்டு சிறைக்கு அனுப்பி, அவமானப் படுத்தியதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அதற்கு பாரிசான்,  விலை தரும் தருணம் வந்து விட்டது போலவே காட்சியளிக்கிறது தேர்தல் களம்.மலேசிய இந்தியன் காங்கிரஸ்  மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த போது, தமிழ் மக்களின் பாதுகாவலானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது ஹின்ட்ராப்.

ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் வெளியே வந்த பிறகும் தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது ஹின்ட்ராப்.

ஆனாலும் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழ் மக்களிடம் இப்போது ஹின்ட்ராப் விலை போய் விட்டது என்ற விமர்சனம் வெளிப்படையாக ஒலிக்கிறது.

அதோடு,  கே அடிலான் கட்சி தலைவர் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இது ஆளும் கட்சிக்கு இனிப்பான செய்தி அல்ல.

நஜீப்பும் கூட இந்திய அரசியலை உற்று நோக்கினாரோ என்னவோ,  பல இலவச திட்டங்களை அறிவித்தார்.  பொங்கலுக்கு அரிசியும் கொடுத்தார். இப்போது பண பட்டுவாடாக்கள் கூட நடக்கிறது போல் இருக்கிறது.

கே. அடிலான் கட்சி தலைவர் அன்வர் பொது கூட்டத்தில் பேசும் போது இது தானாக கூடிய கூட்டம். காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல என்று பகிரங்கமாகவே சொல்கிறார்.

இதை பார்க்கும் போது இந்திய அரசியல் வாதிகள் போலவே மக்களுக்கு இலவசம், பிரியாணி, பணம் கொடுத்து தங்கள் வாக்கு வங்கியை வளர்ந்து  கொள்ளும் நடைமுறையை  மலேசிய தலைவர்களும் கற்றுக் கொண்டு விட்டார்கள் போலவே தெரிகிறது.

எந்த நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் நிறம் ஒன்றுதான். மொத்தத்தில் இந்தியாவாகிறது மலேசியா  .

Monday, 29 April 2013

மௌனத்தின் சப்த்தங்கள்

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-8


முந்தைய பதிவுகளை படிக்க 


சென்னையில் மோகன்தாஸ் அலுவலகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை மூன்று உளவுத்துறைகளை (ரா, ஐ.பி., கியூ பிராஞ்ச்) சேர்ந்தவர்களும் பிய்த்து எடுத்துக் கொண்டிருக்க, ஸ்மார்ட்டாக ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் மத்திய உளவுத்துறை ஐ.பி.யின் சென்னை உயரதிகாரி.

அவர் பத்மநாபாவுக்கு முன்னால் போய் நின்று எதுவும் பேசாமல் தனது பாக்கெட்டில் கையைவிட்டு ஒரு துண்டுச் சீட்டை வெளியே எடுத்தார். பத்மநாபாவிடம் காட்டினார். அதில் இரு வரிகள் டைப் செய்யப்பட்டிருந்தன.

“அலன் தம்பதிகளை விட்டுவிடுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன்” (Release the Allen Couple. I’ll Provide all help to you)

“இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்தத் துண்டுச் சீட்டை பத்மநாபாவிடம் கொடுக்கும்படி கொடுத்தார்” என்றார் அந்த ஐ.பி. அதிகாரி.

அந்த துண்டுச் சீட்டு இந்தியப் பிரதமரின் அலுவலக லெட்டர் பேட்டில் எழுதப்பட்டிருக்கவில்லை.  இந்தியப் பிரதமரின் கையெழுத்தும் அதில் இருக்கவில்லை.  வெள்ளைக் காகிதத்தில் டைப் செய்யப்பட்ட இரு வரிகள்.  அவ்வளவுதான்.

அதை இந்தியப் பிரதமர் அனுப்பியும் இருக்கலாம், ஐ.பி. அதிகாரியின் கற்பனாசக்தியாகவும் இருக்கலாம்.  அதை நான்தான் அனுப்பினேன் என்று இந்திரா காந்தி கடைசிவரை வெளிப்படையாகச் சொல்லவேயில்லை.

இப்படி ஆளாளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களைப் பிய்த்து எடுத்ததில், அவர்களுக்கு ஒருபக்கம் தர்மசங்கடம். மறுபக்கம் அவமானமாக இருந்தது. முக்கியமாக பத்மநாபாவுக்கு மகா அவமானமாக போய்விட்டது.

அவருடைய உத்தரவு இல்லாமல், இயக்கத்தை சேர்ந்த வேறு சிலர் யாழ்ப்பாணத்தில் தாங்களாக முடிவெடுத்து நடத்திய கடத்தலுக்கு அவர் என்ன செய்வது?

அந்த நாட்களில் இப்போது இருப்பதுபோல சாட்டலைட் போன்கள் எதுவும் இருக்கவில்லை. ஒயர்லஸ் மூலமாகத்தான் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.  அதுவும் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம்தான் சக்திவாய்ந்த ஒயர்லெஸ் கருவிகள் இருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்திடம் இருந்தவை கொஞ்சம் அப்படி இப்படியான பழைய கருவிகள்.

இதனால் சென்னையில் இருந்தவர்களால் நேரடியாக யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதியரைக் கடத்தியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

சென்னையில் இருந்து இன்னொரு இடத்துக்குத் தகவல் கொடுத்து, அங்கிருந்து மூன்றாவது இடத்துக்குத் தகவல் போய்ச் சேர வேண்டும். “அலன் தம்பதியினரை உடனடியாக விடுங்கள்” என்று சென்னையில் இருந்து அனுப்பும் தகவல் எப்போது போய்ச் சேரும் என்றும் தெரியாது – எப்போதாவது போய்ச் சேருமா என்றுகூட தெரியாது.

பத்மநாபா சென்னையில் இருந்து அனுப்பிய தகவல், இலங்கையின் கரையோரப் பகுதியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். முகாம் ஒன்று வரை போய் சேர்ந்தது. “உங்கள் செய்தியை உரியவர்களிடம் தெரிவிக்கிறோம்” என்ற பதில்தான் இலங்கையில் இருந்து வந்து கொண்டிருந்ததே தவிர, “சரி. கடத்தியவர்களை இதோ விட்டுவிடுகிறோம்” என்ற பதில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து சேரவில்லை.

இதனால், சென்னையில் தொடர்ந்தும் குழப்ப நிலை.

இதற்கிடையில் அலன் தம்பதியினர் நிச்சயம் இந்தியாவில் இல்லை என்பதை ரா புரிந்து கொண்டது.  மீண்டும் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு தகவல் அனுப்பும்படி ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையை நச்சரித்து கொண்டிருந்தார் ரா உயரதிகாரி ஒருவர்.

மோகன்தாஸ் அலுவலகத்தில் இருந்து பத்மநாபாவையும், மற்றையவர்களையும் ஹோட்டல் ரூம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஹோட்டல் ரூம் முற்று முழுதாக மோகன்தாஸின் கன்ட்ரோலில் இருந்தது.

அங்கே வந்த மோகன்தாஸ், மிக கடுமையான குரலில், “யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகளுக்கு ஏதாவது நடந்தால், நீங்கள் இந்த ரூமை விட்டு வெளியே உயிருடன் போக மாட்டீர்கள்” என்றார். “யாழ்ப்பாணத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்ட விபரம் வெளியாகி, அதை நாம் உறுதிப்படுத்திய பின்னரே, இந்த ரூமை விட்டு நீங்கள் வெளியே போக முடியும்” என்றும் கூறினார்.

அப்போது ஹோட்டல் ரூமில் மோகன்தாசால் தடுத்து வைக்கப்பட்டு  இருந்த தலைவர்களில் பத்மநாபா, பின்னாட்களில் விடுதலைப் புலிகளால்சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

மற்றொருவர்,வரதராஜ பெருமாள். பின்னாட்களில் இலங்கை வடக்கு கிழக்கு மாகாணசபை முதல்வராக இருந்தவர். தற்போது இந்திய மத்திய அரசால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இந்தியாவில் உள்ளார்.

மற்றொருவர், டக்ளஸ் தேவானந்தா. தற்போது, இலங்கையில் ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் அமைச்சராக உள்ளவர். லெபனானில் ஆயுத பயிற்சி பெற்ற டக்ளஸ் தேவானந்தாதான், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் ராணுவ தளபதியாக இருந்தார்.

அவர், சென்னையில் இருந்த ஹோட்டல் ரூமில் இருந்துகொண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். ராணுவ பிரிவு நபர்களை தொடர்பு கொண்டார்.

தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு


அதையும் அறிந்து கொள்ளுங்கள் - உஷ்ஷ்ஷ் !!!


நான்கு சுவருக்குள் ஆணும் பெண்ணும் நடத்துகிற குடும்ப வாழ்க்கைதான் வாழ்க்கை நெறிகள் அனைத்திலுமே உன்னதமானது என்பதை வலியுறுத்தாத அறிஞர்களே இல்லை. 

திருமணம் என்கிற பந்தத்தின் மூலம் பெறுதற்கரிய பேறுகளை பெற முடியும் என்பதே இல்லறம். குடும்ப தர்மம்.

கல்யாணம் என்கிற பெயரில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என லைசன்ஸ் பெற்றுக் கொள்வதால் மட்டும் இல்லறம் பிறந்து விடுவதில்லை. 

நிறைவான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்றால் அதற்கும் முயற்சியும் தேவை.

முதலில் இல்வாழ்வு எவ்வாறு துவங்குகிறது என்று பார்ப்போம்.

ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியை  உரிமம்  பெறுகிற  போது அங்கெ முதலில் எழுவது காமமும் மோகமும் சார்புமே. இந்த காமமும் மோகமும் தான் இல்வாழ்க்கையின் முதலீடு. குடும்பத்தின் பிடிமானம். மனித வளத்தின் மூலாதாரம்.

இந்த முதலீட்டை செம்மையாகவும் கவனமாகவும் பயன்படுத்தும் தம்பதிகளின் வாழ்வு செம்மையாக அமைகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏழும் இனக்கவர்ச்சி வெறும் முதலீடு மட்டுமே.

கணவன் மனைவிக்கு இடையே நிகழும் கலவியும் புணர்ச்சியும் தான் ஆளுமையின் அச்சாணி. அந்த அச்சாணியை ஆதராமாக கொண்டு தான் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது.

கலவியில் பரிபூரமான ஈடுபாடும் நேர்மையும் தூய்மையும் அமைந்து விடுமானால் அந்த தம்பதிகளை எந்த தீய சக்தியாலும் திசை திருப்ப முடியாது.

வெற்றி அவர்கள் பக்கம்தான். இந்த தெளிவும்,  சுதந்திர உணர்வும்தான் காதலை வளர்க்கின்றன.

தேக பரிமாற்றத்தில் தொடங்கிய உறவு ஆன்ம பரிமாற்றத்தில் நிலைக்கிறது. இதுதான் ஆரோக்கிய குடும்பம் என்கிறார் பிரபல டாக்டர் எ. ரேணுகா.

இந்த உறவு நிலையை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி என்பதை பல ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.

அதை படங்களாக இங்கே பிரசுரம் செய்திருக்கிறோம். நீண்ட யோசனைக்கு பிறகு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.
வானம் ஏற வழி இருக்கு தம்பி!!எனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அழகாக இல்லை. 

நான் அதிகம் படிக்கவில்லை. 

நான் ஏழையாக இருக்கிறேன். 

நான்கு பேருக்கு முன்னால் என்னால் தைரியமாக பேச முடியவில்லை என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. 

இந்த  தாழ்வு மனப்பான்மை ஒருவருடைய தன்னம்பிக்கையை அழித்து விடுகிறது.

எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்க்கையில் இருக்கிற நிலையையே ஏற்றுக் கொண்டு கடைசி வரை அதே நிலையில் வாழ்ந்து விட்டு போகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இந்த தாழ்வு மனப்பான்மை என்ற கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான் உங்களால் பறக்க  முடியும்.

ஆஹா நமக்கு பறக்கவும் தெரிகிறது என்பதே உங்களுக்கு தெரியும். இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. அதே போல் முட்டாள் என்பவரும் இல்லை. முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று நினைக்காதீர்கள்.

ஒரு சின்ன  குழந்தை  ஆங்கிலம் பேசுகிறது. சிறுவன் கார் ஓட்டுகிறான். நம்மால் முடியாதா என்று யோசித்து பாருங்கள். விமானம் ஓட்டுபவன் என்ன தேவலோகத்தில் இருந்தா வந்தான் பயிற்சிதான் காரணம்.

அம்பானி பிறக்கும் போது மில்லியனராக   இல்லை. நாம் பணக்காரராக இல்லையே,  இந்த மும்பை தொழில் அதிபர்களுடன் நாம் போட்டி போடமுடியுமா என்று அவர் நினைத்திருந்தால் இன்று உலகின் முதல் நிலை பணக்காரர்களின் வரிசையில் அவர் குடும்பம் இருக்க முடியாது.

இரண்டே செட் துணியோடும் ஒரு தகரப் பெட்டியோடும் தான் பஸ் ஏறி பம்பாய் வந்தாராம்.

நம்மால் முடியுமா என்ற பயமே பலரின் முன்னேற்றத்தை தடுத்து விடுகிறது. எதையும் நமக்கு சாதகமாக நினைத்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மணிகணக்கில் சரளமாய் மேடையேறி பேசுகிறவர்கள் முதல் மேடையில் முதல் வரிக்கு மேல் பேச முடியாமல் நா குழறி வேர்த்து விறுவிறுத்து தான் போயிருப்பார்கள்.

முயற்சி  இருந்தால் இங்கு எதுவுமே சாத்தியம். நம்மாலும்   முடியும்.  விவேகானந்தர் அமெரிக்கா போனபோது ஆங்கிலத்தில் நாம்மால் மேடையேறி பேச முடியுமா என்ற எண்ணம் இருந்ததாம்.

ஆனால் அவரது தியானம், யோகத்தால் இயற்கையாகவே  அவருக்கு மனோதிடம் இருந்தது.

நியுயார்க்கில் உலக ஆன்மீக மகாசபையில் அவர் பேசும் போது எல்லோரும் பேசிய பின், கடைசியாகத்தான் அவரை அழைத்தார்களாம். அதன் பின் அவர் பேசிய எல்லா மேடையிலும் அவர்தான் முக்கிய பேச்சாளாராக இருந்தாராம்.

முதலில் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியில் வரவேண்டும். நம்மை சுதந்திர மனிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எந்த செயலை செய்ய நினைக்கிறோமோ அதைபற்றிய ஆய்வினை செய்ய வேண்டும். இது நம் முயற்ச்சிக்கு உட்பட்டது. முயன்றால் வெற்றி பெறலாம்.

நாம் எதிலும் குறைந்து போய்விடவில்லை. எதிரில் இருப்பவரை விட நாம் எதிலும் தாழ்ந்தவரில்லை.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. தெளிவாய் சிந்திக்கும் அறிவு இருக்கிறது.  அதுபோதும் வெற்றி கொள்ள.

பெரியோருக்கு மரியாதை தரலாம். மேலதிகாரிக்கு வணக்கம் சொல்லலாம். ஆன்மீகவாதிகளின் காலில் விழலாம். இது அவரவர் நிலைக்கு காட்டும் மரியாதை. ஆனாலும் உங்கள் தனிதன்மையில் நீங்கள் உயர்ந்தவர்தான். இதை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் வெற்றியாளர்.

Sunday, 28 April 2013

போர் முடிவடைந்து இருக்கலாம் ஆனால் தனித் தமிழ் நாடு அமைக்கும் எண்ணம் ஸ்ரீலங்காவில் மடிந்துவிடவில்லை(ஒரு சுற்றுலாப்பயணியின் மாறுவேடத்தில் ரேவதி லாவுல்,நாடு முழுவதும், பெரும்பாலும் போரினால் சீரழிந்த மாவட்டங்கள் தோறும், பிரயாணம் செய்துள்ளார். அபூர்வமாக  சொல்லக்கூடிய ஒரு கதையினை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார்)

2011ல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை என்கிற ஒரு ஆவணம் வெளியிடப்பட்டது. அது சுயாதீனமானது என்று கருதப்பட்டாலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. 

ஜூலை 2006 முதல் மே 2009 வரை 5,556 பேர்களை பாதுகாப்பு படை இழந்துள்ளதாகவும் மற்றும் 28,414 பேர்கள் காயமடைந்ததாகவும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

மறுபக்கத்தில் எல்.ரீ.ரீ.ஈ  அதன் அங்கத்தவர்களில் 22,247 பேர்களை இழந்துள்ளதாக கூறியுள்ளது. 

பொஸ்னியன் யுத்தத்தில் கொள்கையளவிலான விகிதாச்சாரம் மற்றும் யுத்தக் குற்றங்கள்  பற்றி கண்ட சம்பவங்கள், என்பனவற்றை மேற்கோள் காட்டிப் பேசி, ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களுக்கான பழி ஒரு ஒப்புமையான கேள்வி என்று சுட்டிக்காட்ட முயற்சிக்கிறது.

ஸ்ரீலங்காவாசிகளிடையே சாகாமல் பிழைத்திருந்தவர்களை தெகெல்க்கா சந்தித்தபோது, ஒருவேளை முகம் கொடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது 

யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்கள் காணாமல் போய்விட்டது என்று கூறியவர்களை சந்திப்பதுதான்.

போரைப்பற்றிய மேலதிக புள்ளிவிபரங்கள் மற்றும் விவரணங்கள் காணாமல் போனவர்கள் பற்றிய விடயத்துக்கு வரும்போது மிகவும் முரண்பாடானவையாக உள்ளன. 

உதாரணமாக ஒரு பாதிரியார்கள் குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் வடக்கின் இரண்டு மாவட்டங்களிலிருந்தும் யத்தத்தின் இறுதியில் ஒன்று கூடியவர்களில் பெரும்பாலும் காணாமற்போன தமிழர்களின் தொகை 1,46,679 என்று குறிப்பிடுகிறது. 

அவர்கள் அரசாங்கத்தின் தரவுகளிலிருந்து அக்டோபர்  2008 மற்றும் மே 2009 வரை நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புகளை அடிப்படையாக கொண்டு இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இராணுவ பேச்சாளர் இந்த எண்ணிக்கைகளை குப்பை எனக்கூறியுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. 

அவர் கண்டிருப்பது அரசாங்க பாடசாலை ஆசிரியர்களாலும் மற்றும் கிராம மட்டத்திலுள்ள அதிகாரிகளினாலும் தொகுக்கப்பட்ட அறிக்கையை. 

இந்த அறிக்கை வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களிலும் 2005 முதல் 2009 வரை காணாமற்போனவர்களாக குறிப்பிடுவது 4,156 பேர்களை.

எந்தப் புள்ளிவிபரமும் பொன்னம்மா கந்தசாமி மற்றும் அவருடைய கணவருக்கு ஆறதலளிக்கவில்லை. அவர்கள் தங்கள் மகள், மருமகன் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகள் ஆகியவர்களை தேடுகிறார்கள். 

அவர்கள் அனைவருமே காணாமற் போய்விட்டார்கள். அவர்களின் மருமகன் ஒரு எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவர், போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் அணியில் அவரும் இருந்தார். 

அதன்பின் அவர்கள் பொன்னம்மாவையும் அவளது கணவனையும் நிரந்தரமாக தவிக்கவிட்டு ஒரு வெளியினுள் மறைந்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவில் ஒரு அங்கத்தவராக இருந்த  பவானியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவரும் சரணடைந்தார். 

அவரைக் கண்டுபிடிக்க பவானி அப்போது முதல் முயற்சித்து வருகிறாள், தனது வாழ்வில் தனக்கு வேண்டியதெல்லாம் தனது கணவரை காண்பதே என்கிறாள் அவள்.

தமிழர்களின் காணாமற்போன உறவுகளை கண்டுபிடிப்பதற்காக ஆர்வத்துடன் பாடுபடும் ஒரு பாதிரியார் கூறுகையில், பவானியைப் போன்ற பெண்களின் கதி இருள் நிறைந்ததாகவே உள்ளது என்றார். 

நான்கு வருடங்கள் கடந்துவிட்டன, கதவருகில் உட்கார்ந்தபடி முடிவில்லாமல் காத்திருக்க முடியாது, அவரது முயற்சி அவர்களை மெதுவாக அதிலிருந்து திருப்புவதுதான். 

அவர்கள் வேலை செய்ய முயற்சிப்பதுடன் இன்னமும் உயிரோடிருக்கும் அவர்களது பிள்ளைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கத்தோலிக்க மதகுருக்கள் அவர்களது தேவாலயங்கள் நடுவிலிருந்து இரண்டாக பிளந்துவிட்டது போன்ற நிலைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். 

பாதிக்கப்பட்ட கத்தோலிக்க தமிழர்கள் ஒருபக்கம். மற்றும் சிங்கள கத்தோலிக்கர்கள் மறுபுறம் - அவர்கள் வெற்றியாளர்களான ஏனைய சிங்களவர்களின் பின்னால் தங்களை அணிசேர்த்துள்ளார்கள்.

மற்றொரு மதகுரு தனது பங்கிலுள்ளவர்களில எத்தனைபேர் தங்கள் மனநிலையை இழந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தினார். 

ஒரு குடும்பத்தின் கதை குறிப்பாக உள்ளத்தை உறையவைக்கும். 

ஒரு தம்பதியர் தங்களின் இரண்டு இளம் பெண்பிள்ளைகளும் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் அகப்பட்டு செத்துக்கொண்டிருப்பதை கண்ணால் கண்ட அதேவேளை அவர்களின் மூன்றாவது பிள்ளையான அவாகளின் மகன் தனது இரண்டு கரங்களையும் இழந்திருந்தான். 

இரண்டு மகள்களும் இறந்துகிடந்த வேளை மகனது கைகளில் இருந்து  இரத்தம் வழிவதை கண்ட தந்தை பைத்தியமானார். 

இந்த நிலமையை சமாளிக்க முடியாதவராய் அவர்; வட்டமாகச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார். 

உடனடியாக அந்தப் பையன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அவனுக்கு இரண்டு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன,மற்றும் இப்போது அவன் கணணிப் பயிற்சி பயின்று வருகிறான்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இறங்கியுள்ள மதகுருக்கள், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே நடக்கிறார்கள். பயணம் செய்யும் வேளைகளில் அவர்கள் வேறு வேறு பாதைகளைப் பயன்படுத்துகிறார்கள். 

புலனாய்வு பிரிவினரிடமிருந்து தொடர்ச்சியாக கிடைக்கப் பெறும் அழைப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய அழைப்பு வரலாற்றை தங்கள் செல்லிடப் பேசிகளில் இருந்து அடிக்கடி அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல தமிழ் ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. ஏப்ரல் 3ந் திகதி விடிகாலை கிளிநொச்சி உதயன் தினசரியின் அலுவலக மேலாளர் முதற் தொகுதி தினசரிகளை விநியோகத்துக்கு தயாராகி கொண்டிருக்கையில், முகமூடி அணிந்த ஆறு குண்டர்கள் கிரிக்கட் பொல்லுகளால் அவரை 17 தடவை அடித்துள்ளார்கள். 

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகம் இதற்கு சில நாட்களுக்கு முன்பு முகமூடி அணிந்த குண்டர்களால் இதேபோல தாக்கப்பட்டது. 

வழமையான நிலமைகளின்கீழ் நடைபெறும் இந்த தொடர் தாக்குதல்கள் முற்றிலும் தொடர்பற்றவையாக உள்ளன. தமிழர்கள் இப்போது வாழும் காலங்களில் எல்லா தாக்குதல்களும் ஓரிடத்தை நோக்கியே சுட்டிக் காட்டுகின்றன - 

சிங்கள கும்பல்கள் அடக்கியாளும் அதிகாரத்தை வலியுறுத்த முயல்கிறார்கள்.

லிபரல் கட்சியின் தலைவர் விஜேசிங்கா இந்த சில்லறை கும்பல்களின் செயற்பாடுகள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்கிறார். 

பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதை விரும்புகிறார்கள் என்று அவர் வலியுறுத்தினார். எனினும் அரசாங்கத்துக்குள்ளிருக்கும் சில கெட்ட சக்திகள் அதற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றன.

இந்த வகையான தோற்றங்கள்தான் அநேகமாக எல்.ரீ.ரீ.ஈ  தோன்றுவதற்கு வழி நடத்திய தமிழர்கள் ஒடுக்குமுறை வரலாற்றை அகற்றுகின்றன. 

அதன் கண்ணோட்டத்தில் அவைகளை ஒரு பிறழ்ச்சியாக வர்ணம் தீட்டுகின்றன 1980களில் பயங்கரவாதம் திடீரென எங்கிருந்தோ தோன்றயது போல காட்டுகின்றன. 

எனினும் நாங்கள் சந்தித்த ஒவ்வொரு தமிழனும் சொல்லுவதற்கு இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை உள்ளது. 

நீங்கள் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு தமிழனாகவும் மற்றும் 1980 மற்றும் 90களில் இங்கு வாழ்ந்தவராகவும் இருந்தால் ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவராகவோ அல்லது அதன் ஆதரவாளராகவோ இருந்திருப்பீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அநியாயத்தின் கூட்டான நினைவுகள்தான் சுவேந்திரனை (பெயர் மாற்றப்பட்;டுள்ளது) 1991ல் எல்.ரீ.ரீ.ஈ  யில் இணைய வைத்தது. 

இப்போது மிதிவெடிகள் புதைத்ததினால் தனது ஒரு காலை இழந்த நிலையில் அவர் உள்ளார். சரணடைந்த பின்னர் சொல்வதற்கோ அல்லது உணர்வதற்கோ அவரிடம் ஒன்றுமில்லை. 

அவரைப்போலவே அவரது தோழருக்கும் எல்.ரீ.ரீ.ஈ  யில் இணைவதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான தூண்டதல் எதுவும் கிடையாது. 

அதைத்தான் 1990களில் தமிழர்கள் செய்தார்கள். அவரும் காயம்பட்ட ஒரு காலுள்ளவராவார். வடக்கு முழுவதும் அவயங்களை இழந்த மனிதர்களும் மற்றும் வாழ ஆசையற்றவர்களும் நிறைந்துள்ளார்கள்.

திவாகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்போது அவருக்கு வயது 15. தமிழ இளைஞர்களின் புதிய ஆரம்பம் தோன்றும் சாத்தியம் நிறைந்திருந்த காலநிலை அப்போது நிலவியது. 

அங்கு அவர் தனது இயக்கத்திலிருந்த சக பெண் தோழிமீது காதல் கொண்டார். “ஆண்களும் மற்றும் பெண்களும் வெவ்வேறு  முகாம்களில் இருந்ததால் நாங்கள் இரகசியமாகவே சந்திக்க வேண்டியிருந்தது. 

அது ஒரு விதமான காதல் ஒரு ஐஸ்கிறீமை ஒருமித்து பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் ஐந்து நிமிடங்கள் மட்டுமே செலவழிப்போம”; 

அவர் தனது நினைவுகளை மீட்டிப்பார்த்தார். பல எல்.ரீ.ரீ.ஈ   காதல்களைப்போல அவர்கள் காதலும் நிலைக்கவில்லை. 

திவாகர் 2005ல் எல்.ரீ.ரீ.ஈ  யினை விட்டு விலகினார், ஆனால் அவரது காதலி அவர்களுடனேயே இருந்தாள். 

யுத்தத்துக்கு பின் அவருக்கு ஒழுங்கான மத்தியதர வேலை ஒன்று உள்ளது, ஆனால் தான் கண்டவற்றையும் மற்றும் அனுபவித்தவைகளையும் பற்றி அவர் மௌனம் பாலிக்க வேண்டியுள்ளது. 

சரணடைந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவரானபடியால் அவரது நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப் படுவதால் அவர் அச்சத்துடனேயே வாழ்கிறார்.

யுத்தத்தின் கடைசி நாட்கள் தப்பியோடும் தமிழர்கள் - புலிகள் மற்றும் பொதுமக்கள் - மனங்களில் கோரமான நினைவுகள் உறுதியாக பதிக்கப்பட்டிருக்கும். 

இந்திரகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல்.ரீ.ரீ.ஈ யின் பிரச்சாரப் பிரிவில் இருந்ததுடன்  அவரும் அவரது குடும்பத்தினரும் ஓடிக்கொண்டிருந்த வேளையிலும் போரின் முடிவுவரை தொடர்ந்து பணியாற்றியும் வந்தார். 

அப்படியான ஒரு தாக்குதல் சம்பவம் 2007 ஆகஸ்டில் நடந்தது, 13 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் அநேகமானவர்கள் காயமடைந்தார்கள். 

அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்கு வாகனங்கள் கிடைக்கவில்லை. இரண்டு இரத்தம் வடியும் சிறார்களை தனது மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு 16 கி.மீ தொலைவிலுள்ள வைத்தியசாலைக்கு ஓடியது இந்திரகுமாருக்கு இன்னும் நினைவிலுள்ளது. 

தன்னால் இயன்றவரை வேகமாக அவர் மிதிவண்டியை ஓட்டியபோதிலும், ஒரு குழந்தையின் தலை சாய்வதை அவர் கண்டார். இருவருமே உயிர் பிழைக்கவில்லை.

முன்னாள் யுத்த நாட்டில், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவர்களை ஆட்டிவைக்கும் திகில்களிலிருந்து  அவர்களை விடுவிக்க தெகல்கா முயற்சித்தது. 

ஒரு கட்டத்தில் இராணுவத்தால் நாங்கள் துரத்தப்பட்டபோது, திவாகரின் முகம் வெளுத்துப் போனது. அவர் வெகு நேரம் மௌனமாக இருந்தபின் தன்னை மறந்து “அரசாங்கம் அதன் அட்டூழியங்களுக்கு சாட்சியாக இருந்த யாவற்றையும் துடைத்து அழித்துவிட்டது” என்றார்.

எங்களுடன் கடைசியாக பகிர்ந்து கொள்ள இந்திரகுமாருக்கு ஒரு பயங்கர சம்பவம் மீதமாக இருந்தது. தாக்குதல் நடக்கும் ஒரு இடத்திலிருந்து பாதுகாப்பு தேடி மற்றொரு இடத்துக்கு ஓடும்போது அந்த இடம் போர்நடக்கும் புதிய களமாக மாறும்.

திரும்பவும் அவர் தனது மனைவியுடனும் பிள்ளையுடனும் வேறு இடம் நோக்கி ஓடுவார். 

இந்த ஓட்டத்தினிடையே அவரது 9 மாத குழந்தை இறந்துபோனது. அது ஏப்ரல் 9ந்திகதி தமிழ் புதுவருட தினம். 

அந்த பையன தீவிரமான நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தான். மருந்து எதுவும் கிடைக்கவில்லை, எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் வகுத்திருந்த வியுகம் காரணமாகவே மருந்து கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

2011ம் ஆண்டின் ஐநா அறிக்கையும் இதுபோன்ற சம்பவங்களை எடுத்துக்கூறுகிறது, அனால் இந்த கோரிக்கையை சுதந்திரமாக ஆராய தெகல்;காவுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. 

எந்த வழியிலும் மறுக்க முடியாததாக இருந்தது இந்திரகுமாரின் மகன் இறந்துபோனது. இந்தக் கட்டத்தில் அவரும் அவருடைய மனைவியும் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்கள். 

அது அவர்கள் வந்து சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் நிறைந்திருந்து முகாமுக்கு வந்பொழுது எடுத்த முடிவு. திடீரென அவர்கள் கடல் போன்ற திகிலுக்கு ஆளானார்கள். 

அங்கிருந்தவர்களில் ஒவ்வொருவரும் ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளையை பறிகொடுத்திருந்தார்கள். 

இந்த கோரம், சகோதர உணர்வை அவர்களிடத்தில் கொண்டுவந்தது, அதன் காரணமாக அவரும் அவரது மனைவியும் இன்னும் உயிரோடிருக்கிறார்கள்.

தமிழ் பிரதேசத்தில்  எல்லோருமே பிரபாகரனாலும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈயினாலும் சமமாக பாதிக்கப்படவில்லை, 

அதிலும் விசேடமாக கிளிநொச்சியிலுள்ள திருநீலகண்டன சரோஜாவை போன்றவர்கள் அந்த கூட்டத்தில் இருக்கமாட்டார்கள். 

ஒரு சிறிய குடிசையில் மங்கலான சிமினி விளக்கு வெளிச்சத்தில் எப்படி தனது 22வயது மகனை  வலுக்கட்டாயமாக ஒரு எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவனாக்குவதற்காக எப்படி பிடித்துச் சென்றார்கள் என்பதை சரோஜா கசப்புடன் சொன்னார். 

அவனை இப்போது காணவில்லை.”நாங்கள் எங்கள் வாய்களை மூடிக்கொண்டு வாழ்கிறோம்” என கோபத்துடன் சொன்னார். 

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் எல்.ரீ.ரீ.ஈ  மற்றும் அவரது மகனின் மறைவு என்பன மௌனமாக்கப்பட்டு விட்டன. ஆனால் அவரது தனிப்பட்ட கோபம் தமிழர்களின் கூட்டான சீற்றம் எனும் பெருங்கடலினுள் ஆழ்ந்துள்ளது. 

எல்லாவற்றையும் மீறி ஒரு தனித் தமிழ்நாட்டு விடயத்தை தான் ஆதரிப்பதாக முரண்பாடான வகையில் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து அடக்குமுறைகளையும் மற்றும் பயங்கரவாதத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெருங்கடல் அது, அரசாங்கத்தால் அதை அழிக்க இயலாது. 

போர் முடிவடைந்த உடனேயே வடக்கிலுள்ள மாகாணசபைகளுக்கு நிருவாக அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக ஒரு சுயாட்சியை ஏற்படுத்தி, தமிழர்களுக்கு ஒரு அரசியல் சமரசத்தை தான் ஏற்படுத்தப்போவதாக ராஜபக்ஸ அறிவித்திருந்தார். 

அந்தச் செய்தி இந்தியாவை கொண்டாட வைத்தது, மற்றும் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியா ஸ்ரீலங்காமீது அழுத்தம் பியோகித்துள்ளதாக அனைத்து அரசியற் கட்சிகளுக்கும அறிவிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் பகிரங்கமாக தனது வாக்கை மீறினார்.

சுதந்திர தினத்தன்று (பெப்ரவரி 4,2013ல்) மக்களுக்கு உரையாற்றும் வேளையில், ஸ்ரீலங்கா  இன,மத. வேற்றுமைகளற்ற ஒரு நாடு, எனவே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கு பெரியளவிலான சுயாட்சி  அவசியமற்றது என்று பேசியதன் மூலம் அந்த வாக்குறுதியை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார். 

அந்தப் பேச்சு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டிலுள்ள திருகோணமலையிலிருந்து வெளியிடப்பட்டதால், அதன் அர்த்தம் வெகு தெளிவாக இருந்தது.

காசா நிலப்பரப்பில் வாழும் பலஸ்தீனியர்களைப் போலவே தமிழர்களுக்கும் சொந்தமாக ஒரு நாடு இல்லை. தமிழ் ஆர்வலர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறுவது, முழு உலகமும், மற்றும் குறிப்பாக இந்தியாவும் உட்கார்ந்து இதில் கவனம் செலுத்துவதற்கு ஒரு காரணம் உள்ளது என்று. 

குருபரன் போன்ற ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவது, தமிழர்களின் இக்கட்டான நிலையை உலகெங்கிலுமுள்ள பல இன குழுக்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. அவர்களின் ஒரே நம்பிக்கை தமிழ் புலம் பெயர்ந்த சமூகத்தால் வழங்கப்படும் ஆதரவில் உயிர் வாழ்வது.

தமிழ் புலம் பெயர்ந்த சமூகம் மிகவும் பெரியது, நல்ல நிதி வளத்துடன் ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற இடங்களில் பரந்து வியாபித்துள்ளது. 

அதிகமான பரப்புரைகள், மற்றும் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிதேடி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதின் பெரும்பகுதி இதன் மூலமாகவே ஆற்றப்படுகிறது. 

அவர்கள் இப்போது கூறுவது, தங்களின் நீண்டகால நோக்கம், சர்வதேச சமூகத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து ஸ்ரீலங்காவின் பிரதேசத்தின் ஒரு பகுதியை தமிழர்களுக்காக செதுக்கி அதனை சர்வதேசரீதியில் நிர்வகிப்பதற்காக ஸ்ரீலங்காவை வற்புறுத்துவது என்று.

எவ்வாறு கிழக்கு திமோர் 2002ல் ஐநாவின் தலையீட்டினால் இந்தோனசியாவிலிருந்து பிரிந்து திமோர் லெஸ்ட் ஆனதோ, இதுவும் அதேபோலத்தான். இந்த தலையீடு கிழக்கு தீமோர் மேற்கொண்ட இடைவிடாத பரப்புரை மூலமாகவும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் விளைவினாலுமே ஏற்பட்டது. 

இந்தப் பகுதி இறுதியாக ஒரு சுதந்திரமான அரசாங்கததிடம் கையளிக்கப்படும்வரை 1999 முதல் 2012 வரை ஐநாவின் நிருவாகத்தின் கீழ் இருந்தது. 

தமிழர்கள் இப்போது அதேபோன்ற பதிப்பு மூலம் உண்மையை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். தரப்படும் வன்முறையின் வரலாறு மற்றும் உடைந்த வாக்குறுதிகள் எனபனவற்றை பார்க்கும்போது நல்லிணக்கம் ஒரு சரியான தெரிவல்ல என பலரும் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வது நம்பிக்கையின் சாளரம் இப்போது இரண்டில் தங்கியுள்ளது, 

இந்தியா மற்றும் அமெரிக்கா - இந்த இரண்டு நாடுகளும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது நெருக்கத்தை சீனாவுடனும் மற்றும் பாகிஸ்தானுடனும் அதிகரித்துக் கொண்டுள்ளதால் அச்சமடைந்துள்ளன. 

இந்தியாவுக்கு அதன் தென்பகுதி கடலோரத்திலிருந்து 5 கி.மீற்றருக்கும் குறைவான தூரத்தில் பாகிஸ்தானும் மற்றும் சீனாவும் இருப்பதை இந்தியா விரும்புகிறதா என அவர்கள் கேட்கிறார்கள். 

மற்றும் அமெரிக்காவும் இதேபோன்ற அச்சம் காரணமாக தங்கள் விடயத்தில் பின்துணை நல்கும் என அவர்கள் நம்புகிறார்கள். இப்போதைக்கு இதுதான் அவர்களின் ஒரே துணையாதாரம்.

முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் “ எது சாத்தியம் என்று நாங்கள் யோசிப்பது எங்களுக்கு ஆபத்தானது. 

நாங்கள் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தால் அதன் அர்த்தம் வெறும் உட்கிரகித்தலாக மட்டுமே இருக்கும். 

நாங்கள் தமிழை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும், நாங்கள் எங்கள் மதத்தையும் விட்டுவிட வேண்டும் நாங்கள் சிங்கள பௌத்தர்களாக மாறவேண்டும்” என்று வெகு சாதாரணமாக சொல்கிறார்.

பூகோள மற்றும் உள்நாட்டு தமிழ் அரசியல் இந்தியாவை மேலும் மேலும் நேரடியாகத் தாக்குகிறது. 

ஸ்ரீலங்கா தமிழர்களின் கதை ஒரு சங்கடமான கேள்வியை எழுப்புகிறது, ஒரு மக்களின் நம்பிக்கையற்ற மற்றும் தொடரும் நிர்க்கதியான நிலையை பயங்கரவாதத்தால் மட்டுமே ஏற்பட்டது, என்று விளக்கமளித்து தள்ளிவிட முடியுமா? 

இப்போது ஸ்ரீலங்காவில் 22 லட்சம் தமிழர்களும் மற்றும் 10 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ள தமிழ் புலம் பெயர்ந்தோரும் இந்த உலகளாவிய சிக்கல் நிறைந்த கேள்வியை கேட்கிறார்கள். 

அவர்களது கதையும் அவர்களைப்போல நாடற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்குகிறது. 

ஐநாவும,; உலகமும் இரட்டை வேடம் போடும் இந்த வேளையில் நாட்டைப்பற்றிய உங்கள் எண்ணம் அடுத்ததாக மறையக்கூடியதாக இருக்கும். 

ஆனால் பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை என்பனவற்றின் பின்விளைவாக உருவான ஒரு நாடு என்கிற தமிழர்களின் எண்ணம் ஒருபோதும் மறையாது. 

இந்தியா தனது வாசற்படியின் முன் மற்றொரு வன்முறை வட்டம் உருவாவதை விரும்பாவிட்டாலும்கூட  லங்கன் தமிழர்களின் குரலை அதனால் அலட்சியப்படுத்த முடியாது.

தெகல்கா சஞ்சிகையின் 27,ஏப்ரல் 2013ல் வெளியான 10 வது தொகுதி வெளியீட்டில் இந்தக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்


Saturday, 27 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-7ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை சென்னையில் ரகசியமான இடம் ஒன்றுக்கு அழைத்துப்போய் விசாரிப்பது என்று திட்டமிட்டிருந்த தமிழக அரசு உளவுப்பிரிவு கியூ பிராஞ்ச் தலைவர் மோகன்தாஸின் உத்தரவுப்படி, அவரது உதவியாளர்கள் சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு வீடுகள் மற்றும் ஒரு லாட்ஜில் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மோகன்தாஸின் திட்டம் என்ன?

பத்மநாபாவையும் மற்றவர்களையும் ரகசிய இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்வது. அங்கிருந்தபடி அவர்களை யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொள்ள வைத்து, அலன் தம்பதியினரை விடுவிக்க உத்தரவிட வைப்பது.

யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகளன் விடுவிக்கப்பட்டவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை செய்தியாளர்கள் முன்னிலையில் பேச வைப்பது. அப்போது, பத்மநாபா வாயால் “தமிழக போலீஸின் கியூ பிரான்ச்சின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டார்கள்” என்று சொல்ல வைப்பது.

சுருக்கமாகச் சொன்னால், மத்திய உளவுத்துறைகள் ரா, ஐ.பி. ஆகிய இரு தரப்பினரையும் அந்த பக்கமே வரவிடாது செய்வது. ஈழத் தமிழர் இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதை டில்லிக்கு காட்டுவது.

இதுதான் மோகன்தாசின் திட்டமாக இருந்தது.

அதற்காக அலன் தம்பதிகள் விடுதலை செய்யப்படும்வரை பத்மநாபாவையும் மற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களையும் இந்த இரு மத்திய உளவுத்துறையினரின் கண்களிலேயே படவிடாமல் மறைத்து விடுவது.

திட்டம் நல்ல திட்டம் தான்.  ஆனால் மோகன்தாஸுக்கு அதிஷ்டம் இருக்கவில்லை – அவர் திட்டத்தை நிறைவேற்று முன்னர், மத்திய உளவுத்துறையினர் புகுந்து காரியத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

இந்த விஷயத்தில், இவரைவிட அவர்கள் கில்லாடியாக இருந்தார்கள்!

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை ரகசிய இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்ல, மற்றய உளவுப்பிரிவினர் மோகன்தாஸுக்கு கால அவகாசம் கொடுக்கவில்லை.

தனது அலுவலகத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை ‘ரகசிய இடத்துக்கு’ கொண்டுசெல்ல புத்திசாலித் தனமாக தமிழக காவல்துறை வாகனங்களை பயன்படுத்தாமல் வெளியே ஏற்பாடு செய்திருந்தார் மோகன்தாஸ். ஒரு கார், ஒரு வேன் ஆகியவற்றை டூரிஸ்ட் வாகனங்கள் வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த வாகனங்கள் இவரது அலுவலகம் இருந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கு முன், இவரது அலுவலகத்துக்கே ரா, ஐ.பி., உளவுத்  துறைகளைச் சேர்ந்த ‘பெரிய தலைகள்’ பலர் வந்துவிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் எக்கச்சக்கமாக ஆட்கள் கூடிவிட்டார்கள். அதில் யார் எந்த உளவுப்பிரிவு என்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அணுகத் தொடங்கினார்கள்.

சிலர் மிரட்டினார்கள், சிலர் கெஞ்சினார்கள், வேறு சிலர் இந்தக் கடத்தலினால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று பிரசங்கம் செய்யத் தொடங்கினார்கள்.

இதற்கிடையே, டெலோ இயக்கப் பிரமுகர் ஒருவர் ரா அதிகாரி ஒருவரிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் மூன்று படகுகள் தமிழகக் கரைக்கு வந்ததாகக் கூறியிருந்தார் என்று எழுதியிருந்தோமல்லவா, அந்தத் தகவல் டில்லிக்குத் தெரிவிக்கப்பட, டில்லியில் இருந்தவர்கள், கடத்தப்பட்ட அலன் தம்பதியினர் தமிழகத்தில்தான் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்பினார்கள்.

உடனே அவர்கள் ஒரு காரியம் செய்தார்கள்.

திடீரென ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலி நிலையத்தில் ‘சிறப்பு அறிவிப்பு’ ஒன்று வெளியானது!

“அலன் தம்பதியினரைக் கடத்தியவர்கள் யாராக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கூறியிருந்ததை சென்னை வானொலி நிலையத்தின் ஊடாக ஒலிபரப்பத் தொடங்கினார்கள்.

இந்த அறிவிப்பு ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை சென்னையில் இருந்து ஒலிபரப்பாகியது. கிட்டத்தட்ட 9 மணி நேரத்துக்கு இந்த ஒலிபரப்பு நடைபெற்றது.

சென்னை வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு யாழ்ப்பாணத்தில் தெளிவாகக் கேட்காது. ஆனால், கடத்தப்பட்ட அலன் தம்பதியினர் தமிழகத்தில் – அதுவும் சென்னையில் எங்கோ வைக்கப்பட்டிருப்பதாக நினைத்து, ஒவ்வொரு அரை மணி நேரமும் இந்த அறிவிப்பை ஒலிபரப்ப டில்லி உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னையில் ஒலிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அலன் தம்பதியினர் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்.

சென்னையில் வானொலி கேட்ட நேயர்களுக்கு குழப்பம்! எதற்காக இந்த அறிவித்தல் சென்னையில் ஒலிபரப்பாகிறது என்று!

இந்த தமாஷ் நடந்து கொண்டிருக்க, சென்னையில் மோகன்தாஸ் அலுவலகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தார்கள் மூன்று உளவுத்துறையை சேர்ந்தவர்களும்! தமிழக அரசின் கியூ பிராஞ்சின் சார்பில், பத்மநாபாவையும் மற்றவர்களையும் கைது செய்யப்போவதாக மிரட்டினார் மோகன்தாஸ்.

ரா அதிகாரிகள், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை நாடுகடத்தப் போவதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்கு வழங்கப்பட்டு கொண்டிருந்த ஆயுதப் பயிற்சிகளை உடனடியாக நிறுத்தப் போவதாகவும் கூறினார்கள்.

இவர்கள் எல்லோரையும்விட ஸ்மார்ட்டாக ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் மத்திய உளவுத்துறை ஐ.பி.யின் சென்னை உயரதிகாரி. அவர் பத்மநாபாவுக்கு முன்னால் போய் நின்று எதுவும் பேசபமல் தனது பாக்கெட்டில் கையைவிட்டு ஒரு துண்டுச் சீட்டை வெளியே எடுத்தார்.

தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்புஉங்களுக்கு விருப்பம் இருந்தால் படிக்கலாம்..!!


உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர் உடல் வளர்த்தேன் என்பது உடலை பேணுதல், உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் செய்யும் செயல்களில் .மனம் ஒருமுகப்படும். வெற்றி கிட்டும்.

மனதும் உடலும் ஒன்றுக்கொன்று இணைத்திருப்பவை.மனம் உற்சாகமாக இருக்கும் போது, நோய்கள் உடலை தாக்குவதில்லை. நாம் நோய்வாய் படுவதற்கு மனபலவீனமும் ஒரு காரணம்  என்கிறார்கள் டாக்டர்கள். கோபம், பதட்டம் போன்ற தீவிர மன உணர்வுகள் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்ப்பட காரணமாக  இருக்கிறது. அதிக்கபடியான கவலை வயிற்று பிரச்சனையை ஏற்படுத்துகிறதாம்.

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்து பார்த்துக் கொண்டால் மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

உடல்நிலை சீர் கெடுவதற்கு  பெரும்பாலும் உணவு பழக்கம் ஒரு காரணம். உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடற்பயிற்ச்சி வேண்டும்.

உணவு கட்டுப்படும், உடற் பயிற்சியும்   ஏதோ வயதானவர்களுக்கு மட்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அப்படியல்ல. இவை சிறு வயதில் இருந்தே கடைபிடிக்க வேண்டிய பழக்கம்.அப்படி பழக்கம் இருப்பவர்கள் உடல் பருமன், நீரழிவு, ரத்த கொதிப்பு பிரச்சனைகள் எதுவும் இன்றி இறுதி வரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். நோய்கள் இவர்களை அண்டுவதில்லை.

நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவு பழக்கத்திற்கு மாறிக்கொள்வதும், ஆன்மீகத்தின் மேல் முழு ஈடுபாடு காட்டுவதும், நமது உடல் மன ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

காய்கறி, கீரைகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியமாகவும்,  உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றன. இது அன்றைய சித்தர்கள் முதல் இன்றைய மருத்துவர்கள் வரை கூறும் அறிவுரை.

கோவில்களில் இறைவனுக்கு சாற்றிய துளசி, வில்வம், வேப்பிலை, அருகு போன்ற தலங்கள் எல்லாம் நோயை தீர்க்கும் மூலிகைதான்.

வீட்டுக்கு கொல்லைப்புறத்தில் வளர்த்த கீரை வகைகள் உடலுக்கு நல்லதை செய்யும் உணவு பொருள்கள்தான்.

இன்று விரைவு உணவு வகைகளுக்கு (பாஸ்ட் புட் ) மாறிய பின், விரைவாக நோய்வாய்பட்டு, வெகு விரைவாக போய் சேரவேண்டி இருக்கிறது.
சிறுவயதிலேயே எல்லாவித நோய்களின் உறைவிடமாகவும் உடல் மாறிவிட நமது உணவு பழக்கமே காரணமாக இருக்கிறது.

அடுத்து

வயிறு புடைக்க உண்ணுதல் தவறு. முக்கால் வயிறு உணவு, மீதி வயிறு காலியாக இருக்க வேண்டும். பசியோடு உணவுக்கு அமர்ந்து, பசியோடு எழு என்பது சித்தர்கள் கருத்து.அதாவது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும் போதே உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு வைத்தியரிடம் சென்றார் ஒருவர். ஐயா.. உங்களுக்கு தெரிந்து எல்லா வியாதிகளையும் போக்கும் மருந்து இருக்கிறதா என்றார்.

அதற்கு வைத்தியர் இருக்கிறது. அது வியாதிகளை போக்காது. வியாதி வராமல் பாதுகாக்கும் என்றார்.

உடனே உற்ச்சாகமாக அது என்ன மருந்து என்றார் வந்தவர்.

அதற்கு வைத்தியர்  சொன்னார் .. அதன்  பெயர்  உழைப்பு .

இன்று உழைப்பதற்கு நேரம் இல்லாமல் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாயங்கால நேரத்தில் நடை பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சரியான உணவு, உடற்பயிற்சி, தேவையான ஓய்வு, இனிய நினைவுகள், எளிமையான வாழ்க்கை, வழிபாடு இவையெல்லாம் இருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. வாழ்க்கையை அருமையாக அமைத்துக் கொள்ளலாம்.


Friday, 26 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-6

முந்தைய பதிவுகளை படிக்க

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள் 1
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-2
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-3
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-4
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-5ஈழ விடுதலை இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் பத்மநாபா உட்பட்ட தலைவர்களை தமது அலுவலகத்துக்கு அழைத்து கடுமையான தொனியில் விசாரித்துக் கொண்டிருந்த, தமிழக உளவுப் பிரிவின் அந்த நாளைய தலைவர் மோகன்தாஸூக்கு மற்றொரு சிக்கலும் இருந்தது என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அது என்னவென்றால், அலன் தம்பதியினரின் கடத்தல் விவகாரத்தை முழுமையாக டீல் பண்ணி, அவர்களை விடுவிக்கும் முழுக் காரியத்தையும் தமிழக காவல்துறை கியூ பிராஞ்ச்தான் செய்ய வேண்டும் என்று மோகன்தாஸ் விரும்பினார்.

முதல்வர் எம்.ஜி.ஆரும் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது என்று உறுதிமொழி கொடுத்திருந்ததில், இந்த விவகாரத்தை தானே தீர்த்துவைத்து, பெயரை தட்டிக் கொண்டுபோவது அவரது திட்டம்.

ஆனால் அதற்கு இடையூறு, டில்லியில் இருந்து வந்தது.

விஷயம் வெளிநாட்டவர்களுடன் சம்மந்தப்பட்டது என்ற வகையில், மத்திய உளவுத்துறை ‘ரா’ களத்தில் குதிக்க விரும்பியது.  மற்றொரு மத்திய உளவுத்துறை ஐ.பி.-யும் தன்பங்குக்கு தலையிட விரும்பியது.

இது மோகன்தாசுக்கு மகா எரிச்சலை ஏற்படுத்தியது.

பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை மோகன்தாஸ் தனது அலுவலகத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்க, டெல்லியில் இருந்து ‘ரா’ அலுவலகம், ‘ஐ.பி.’ அலுவலகம் இரண்டுமே, உயர் மட்ட போன் அழைப்புக்களை மோகன்தாஸின் அலுவலகத்துக்குச் செய்யத் தொடங்கின.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மோகன்தாஸ் “என்னை என்னுடைய வேலையைச் செய்ய விடுங்கள். எனக்குச் சம்பளம் கொடுப்பது தமிழக அரசு. விசாரணையும் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது” என்று எகிறத் தொடங்க, போனின், மறுமுனையில் இருந்த ரா உயரதிகாரி, இவருக்கு மேலாக எகிற தொடங்கினார். (தமாஷ் என்னவென்றால், இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள்)

“பிரதமரின் அலுவலகத்தில் இருந்து யாரையாவது உங்களுடன் பேசச் சொல்லவா? ஜனாதிபதியிடம் இருந்து கடிதம் வேண்டுமா? இது வெளிநாட்டு விஷயம். மாநில போலீஸ் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்று முறைத்தார் ரா உயரதிகாரி.

இப்படியெல்லாம் நடைபெறும் என்பதை மோகன்தாஸ் ஊகித்திருந்தார் என்பதை, பின்நாட்களில் ஒரு தடவை அவரை சந்தித்தபோது சொன்னார்.

இந்த விவகாரம் நடந்து பல ஆண்டுகளின்பின் நான் அவரை பாங்காக்கில் சந்தித்தபோது அவர், ஒரு கூற்று கூறியது இன்னமும் ஞாபகம் உள்ளது. “பாம்பு அறியும் பாம்பின் கால்” என்றார் அவர்.

அதன் அர்த்தம், மத்திய உளவுத்துறை ஆட்கள் எந்த பாதையில் வருவார்கள் என்று தாம் ஊகித்து வைத்திருந்தார் என்பதே.

அலன் தம்பதிகள் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட தகவல் டில்லிக்கு வந்ததும், மத்திய உளவுத்துறை ஆட்களின் பார்வை முழுவதும் தமிழகத்தில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க தலைவர்கள் மீதும், தமிழக உளவுத்துறை தலைவர் தம் மீதும் பதியும் என்பதை மோகன்தாஸ் புரிந்து வைத்திருந்தார்.

அதுவும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க தலைவர்களை தமிழக உளவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க தொடங்கியதும், டில்லி உளவுத்துறை தலைகள் எல்லோரும் தாமும் ‘பானைக்குள் கை விடுவதற்கு’ முயற்சிப்பார்கள் என்பதையும் அவர் ஊகித்திருந்தார்.

இதனால், அவர்களது விளையாட்டை வெட்டி விளையாட, இவர் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை தனது அலுவலகத்தில் வைத்து விசாரிக்கத் தொடங்கியதற்கு முன்னரே மோகன்தாஸ், அவரது உதவியாளர் ஒருவர் மூலமாக ஒரு ஏற்பாட்டை ஏற்கனவே செய்திருந்தார். அது, அது, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை ரகசியமான இடம் ஒன்றுக்கு அழைத்துப்போய் விசாரிப்பது.

விசாரணை நடைபெறும் இடம் தெரிந்தால்தானே, டில்லி ஆட்கள் தொடர்பு கொள்ள முடியும்? (அந்த நாட்களில் செல் போன்கள் கிடையாது)

மோகன்தாஸின் உத்தரவுப்படி அவரது உதவியாளர், சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு வீடுகள் மற்றும் ஒரு நடுத்தர அளவுள்ள ஹோட்டலில் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு

முகப் பக்க முத்து!!

பேஸ்புக் என்பது பொண்ணுங்க போட்டோ போட்டால் லைக் பண்ணுவார்கள். மற்றபடி அங்கே என்ன இருக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள்.

உண்மையில் அங்கே பல அற்புத தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பது தான் உண்மையே.

நான் பார்த்த சில முத்துக்களை மாலைகளாக கோர்த்திருக்கிறேன். உங்கள் பார்வைக்கு.மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. 

இந்த படம் அதற்கு ஒரு சான்று. தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். 

ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர். இவ்வாறு சென்றால், எப்படி நம் உறவுகளுக்குள் பாசப்பிணைப்பு வளரும்?சனி பார்வையில் கிரகங்கள்!!
சனீஸ்வரன் பெயரை கேட்டாலே அண்ட சராசரங்களே ஆடிப்போகும். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லை. அனைவருக்கும் ஒரே நீதி, அது சமநீதி என்ற கோட்பாடு கொண்டவர். 

அதனால் பயம் கலந்த பக்தியோடு பார்க்கப்படுகிறார். இவர் பார்க்கும் இடங்கள் விருதிக்காது என்கிறது சாஸ்திரம். 

இவர் பார்வையில் உள்ள கிரகங்கள் பல தொல்லைகளை தரும் என்கிறது சாஸ்திர குறிப்புகள்.

நீலமாய் இருப்பார், கருப்பாய் மருவார். இயந்திரமாய் உழலுவார். உழைப்பை அதிகமாக்குவார். 

அரசியலுக்கு அடித்தளம், மருத்துவத்திற்கு பக்கப்பலம், தொழில் நுட்பத்திற்கு உதவிகரம் என்று வேறுகிரக அமைப்பிற்கு தகுந்த மாதிரி உதவி செய்வார். 

ஆனாலும் கல்வியில் தடை, கல்யாண யோகத்திற்கும் முட்டுக்கட்டை போடுவார். சோம்பலுக்கு சொந்தக்காரர். சுயநலத்திற்கு உடன் பிறந்தவர். 

இவரின் பார்வையில் கிரகங்கள் இருந்தால் என்னாகும் என்பதே இந்த ஆய்வு.

சூரியன் சனி பார்வையில் இருந்தால்!

சமூகத்தில் ஒருவருக்கான அந்தஸ்த்து, கவுரவம், தந்தையார் உறவு நிலை, அரசாங்க வெகுமதி, பதவி, உதவி, உயர்ந்தோர் நட்பை பற்றி பேசுவது சூரியன்.

இவருக்கு சனி பார்வை கிட்டினால்?

தந்தைக்கும் மகனுக்கும்மான  உறவு தன்டாவாளம் மாதிரி ஒட்டாது. நேசமும் பாசமும் நெஞ்சில் இருந்தாலும் உறவு நிலைகளில் உறுத்தல் வந்துவிடும். அன்னியோன்னியம் குறையும்.

பிறப்பு உயர்ந்ததாக இருந்தாலும் பழக்க வழக்கங்கள் சிறப்பதில்லை. தன்னிலும் தாழ்ந்தவரோடு நட்பு,தகுதி குறைவான சகவாசம், சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாத மூர்க்கத்தனம், பாதை மாறி போதை வஸ்துக்களுக்கு அடிமையாதல், இல்லற வாழ்வில் இடர்பாடு,கண்டங்கள் என்று ஆலை கரும்பாய் ஆட்டி படைத்துவிடும்.

சந்திரனுக்கு  சனி பார்வையில் இருந்தால்!

புனர்பூ தோஷம் என்ற புதுப் பெயரை சூட்டிக் கொள்ளும். பெயர் இருக்கட்டும் பலன் என்ன?

வரட்சி அவ்வப்போது புரட்சி செய்யும்.எவ்வளவு வந்தாலும் செலவு, கடன் வாங்கும் சூழ்நிலை எனபது கண்கூடு. அது அதற்கு ஒரு கவலை, ஐயாவிற்கு பல கவலை என்பது உண்மையாகும்.

சோம்பல், சோர்வு அதிகம். அசதி மறதி இலவச இணைப்பு. கலையான மேடை ஏற காத்திருக்க    வேண்டிவரும். வாலிபம் கடக்கும் போதுதான் வாழ்க்கைத் துணை ஆணுக்கு அத்தான்,மாமா,என்னங்க என்ற குரல் கேட்கும்.

பெண்ணுக்கு?

என்னடி, செல்லம், என்ற அன்பொழுகும் வார்த்தையை கேட்க எப்படியும் முப்பதை தொடும் வரை முடியாது.

செவ்வாய்,  சனி பார்வையில் இருந்தால்?

முன்கோபி, முரட்டுத்தனம், எடுத்தெறிந்து பேசுவது சகஜம். இவர்கள் வாழ்க்கையில் எதுவும் நிரந்திரம் இல்லை. எல்லாம் வருவதும் போவதுமாக இருக்கும்.

வாழ்க்கையே ஏற்ற இறக்கம் நிறைந்தது. அதாவது திரிசங்கு சொர்க்கம். இவர்கள் எந்த உடல் பாகத்தை குறிக்கும் இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்தில் காயம் தழும்பு, ரணம் வராமல் போகாது.

புதன்,  சனி பார்வையில் இருந்தால்?

நாவில் சரஸ்வதி நர்த்தனமாடும்.  வாதம் செய்தால் வக்கீல், அறிவுரை சொன்னால் ஆசிரியர். கணக்கில்  புலிகள். கண்ணதாசனுக்கு   கூட பிறந்த தம்பி மாதிரி கவிதை எழுத்தும் ஆற்றல் கூட பெறுவதுண்டு. ஆனாலும் இவர்கள் யோசனை, அறிவு அடுத்தவருக்கே   அதிகம் பயன்படும்.

குரு,   சனி பார்வையில் இருந்தால்?


ஒருதரம் முடிவு செய்து விட்டால் இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். பிடிவாதம் அதிகம். அதைவிட நன்றாக தூங்க பிடிக்கும்.


எதையும் சிரத்தையோடு செய்வதில்லை. செய்ய தெரியாமல் இல்லை.செய்யணுமே. அப்படியே அரசியல்வாதி குணம். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இருக்காது.

சுக்கிரன் சனி பார்வையில் இருந்தால்?


ஆன்மீக உணர்வு அதிகம். கடைசி காலத்தில் காவி கட்ட கூட ஆசை வரும். அல்லது காவி கட்டிய மாதிரி பற்றற்ற வாழ்க்கை அமையும்.


ஆணுக்கு  இந்த அமைப்பு இருந்தால் பொண்டாட்டியா வந்த வந்த பொண்ணு பொழுதுக்கும் கரிச்சு கொட்டும். குறை சொல்லும், குற்றம் கண்டுபிடிக்கும். தலையெழுத்துடா சண்டாளா.. போட்டஎழுத்துடா பொண்டாட்டி.

பெண்ணுக்கு இந்த அமைப்பு இருந்தால்.. அதே பதில் தான். மாற்றம் இல்லை.

ராகு, சனி பார்வையில் இருந்தால்?

கரடு முரடானவர்கள். முன் கோவம் முன்னாலும், பின் கோவம் தன்னாலும் வரும். குறுக்கு புத்தி. சுயலாப சிந்தனை. ஆதாயம் வரும் என்றால் ஆற்றை மட்டும் அல்ல, கடலை கூட இறைப்பார்கள். மறைமுக வருமானம் வரும்.

கேது, சனி பார்வையில் இருந்தால்?

ஆன்மீக சிந்தனை. பற்றற்ற நிலை. வேதாந்தி. குடும்ப பாசம் குறைவு. வறுமை.

Thursday, 25 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-5அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, “மத்திய அரசு, தமிழக அரசு உறவு நல்ல விதத்தில் இருக்க வேண்டும் என்றால், அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வருமுன், கடத்தப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட வேண்டும்” என்று போனில் கூறியவுடன் எம்.ஜி.ஆர்., தமது அதி நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரி மோகன்தாசை அழைத்துவர சொன்னார்.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு (May 11, 1984) ராமவாரம் தோட்டத்துக்கு மோகன்தாஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். கொதித்துப் போயிருந்தார். “முட்டாள்கள்.. முட்டாள்கள்” என்றவர், “ஏன் இப்படி அமெரிக்கர்களை கடத்த வேண்டும்? அதில் தமிழக அரசின் பெயரை ஏன் இழுக்க வேண்டும்?” என்றார். “நீங்க உடனே அவங்களை சந்தித்து, அமெரிக்கர்களை விட்டுவிட சொல்லுங்க. நான் அப்புறம் அவங்களை (ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமை) சந்தித்து நேரில் பேசிக்கிறேன்” என்றார்.

“அது அவ்வளவு சுலபமாக காரியமல்ல. அமெரிக்கர்களை யாழ்ப்பாணத்தில் கடத்தி வைத்திருக்கிறார்கள். சென்னையில் சொல்லி ஒன்றும் செய்ய முடியாது. ட்ரை பண்ணி பார்க்கலாம். எனக்கு நம்பிக்கையில்லை” என்றார் மோகன்தாஸ்.

காரணம், இது நடந்த காலப்பகுதியில், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம், தமிழகத்தில் இருந்தாலும், மத்திய உளவுத்துறை ராவுடன் அதிக நெருக்கத்தில் இருந்தது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்ததால், மற்றைய இயக்கத்தினர், தமிழக உளவுத்துறையுடன் நெருக்கமாக இல்லை.

இதில் தமிழக அரசின் பெயரும் இழுக்கப்பட்டு உள்ளது. உடனடியாக முடிக்க வேண்டிய விஷயம்” என்றார் எம்.ஜி.ஆர்.

அப்போது மோகன்தாஸ் தந்திரமான காரியம் ஒன்றைச் செய்தார். “இதை என்னால் தீர்த்து வைக்க முடியும். ஆனால் எனக்கு நீங்கள் சில உறுதிமொழிகள் தரவேண்டும்” என்றார்.

“அரசியல் ரீதியான எந்தவொரு இடையூறும் வரக்கூடாது.  என்னுடைய வழிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும்.  இதில் சம்மந்தப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம், உங்களிடம் முறையிடுவார்கள். அல்லது கருணாநிதி வேறு விதமாக திருப்புவார். தமிழகத்தில் போராளிகளை தமிழக அரசு துன்புறுத்துகிறது என்பார்.

வேறு அரசியல் சிபாரிசுகளும் நிச்சயம் வரும். அப்படி வரும்போது அதையெல்லாம் நீங்கள் சமாளிக்க வேண்டும். எனது வேலையில் தலையிடக்கூடாது” என்று கூறினார் மோகன்தாஸ்.

“எப்படியாவது செய்து முடியுங்கள். அமெரிக்க துணை ஜனாதிபதி புதுடில்லி வரும் முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.  அவ்வளவுதான் எனக்கு தேவை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாளைக்கே பிரச்னை வராதபடி செய்யுங்கள்” என்றார், எம்.ஜி.ஆர்.

அதன்பிறகு மோகன்தாஸ் செயலில் இறங்கினார்.

முதலில், சென்னையில் தங்கியிருந்த பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க, தலைவர்கள் அனைவரையும், தனது அலுவலகத்துக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். அப்போது, அவர்கள் சென்னை சூளமேடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தார்கள்.

தமது அலுவலகத்துக்கு பத்மநாபாவும், மற்றையவர்களும் வந்தவுடன் மோகன்தாஸ் கடுமையான தொனியில், “அலன் தம்பதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றார்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு இனப்பிரச்னை நடக்கும் முன்பே, மோகன்தாஸூக்கு சென்னை சூளமேடு பகுதியில் தங்கியிருந்த ரஞ்சனை தெரியும். ரஞ்சன்தான் பின்னாட்களில், பத்மநாபா என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் ஆனார்.

இருவருக்கும் முன்பே பரிச்சயம் இருந்த போதிலும், இந்த விவகாரத்தில் இருந்த மற்றுமோர் சிக்கல் என்னவென்றால், சென்னையிலிருந்த பத்மநாபாவுக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடத்தல் பற்றி முழுமையான தகவல் வந்து சேரவில்லை.

அத்துடன், அமெரிக்க தம்பதிகளின் யாழ்ப்பாண கடத்தல், சென்னையில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமை உத்தரவிடாமல், நடந்திருந்தது (என்றுதான் இப்போதும் சொல்லிக் கொள்கிறார்கள்).

இதனால் மோகன்தாஸ் என்னதான் சொன்னாலும் சென்னையிலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையினால் உடனடியாக எதுவும் செய்யமுடியாமல் போனது. சிறிது அவகாசம் தருமாறு பத்மநாபா கேட்டார். “யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விபரம் அறிந்து சொல்கிறோம்” என்றார்.

ஆனால், இவர்களை வெளியே விட தயங்கினார் மோகன்தாஸ் காரணம், அவருக்கு மற்றொரு சிக்கலும் இருந்தது.தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு

சீனா நம்பத்தகுந்த நண்பன் இல்லை!!
அந்த காலத்தில் நாடு பிடிக்கும் ஆசையில் வெறிபிடித்து திரிந்த மன்னர்கள் மாதிரி, எல்லைகள் தோறும் தொல்லைகளை வளர்ந்துக் கொண்டே போகிறது சீனா. 

முரட்டு ராணுவ பலத்தை வைத்திருக்கிற தைரியத்தில் அண்டை நாடுகளுடன் அனுசரித்து போவதே இல்லை.

இந்தியா விஷயத்திலும்  இதே கதைதான். உங்களுக்கு தெரியுமா? 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஓரம் உள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் கடந்த 3 ஆண்டுகளில் சீனா இதுவரை 600 முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்பது. குறிப்பாக கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரத்து 800 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் தான் சீனா, பலமுறை அத்துமீறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 சீன ராணுவத்தினர், ஊடுருவதும் பின் அங்கு தற்காலிக முகாம்களை அமைத்து கொள்வதும், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும்  தன் பழைய நிலைக்கு திரும்புவதுமாக   அட்டூழியம் செய்து வருகின்றனர்.இது தொடர்பாக இந்திய தேசிய ஆலோசகர் சிவசங்கரமேனன் சீன ஆலோசகருடன் நடந்த பல சுற்று பேச்சு வார்த்தையின் போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை சீன ராணுவத்தினர் எல்லை மீறும்போதும், இந்திய ராணுவ உயரதிகாரிகள் கொடிநாள் கூட்டம் போட்டு சீனாவின் அத்துமீறல்களை கண்டித்து வருகின்றனர்.கொடிக் கூட்டம் என்பது, ஒரு நாட்டின் பகுதிக்குள், இன்னொரு நாடு ஊடுருவும் போது, பதட்டத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் முதல் நடவடிக்கை.

இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, இக்கூட்டம் நடக்கும். பிரச்னை சிறியதாக இருந்தால் பிரிகேடியர்கள் அளவிலும், பெரிதாக இருந்தால் கமாண்டர்கள் மட்டத்திலும் கூட்டம் நடக்கும். இதற்கிடையில், கடந்த வாரம் சீன மக்கள் விடுதலைப்படையைச் சேர்ந்த சுமார் 20 ராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவிய தகவல் வெளியானது. 

இதை மத்திய அரசோ, ராணுவ அமைச்சகமோ சொல்லவில்லை. ஊடகங்களில் செய்தி வெளி வந்த பிறகு உறுதி படுத்தினார் அமைச்சர். 

அதாவது வடக்கு லடாக் பகுதிக்குள் நுழைந்த ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 6 மைல் (10 கிலோ மீட்டர்) தூரத்துக்கு வந்தனர். 

மலைப் பாங்கான ஒரு இடத்தில் வெட்டவெளியில் அவர்கள் முகாம் ஒன்றையும் அமைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய ராணுவத்தின் 5-வது பட்டாலியன் படைப்பிரிவு ஒன்று அங்கு விரைந்தது. 

சீன ராணுவம் அமைத்த முகாமில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்திய ராணுவம் தற்காலிக கூடாரம் அமைத்துள்ளது.

சீன ராணுவத்தினர் நுழைந்துள்ள இடம் இந்திய பகுதிக்கு சொந்தமானது என்ற பேனர்களை இந்திய வீரர்கள் அசைத்துக் காட்டியும் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில், இந்த அத்துமீறல் தொடர்பாக ஜம்மு, காஷ்மீர் மாநில உள்துறை மந்திரி சாஜத் கிச்லூ மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவசர கடிதம் எழுதினார்.

இதனையடுத்து, இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் அவசரம் பயணமாக இன்று ஜம்மு விரைந்தார். 

ஆக்கிரமிப்பு நடந்த பகுதியில் 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர் சீன ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா விஷயத்தில் இந்தியா இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிருக்கிறது.  சீனா நம்பத்தகுந்த நண்பன் இல்லை என்பது மட்டும் உண்மை.