ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் கடந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு பேரறிவாளன் மனு செய்திருந்தார்.
ஆனால் 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தனது கருணை மனு நிராகரிப்பட்டதன் காரணங்கள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார் பேரறிவாளன்.
தண்டனை தொடர்பான விஷயம் அரசின் ரகசியம் சம்பந்தப்பட்டது என்பதால், கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை,மனுதாரருக்கு அளிக்க முடியாது என குடியரசு தலைவர் மாளிகை மறுப்புத் தெரிவித்தது.
ஆனால், ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அரசு ரகசியம் என்று மறுக்க முடியாது, அதனால் இதற்க்கு விளக்கமளிக்கக் கோரி மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்திருந்தார் பேரறிவாளன்.
தாக்கல் செய்யப்பட்ட, மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய தகவல் ஆணையம் இன்று விசாரணை நடத்துவதாக இருந்தது.
அதாவது வேலூர் மத்திய சிறையில் இருக்கும் பேரறிவாளனுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையர் விசாரணை நடத்துவதாக இருந்தார்.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விசாரணை ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment