Follow by Email

Wednesday, 29 February 2012

மாத்தி யோசி.. different thinking

சிந்தனை 1

நான் வாழ்கையில் நிறைய சம்பாரிச்சு கோடிஸ்வரனா மாறனும்.

ஏன்?

பணம் இருந்தால் தான் எல்லாரும் மதிப்பாங்க.

அப்படியா?  அப்ப நீங்க பணத்தை மதிக்கிறிங்களா... மனிதனை மதிக்கிறிங்களா..?

இது என்ன கேள்வி?

இல்லை.... பணத்தை மதிக்கனும்னா... வைரமுத்து சொல்ற மாதிரி திருப்பதி வெங்கடாசலபதியை கும்பிட வேண்டிய அவசியம் இல்லை.  திருப்பதி உண்டியலை கும்பிடலாம்.   பணத்தை மதிக்கனும்னா மகலக்ஷ்மியை கும்பிட வேண்டிய அவசியம் இல்லை. பணம் அடிக்கிற  நாசிக் மிஷினை கும்பிடலாம்.

என்ன சொல்ல வர்றீங்க?

சரி... பணம்னா எத்தனை கோடி வேணும்?  ஒரு ரூம் நிறைய பணத்தை அடுக்கி வச்சுட்டா.... உங்களுக்கு நிம்மதி இருக்குமா?  பயம் வந்துடாதா?  பணத்தை எப்படி பாதுகாக்கிறதுன்னு. 

அய்யய்யோ... திருடன் வந்துடுவானோ, யாராவது திருடிக்கிட்டு போயிடுவானோ, யாருக்காவது தெரிஞ்சு போய்டுமோன்னு பயந்தே சாக வேண்டி வரும் தெரியுமா?

சரிங்க... ஓடி ஓடி சம்பாரிச்சு நிறைய பணம் இருக்கு.  ஆனால் பணம் சம்பாதிக்கிறதுல குறியா இருந்ததுனால ஆரோக்கியத்தை கவனிக்கலை. உடம்பு பூரா நோய் வந்துட்டு.

டாக்டர் அதை சாப்பிடாதே... இதை சாப்பிடாதேன்னு  1008 கண்டிசன் போடுரார்ன்னு வச்சுக்குவோம்.  இப்போ அந்த பணத்தை வச்சு என்ன செய்றது.

ஒரு உண்மை தெரியுமா? உலக கோடிஸ்வரன்  பில்கேட்ஸ் காலைல நியுயார்க்குல கண் முழிச்சு,  மதிய சாப்பாட்டை லண்டன்ல சாப்பிட்டு, நைட் பாரிஸ்ல தூங்குறார்.

ஆனால் அவர் ரொம்ப சந்தோசமா இருக்கார்ன்னு நினைக்கிறிங்களா. சரியாய் தூங்காமல்,  பிளைட்டுல அசௌகரியமா படுத்து,  அங்க கொடுத்ததை சாப்பிட்டு, மிஷின் மாதிரி வாழ்ந்து கிட்டு இருக்கார்.

ஆனால்... அவர் கிட்டே வேலை செய்யுற சாதாரண மேனேஜர் ஒன்பது மணிக்கு வேளைக்கு வந்து,  ஜாலியா வேலை பார்த்துட்டு,  மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டு,  ரெண்டு மணிவரைக்கும் ரெஸ்ட் எடுத்துட்டு,  பின் வேலை பார்த்து,  அஞ்சு மணிக்கு வீட்டு போய்,  பொண்டாட்டியை  கூட்டிக்கிட்டு  சினிமாவுக்கு போய்,  ராத்திரி  பத்து மணிக்கு பொண்டாட்டியை கட்டி பிடிச்சுக்கிட்டு தூங்குறார்.

இப்போ சொல்லுங்க யாரு சந்தோசமா இருக்காங்க. உலக கோடிஸ்வரன் பில்கேட்ஸ்சா.... அவர் கிட்டே வேலை செய்ற சாதாரண மேனேஜரா?சிந்தனை 2 

வாங்க சார்...  எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன்.

கைல என்ன பேக்.  திருச்சி சாரதாஸ் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு.

எனக்கு சட்டை எடுத்தேன். ரொம்ப காஸ்ட்லி.

அப்படியா?  என்ன விலை....

1500 ரூபா.

ஓ... இந்த சட்டை யாருக்கு?

எனக்குதான்.

இல்லையே ....வேற யாருக்கோ.

இல்லை.  இது எனக்குத்தான்.

அட போங்க சார்... நீங்க 2000 ரூபாய்க்கு சட்டை எடுத்தாலும் அது உங்களுக்கு இல்லை.   எங்களை மாதிரி ஆளுங்க பெருமையா நினைக்கனும்மு போடுறிங்க.  நீங்கன்னு இல்லை.  எல்லாருமே இப்படித்தான்... மத்தவங்க பெருமையா நினைக்கணும்னு தான் பெரும்பாலும் செய்யுறோம்.  புரியுதா?


சிந்தனை 3 


நான் யார் தெரியுமா?  நான் என்ன படிச்சு இருக்கேன் தெரியுமா?

ஓ... ரொம்ப படிச்சவரா...

ஆமாம் மாஸ்டர் டிகிரி.

சந்தோசம்.  எனக்கு  ஒரு சந்தேகம்.... படிப்புன்னா என்ன சார்.

இது கூட தெரியாதா?

இல்லை எனக்கு தெரிஞ்ச வரை  படிப்புங்குறது மேச்சிங்.

அப்படின்னா...

அந்த புத்தகத்துல உள்ளதை இந்த பேப்பர்ல சரியா எழுதி இருக்கிங்களான்னு சரி பார்க்கிறதுதான் படிப்பு.

ஆனால் உலக அறிவை கத்துகனும்னா ... வெளி உலகத்துக்கு தான் வரணும்.  தெரியுமா.  நாம சந்திக்கிற ஒவ்வொரு மனிதனும் வாத்தியார்.  ஒவ்வொரு சம்பவமும் அறிவு. ஒகே.

 

வம்சம் தழைக்க வாஸ்து பூஜை செய்ய கூடாத மாதம் எது?

எந்த வயதில் உள்ளவராக இருந்தாலும் இந்த கனவு இல்லாமல் இருக்காது.

அரண்மனை மாதிரி ஒரு வீடு கட்டனும்.  ஜாலியா...பைக்கில் ஊர் சுத்தணும்.

 அப்படியே ஒரு கார் வாங்கி  படு அசத்தலா இருக்கிற  நம்மாளை பக்கத்திலே உட்கார வச்சு,  இந்த உலகத்தையே வலம் வரணும்.

இப்படி எல்லாம் கனவு இருக்கா.... ?

இருக்கும்... இருக்கணும்...இருந்தே ஆகணும்.  அதுதானே வாழ்க்கை.

நீங்க....நான்....அவன்.. அவள்...அவர்....இவர்.. எவராக இருந்தாலும்,  அத்தனை பேர் மனசிலும் இந்த ஆசை உண்டு.

கலயானத்தை பண்ணிப்பார்...வீட்டை கட்டி பார்ன்னு சொல்லுவாங்க.  இது ரெண்டும் மனசுக்கு பிடிச்ச மாதிரி அமையுறதுக்கு கொடுத்து வச்சு இருக்கணும்.

நீங்க கொடுத்து வச்சவரா இருந்து காதலோட பழகுற ஒரு மனைவியை அல்லது ஒரு கணவரை கல்யாணம் செய்திடிங்கன்னு வச்சுக்குவோம்.  நீங்க கொடுத்து வச்ச மகாராஜா அல்லது மகாராணி.

உண்மைதானே... எப்போ வீட்டுக்கு போவோம்னு மனசு துடிக்கனும்.  ஏன்டா வீட்டுக்கு போறோம்ன்னு நினைப்பு வந்தால்,  அந்த  வாழ்க்கை நரகம் தான்.  சரி....  இப்போ நல்லததையே பேசுவோம். 

மனசுக்கு பிடிச்ச மாதிரி மணவாழ்க்கை அமைச்சுடிச்சு.  அடுத்து என்ன வீடு தானே.

சரிங்க. வீடும் பஜ்ஜெட்க்கு தகுந்த மாதிரி கட்டியாச்சு.  எப்போ குடி போறது.  அந்த வீட்டுக்கு போன பிறகு வாழ்க்கை செடி வளர்ற மாதிரி சீரா வளரனும்னா நாள் பார் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.

நாள் என்பது அஷ்டமி, நவமி, பிரதமை, கரிநாள் பார்ப்பதா?

பார்க்கணும் தான்.  இதைவிட முக்கியம் குடி போகும் மாதம்.   இப்போ ராசி கட்டத்தில் நான்கு மூலைகள்   இருக்கு அல்லவா.  அதாவது மிதுனம், கன்னி, தனுசு, மீனம். இந்த நான்கு ராசிகளும் உபய ராசிகள் என்பார்கள்.

இந்த ராசிகளில் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதங்களை புது மனை புகு விழாவிற்கான மாதமாக சொல்லவில்லை ஞானிகள்.

ஏன்?

உபய ராசி என்பது நிலை இல்லாத ராசி.  அந்த ராசி மாதங்களில் பால் காச்சும் பாக்கியம் கிடைத்தாலும் பலன் நிலைத்திருக்காது என்பதே ஜோதிட சட்டம்.

வீட்டை விற்க வேண்டி வரலாம்.  அல்லது அதில் குடி இருக்க முடியாத சூழல் வரலாம். நிம்மதி குறைவான நிலை, நித்தம்  மனத்துயரை சந்திக்கும் அவலம்.

வீட்டு உறுப்பினர்களுக்கு இடையே விரும்ப தகாத விவாதங்கள், உடல் நல பாதிப்பு,  கடன் தொல்லை, வம்ச விருத்தி இல்லாத நிலை  என்று வில்லங்க வீராசாமி இருந்து கொண்டே இருப்பார்.

சரி.... உபய மாதம் என்னன்ன?

ஆனி, மார்கழி, புரட்டாசி, பங்குனி.  இத்துடன் ஆடி மாதம்.

இந்த மாதங்களுக்கு என்று இன்னும் சில தகவல் இருக்கிறது.  இந்த மாதங்களில் தான் அதிகமான உயிர் இழப்புகளும், அரக்க சம்காரங்களும் நடந்து இருக்கிறது.

உதாரணமாக ராவண வதம் நடந்தது ஆடி மாதம்.

வாமணன் பாதத்தால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு மகாபலி சக்கரவர்த்தி சென்றது ஆனி மாதம்.

இரண்யன் சம்காரம் நடந்தது புரட்டாசி மாதம்.

மகாபாரத போர் நடந்தது மார்கழி மாதம்.   திருப்பாற்கடலை கடைந்தது மாசி மாதம்.  அதில் இருந்து வெளி வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டதால்,  அந்த மாதமும் குடி போக முடியாத மத வரிசையில் வந்து விட்டது.

இந்த மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்களில் வாஸ்து பூஜை செய்து புது மனை புகு விழா செய்யலாம்.  

Tuesday, 28 February 2012

யாருக்கு யார் மேல காதல் வரும்?

காதல்னா  என்னங்க?

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்.  இது சினிமா பாட்டு இல்லைங்க.  ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிறாங்க.

பொதுவா... வாலிப வயசுன்னாலே உள்ளக்கதவுகள் திறந்தே இருக்கும்.  பல  பேரு வந்து கதவை  தட்டினாலும்,  நோ எண்ட்ரி போர்டுதான் மாட்டி இருக்கும்.  யாராவது மனசுக்கு பிடிச்சவங்க வந்து கதவை தட்டினால்,  கதவு பக்குன்னு திறந்துக்கும்.

யூத்துங்க பாஷையில் சொல்வதானால்,  ஆளைப்பார்த்து  அசந்து போறது எப்படி இருக்கணும் தெரியுமா? 

சும்மா பேய் அறைஞ்ச மாதிரி இருக்கணும்.  ஆனால் அது ஆனந்த அதிர்ச்சியாக இருக்கணும்.  உன்னை சந்தித்த பிறகுதான் சிந்திக்கவே ஆரம்பிச்சேன்னு கவிதை வரி மனதில் வந்தால் அதுக்கு பெயர் காதல்.

(அது என்னவோ அதுக்கு முன்னால  சித்த பிரமை பிடிச்சு இருந்த மாதிரியும்,  இப்பதான் சுய நினைவு வந்த மாதிரியும் ஒரு பீலா)

அப்பறம் அந்த ராஜகுமாரியை அந்த ராஜகுமாரன் கொஞ்சலாம், வர்ணிக்கலாம், கவிதை பாடலாம்.  இதுக்கு எந்த தடையும் வராது.  

இது ஏதோ ரெண்டு மனசு சம்மந்த பட்ட விஷயம்ன்னு நினைக்காதிங்க.  ஒன்பது கிரகங்களுக்கும் தொடர்பு இருக்கு.

காதலுக்கு மரியாதை தருகிற கிரகங்களும் உண்டு.  என்னது வெட்டிபுடுவேன் வெட்டி என்று மீசையை முறுக்குற கிரகங்களும் உண்டு.

சில கிரகங்கள் என்ன  செய்யும்  தெரியுமா? 

பார்த்துக்கோ, பேசிக்கோ, பழகிக்கோ,  அத்தோட விட்டுடனும்.  கல்யாணம் காட்ச்சி பண்ணி,  கூட இருந்து குடும்பம் நடத்துறேன்னு  எதையாவது செய்யக்கூடாதுன்னு தடை உத்தரவு போடும்.

என்ன செய்ய இதுவும் நம்ப கிரகம்தான்.  சரி தலைப்புக்கு வருவோம்.  யாருக்கு யார் மேல காதல் வரும். ஜோதிட நுட்பம் என்ன?  அதை பாப்போம்.

மேஷ ராசியில் பிறந்த பொண்ணு குறைந்த பட்சம் காதலை கொள்கை அளவில்  யோசிச்சு பார்க்கணும்னா,  காதலை சொல்லற நீங்க,  சிம்ம ராசியில் பிறந்தவரா இருக்கணும்.  

அல்லது விருச்சிக ராசியில் பிறந்தவரா இருக்கணும்.  அப்பதான் உங்க காதல் ஒர்க் அவுட்டாகும்.  இல்லைனா நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலையான்னு,  கைதர்அலி  காலத்து வசனம் எல்லாம் வரும்.

ரிஷப ராசியில் பிறந்த இளவரசிக்கு தனக்கு ஏற்ற இளவரசனா யாரை தெரியும்னா,  நீங்க கடக ராசியில் பிறந்து இருக்கணும்.  

அல்லது துலாம் ராசியில் பிறந்து இருக்கணும்.  அப்படி இருந்தால் பாறை மனசா இருந்தாலும் பாசம் பிறக்கும்.

மிதுன ராசியில் பிறந்த பொண்ணுக்கு கன்னி ராசியில் பிறந்த பையன்கள் மன்மத அம்பு வீசினால், விக்கெட் விழுந்துடும்.  அதாவது வசியம் இருக்காம்.  

அது என்னங்க வசியம்?

நியுட்டன் விதி என்ன? ஈர்ப்பு சக்தி தானே. அதைதான் ஜோதிடத்தில் வசியம்னு  சொல்றாங்க.

சரி...  கடக ராசியில் பிறந்த உலக அழகிகளுக்கு நியுடன் விதி நூறு சதவிகிதம்  ஒத்து போகணும்னா... நீங்க விருச்சக ராசியா இருக்கணும்.  அல்லது தனுசு ராசியா இருக்கணும்.  இருந்தால் உங்க காட்டுல காதல் மழைதான் போங்க. 

சிம்ம ராசி பொண்ணா...கன்னியில் பிறந்தவங்க ஒகே.   துலாம் ராசியில் பிறந்தவங்க கூட வலை விரிக்கலாம்.  புள்ளிமான்கள் எப்படியும் சிக்கும். 

வேடிக்கை  வினோதம்  சிரிப்பு சந்தோசம் இதுதான் லைப்புன்னு சிட்டா பறக்கிற கன்னி ராசி பொண்ணுங்களுக்கு,  மிதுனம் அல்லது மீன ராசி பையன்கள் காதலை சொன்னால்,  நிச்சயம் ஷாக் அடிக்கும்.

துலாம் ராசி பொண்ணுங்களுக்கு மகர ராசி காரங்க காதலை சொன்னால்,  காந்தம் இரும்பை இழுத்த மாதிரி ஒரு ஈர்ப்பு வந்துடும். 

விருச்சிக ராசியில் பிறந்தவங்களுக்கு கடக ராசி மேல தனி பிரியமே வரும். பஞ்சுக்குள்ளே நெருப்பை வச்ச மாதிரி பத்திக்கிறது இவங்கதான்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசி பையன்கள் காதலை சொன்னால் எப்படியும் கெமிஸ்ட்டி ஒர்க் அவுட்டாகும்.

மகர ராசி பொண்ணுங்களுக்கு மனதில் காதல் உற்பத்தி ஆகணும்னா,  நீங்க கும்ப ராசியா இருக்கணும்.  அல்லது மேஷ ராசியா இருக்கணும்.  இருந்தால் தாடி வளர்க்க வேண்டி வராது.

கும்பத்தில் பிறந்த பொண்ணுங்களுக்கு உள்ள கதவு நல்லா திறக்கணும்னா மேஷ ராசி தான் பெட்டர்.

மீன ராசியில் பிறந்த பொண்ணுங்களுக்கு மகர ராசி மேல தனி அன்பே வருமாம். இப்படிதான் ஒரு தியரி ஜோதிடத்தில் இருக்கு.

இது எல்லாம் பொதுவான அம்சம் தான்.  காதல் பன்றதுக்கு  காலம் கனியனும்.  பேசி பழக இடம், சூழ்நிலை, சந்தித்து பழக வாய்ப்பு,  தங்கள் எண்ணங்களை சொல்ல சந்தர்ப்பம்,  இப்படி ஏகப்பட்ட சமாச்சாரம் இடையில் இருக்கு.

முடிந்தால் முயற்சி பண்ணி பாருங்களேன்.  உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுடன்.  

Sunday, 26 February 2012

பெருமாள் கோவில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லையே ஏன்?
 காத்திருக்கிறோம்....

விடியலுக்காக காத்திருக்கும் பறவை மாதிரி, நல்ல காலத்திற்காக காத்திருக்கிறோம்,   நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.  நல்லதை பெறுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

ஆனால்.... இந்த கால நேரம் என்பதும், விதி கர்மா என்பதும் விடுவாதாய் இல்லை.

வாழ்க்கை முழுவதும் வழுக்கு மரம் ஏறியே,  பலர் நொந்து போகிறார்கள். கடவுள்  வருவாரா?  கடவுள் மாதிரி யாராவது வருவார்களா கை தூக்கிவிட என்று தெரியாமல்,  எதிர்காலமே புதிர் காலமாக பலர் வாழ்கிறார்கள்.

என்ன காரணம்?

நமையாளும் நவகிரகங்கள்.  நம்புகிறோமோ இல்லையோ,  ஏற்று கொள்கிறமோ இல்லையோ,  இந்த கிரகங்கள் விடுவதில்லை.  வாழ்க்கை பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் இவர்கள் இருக்கிறார்கள். 

இந்த நவகிரகங்களுக்கு என்று தனி ஆலயங்கள் இருக்கிறது.  

சூரியனார் கோவில்                                  - சூரியன் 
திங்களூர்                                                       - சந்திரன் 
வைத்தீஸ்வரன்கோவில்                      - செவ்வாய் 
திருவெண்காடு                                           -புதன் 
ஆலங்குடி                                                     - குரு
கஞ்சனூர்                                                      -சுக்கிரன்  
திருநள்ளாறு                                                - சனி  
திருநாகேஸ்வரம்                                      -ராகு  
கீழபெரும்பள்ளம்                                      -கேது  

இது அனைத்துமே சிவஆலயங்கள்.  

பிரதான மூர்த்தியாக சிவ பெருமானே விற்றிருப்பார். நவகிரகங்கள் தனியாக இருக்கும். 

புகழ்பெறாத சிவ ஆலயமாக இருந்தாலும்,  அங்கெல்லாம் இருக்கும் நவகிரகங்கள்,  பெருமாள் கோவிலில் மட்டும் இருப்பதில்லையே ஏன்? 

வைணவ பெரியவர்கள் .... அது சிவ சித்தாந்தம்,  வைணவத்தில் நவகிரகங்கள்  இல்லை என்று பட்டும் படாமலும் பதில் சொல்லுவார்கள்.  ஆனால் உண்மை வேறு. அதை விளக்குவதுதான் இந்த கட்டுரை.

மூவர்கள் வரிசையில் முதன்மையானவர் முக்கண்ணன் என்று போற்றபடுபவர்  சிவபெருமான். இவரது குடும்ப வாழ்வை பார்த்தால் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும்.

நீயா.. நானா...நீ பெருசா..நான் பெருசா என்று சக்தி சிவனுக்குள் நடந்த சச்சரவுகள், ஈகோ மோதல்,  வானுலோக வாசிகள் என்றில்லை,  பூலோகவாசிகளுக்கு கூட,  புத்தகங்கள் வழியாக தெரியும்.
அப்பா அம்மாவை பார்த்து வளர்ந்த பிள்ளைகள் கூட,  இதற்க்கு விதிவிலக்கில்லை. 

பழத்திருக்காக பரமசிவன் குடும்பம் பிரிந்தது.  முருகன் கோவித்து கொண்டு போய்,  குன்றுகளில் அமர்ந்தார். 

ஆனால் அகில உலகங்களை  எல்லாம் காத்துரட்ச்சிக்கும் மகாவிஷ்ணுவின் வாழ்க்கையில் இது போன்ற குடும்ப சச்சரவுகள் இல்லை.

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக வீற்றிருக்கும் மகாலெச்சுமிக்கு ஸ்ரீ என்ற பெயரும் உண்டு.  அவள் மகாவிஷ்ணுவின் மார்பில் நீங்காத நித்திய வாசம் செய்கிறாள்.  அதனால் தான் அவருக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயரும் உண்டு.

மகாலஷ்மி இருக்கும் இடத்தில் இன்பம் இருக்கும்,  துன்பம் இருக்காது. 

மகாலஷ்மி இருக்கும் இடத்தில் பெருமை இருக்கும் வறுமை இருக்காது.

மகாலஷ்மி இருக்கும் இடத்தில் பாசமும் நேசமும் பெருகி ஆனந்த குடும்பமாக இருக்குமே தவிர,  அல்லல் படுவதற்கோ, அவதி படுவதற்கோ பற்களுக்கு இடையே நாக்கு இருக்கிற மாதிரி,  பகைவர்களுக்கு இடையே,  தொல்லைகளுக்கு இடையே, துயரங்களுக்கு இடையே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் வரவே வராது.

மகாலக்ஷ்மி என்றாலே மகிழ்ச்சி என்று பொருள்.  மகாலக்ஷ்மி என்றாலே சந்தோசம் என்று பொருள். 

அதனால் சகல நிலைகளிலும் சங்கடத்தை தரும் நவகிரகங்கள் லக்ஷ்மி இருக்கும் இடத்தில் இருக்க முடியாது.  அதனால் தான் விஷ்ணு பத்தர்களை நவகிரகங்கள் பாதிப்பதில்லை. அதனால் நவகிரக வழிபாடு வைணவத்தில் இல்லை என்பது ஒரு கருத்து. 

ஒரு நிமிஷம்.... மகாவிஷ்ணுவின் தச அவதாரங்களில் ஓன்று தானே ராம அவதாரம்?

ஆமாம்.

நாடாளும் யோகம் பெற்ற ராமனுக்கு முடிசூட்ட நாள் குறித்தது வசிச்ட்ட முனிவர் தானே?

ஆமாம்.

மணிமுடி தரிக்க வேண்டிய ராமன்,  மரவுரி தரித்ததும்,  நாடாள வேண்டிய ராமன் நோடோடியாய் காட்டிற்கு போனதும் ஏன்?

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் என்று ஒரு ஜோதிட பாடல் வருகிறதே,  அதன் அர்த்தம் என்ன?

ராமனின் ஜாதகத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்த போதுதான் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனான் என்பதுதானே.

உண்மை உண்மை....இதெல்லாம் அவதார நாயகன் அறியாமலா இருப்பார்.  ராம அவதாரத்தின் நோக்கம் என்ன?

ராவண வதமும்,  வாலி வதமும்தானே முக்கியம். அதன் பொருட்டு அரங்கேறிய  நாடகம்தானே தவிர வேறு இல்லை.  சரியா.

லக்ஷ்மி இருக்கும் இடத்தில் சுபிச்சம் இருக்குமே தவிர,  சூனியம் இருக்காது.  அதனால் தான் பெருமாள் கோவில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லை.

Saturday, 25 February 2012

சனிஸ்வரனும் சர்வேஸ்வரனும். SANI VS SIVAN

சனி...

தர்மத்தின் தவ புதல்வன்.  தர்ம தேவதை இவர் வடிவம். இவருக்கு ஏழை பணக்காரன் பேதமில்லை.  உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாட்டில்லை.  அனைவருக்கும் ஒரே நீதி என்ற கொள்கை உடையவர்.

இவரை பொறுத்தவரை மனிதரும் கடவுளும் ஒன்றே.  
 கைலாயத்தில் ஒரு நாள் காட்சி அளித்தார் சனிபகவான்.  சங்கரனை வணக்கினார்.

மங்களம் உண்டாகட்டும்.  என்ன சனிச்வரா... வராத நீ வந்திருக்கிறாய்? வந்ததின் நோக்கம் என்ன?

பிரபு... மேலோர் கிழோர் என்றில்லாமல் அனைத்து லோகத்திருக்கும் பொதுவானவன் நான். 

அதிலென்ன சந்தேகம் உனக்கு?

கருணை கடலே....தற்போதைய கால சூழலில்,  தங்களை சனிச்வரனாகிய நான் பீடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள் அனுமதி கொடுத்தால் மூன்றே மாதத்தில் தங்களிடம் இருந்து விலகி விடுவேன்.

என்ன...என்னையும் பீடிக்க போகிறாயா?

ஆம் பிரபு.

சர்வ வல்லமை பெற்ற என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.  உனக்காக பூலோகத்தில் பூலோக வாசியாக ஜனனம் செய்கிறேன்.  அங்கு வந்து என்னை பீடித்து கொள்.

தங்கள் உத்தரவு.

சரி... எப்போதில் இருந்து உன் பார்வை படப்போகிறது.?

இன்று முதல்.

அப்படியா?  இப்போதே பூலோக வாசியாக அவதரிக்கிறேன். நீ பூலோகம் வருவாயாக என்று பரமேஸ்வரன் மறைந்து விட்டார்.  

பூலோகத்தில் பூலோகவாசியாக அவதரித்தார். உடன் சனிபகவான் நினைவு வந்தது.  சனி இடம் இருந்து தப்பித்து கொள்ள, தாமரை நிறைந்த தடாகத்தில், தாமரை தண்டினுள் போய் ஒளிந்து கொண்டார்.

மூன்று மாதம் கழிந்தது.  சர்வேஸ்வரன் வெளியே வந்தார்.  அப்போது சனி பகவான் எதிரே தோன்றினார்.

என்ன சனிச்வரா ... உன் கணக்குப்படி மூன்று மாதம் முடிந்து விட்டது.  இனி என்னை பீடிக்க முடியாது.  உன் பிடியில் சிக்காமல் நான் தப்பித்து விட்டேன் பார்த்தாயா?

பிரபு .... நான் கைலாயம் வந்து உங்களை சந்தித்த கணமே என் பீடிகை துவங்கி விட்டது.  அதனால் தான் சர்வலோகத்தையும் அடக்கி ஆளும் நீங்கள் ஒரு சாதாரண மனிதனாக பூலோகத்தில் அவதரித்திர்கள்.

எப்படி பட்டவரையும்,  எவ்வளவு சக்தி படத்தவரையும், இருட்டடிப்பு செய்து இருக்கும் இடம் தெரியாமல் செய்கிற எனக்கு பயந்துதான் தாமரை தண்டில் போய் ஒளிந்திர்கள்.  இப்போது என் காலம் முடிந்து விட்டது,  வெளியே வந்து விட்டிர்கள் என்று சனி பகவான் சிரித்தார்.

உண்மைதான் சனிச்வரா. நீ யாருக்கும் பாரபட்ச்சம் காட்டாதவன் என்பதை உணர்த்தவே இந்த திருவிளையாடலை நாமும்  நடத்தினோம்.  என்று கூறி சிவனும் மறைந்தார். 

Friday, 24 February 2012

பேஸ்புக் சாட்டிங்கில் பொண்ணுங்களை பேசி அசத்துவது எப்படி?

பேசுறது ஒரு கலை.  அதைவிட பேசவைக்கிறது பெரிய விஷயம். இந்த கலையில் நிறைய பேர் பெயில் மார்க்குதான் வாங்குறாங்க.

கராணம் என்ன?

எப்படி பேசுறதுன்னு தெரியாம...  எதையாவது உளறி கொட்டி எதிர் தரப்பினரை அதிர வைக்கிறதுதான் காரணம்.

இன்று பேஸ்புக்குல நிறைய நண்பர்கள் சாட் பன்றாங்க.  ஆனா ஒரு பொண்ணுங்ககிட்டே எப்படி பேசுறதுன்னு உண்மையா பாதி பேருக்கு தெரியலை. ஆரம்பமே அதிரடியா இருக்கும்.

ஹாய் டி....

இல்லைனா.. ஹாய் டியர்.... 

இல்லைனா .... ஹாய் செல்லம் 

முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பொண்ணு கிட்டே பேசும் போது இப்படியா ஆரம்பிக்கிறது.  வீட்டுல, ரோட்டுல வேற எங்காவது ஒரு பொண்ணை பார்த்தால்,  நாம இப்படியா பேசுவோம்.

இல்லையே. 

அப்புறம் பேஸ் புக்குல மட்டும் ஏன் இப்படி பேசணும்.  அப்பறம்... சிலர்  அசட்டு தனமா சில கேள்வி கேட்பாங்க.

உன் பெயர் என்ன?

பெயர் தெரியாமலா பேச ஆரம்பிக்கிறது.  ஒருத்தர்கிட்டே பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்பு அவங்க profile போய் பார்க்க வேண்டாமா?

அவங்க யார்.  என்ன படிச்சு இருக்காங்க, என்ன செய்றாங்க,  என்ன பிடிக்கும் இது எதுவுமே தெரியாம பேச கூடாது.  

சாப்பிட்டியா?  இது ஒரு கேள்வி.   

பசிச்சா சாப்பிட போறாங்க.  இது பேச ஒன்னும் இல்லாம நேரத்தை கடத்த செய்யுறது.

இது ஒன்னும் கேட்க கூடாத கேள்வி இல்லை.  எப்படி இருக்கே,  இன்று புதிய செய்திகள் இருக்கா, சாப்பிட்டியா போன்ற கேள்வி எல்லாம்  அறிமுகம் ஆகி,  பேசி பழக ஆரம்பிச்ச பிறகு வரவேண்டிய கேள்வி.

இன்னும் சிலர் எடுத்த எடுப்பிலேயே உன் கண்ணு அழகா இருக்கு,  நீ ரொம்ப அழகா இருக்கே........ இப்படி பேசினாலும் நல்ல பொண்ணுங்களுக்கு பிடிக்காது.  

இதுக்காகவே ஆன்லைன்ல இருக்கிற பொண்ணுங்க வேண்டுமானால் பேசி வழியும்.   ஆனால் நல்ல பொண்ணுங்க கட் பண்ணிட்டு போய்டும்.

இன்னும் சிலர் கொஞ்சம் ஓவரா போவாங்க.  தொடர்ந்து இரண்டு நாள் மேஜெஸ்  அனுப்பி பார்க்கிறது.  ரிப்பிலே இல்லையா...அசிங்கம் அசிங்கமா திட்டுறது.  இது நல்ல நட்புக்கு அழகு இல்லை.  

ஒருவருக்கு 100  பேருக்கு  மேல பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு வச்சுக்குவோம்.  ஒரே சமயத்தில் 25 பேர் ஆன்லைன்ல இருந்தால்,  ஸ்கிரின்ல 5 பேர் மட்டும்தான் தெரிவாங்க.  மற்றவர்கள் ஸ்கிரின் ஓரத்திற்கு போய்டுவாங்க.  இது தெரியாமல்  திட்டி மேஜெஸ் அனுப்பினால்,  மறுபடியும் அந்த பொண்ணு உங்க கூட பேசுமா?

நீங்க இருக்கிற பக்கமே வராது.  காத்து கருப்பை கண்ட மாதிரி ஒதுங்கி போய்டும்.   அப்படியும் விடாது கருப்புன்னு துரத்தி துரத்தி மேஜெஸ் அனுப்புறவங்க இருக்காங்க.

ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை.  ஒரு கட்டத்துக்கு மேல உங்க மேல கோவம் வந்து பிளாக் பண்ணத்தான் பார்ப்பாங்க. கடைசியா அதுதான் நடக்கும்.

முதலில் உங்க மேல ஒரு மரியாதை வரணும்.  மதிப்பு வரணும்.  நல்லவர் என்ற நம்பிக்கை வரணும்.  அப்படி நம்பிக்கை வர்ற மாதிரி நீங்க நடந்துக்கணும்.

டி போட்டு பேச கட்டிக்க போற பொண்ணா,  அல்லது கட்டி வச்ச பொண்டாட்டியா?  

பேசுறது ஒரு பிரண்ட்.   

ஒரு போன் வருது. எடுக்குறிங்க. எடுத்த எடுப்புல யாரு பேசுறதுன்னு எதிர் தரப்பில் கேட்டால்  உங்களுக்கு கோவம் வருமா இல்லையா.  நீங்கதானே கூப்பிடிங்க.  நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க.... அப்படிதானே கேட்பிங்க. அதுபோல தான் பேஸ்புக் சாட்டிங்கும்.

அப்பறம்.....

என்ன செய்யுறே ....ரிப்பிலே செய்ய மாட்டியா .... இப்படி ஒருமையில் பேசுவதும் தவறு.

அதெல்லாம் நல்ல பிரண்டான பிறகு உரிமையில் பேசுவது.  முதலில் பேசும் போது,  வார்த்தையில் கண்ணியம் இருக்க வேண்டும். 

பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே   போன் நம்பர் கேட்கிறது. போன் என்பது பர்சனல். பர்சனலா பேசுற அளவுக்கு போகணும்னா நீங்க எந்த அளவுக்கு முக்கியமான நபரா இருக்கணும். அதுக்கு கால அவகாசம் வேண்டாமா.

அது என்ன பையனா... நம்பர் கேட்டதும் இத்தான்னு கொடுக்க.

அப்பறம்... திடீர்ன்னு விடியோ கால் பன்றது. இந்த மாதிரி ஆசாமிங்க அவசர புத்தி உள்ளவங்க. இதுனால ஒன்னும் ஆகாது. உங்க மேல இருக்கிற நல்ல மதிப்பு குறைஞ்சு போய்டும். அதனால இதையும் தவிர்க்க வேண்டும்.
சரி எப்படி பேசுறது. 
உதாரணமா உங்க பெயர் குமார்ன்னு வச்சுக்குவோம்.  எதிர் தரப்பில் இருக்கும்  சாந்திக்கு மேஜெஸ் அனுப்புறிங்க.  

hai ... mam .... morng   I am kumar .  from  Nagapattinam .  fine .  how  r u 

ஒரு வேலை இதுக்கு பதில் வராமல் போகலாம்.  அல்லது பதில் வரலாம்.  வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?
உங்க வால்ல போட்டு இருக்கிற போட்டோ வெரி நைஸ்.  குட் கலஷ்ஷன். ஆச்சரியமா இருக்கு.  எப்படி... இப்படி படங்களை தேடி எடுக்குறிங்க. பாராட்டுக்கள்.

இதுக்கும் பதில் வரலையா?  விட்டுடுங்க.  ஒரு பை சொல்லிட்டு.

மறுநாள்...... வழக்கம் போல் உங்கள் அறிமுகம். 

நான் உங்களை தொடர்ந்து ஒரு மாதமா பார்த்துகிட்டு இருக்கேன்.   உங்க மேஜெஸ்  படிக்க ஆர்வமா இருக்கு.  புதிய செய்திகள்,  புதிய சிந்தனைகள்,  தொடரட்டும் உங்கள் சேவை.

இதுக்கும் பதில் வரலைனா.  அவங்களை நீங்க தொல்லை பண்ண கூடாது.  அப்படியே விட்டுடனும்.  குட் நைட் சொல்லிட்டு வெளியே போயிடணும்.

மறுநாள்.

அவங்க வால்ல போய்.... அவங்க போஸ்ட் பன்ற போட்டோ அல்லது கவிதைக்கு கமான்ட் பண்ணுங்க.   பாராட்டுக்கு மயங்காதவங்க யாரு.

அதுக்கும் பதில் பதில் இல்லையா.   உடனே கோவத்துல கொந்தளிச்சு போடின்னு மேஜெஸ் பண்ணாதிங்க.  வெய்ட் பண்ணுங்க.

நல்ல பொண்ணுங்க உடனே பேசாது.  அல்லது பேசுறதுக்கு சந்தர்ப்பம் பார்த்துகிட்டு இருக்கும். 

நீங்க விடாமல் கமான்ட் பண்ணனும்.  அவங்களை இம்பிரஸ் பன்ற மாதிரி.  அதாவது அவங்க போஸ்ட் பன்ற மேஜெசுக்கு மட்டும்.  

சாட்டிங்குல மேஜெஸ்  அனுப்ப கூடாது.   அந்த பொண்ணு நினைக்கணும்.  கமான்ட் பன்றார்.  ஆனா முன்ன மாதிரி மேஜெஸ் அனுப்புறது இல்லையே.

இந்த சிந்தனை  அந்த பொண்ணு மனசுல வந்துட்டா....  உங்க கமான்ட்டுக்கு பதில் சொல்லும்.  

உடனே நீங்க சாட் பண்ண போயிட கூடாது.   

பொண்ணுங்க சைக்காலஷியே இதுதான். தன்னை பார்க்கிறவங்களை பார்க்காது.  போடி... நீ பெரிய அழகியா.. நீ ரம்பையா இரு,  மேனகையா இரு எனகென்ன.  உன் அழகு என்னை எந்த விதத்துலேயும் பாதிக்கலைன்னு திமிரா போற ஆம்பிளையைதான் நேசிப்பா.

நீங்க செய்ய வேண்டியது....ஒரு வாரத்திற்கு ஒன்லி கமான்ட் மட்டும்தான்.  அவங்க ஒரு போட்டோ போட்டால்.... நைஸ்... ரியலி  பேமலி லுக்.  இப்படிதான் உங்க கமான்ட் இருக்கணும்.  

எப்படா இவன் சாடிங்க்ல வருவான்னு,  அந்த பொண்ணு ஏங்குற அளவுக்கு நீங்க பொறுமையா இருக்கணும்.  

ஒரு மாதத்திற்கு அப்பறம் மேஜெஸ் அனுப்பி பாருங்க.  உடனே பதில் வரும். நீங்க அந்த பொண்ணை பிரண்டா பார்த்தாலும் சரி,  உங்க மனசுல வேற எண்ணம் இருந்தாலும் சரி....  பேசும் போது ரொம்ப கண்ணியமா பேசணும்.

ஏன்னா...... பேஸ்புக் வழியா இணைந்த தம்பதிகள் நிறைய இருக்காங்க.  நல்ல ஆரோக்கியமான பிரண்டா பலர் இருக்காங்க.

நட்பு பெரிசு.  
இந்த உலகத்தை விட.

கடைசியா ஓன்று.
மினிமம் லவ் இஸ் பிரண்ட்சிப் 
மேச்ஷிமம் பிரண்ட்ஷிப் இஸ் லவ்

 
 

Thursday, 23 February 2012

மூன்று பேரை திருமணம் செய்த பெண்- தினமலர் செய்தி....


முதல் திருமணத்தை மறைத்து,  ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை,  காதலித்து திருமணம் செய்த பெண்,  யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு  கணவர்களுக்கு இடையே தகராறு. 

 இது தினமலர் செய்தி.

என்னங்க இது அநியாயமா இருக்கு.  இப்படியுமா நடக்கும்?  அதுவும் ஒரு பொண்ணு செய்யுறது..... நம்பவே முடியலை எல்லாம் கலிகாலம்.

இப்படி சிலர் ஆதங்க படலாம்.  
 . 
 இதுக்கு எல்லாம் கடுமையான தண்டனை தரனும்.  அப்பத்தான் இந்த மாதிரி ஆளுங்க திருந்துவாங்க. ----- சிலர் கோவப்படலாம். 

ஆயிரம் சம்பவம் நடக்குது.  ஒன்னு ரெண்டு வெளியே வந்துடுது. இதெல்லாம் இப்போ சகஜம் என்று சிலர் மனதை தேற்றிக்கொல்லாம்

அது சரி....திருடுற அத்தனை பேரும் திருடனா.....  இல்லையே.  மாட்டிகிட்டவங்க தான் திருடன். 

சரி....மாறிவரும் மனித மன கோணல்கள்,  கலாச்சார சீரழிவுகள் இந்த கலிகாலம் என்றில்லை.   புராண காலத்திலேயே  இது போன்ற கூடா உறவுகள் இருந்திருக்கிறது.

இந்திரன் செய்யாத தவறா?  எத்தனை எத்தனை...... அகலிகை கல்லாய் போனதற்கு காரணம் அவன் தானே.  

முனிவர் உருவத்தில் வந்த இந்திரனை அகலிகை தெரிந்து கொண்டாலும்,  வானலோகத்து இந்திரனே தன் அழகில் மயங்க்கி விட்டானே என்று அகலிகை இந்திரனுக்கு உடன் பட்டாளாம்.   

இதை தெரிந்து கொண்ட ரிஷிமுனி கல்லாய் இருக்க வேண்டிய நீ... இந்திரனுக்கு  மட்டும் கரும்பாய் இனித்த காரணம் என்ன?  அதனால் கல்லாய் போ... என்று சாபம் கொடுக்கவில்லையா?

பிருந்தா.... சங்கசுடனின் மனைவி.   அது மகாலட்சுமியின் ஒரு அவதாரம் என்று சொன்னாலும்,  அந்த பிறவியில்  சங்கசுடனின் மனைவி என்று தெரிந்தும் மகாவிஷ்ணு அவளுடன் சேரவில்லையா?   அதை பின் தெரிந்து கொண்ட பிருந்தா மகாவிஷ்ணுவை கல்லாய் போ என்று சபிக்கவில்லையா?

புராண காலத்தை விடுங்கள்.  இதிகாசகாலத்தில் மாற்றான்  மனையாளை பெண்டாள நினைத்த சண்டாளன் ராவணன் இல்லையா?

தன் தம்பி மனைவி என்று தெரிந்தும் வாலி,    சுக்கிரவன் மனைவியை கவர்ந்து கொள்ள வில்லையா? 

இப்படி ஆயிரம் உதாரணம் இருக்கிறது.   

நாம் இந்த தவறுகளை நியாயபடுத்த வரவில்லை.  இதற்கு என்ன காரணம்.  என்பதை ஆராயவே இந்த கட்டுரை.

இதற்கு ஜோதிட ரீதியில் பல கிரக நிலைகள் இருக்கிறது. ஒருவரின் காம சிந்தனைகளை   சொல்லும் இடம் ஜாதகத்தில் 3 . 7 , 12  இம் பாவங்களே.   

கிரகங்கள் என்று எடுத்து கொண்டால்,  சந்திரன்,  சுக்கிரன், செவ்வாய்,  ராகு, கேது, சூரியன் வருகிறார்கள். 

ஒருவர் சிம்ம லக்கனத்தில் பிறந்து,  அந்த லக்கனத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு சேர்ந்து இருந்தாலும்,  சுக்கிரன், செவ்வாயோடு சூரியன் சேர்ந்து இருந்தாலும்  கூடா உறவு,  குண்டக்க மண்ட்டக்க உறவு ஏற்பட காரணமாக இருக்கிறது.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையும் சிற்றின்ப வேட்கையும் என்று தனியே ஒரு கட்டுரையே எழுதலாம்.  வாலிபத்தில் உதை பந்தாக்கி,  வாலிபம் கடந்து வயோதிகம் வரும் போது,  தன்னை உணர வைக்கிறது.  

ஒருவர் ஜாதகத்தில் குரு எட்டில் இருந்தால் அவரின் நடவடிக்கைகள் சரியாக  இருக்காதாம்.  புலிப்பாணி  முனிவர் பாடல் இதைதான் சொல்கிறது.

கேளப்பா எட்டுக்கு வேசி கள்ளன் 
கெடுதி உள்ள மனைவி பகை நோயால் கண்டம் 
ஆரப்பா அரசர் பகை பொருளும் சேதம் 
அப்பனே அவமானம் கொள்வான் டம்பன் 

என்கிறார்.    அதாவது ------ பெண் மோகம் கொண்டவனாக இருப்பான்,  அதனால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் வரும்.  அரசர் பகை என்றால் இந்த காலத்தில் போலிஸ் வழக்கு என்று பொருள்.  அதனால் அவமானம் கொள்வான் என்கிறார்.  

இது ஆண் என்றில்லை.  பெண்ணுக்கு இந்த அமைப்பு இருந்தாலும் இது தான் பலன்.

அடுத்து. 

ஆச்சப்பா இன்னமொரு சேதி கேளு 
 அஞ்சுல்லோன் தீயவனாய் அரவை  கூடி
கூச்சப்பா   நாடியே மூன்றில் நிற்க
குமரனின் மனைவியின் கருத்தை கேளு 
பாச்சபா புருஷனிடம் சண்டை இட்டு 
பதறி விழுன்தொடிடுவாள் கொடிய நீலி 
எச்சப்பா வெகு பேருக்கு இவள்மேல் மோகம் 
இவளாலே கெட்டவர்கள் அநேகம்பேரே 

என்கிறது அடுத்த பாடல்.     அதாவது.... ஜாதகத்தில் 5 அதிபதி கெட்ட கிரகமாக இருந்து,  அந்த கிரகம் ராகு அல்லது கேதுவை கூடி,  லக்கனத்திருக்கு மூன்றாம் இடத்தில் இருந்தால்,  அந்த சாதகனின் மனைவி கொடிய நீலியாக இருப்பாள்.  

கட்டிய கணவனிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு ஓடுவாள்.  இவள் உத்தமி போல் நடிப்பாளே தவிர உத்தமி அல்ல.  இவளால் பல குடும்பங்கள் கெடும் என்கிறது பாடல்.

அடுத்து.....

பாரப்பா இன்னும்மொரு புதுமை கேளு 
 பாம்புடனே முன்றோனும் தீயோனாகில் 
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்
குமரி கள்ள புருடனையும் கூடுவாளாம்.  

என்கிறது அடுத்த பாடல்.   அதாவது லகனத்திற்கு மூன்றாம் வீட்டுக்கு உரிய கிரகம் பாவ கிரகமாக இருந்து,  அதனுடன் ராகு அல்லது கேது கூடினால்,  அவ்வமைப்பை  பெற்ற பெண்,  கள்ள தொடர்பு வைத்திருப்பாள் என்கிறார் புலிப்பாணி முனிவர்.  

இது போல் பல கிரக நிலைகள் இருக்கிறது.  ஒருவரின் மனதை கிரகங்கள் தான் வழி நடத்துகிறது.  அந்த வகையில் இப்போது நடந்திருக்கும் சம்பவத்திருக்கும் சரி,  நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களுக்கும் சரி,  அவரவர்  ஜாதக நிலைகளே காரணம்.  

இதற்கு காலம் என்பது ஒரு காரணம் இல்லை.Wednesday, 22 February 2012

பொண்ணுங்களை மகாலக்ஷ்மின்னு சொல்றாங்களே ஏன்?

ஒரு அழகான பொண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்றாங்களே ஏன்?

கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு விட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வந்துருக்குன்னு சொல்றாங்களே எதுக்கு?  

அந்த பொண்ணோட அமைதியான குணத்தை வச்சு மட்டும் அல்ல. நல்ல பழக்க வழக்கங்களை பார்த்து மட்டும் சொல்றது இல்லை. ஒவ்வொரு பொண்ணு உடம்புலேயும் மகாலக்ஷ்மி இருக்கு. தர்ம சாஸ்த்திரம் அப்படிதான் சொல்லுது.

அது தெரியுமா உங்களுக்கு.

ஒரு பொண்ணு கல்யாணம் ஆகாமல் கன்னியா இருக்கும் போது காதுக்கு கிழ்புறம்,   கழுத்து பகுதியில் மகாலட்சுமி வாசம் செய்வாளாம்.  

அந்த பொண்ணுக்கு திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில்,  நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி. 

அதுனாலதான் பொண்ணுங்க தலை சீவாமல் இருக்க கூடாது.  திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்கணும் என்று சொல்கிறார்கள்.

சில பொண்ணுங்க இருக்கும் பத்திரகாளியா. ஆத்தா புண்ணியவதி, அலங்கார ரூபினி,  பார்த்தால் பச்சை மரம் கூட பத்தி எரயும்முள்ள என்று சொல்கிற மாதிரி கொடும் கோலியா இருக்கும்.  என்ன செய்ய... அதுவும் ஒரு அவதாரம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

இன்னொரு செய்தி.

இது பேசன் உலகம்.  மார்டனா ட்ரெஸ் போடுறது பொண்ணுங்களுக்கு பிடிக்கும். ஆனா செய்ய கூடாத ஒன்னு இருக்கு.

என்ன?

அது கால்ல தங்க கொலுசு போடுறது.  

தங்க கொலுசு போடுற அளவுக்கு வசதி இருந்தா போட்டுகிறதுல என்ன தப்பு?

தப்பு தான்.  இந்த மகாலட்சுமி தங்கத்தில் குடி இருப்பாள்.  அதனால  இடுப்புக்கு கிழே தங்கம் வரக்கூடாது.  அப்படி தங்கத்தை கால்ல போட்டால்..... அடுத்த பிறவியில் சொறி நாயா பிறந்து தெரு தெருவா அலைய வேண்டி வருமாம்.  இதுவும் தர்ம சாஸ்த்திரம் தான் சொல்லுது.

ஓகே.

அருள் இல்லாருக்கு அவ்வுலகம்  இல்லை. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை.  அருளையும் பொருளையும் தருவது யார்?

மகாலக்ஷ்மி.

தனலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, வித்யாலட்சுமி, சந்தானலக்ஷ்மி, விஜியலட்சுமி, கஜலக்ஷ்மி, சௌபாக்கிய லக்ஷ்மி என்றெல்லாம் அழைக்கப்படும்  அஷ்ட லக்ஷ்மியின் கூட்டுத்தான் மகாலக்ஷ்மி.

லக்ஷ்மி என்றால் அழகு என்று பொருள்.

லக்ஷ்மி என்றால் அன்பு என்று பொருள். 

லக்ஷ்மி என்றால் கருணை என்று பொருள்.

லக்ஷ்மி என்றால் இரக்கம்  என்று பொருள். 

லக்ஷ்மி என்றால் செல்வம் என்று பொருள்.

வெறும் அச்சடித்த காகிதங்களையும்,  சில்லறை நாணயங்களையும் தருபவள்  இல்லை மகாலக்ஷ்மி.

அன்பை தருபவள், அழகை தருபவள், கருணையை தருபவள், இரக்க குணத்தை தருபவள்.

ஒரு வீட்டில் மகாலக்ஷ்மி குடி இருக்கிறாள் என்றால்,  அந்த வீட்டில் நிம்மதி இருக்கிறது என்று பொருள். 

அந்த வீட்டில் சந்தோசம் இருக்கிறது என்று பொருள்.

நோய்நோடிகளோ, பெரிய அளவில்  வைத்திய செலவுகளோ  இல்லை என்று பொருள்.

உறவில் பிரிவுகளோ,  அதில் முறிவுகளோ இல்லை என்று பொருள். 

பிள்ளை செல்வங்களால் எந்த தொல்லையும் இல்லை என்று பொருள். 

கற்ற கல்விக்கோர் வேலை, பெற்ற ஞானத்திற்கு ஏற்ற மதிப்பு இருக்கிறது என்று பொருள்.

அந்த வீட்டில் விபத்துகளும், துர் மரணம் எதுவும் நடக்கவில்லை என்று பொருள். 

அகிலாட கோடி பிரமாண்ட நாயகியாக வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி ... இந்திரா லோகத்தில் சொர்க்க லக்ஷ்மியாக இருக்கிறாள்.  

பாதாள லோகத்தில் அவளுக்கு பெயர் நாக லக்ஷ்மி.

நாடாளும் மன்னர்களிடம் ராஜீய லக்ஷ்மியாக இருப்பாள்.

நம்மை போல் சாதாரண மனிதர்களிடம் கிரக லக்ஷ்மியாக விற்றிருப்பாள்.  இந்த மகாலக்ஷ்மி அருள் கிடைத்தால் இல்லை என்ற சொல் இல்லாமல் போகும், அதிஷ்ட தேவதைகளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.  நல்லவர்கள் மனதில் நாளும் விற்றிருக்கும் மகலக்ஷ்மியை நாமும் வணங்குவோம்.
 

செல்லுக்கு வந்த SMS அல்லது செல் போன் SMS


பிரண்ட் கிட்டே சண்டை போட்டுட்டு
காதலி கிட்டே சொன்னா
அவ சொல்லுவா
எனக்கு அப்பவே தெரியும் அவனை பற்றி
உடனே அவன் பிரண்ட்சிப்பை கட் பண்ணு.

அதுவே
காதலி கிட்டே சண்டை போட்டுட்டு
பிரண்ட் கிட்டே சொன்னா
அவன் சொல்லுவான்...
 ஏய்... தங்கச்சி ரொம்ப நல்லவ...
ஏதோ தெரியாம சொல்லி இருப்பா
போ
போய்.... உடனே மன்னிப்பு கேள் .


1000 ,  2000 செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு போனா
டுர்ன்னு சொல்றாங்க
10 பைசா செலவு இல்லாம ஊர் சுத்தினா
தெண்டசோ றுன்னு   சொல்றாங்க
என்ன உலகமடா இது.


USA :  நாங்கதான் நிலாவில் முதலில் கால் பதித்தோம்

AUS :  நாங்கதான் வீனசுக்கு போனோம்.

IND :  நாங்கதான் முதலில் சூரியனில்  கால்   பதித்தோம்
 USA : பொய் சொல்லாதிங்க.  சூரியனில் கால் வச்சா அப்பவே எரிஞ்சு         போய்டுவீங்க

IND : கொய்யால..  நாங்க போனது நைட்டுல.


 வாழ்க்கையல நல்ல பிரண்ட் கிடைக்க புண்ணியம் செய்து இருக்கணும்.  கிறுக்கு பய பிள்ளை.  நீ என்ன தவம் செய்தியோ..  நான் உன் பிரண்டா கிடைச்சு  இருக்கேன்.


A  MAN  HAD RS , 200 .   HE  HAVE 100 RS      EACH   FOR  4 BEGGARS

இந்த கணக்கு சரியா தப்பா?

தப்பு இல்லை.  4 பேருக்கு நல்லது நடந்தா எதுவும்மே தப்பு இல்லை.ஒரு கார் பின்னால் எழுதி இருந்த வாசகம்.

TNJ 7486

( HI HI ..  எனக்கு GUD EVENING சும்மா சொன்னா பிடிக்காது அதான் )SMS சங்கத்தார் கவனத்திற்கு.

விலைவாசி ஏற்றத்தின் காரணமாக REPLY அனுப்பும் அன்பர்களுக்கு மட்டுமே இனி SMS அனுப்பப்படும்.  இது சங்கத்தின் அறிவிப்பு.


காதல் என்றால் என்ன?
 யாரோ கட்டிக்க போற பொண்ணுக்கு
ஐஸ் கிரிம்
சாக்லேட்
சுவீட்
கூல்டிர்ங்க்ஸ்  எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விடுறது.காதல் என்றால் என்ன?
 யாரோ கட்டிக்க போற பொண்ணுக்கு
சுடிதார்
வாட்ச்
சப்பல் எல்லாம் வாங்கி கொடுத்து
அட்டு பிகரை அழகு பிகராக்கி கட்டி விடுறதுதான் காதல்.


உன்
புத்தகத்தின் முதல் பக்கத்தில்
ஒரு கவிதை பார்த்தேன்
பிறகுதான் தெரிந்தது
அது
உன் பெயர் என்று

இப்படிக்கு
மனசாச்சியே இல்லாமல் ரீல் விடுவோர் சங்கம்.


உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்றாலும்
உயிர் என்று சொல்ல நண்பன் நீ இருந்தால் போதும்.


Read Sloly And understand  tha Feelings

Minimum Love is friendship &

Maximum Friendship is LoveWonderful couple in this  world

HEART & பீட்ஸ்
NIGHT & MOON
ROSE & LOVE
FISH & WATER
MY MESSAGE & YOUR  SMILE  


என்ன தான் பசங்க
200 CC Pulsar
350 cc apache
400 cc யமஹா பைக்கை வாங்கினாலும்
அது 80 cc Scooty  ku பின்னாலதான் போகுது.  

கடன் தொல்லையை தீர்ப்பது எப்படி?

அர்த்தமுள்ள  வாழ்க்கைக்கு ஆதாரம் எது?

பொருளாதாரம்தான்.  காசு, பணம், டாலர், வெள்ளி, ரியால் இப்படி எந்த பேர்ல இருக்கு என்பது முக்கியமல்ல.   

இருக்கணும்,  நிறைய இருக்கணும்.  அப்போதுதான் வாழ்க்கை பிரகாசமாய் இருக்கும்.

ஆனால் பலருடைய வாழ்க்கையில் பாராமுகமாய் இருப்பது இந்த பொருளாதாரம்தான். ஏழை ஆசைபட்டால் எதுவும் நடக்காது என்பதற்கு உதாரணமாய் நம்மை சுற்றியே பலர் இருப்பார்கள். 

விளைவு.. 

தங்கள் கனவுகளை நினைவாக்க கடன் வாங்குகிறார்கள். சுய தேவைகளுக்காக ஒருபுறம் இருக்க, சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடைசியில் பொறியில் சிக்கிய எலி மாதிரி சிக்கலில் மாட்டிகொள்வோரும் உண்டு.

இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் காலத்தை கழிப்பது என்பது முடியாத காரியம்தான். ஆனால் அதை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாமல்  திண்டாடும் நண்பர்களுக்காக இந்த டிப்ஸ்.  

என் அன்பு நண்பர் சித்தயோகி சிவதாசன்ரவி அவர்கள் எழுதிய நூலில் இருந்து  இதை உங்களுக்கு தருகிறேன். 

செவ்வாய்கிழமை நவமி திதியும்,  ஞாயிற்றுகிழமை சதுர்சசி திதியும் சேர்ந்து வரும் நாளில் கடன் தொகையை திருப்பி செலுத்த தொடங்கினால், வெகு விரைவில் கடன் முடிந்து விடும்.

சனிக்கிழமை பிரதோஷம் வரும் நாளில்,  மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னம் உதயமாகும் நேரத்தில் கடனை திருப்பி செலுத்தலாம்.    ஆனால் இந்த லக்ன உதய நேரத்தை ஜோதிடரின் உதவியோடுதான் செய்ய முடியும்.

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ நாளில் மாலை நாலரை முதல் ஆறுக்குள் கடன் தொகையில் சிறு தொகையை திருப்பி செலுத்தலாம்.
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்ப்பட்டு விலகும் நேரம் கடனை திருப்பி செலுத்தலாம்.  ஆனால் சந்திர கிரகணம்  என்பது இரவில் வரும் என்பதால் இது  சரிவராது.  

செவ்வாய் கிழமை, செவ்வாய் ஒரையில் கடன் தொகையில் சிறு தொகையை திருப்பி செலுத்தலாம்.  அவ்வாறு செலுத்தினால் அந்த கடன் தீர்ந்து விடும்.


Tuesday, 21 February 2012

இந்திய அணியின்..... தொடரும் தோல்விக்கு என்ன காரணம்?நாடி நரம்புகளில் ஓடுவது ரத்தம்.  ஆனால் இந்திய இளைஞர்கள் பாதி பேருக்கு கிரிக்கெட்டும் சேர்ந்து ஓடுகிறது.  வெரித்தானமான ரசிகர்கள் உண்டு என்றால் அது இந்தியாவில்தான்.  அடுத்த இடத்தில் தான் பாகிஸ்த்தானும், இலங்கையும்,  மற்ற நாடுகளும் இருக்கிறது.

இந்தியா பங்குபெறும் ஒவ்வொரு போட்டியிலும்  வெற்றி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் பிராத்தனை.   இருப்பினும் வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்கிற அடிப்படையில் வெற்றியோ, தோல்வியோ அதை  ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்.

சமீப காலமாக இந்தியா பல வெற்றிகளை பெற்றிருக்கிறது,  தொடர் தோல்விகளையும் சந்தித்ருக்கிறது.   வெற்றி பெரும் போது பாராட்டும் பலர், தோல்வி பெரும் போது விமர்சனம் செய்கின்றனர்.  இருக்கட்டும்.

தோணி. 

வெற்றி கேப்டன்.     கூல் கேப்டன்.என்று மற்ற நாட்டு வீரர்களால் பாராட்ட படுபவர்.  களத்தில் நிற்கும் போது அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும், கொஞ்சம் கூட பதட்ட படாமல்,  சிரித்த முகத்துடன் காணப்படுபவர்.

இவர் தலைமையில் பல வெற்றிகளை குவித்திருக்கிறது இந்தியா.  இக்கட்டான தருணத்தில் இவரே வெற்றிக்கு காரணமாக இருப்பார்.

சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டு,  அதை சரி செய்ய முயல்பவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இப்போது தோனியின் புதிய பார்முலா பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.  அதாவது சுழற்ச்சி முறை.   முன்னணி வீரர்களான சச்சின், சேவாக்,  கம்பீர் இவர்களில் ஒருவரை ஒதுக்கி விட்டு,  ரோகித்சர்மா, ரெய்னாவை ஆடும் அணியில் இடம் பெற வைப்பது.

அடுத்து நடக்க போகும் உலககோப்பை தொடருக்காக இளம் வீரர்களை இனம் காண வேண்டும்,  அதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்  என்பது தோணி முன் வைக்கும் வாதம்.

ஆனால் வெற்றியை மையம் வைத்து ஆடும் போது,  விழபறிச்சையாக மூத்த வீரர்களையும்,  அனுபவ சாலிகளையும் ஓரம்கட்டுவது சரியா? என்பது தான் கேள்வி.

அப்படி தோனியால் வாய்ப்பு பெற்றவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பதும்,  இந்த சர்ச்சை பெரிதாக ஒரு காரணம்.

பொதுவாக இந்திய அணி, பவுலிங், பீல்டிங், பேட்டிங் என்கிற வரிசையில் பேட்டிங் தான் பலம்.  பல போட்டிகளில் பவுலர்கள் சொதப்புவார்கள்.  எளிதான கேச்சுகளை பீல்டர்கள் கோட்டை விடுவார்கள். 

ஒரு ரன் கொடுக்க வேண்டிய பந்துக்கு இரண்டு ரன் ஓடவிட்டு அசத்துவார்கள்.  ஆனால் பெரிய வெற்றி இலக்குகளை எளிதாக பேட்டிங்கில் கடப்பார்கள்.  அதுதான் இந்திய அணி.

இப்போது தோனியால் ஒதுக்கப்படும் சச்சின் சாதனை மன்னன்.  கடந்த ஓராண்டாக 100 வது சதம் அடிக்க முடியாமல் திண்டாடுகிறார் என்கிறார்கள்.  ஆனால் 100 வது சதம் என்பது அவரின் தனிப்பட்ட சாதனை.

ஆனால் அணியின் வெற்றிக்கு சச்சின் எந்த அளவில் பயன்பட்டார் என்பதை பார்க்க வேண்டும்.  இவர் சிலிப்பில் நின்று கேச் செய்வதில் வல்லவர்.

காம்பிர் சிறந்த பேட்ஸ்மேன் மட்டும் அல்ல.  சிறந்த பீல்டர்.  வீரர்களுக்கு வெகு அருகில் நின்று பந்துகளை தடுப்பதில் வல்லவர். இதில் ரெண்டும் கெட்டான் சேவாக்.

இவர் சில சமயம் ஜொலிப்பார்.  பல சமயம் கோட்டை விட்டு விடுவார். ஆனால் பெரிய இலக்குகளை கடக்கும் போது,  நினைவுக்கு வருபவர் சேவாக்.

இவர் மட்டும் முதல் 15 ஓவர்கள் நிலைத்து நின்று விட்டால்,  இந்தியா 300 ரன்களை தொடும் அல்லது தாண்டும்.  அதைபோல் மலைபோல் இருக்கும் இலக்குகளை கூட,  எளிதில் தொட்டு விடலாம். 

காம்பிர் நல்ல பார்மில் இருப்பவர்.  நிலைமை இப்படி இருக்க, தனக்கு வேண்டப்பட்டவர்களை அணியில் இடம் பெற செய்யவே முன்னணி வீரர்களை  ஒதுக்குகிறார் தோணி என்கிறார்கள்.  

நம் நோக்கம் தோனியை குறை சொல்வது இல்லை.  முதல் 15 ஓவர்களை அடித்து நொறுக்கி ரன் மழை பொழியும் அனுபவ வீரர்களை ஒதுக்கி வைப்பது சரியல்ல.

அடுத்த உலககோப்பைக்கு வீரர்களை உருவாக்க வேண்டும் என்றால், கோப்பைக்கு முந்தைய முக்கியத்துவம் இல்லாத போட்டிகளில் ஆட சொல்லலாம்.  அல்லது நான்காவது ந்தாவது  வீரர்களாக இடம்பெற செய்யலாம்.   முன்னணி வீரர்களை ஒதுக்காமல். 

ஆடும் அணியில் அனைத்து வீரர்களும் சரியாக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு வீரரும் 20 முதல் 25 ரன்கள் எடுக்க வேண்டும்.  இரண்டு வீரர்கள் அரை சதம் அடிக்க வேண்டும், ஒருவராவது சதம் அடிக்க வேண்டும்.  அப்போதுதான் வெற்றி என்பது எளிது. 

இன்று கூட மூத்த வீரர்கள் அணியில் இருந்தும் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கிறது.   உண்மையில் மன அழுத்தம் கூட ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்லலாம்.  காரணம் அடுத்த போட்டியில் யார் நீக்க படுவார்கள் என்பது தோனிக்கு தான் தெரியும்.

இது போன்ற மன நிலையில் வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

சுழற்ச்சி முறை சரிதான். இதை கண்டிப்பாக பின்பற்ற கூடாது.  வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படும் போதும்,  சாதாரண நிலை போட்டிகளின் போதும் பயன் படுத்தி கொள்ளலாம்.  காரணம் வெற்றி என்பதுதான் முக்கியம் என்ற வென்சக்கார் கருத்தே சரி.

கட்டுரை ஆக்கத்திற்கு உதவியாக இருந்தவர் ராகேஷ்.

 
 

 

Monday, 20 February 2012

ரொமான்ஸ் விஷயத்தில் நீங்கள் எப்படி? ஒரு டெஸ்ட்...


காதலிப்பதும் காதலிக்க படுவதும்தான்  வாழ்க்கை.  அப்போதுதான் வாழ்க்கை  சுவாரஸ்யமாக மாறுகிறது.  

வாழ்க்கையின் எந்த பருவத்திலாவது ஒவ்வொரு மனிதனும் காதலிக்கிறான்.  காதல் என்பது  அன்பு.  அது ஒன்னும் கெட்ட வார்த்தை இல்லை.

ஆனால் காதலிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதுக்கு நிறைய பொறுமை வேண்டும்.

அட்டு பிகரா இருந்தாலும் உன்னைப்போல் அழகி உலகத்தில் யாருன்னு அளந்து விட தெரியனும்.  அப்பத்தான் காதலி குளுகுளுன்னு சிரிச்சு பேசும். இல்லைனா  சித்திரை மாதத்து வெயில் மாதிரி  தான்.

     உண்மைதானே.   

சரி.... கீழே உங்கள் காதல் மற்றும் ரொமான்ஸ் விஷயத்தில் நீங்கள் எப்படி என்பதை சொல்ல.... சின்ன டெஸ்ட்.   ஒரு கணம் கண்ணை முடிக்கோங்க.   ஓன்று முதல் ஒன்பதுக்குள் ஒரு எண்ணை முடிவு பண்ணிட்டு அந்த நம்பருக்கு உள்ள பலனை பாருங்கள்.  அதுதான் உங்கள் காதல் மற்றும் ரொமான்ஸ் பற்றிய குறிப்பு சரியா?

இப்போ உடனே பலனை பார்க்க கூடாது.  நீங்க கண்ணை மூடி யோசிக்கிறதுக்காக சும்மா ஒரு படத்தை போட்டு இருக்கேன்.  சரி படத்தை பார்த்து கிட்டே ஒரு 1 முதல் 9 குள் நம்பரை நினைங்க.  ரெடி


  • நீங்கள் நினைத்த எண் ஒன்றாக இருந்தால்.

ஆற்று நீருக்கு கூட அணை போடலாம்.  உங்கள் காதல் உணர்வுகளுக்கு மட்டும் அணை போட முடியாது.   வயதில் அறுபதாக இருந்தாலும் இருபது வயது போல்தான் இருப்பீங்க. அதாவது மனதளவில்.

ஒரு சுமாரான பிகரை பார்த்தால் கூட போதும்,  கனிய கனிய பேசுவீங்க.  கண்ணு, செல்லம், சொல்லுடா  அப்படின்னு பலபல வார்த்தைகளை போட்டு சக்கரை ஆலை முதாலாளி மாதிரி ரொம்ப அக்கறையா பேசி காதலியை சந்தோசப்படுத்துவீங்க.  

என்ன .... உங்க கூட பிறந்த தடாலடி குணம்தான் கொஞ்சம் மைனஸ்.  இருப்பினும் உங்கள் அன்புக்கு உரியவரை எப்போதும் அரவணைத்து செல்லவும் தெரியும்.  அடக்கி ஆளவும் தெரியும்.  அதனால் உங்கள் காதல் பாதையில் பூத்து குலுங்கும்  பூஞ்சோலை.


  • நீங்கள் நினைத்த எண் இரண்டாக இருந்தால் 

நீங்க சும்மாங்காட்டியும்  இருக்கும் போதே கனவு உலகில் சஞ்சரிப்பவர்.  இதுல காதலும் வந்துட்டா சொல்லவும் வேண்டுமா.  ரெக்கை முளைக்காத குறைதான். 

உன் நினைவு இல்லாத நாள் என் நினைவு நாள்.  

உன்னோடு பேச முடியாத நேரத்தில் நினைத்து கொள்வேன். நான்  பேச முடியாத ஊமை என்று. 

இப்படி குட்டி குட்டி கவிதையெல்லாம் சொல்லி,  உங்க ஆளை அசத்துவீங்க.   உன் கண்ணு இருக்கே... கெண்டை மீன்.   உன் உதடு இருக்கே உரிச்சு வைச்ச ஆரஞ்சு சுளை.....  என்கிற மாதிரி வசிய வார்த்தைகளை அள்ளி வீசி,  மேற்படி பார்ட்டியை,  ஒரு புல்லு அடிச்ச மாதிரி போதையில் தான் வசுசு இருப்பிங்க. மொத்தத்தில் பலே கில்லாடி நீங்க. 

  • நீங்க நினைத்த எண்  மூன்றாக இருந்தால்  

வாழ்க்கை வாழ்வதற்கே என்பது உங்கள் சித்தாந்தம்.  அழகை ஆராதிப்பவர்.  அழகியல் ரசனை உள்ள உங்களுக்கு அழகான பொண்ணுங்கதான் டார்கட்.  சீதைக்கு சித்தப்பா வீட்டு பொண்ணா இருந்தாலும், சிக்கிரட்டா பேசி வளைக்கிறதுல மாஸ்டர் டிகிரிதான் போங்கோ.

நளினமான வார்த்தை பிரயோகம். நீதாண்டி என் உலகம்ன்னு சொல்லாம சொல்ற,  உங்க பாசம்,  சுண்டி இழுக்கும் மேனரிசம்ன்னு உங்களை பார்த்து,  புள்ளி மான்கள் எல்லாம் துள்ளி துள்ளி ஓடிவந்து என்னை பிடிச்சுக்கோ.... புடிச்சுக்கோன்னு சொல்லும்.  

உங்க காட்டுல அடைமழைதான் போங்கோ.

  • நீங்க நினைச்ச எண் நான்காக இருந்தால் 

நீங்க எப்போதும் வாத்தியார் மாதிரி வார்த்தைகளை பிரயோகம் செய்பவர்.  நீங்க பேச்சு கலையில் வித்தகர் என்றாலும்,  ரொமான்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்.

ஒரு ஜோக் சொல்லவா.... ஒருத்தர் தன்னோட வேலை பார்க்கிறவர் கிட்டே அலுத்து கிட்டே சொன்னாராம்.  எனக்கு நேரமே சரியில்லை.  ஆபீஸ்லதான் மேனேஜருக்கும் எனக்கும் ஆகலை.  

எப்ப பார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுறார்.  விதியை நொந்து கிட்டு நேத்து என் வீட்டுக்கு போனேனா.  என் வீட்டுல  என் பொண்டாட்டி கூட சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு  இருக்கார் மேனேஜர்.

ஐயோ ........நீங்க என்ன செய்திங்க?

பாவி மனுஷன் கண்ணுல மாட்ட கூடாதுன்னு நான் ஓடி வந்துட்டேன். அப்பப்ப இந்த மாதிரி   A  ஜோக் எல்லாம் சொல்லி காதலியை கைக்குள்ள போட்டுக்கிற கலையில் நீங்க பெயில்.  ஆனா நீங்க நல்லவர்தான்.

சிலரை பார்த்த உடன் பிடிக்கும்.  சிலரை பழகிய பிறகுதான் பிடிக்கும்.  நீங்க ரெண்டாவது ரகம்.  ரொம்ப பழகினா பிடிக்கும்.  

  • நீங்க நினைத்த எண் ஐந்தாக இருந்தால் 

நீங்க யாரு?  காற்று மாதிரி கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.  காதல் விஷயத்திலும் நீங்க அப்படித்ததான்.  ரொம்ப அலட்டிக்கிறது இல்லை.

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,  பாடுற மாட்டை பாடி கறக்கணும் என்பதை தெரிந்து வைத்திருப்பவர்.  நைசா பேசுறதும், சைசா கரைட் பண்றதும் உங்களுக்கு ஒன்னும் புதுசு இல்லை.   

அதனால் உங்கள் அன்பு வளையத்துக்குள் வந்தவரை ஆராதிப்பீர்கள்.  விட்டு கொடுக்கவும் தெரியும்,  விட்டு விலகி போனா சுண்டி இழுக்கவும் தெரியும். மொத்தத்தில் நீங்க கில்லாடி.

  • நீங்க நினைத்த எண் ஆறாக இருந்தால் 

வாங்க... காதல் இளவரசரே... வணக்கம்.  ஒரு உண்மையை சொல்லுங்க.  உங்களுக்கு மட்டும் எப்படிங்க பெரிய மீனா சிக்குது.  வசிய மருந்தை எங்கே வச்சு இருக்கீங்க.

உங்க பார்முலா...  வெறும்  வாய் வார்த்தையா,  அல்லது பழகும் விதமா.  

எப்படி?  

சொல்லி வச்ச மாதிரி அத்தனை பொண்ணுங்களும் எஸ் சொல்லுது.  சரி... அதுக்காக பல இடத்தில பட்டம் பறக்க விடுறது தப்பு. 

  • நீங்க நினைத்த எண் ஏழாக இருந்தால் 

இந்ந்த விஷயத்தில் உங்களுக்கு சாமார்த்தியம் பத்தாது.  நீங்க எப்போதுமே  அவசர குடுக்கை. சிரிச்சு சிரிச்சு பேசினாலும்,  உங்க சீரீயஸ் குணம் சும்மா இருக்காது.

அதுனால என்னவோ உங்கள் காதல் மற்றும் ரொமான்ஸ் கொஞ்சம் வீக்காகவே இருக்கும்.  நீங்க என்னதான் உண்மையா இருந்தாலும் உங்களை அஜ்ஜெஸ்ட் பண்ணி போறதுலதான்  கஷ்டம்.

இருந்தாலும் நீங்க காதலை விடுவதில்லை என்பதும்,  காதல் வானில் நீங்கள் ஒரு துருவ நட்சத்திரம் என்பதும் நிஜம்.

  • நீங்க நினைத்த எண் எட்டாக இருந்தால்....

ஓகே  தான்.  ஆனா என்னதான் மூடி மறைச்சாலும் அந்த முத்திரி கொட்டை கோவம்தான் மைனஸ்.  காதலி கிட்டே கூட கடுகடுன்னு தான் இருப்பிங்க.  உங்கள் காதலுக்கு உரியவரை காதலாக பார்ப்பதும் உண்டு.

ஆரம்ப காலத்தில் விட்டு கொடுத்து போனாலும்,  வளைந்து கொடுத்து காதலை வளர்த்தாலும்,  அப்பப்போ முட்டல்,  அப்பப்போ மோதல் இருந்து கொண்டே இருக்கும்.

காதலையும்,  காதலியையும் கடைசிவரை கை விடாம பிடிச்சுகிறது கொஞ்சம் கஷ்டம்.

  • நீங்க நினைத்த எண் ஒன்பதாக இருந்தால் 

ஆல் பழுத்தால் அங்கே கிளி,  அரசு பழுத்தால் இங்கே கிளி.  அதாவது... உங்க காதல் நிலையானது இல்லை.   ஆனா நீங்க ரோமியோதான்.  கரும்பு இல்லாத மன்மதன்.  எபோதும்மே உங்கள் அன்புக்கு உரியவரை உங்க கை பிடிக்குள் வைத்து கொள்வதில் படு சமத்து.

எதாவது சண்டை வந்தால் முதல் சமாதான கொடி பிடிக்கிறது நீங்கதான். விட்டு கொடுப்பிங்க.  ஆனால் சந்துல சிந்து பாடுற குணம் தெரியாம மறைக்கிறதுல அடேங்கப்பா... அரசியல்வாதி கூட பிச்சை வாங்கணும்.

ஆனா ......ஒரு உண்மையை சொல்லணும்.  காதல் மன்னன் நீங்கதான்.

 

 


Saturday, 18 February 2012

எப்போது பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம்...! தெரியுமா?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகிறதாம்.  

அப்படியெல்லாம் இல்லை ரொக்கத்தில் நிச்சயக்கபடுகிறது என்கிறார் ஒரு கவிஞர்.

உண்மைதான்.    ஆனாலும் திருமணம் என்றவுடன் பெருசுகளின் முதல் கேள்வி என்னவாக இருக்கும்.   ஜாதக பொருத்தம் இருக்கா?  

இந்த கேள்வி நிச்சயம் வரும்.  எது எப்படியோ  நான்கு வகையான திருமணத்திருக்கு  பொருத்தம் வேண்டாம் என்கிறது சாஸ்த்திரம்.

அது என்ன?

ஓன்று கர்ப்ப நிச்சயம்.  

அதாவது.... ஒரு ஆணும் பெண்ணும் பழகுகிறார்கள்.    குண்டும் இல்லாம இல்லாம,   மருந்தும் இல்லாம வெடி சத்தம் கேட்ட மாதிரி,  பொண்ணு கர்ப்பம்ன்னு வச்சுக்கங்க.  

அது எப்படி?

அது அப்படிதான்.  

பொண்ணு கர்ப்பமா இருக்கும் போது திருமண பொருத்தம் இருக்கான்னு பார்க்க முடியுமா?  திருமணம் செய்து வை என்கிறது சாஸ்த்திரம்.

சரி ரெண்டாவது.  

குரு நிச்சயம்.   

அதாவது குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர்,  இந்த பையனை நீ திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம்.  

குருவின் வார்த்தையை தெய்வ வாக்காக எடுத்து கொண்டு திருமணம் செய்யலாம் என்கிறது சாஸ்த்திரம். 

அடுத்து என்ன?

சகுன நிச்சயம். 

நீங்கள் பொண்ணு பார்க்கவோ,  மாப்பிள்ளை பார்க்கவோ வீட்டை விட்டு கிளம்பும் போது,  ஒரு சுப சகுனம் தென்படுகிறது,  அல்லது ஒரு சுப சொல் கேட்கிறது என்று வைத்து கொள்வோம்.  அதை தெய்வ ஆசிர்வாதமாக எடுத்து கொண்டு திருமணம் செய்யலாம்.   

கடைசி என்ன?

கந்தர்வ நிச்சயம்.  

கந்தர்வ நிச்சயம் என்றால் இந்த காலத்தில் காதல் என்று அர்த்தம்.  பார்த்துடன் பல்பு எரியுதுன்னு சொல்றாங்களே அதுதான்.  

ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒத்து பழகும்போது பொருத்தம் பார்க்க வேண்டாம் என்கிறது சாஸ்த்திரம்.  கிரக பொருத்தத்தை விட மன பொருத்தமே மிக மிக முக்கியமானது ,  அதனால் தான். 

ஓகே.  திருமணம் தொடர்பா இன்னும் சில குறிப்புகள் தருகிறேன்.  

ஒரு வீட்டில்  திருமண வயதில் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.  

சரி... வயசாகிகிட்டே போகுது.  ரெண்டு பேருக்கும் திருமணம் கூடிவந்தால்  ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில்  திருமணம் செய்து வைக்கலாமா?

கூடவே கூடாது.  இருவரில் ஒருவர் வாழ்க்கை நல்லவிதமாக அமையாது.  தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள்,  அல்லது குழந்தை பிறக்காது.  

அது மட்டும் அல்ல...ஒரு வீட்டில் திருமணத்திருக்கு என்று பல பிள்ளைகள் வயது வந்து இருந்தாலும்,  ஒரு திருமணம் முடிந்து,  மறு  திருமணம் செய்ய குறைந்தது ஆறு மாதமாவது இடைவெளி வேண்டும்.

அது தான் சாஸ்த்திர சம்மதம்.

இன்னொரு விஷயம் இருக்கு.  உங்க பொண்ணுக்கோ,  அல்லது தங்கச்சிக்கோ, அல்லது   அக்காவுக்கோ திருமணம் செய்கிறீர்களா... அப்படியானால் திருவாதிரை நச்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் திருமணம் செய்து கொடுங்கள்.    

புகுந்த விட்டிருக்கு போகிற பொண்ணு  புருஷனோட சந்தோசமா குடும்பம் நடத்தும்.  சரியா?  

Friday, 17 February 2012

அமெரிக்கவிற்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு.

நான்தான் நாட்டாமை.

இந்த நாட்டாமை தீர்ப்பை நடைமுறைபடுத்து என்று உலக நாடுகளை மிரட்டிகொண்டிருக்கும் அமெரிக்கா, கடந்த வருடத்தில் ஒரு நாள் உட்காரும் இடத்தில் முள் தைத்த மாதிரி உலாத்தி கொண்டிருந்தது.

அதிலும் அறிவியலில் பல அற்புதங்களை நிகழ்த்தும் நாசாவுக்கும், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கும் இரவு தூக்கமே இல்லாமல் போய்விட்டது. 

சரி அப்படி என்னதான் நடந்து?

சொல்றேன்.  

உலக நாடுகளை எல்லாம் உளவு பார்ப்பதற்கென்றே வருடம் தோறும் பல ஆயிரம் கோடியை செலவு செய்கிறது அமெரிக்கா.  அதன்படி உளவு ராக்கெட்டுகள் விண்ணில் உலா வருகிறது.

உலக நாடுகளில் எங்காவது குப்பையை கொளுத்திவிட்டு கூடுதலான புகை வந்தால் கூட,  எதாவது அணுகுண்டு சோதனையா என்று அலர்ட் ஆகி கண்காணிக்கும் அமெரிக்கா,  இந்தியாவை கண்காணிக்க என்றே பல ராக்கெட்டுகளை வைத்திருகிறது.

அதில் ஒன்றுதான் தமிழகத்தின் தென் மூளையில் உள்ள திருநல்லாரை கடக்கும் போது,  திடீரென கண்காணிப்பு திரையில் காணாமல் போனது. 

மூன்றே வினாடியில் நிலைமை சரியானாலும்,  இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று ஆராய தான்,   நாசா விஞ்ஞானிகளுக்கு  இரவு தூக்கம் இல்லாமல் போனது.

இப்போதும்.  எப்போதும் இந்தியா மீது பாசம் பொழிவது போல் பாசாங்கு செய்தாலும்,  இந்தியாவின் வளர்ச்சி என்பது அமெரிக்காவிற்கு பெரிய தலை வலி. 

அதோடு இந்திய விஞ்ஞானிகள் என்றால் இஞ்சியை கடித்த மாதிரி முகம் சுளிக்கும் அமெரிக்கா. 

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.   வசதி குறைந்த நாட்டில் இருந்து வளர்ந்த அமெரிக்காவிற்கே சவால் விடும் சமாசாரங்கள் பல.

வாஜ்பாய் காலத்தில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது உங்களுக்கு  தெரியும்.  

பார்க்கிற நபரை எல்லாம் அக்ஹுச்ட்டாக பார்க்கும் போலிஸ்காரர் மாதிரி,  இந்தியாவின் அறிவியல் சோதனைகளையெல்லாம் கண்காணிக்கும் அமெரிக்கா,   கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.   இந்திய விஞ்ஞானிகள் தங்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காரியத்தை சாதிப்பார்கள் என்று.

அமெரிக்காவின் உளவு ராக்கெட் எப்போது போக்ரானை நோக்கி திரும்பும், என்பதை வினாடி துல்லியமாக கணித்து,  அந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அணுகுண்டு சோதனைக்கான ஆயத்த பணிகளை செய்து முடித்து வெற்றி கரமாக வெடித்து காட்டினார்கள்.  

எல்லாம் தெரிந்த அமெரிக்காவே ஏமாந்து போனது.  அந்த அனுபவம் தான் தங்கள் நாட்டு ராக்கெட் காணாமல் போனதும்,  இந்திய விஞ்ஞானிகள் எதுவும்  உள்ளடி வேலை செய்து விட்டார்களோ என்று தான் சந்தேகம்.

ஆனால் நடந்தது என்ன?

சனி கிரகத்தில் இருந்து வரும் கதிர் அலைகள் திருநள்ளாரில் தான் மொத்தமாக குவிகிறது.   அந்த கதிர் அலைக்குள் வந்துவிட்ட ராக்கெட் மூன்று வினாடிகள் செயல் இழந்து போய் விட்டது. 

அதன் பிறகுதான் அது செயல் படவே துவங்கியது.  இந்த உண்மையை தாமதமாக உணர்ந்து கொண்ட அமெரிக்கா,  இந்தியர்களின் அறிவு திறமையை  மீண்டும் ஒரு முறை தெரிந்து கொண்டது.

உலகமே எங்கள் கையில் என்று நினைக்கும் நாசா விஞ்ஞானிகளுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறும்,  அங்கு அருள் பாலிக்கும் சனி பகவானும் தான் அமெரிக்காவையே அதிர வைத்த விஷயங்கள்.  

  

Thursday, 16 February 2012

மூடு விழாவை நோக்கி போகிறது பேஸ்புக். FACE BOOK WILL END

உலகம்முழுவதும் உள்ள ஆண் பெண் இருபாலாரையும் நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்த உன்னத சாதனம் பேஸ்புக். 

இந்த பேஸ்புக் தன் வாழ்நாளின் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருகிறது என்பது தெரியுமா?  ஆம் மூடுவிழாவை நோக்கி போய் கொண்டிருக்கிறது பேஸ்புக்.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?  என்ன செய்ய?  அது தான் உண்மை.   
இந்த மூடு விழாவிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
பேஸ்புக் வழியாக நடைபெறும் பயங்கரவாத பிரச்சாரங்கள்.
மத துவேஷ பேச்சுக்கள். 
மொழி இன பாகுபாடு பரப்புரைகள்.
தனி மனிதனை அல்லது ஒரு நாட்டை பற்றி கிளப்பிவிடப்படும் அவதூறு செய்திகள்.
பெரும் தலைவர்களை பற்றிய கிண்டல்கள். கேலிகள்.
இதை விட முக்கியமாக,  ஆபாச புகை படங்கள், விடியோக்கள்,   நண்பர்கள் என்ற போர்வையில் அனுப்பி வைப்பது.   
தன்னை நண்பராக நினைக்கும் ஒருவருக்கு,  அவர் யார், எப்படி பட்டவர், என்ன குணம் என்று கூட தெரியாமல்,  இன்னும் சொல்ல போனால் அவர் அனுமதி இல்லாமல்,  ஆபாச விடியோக்கள் அனுப்புவதும்,  புகை படங்கள் அனுப்புவதும் எவ்வளவு கேவலமான செயல்.  சட்ட விரோதம். 
ஆனால் இதையே ஒரு பொழுபோக்காக கொண்டு உலகம் முழுவதும் உலா வரும் நபர்களால் பலருக்கு தலை வலி.
இது தொடர்பாக புகார்கள் மட்டும் பேஸ்புக் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் குவிகிறதாம்.   
அதனால் உலகம் முழுவதும் அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளான பேஸ்புக் நிறுவனம், இந்த கடினமான முடிவை எடுத்து இருக்கிறது.
பேஸ்புக் நிர்வாகத்தின் உயர் அதிகாரியும்,  முதன்மை தலைவரும்மான CA-மார்க் ஜுக்கர்பெர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும்....
பேஸ்புக் நாங்கள் எதிர் பார்த்ததைவிட வேகமாக வளர்ந்தது.  ஆனால் கட்டு பாட்டை இழந்து விட்டது. அடுத்த மாதம் 15 தேதியோடு ( அதாவது மார்ச் 15 ) ம் தேதியோடு உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுத்த படுகிறது. 
இந்த பேஸ்புக் என் நிம்மதியை கெடுத்து விட்டது.  இதை மூட போகிறோம் என்று சொன்னதும் கோடி கணக்கான மக்கள் பாராட்டுகிறார்கள் என்றார்.
பேஸ்புக் கார்ப்பரேஷன் பயனர் 2012, மார்ச் 15 முன்பு இணையதளத்தில் உள்ள தங்களின்  தனிப்பட்ட தகவல்களை அனைத்தையும்  நீக்க சொல்கிறது . 
 ஒரு வேலை நீங்கள் அழிக்க தவறினால் அந்த தேதிக்கு பிறகு, அனைத்து புகைப்படங்கள், குறிப்புகள், இணைப்புகள், மற்றும் வீடியோக்கள் நிரந்தரமாக அழிந்துவிடும்.  
இது ஒன்றும் உங்களை பீதியில் ஆழ்த்த கிளப்பிவிடப்பட்ட செய்தி அல்ல.  உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் google க்கு போய் WHEN WILL CLOSE FACE BOOK ன்னு டைப் செய்து பாருங்கள்.  உண்மை தெரியும்.

Wednesday, 15 February 2012

ஆடை இல்லாமல் காட்டும் ஐ- போன். அதிர்ச்சி ரிப்போர்ட்

வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் ஒரு வரபிரசாதம்  என்றால், அதற்கு பின்னால் தொல்லைகளும் தொடராமல் இல்லை. 

இப்போது நான் சொல்லபோகும் செய்தி ஆனந்த படுகிற செய்தி அல்ல. அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்தி.  உடனே தடுக்க பட வேண்டிய விஷயம்.

இப்போது சந்தைக்கு வரும் செல்போன்கள் நவீன  தொழில் நுட்பத்தோடு வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்.  ஆனால் அதில் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது தொழில் நுட்பம்.  

புரியலையா?

பூவேபூச்சுடவா படம் பார்த்து இருக்கிங்களா....  அதுல நதியா ஒரு காமடி பண்ணுவாங்க.  ஒரு கண்ணாடியை போட்டு கிட்டா,  உடம்புல இருக்கிற ட்ரெஸ் எதுவம் தெரியாது.  உடம்பு அப்படியே தெரியும்னு பொய் சொல்வாங்க. அது கற்பனையில் உருவான சினிமா வசனம்.

அது இப்போ உண்மை ஆகிவிட்டது.

இப்போது புதிதாக வந்திருக்கும்  ஐ-போனில் ஒரு மென் பொருளை இணைத்து விட்டால் போதும்,  ஆடையே இல்லாமல் அம்மணமாக பார்க்கலாம்.

இது ஆண் பெண் இருபாலாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம்தான்.
இளைய தலைமுறையை சேர்ந்த ஒரு பகுதியினர் அடடா.... அப்படியா என்று வரவேற்கலாம்.  ஆனால் அதே தொழில் நுட்பத்தால் தன் குடும்ப பெண்களும் பாதிக்க படும்போது தான் உண்மையை உணர்வார்கள்.

அந்த ஐ-போனில் எடுக்க பட்ட படத்தை இனைகலாம் என்றால்,  பாவம் பாதிக்க பட்டவர்கள்.  எதற்கு அவர்களை அசிங்க படுத்த வேண்டும் என்ற காரணத்தால்  அதை தவிர்த்து விட்டேன்.

இது சாதாரண ஐ-போனில் இந்த நுட்பம் இல்லை என்றாலும்,  அது தனி மென் பொருள் எனவும்,  அதற்கு விலை அதிகம் என்றும் சொல்லபடுகிறது.  எப்படி இருந்தாலும் இது வரவேற்க பட வேண்டிய விஷயம் இல்லை.


உடன் தடுக்க பட வேண்டிய ஓன்று.  சமுக நலனில் அக்கறை உள்ளோர் இதில் தலை இட்டு முடிவுகாண வேண்டும்.  U TUB  இல் இந்த படம் தொடர்பான விடியோ படம் இருக்கிறது.  வேண்டுமானால் பார்த்து கொள்ளுங்கள்.


கிருஷ்ணரின் சிந்திக்க சில நிமிடம்... தன்னம்பிக்கை கட்டுரை.

சாதனையாளர்கள் பிறக்கிறார்களா உருவாகிறார்களா?

முட்டையில் இருந்து கோழி வந்ததா?  கோழியில் இருந்து முட்டை வந்ததா? இந்த கேள்விக்கான விடையை கண்டு பிடித்து விட்டால், உண்மை தெரிந்து விடும்.

சரி.... சாதனை என்பது என்ன?

இந்த பூமி பந்து உருவாக 250 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.  இது அறிவியல் கணக்கு.  இந்த பூமியில் எத்தனையோ உயிரினங்கள் தோன்றி மறைந்து விட்டன.

எத்தனையோ ஆயிரம்  கோடி மக்கள் பிறந்து , வாழ்ந்து,  இதே மண்ணில் மறைந்தும் போயிருக்கிறார்கள்.  ஆனால் வரலாற்று கணக்கில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்?

சில ஆயிரங்கள் மட்டுமே.... ஏன்?

கணக்கில் இருப்பவர்கள் சாதனையாளர்கள்.

சாதனை என்பது என்ன?

சாதனை என்பதே... தன்னை உணர்ந்தவன்,  தனக்கு பிறகு தன வழியை பின்பற்ற தூண்டுகோலாய் இருப்பவன், மற்றவர்கள் பயன் பெரும் வகையில் செயற்கரிய செயல்களை செய்பவன், வாழ்நாள் சாதனையாளன் என்று வரலாறு சொல்கிறது.  போகட்டும்.

தம்பி..வா....உன்னிடம் இருப்பது என்ன?

ஒரு வீடு வச்சு இருக்கேன்.  கார் வச்சு இருக்கேன்,  100 பவுன் நகை வச்சு இருக்கேன்,  வங்கி கணக்கில் அஞ்சு லட்சம் பணம் இருக்கு.  அப்பறம் என்ன ரெண்டு குழந்தை செல்வங்கள் இருக்கு.  ஆசையா கட்டின மனைவி இருக்கா.

இதுதான் உன் பதிலா....இப்படித்தான் பதில் சொல்ல போகிறாயா?  அப்படியானால்  இது ஒரு மாயை.  எல்லாம் மாயை.  இது எதுவும் உன்னிடம் நிரந்தரமாக தங்கும் என்பதற்கு,  எந்த உத்திரவாதமும் இல்லை.

கால சூழலில் நீ வீட்டை இழக்க நேரலாம்.  காரை விற்க  நேரலாம். அவ்வளவு ஏன்?  உன் மனைவி கூட உன்னை விட்டு பிரிந்து போகலாம்.  பெற்று வளர்த்து பேணி காத்த பிள்ளைகள் கூட,  ஒரு நாள் உன்னை நிர்கதியாய் விட்டு விட்டு போய் விடலாம். அதானால் இதெல்லாம் நிரந்திரம் இல்லை.  நான் கேட்பதே வேறு.

உன்னை உனக்கு தெரியுமா?  உன்னுள் ஒளிந்து கிடக்கும்  ஆக்கும் சக்தியை அறிந்து கொண்டாயா?  வாழ்நாள் சாதனையாளராக வரலாற்று பக்கங்களுக்கு வர என்ன செய்ய போகிறாய்.

அதற்கு உன்னிடம்  இருக்கும் கை இருப்பு என்ன.  அதை தெரிந்து கொண்டாயா?

குமாஸ்த்தாவாக வாழ்கையை துவக்கிய பெர்னாட்ஷா உலகம் போற்றும் தத்துவ ஞானியாக மாறினாரே எப்படி?

கண்டக்டராக வாழ்கையை துவக்கிய ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மிளிர்கிறாரே  எங்ஙனம்?

குடும்ப தொழிலே வியாபாரம்தான்.  இருந்தும் அதை உதறிவிட்டு அரசியலில் குதித்தாரே கென்னடி எதற்காக?

மளிகை கடையில் எடுபிடியாக வாழ்க்கையை துவக்கிய சரவணபவன் அண்ணாச்சி,  இன்று ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கிறாரே எப்படி?

கிராமத்தில் பிறந்த இளையராஜா உலகமே பாராட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறாரே எங்ஙனம்?

தன்னை உணர்ந்து கொண்டதால்.ஒரு சென் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குருவும் சீடனும் காட்டு வழியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில் ஒரு காட்சி கண்ணில் பட்டது.   ஒரு முயலை நரி ஓன்று துரத்தி கொண்டிருந்தது.

இதை கவனித்த குரு,  சீடனிடம் கேட்டார்.  கவனித்தாயா?

ஆமாம் குருவே.

என்ன பார்த்தாய்?

ஒரு முயலை நரிஓன்று துரத்தி செல்கிறது.

சரி... என்ன நடக்கும்?

குரு இந்த கேள்வியை கேட்டதும் சிஷ்யனுக்கு சிரிப்பு வருகிறது.  என்ன குருவே....  முயலை எப்படியும் நரி பிடித்து விடும்.

எதை வைத்து இப்படி சொல்கிறாய்?

முயல் வேகமாக ஒடகூடியதுதான். இருந்தாலும் அதை விட வேகமாக ஒடக்கூடியது  நரி.   அதனால் முயல் நரியிடம் சிக்கி கொள்வது இயல்பு.

அப்படி நடக்காது என்று நான் சொல்கிறேன்.

குரு இப்படி சொன்னதும் சீடனின் சிந்தனை வேறு விதமாக சென்றது.  இவ்வளவு புத்திசாலியான குரு,  சில சமயம் முட்டாள் தனமாக சிந்திக்கிறாரே... முயலை விட நரி வலிமையான மிருகம் என்பது புரியாமல் இருக்கிறாரே என்று நினைக்கிறான்.

அப்போது குருவே கேட்கிறார்.  நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்கு தெரியும்.   உன்னை பொறுத்தவரை முயல் நரியை பிடித்துவிடும்.  அதானே?

ஆம் குருவே.

இங்குதான் தவறு செய்கிறாய்.  இரண்டும் ஓடுகிறது.   நரி எதற்கு ஓடுகிறது?

இரையை பிடிப்பற்தாக.

முயல் எதற்கு ஓடுகிறது?

உயிரை காப்பாற்றி கொள்வர்தற்காக.

இப்போது எது முக்கியம்.   உயிரா.... உணவா?

நரிக்கு உணவு முக்கியம்.  முயலுக்கு உயிர் முக்கியம்.

நான் ஒத்து கொள்கிறேன்.  ஆனால் முயலை விட நரி வேகமாக ஓடுமே.   நான் சொல்கிறேன்....நரியிடம் சிக்காமல் முயல் தப்பிவிடும்.  கவனி.

குரு சொன்ன மாதிரி முயல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து நரியிடம் இருந்து தப்பி ஒரு புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.  இந்த கதை எதற்கு தெரியுமா?

வாழ துடித்த முயல் மாதிரி... நீயும் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான்.

வலிமையான எதிரி என்று முயல் நினைத்திருந்தால் நரியிடம் சிக்கி இருக்கும்.  ஆனால் அதன் தைரியம்,  தப்பி விடலாம் என்ற தன்னம்பிக்கை,  சிக்கி விட கூடாது என்கிற விடாமுயற்சி, இது இதுதான் உனக்கு வேண்டும்.

உனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றலை கண்டுபிடி.  நான் சாதிக்க பிறந்தவன்,  சாதனையாளன் என்பதை நிருபி.

நம்மில் பலர் இறந்த காலத்திலேயே வாழ்கிறார்கள்.  நான் அப்படி இருந்தேன்,  இப்படி இருந்தேன் என்று பழம்கதை பேசியே காலத்தை வீணடிப்பார்கள்.  சிலர் எதிர்காலத்தை நினைத்தே காலத்தை போக்குவார்கள்.

எதிர் கால கனவு தேவைதான்.  எதிர்காலத்திற்காக,  நிகழ்காலத்தில் என்ன செய்து இருக்கிறாய் இதுதான் உன் முன் உள்ள கேள்வி.

படிப்பறிவே இல்லாத காமராஜர் ஏர் ஓட்ட போகவில்லை.  தன்னை உணர்ந்தார்.   முதலமைச்சர் நாற்காலி அவருக்கு காத்திருந்து.

முதலில் உன்னை சோதனை செய்.  உன்னிடம் இருக்கும் திறைமையை கண்டுபிடி.  வாழ்நாள் சாதனையாளராக மாறு.  வரலாறு உன்னையும் பதிவு செய்து கொள்ளட்டும்.