சிம்பிளா கேட்கிறேன். 24157817 பிபனொச்சி நம்பரா?
ஆமாம்.. 22 ஆவது பிபனொச்சி நம்பர். பை தி வே... அது மந்தை வெளி சுப்பிரமணித்தோட போன் நம்பர்.
என்றன் படத்தில் நாம் கேட்ட வசனம்தான் இது. இதை பார்த்த போதே அது என்ன பிபனொச்சி என்று நீங்கள் சிந்த்தித்ததுண்டா... வாங்க நீங்கதான் நம்ம ஆளு.
உலகின் அடிப்படையே இந்த பிபனொச்சி நம்பர்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய கணக்கு நிபுணரான லியோனார்டோ பிபநோச்சி என்பவர் வகுத்த எண் வரிசைதான் இந்த பிபனொச்சி எண்கள்.
பூஜ்யத்தில் தொடங்கி 0,1,1,2,3,5,8,13,21,34,55,89,144 என்று செல்கிறது அந்த வரிசை.
உலகின் அடிப்படையே இந்த பிபனொச்சி நம்பர்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய கணக்கு நிபுணரான லியோனார்டோ பிபநோச்சி என்பவர் வகுத்த எண் வரிசைதான் இந்த பிபனொச்சி எண்கள்.
பூஜ்யத்தில் தொடங்கி 0,1,1,2,3,5,8,13,21,34,55,89,144 என்று செல்கிறது அந்த வரிசை.
இந்த வரிசையை உற்று கவனித்தாலே ஓன்று தெரிந்து விடும். ஒரு எண் தனக்கு முன் உள்ள எண்னோடு கூட்டப்பட்டு அந்த கூட்டுத்தொகையே அடுத்த எண்ணாக இந்த வரிசையில் அமர்கிறது.
சரி இந்த எண்ணில் என்ன விசேஷம்.
உங்கள் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் எத்தனை கிளைகள் இருக்கிறது என்று எண்ணி பாருங்கள். அல்லது ஒரு அன்னாசி பழத்தில் உள்ள முள் முனைகளை எண்ணி பாருங்கள்.
அதில் வரும் கூட்டுத்தொகை பிபனொச்சி வரிசை எண்ணில் ஒன்றாக இருக்காலாம் என்று பல காலமாக சொல்லி வந்திருக்கிறார்கள் கணித நிபுணர்கள்.
இந்த கூற்றை விஞ்ஞானிகள் உதாசீனப்படுத்தியே வந்தனர். ஆனால் இன்று பல மேதைகள், விஞ்ஞானிகள் இந்த பிபனொச்சி எங்களை நுட்பமாக ஆராய தொடங்கி இருக்கிறார்கள்.
அண்டத்தின் இயக்கத்துக்கும், இந்த எண்களுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை இந்த்தனை நூற்றாண்டுகளுக்கு பின் இப்போது ஏற்பட்டுள்ளது.
இந்த பிபனொச்சி எண்கள் புகாத அம்சமே உலகில் இல்லை. உலக இலக்கியங்கள் உள்ள யாப்பு முறை கூட இந்த ஏன் வரிசையை அடிப்படையாக கொண்டிருப்பதை கணக்க்கிட்டுருக்கிறார்கள் நிபுணர்கள்.
அது மட்டும் அல்ல, பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்த போது அடிக்கடி பிபனொச்சி எண் வரிசையின் அடிப்படையில் இவை நடைபெறுவது தெரிந்தது.
குதிரை பந்தயத்தில் கூட ஜெயிக்கும் குதிரைகளின் எங்களை வரிசை படுத்திய போது, அது பிபனொச்சி எண் வரிசைப்படி அமைந்திருந்ததாம்.
விண்வெளியில் உள்ள நட்சத்திர கூட்டங்களின் எண்ணிக்கை கூட இந்த வரிசை எங்களில் ஒன்றாக இருக்கிறதாம்.
இதனால் தான் இந்த எண் வரிசைக்கும் அண்டங்கள் உருவாக்கத்திற்கும் ஏதோ அபூர்வ தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒரு வேளை ஆண்டவன் போடுவது இந்த கணக்குத்தானோ.
நன்றி மக்கள் ஓசை.
No comments:
Post a Comment