Follow by Email

Wednesday, 31 October 2012

படித்ததில் பிடித்தது


ஒரு முறை சர் தாமஸ் லிப்டன் தம்முடைய கடையின் பல்வேறு பிரிவுகளை பார்வை இட்டுக்கொண்டே வந்தார். 

அவர் யார் என்பதை அறியாத புதிய விர்ப்பனையாளன் ஒருவன், அவர் எந்த பொருளும் வாங்காமல் போவதை பார்த்து, அவரிடம் போய் எங்கள் கம்பெனி தயாரிப்பில் உருவான லிப்டன் வெண்ணையை பற்றி தெரியுமா என்று கேட்டான். 

அவன் மேலும் அதை வாங்கி உபோகித்து பார்க்கும் படியும் சிபாரிசு செய்ய ஆரம்பித்து விட்டான். அதற்கு அவர் தமக்கு இப்போது அது தேவையில்லை என்றும், நான் கடையில் என்ன இருக்கிறது என்று பார்க்க மட்டுமே வந்தேன் என்றார்.

இருந்தும் விடவில்லை அவன். அவரை நச்சரித்து வெண்ணையை வாங்க வைத்து விட்டான். 

சில நாள் கழித்து அந்த விர்ப்பனையாலனுக்கு உயர் பதவி கிடைத்தது. 

குறி?இயற்கையை நேசிப்போம் என்ற ஒரு வரி செய்தியை ஓங்கி  ஒலிக்க வருகிறது குறி என்னும் மலேசிய தமிழ் திரைப்படம். மலேசிய காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகளை பற்றி ஆராய, கல்லூரிமாணவர்கள் காட்டுக்குள் நுழைய, குடி கூத்து என்று வனப்பகுதியில் களைகட்டுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காட்டுவாசி சிறுவர்கள், கல்லுரி மாணவர்களை கடத்த, எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது தான் குறி திரைப்படத்தின் கதை.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் இயக்குனர் தமிழக மக்களுக்கு முன்பே அறிமுகமாணவர்.

 திரு காமராஜ். பொய்கை தொலைகாட்சிக்காக நல்ல நேரம் என்ற தொடரை இயக்கியவர். அந்த படத்தில் இருந்து சில போட்டோக்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

பிரமீடுகளின் பிரபஞ்ச ரகசியங்கள்!


பிரமீடு என்ற சொல், எகிப்த்து நாட்டில் முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடங்களை குறிப்பதாகும். 

எகிப்த்து நாட்டில் நைல் நதிக்கரையில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே, அக்காலத்தில் வாழ்ந்த அரசர்களின் கல்லறைதான் இந்த பிரமீடு என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். 

ஆனால் பெரு நாட்டினரும், அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பிரமீடுகள் அக்காலத்தில் கோவில்களாக பயன்பட்டன என்கிறார்கள்.

தற்போதைய பிரமீடுஇயல் நிபுணர்களோ, பிரமீடுகள் ஒலி அலைகளை ஏற்ப்படுத்துகின்றன என்றும், பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்குகள் என்றும் கூறி வருகின்றனர்.


இந்த பிரமீடுகள் கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டபட்டிருக்க வேண்டும் என தற்கால கட்டிடகலை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

1798 இல் நெப்போலியன் எகிப்ப்த்தை வென்றார். அவர் கிரேட் பிரமீடை பார்வையிட சென்றபோது அரசரின் அறைக்குள் கொஞ்சநேரம் தனியாக விடும்படி மற்றவர்களிடம் சொல்லி விட்டார்.

அவர் வெளியில் வரும்போது முகம் வெளிறி மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.

அவருடைய உதவியாளர் விசித்திரமாக எதையும் கண்டீர்களா என்று கேட்டார்.

அதற்கு நெப்போலியன் நான் எதையும் சொல்வதற்கில்லை. அந்த அனுபவத்தை மீண்டும் விவரிக்க விருப்பம் இல்லை என்று மிருதுவான குரலில் பதிலளித்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சக்ரவர்த்தியான போதும், பிரமீடு சம்பவம் பற்றி பேசவில்லை. தன் விதி பற்றிய முன் எச்சரிக்கையை பெற்றதாக மட்டும் குறுப்பிட்டார்.

அப்படியானால் நெப்போலியன் உள்ளே சென்றபோது அவர் எங்கே? எப்போது? எப்படி மரணமடைவார் என்பதையும். அவருடைய வெற்றிகளை பற்றியும். அவருடைய அந்தரங்க வாழ்க்கையை பற்றியும்  அவருக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது என்பது புலனாகிறது.

ஆம் பிரமீடு என்பது உலக சஞ்சாரத்தில் இருக்கக்கூடிய பிரபஞ்ச சக்திகளை தன்னுள்ளே ஆகர்ஷ்சனம் செய்து, அந்த சக்தியை கொண்டு எதிர்கால விஷயங்களையும், நிகழ்கால விஷயங்களையும் ஒரு குறுப்பிட்ட அதிர்வலைகள் மூலம் உணர்த்தும் சக்தி மிக்க இடம் என்பது உண்மையாகிறது.

அன்பு வேண்டுகோள்!அன்பு அனபர்களே வணக்கம்.

கடந்த டிசம்பர் 15 ம் தேதி பெரிய லட்சியம்  , குறிக்கோள் எதுவும் இல்லாமல், வெறும் பொழுபோக்கிற்காக ஆரம்பிக்க பட்டது இந்த பிளாக்.

ஆனால் அதன் பிறகு மிக கவனமாக நல்ல செய்திகளை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.

முதல் நான்கு மாதங்கள் தினம்தோறும் 25 பார்வையாளர்கள் வருவதே பெரிசு. அதன் பிறகுதான் உண்மையில் பிளாக் சூடுபிடிக்க தொடங்கியது.

இப்போது தினம் தோறும் 500 முதல் 750  பேர் வந்து போகிறார்கள். இது இன்னும் பெருகி தினம் தோறும் 5000 பேர் வரும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது ஆசை, விருப்பம், லச்சியம்.

கடவுள் ஆசியால் இது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த வளர்ச்சிக்கு தினமணி வலைப்பூ தான் முதல் காரணம். அதற்கு அடுத்தபடியாகத்தான் வருபவர்களுக்கு பிடித்த செய்திகள் இருந்தால் மீண்டும் வருவார்கள் என்பதால் நானும் அதிக முயற்ச்சி எடுத்து எழுதி வருகிறேன்.

இந்த பிளாக்கில் நான் மட்டும் எழுதவில்லை. என்னோடு இணைந்து பல நல்ல கட்டுரைகளை எழுதி வரும் என் அன்பு  சகோதரி சுந்தரிஸ்ரீ க்கு நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது நண்பர் மதிவாணன் எழுதுவார். அவருக்கும் நன்றி.

நிற்க.

வரும் டிசம்பர் 15 வந்தால் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது  ஜோதிடசுடரொளி.

இதன் உறுப்பினர்கள் என்று பார்த்தால் 88 பேர்கள்தான் இருக்கிறார்கள். அதை அதிகபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்போது இதை எழுதுகிறேன்.

நண்பர்களே உங்களுக்கு இந்த தளம் பிடித்திருந்தால் நீங்களும் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள். join this site என்பதை கிளிக் செய்து உங்கள் மெயில் முகவரியை கொடுத்து உறுப்பினார்க சேர்ந்து கொள்ளுங்கள்.

நான் போஸ்ட் செய்யும் கட்டுரைகள் உங்கள் மெயில் முகவரிக்கே வந்து விடும்.

மீதம் இருக்கும் நாட்களுக்குள் அதாவது ஒரு வருட நிறைவில் 365 நிரந்திர உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்பது என் ஆசை. நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நன்றி..

என்ன செய்யப் போறீங்க? ஒ ... join this site என்பதை கிளிக் செய்து உறுப்பினராக போறிங்களா  ஓகே  .... ஓகே

அழகு குறிப்பு!கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் நீங்க வேண்டுமா? பறங்கி பழத்தை சிலைஷ்கலாக வெட்டி கண்ணை மூடிக்கொண்டு கண்ணில் வைத்தது பாருங்கள். கருவளையம் மறையும்.

வேகவைத்து குழைத்த வாழைபழத்தில் ஒரு தேக்கரண்டி பசும்பால் கலந்து அக்கலவையை முகத்திற்கு தடவிவர முகம் பளிச்சென்று பொலிவுடன் தோன்றும்.

இளமையான முகத்தோற்றத்திற்கு பப்பாளி பழத்தின் சதைப்பகுதியை பிசைந்து முகத்திற்கு தடவி வாருங்கள். 

அல்லது ஆரஞ்சு பழ சாரை முகத்திற்கு தடவி வாருங்கள். முகம் பிரகாசிக்கும். 

கடலைமாவுடன் தயிர்கலந்து முகத்தில்  கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசிக்கொண்டு உலர விட வேண்டும்.

இக்கலவை காய்ந்து கெட்டியானவுடன் நுனி விரலால் மெதுவாக சுரண்டி  எடுத்து விட வேண்டும். இது முக சுருக்கத்தை நீக்குகிறது. 

இதை படிங்க முதலில்

வேலைகளை உடனுக்குடன் ஆற்றுவதும், சந்திப்புக்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதும்  பண்பாட்டின் சிகரங்களாகும். சந்திப்பை குறித்த நேரத்தில் நிறைவேற்றாதவன் ஒரு பொய்யன். பிறரின் நேரத்தை கொள்ளை அடிக்கும் கள்வன் என்பதில் என்ன ஐயம். உலகம் அவனை அவ்விதமே கருதுகிறது என்கிறார் அப்துர் ஹரிம். 

நேரத்தை பற்றிய சில சிந்தனைகள் கீழே.

Tuesday, 30 October 2012

ஜாதிகள் வந்தது எப்படி?


ஒரு உண்மை சம்பவம். 

கார்த்திகை மாதம் மாலை அணிந்து 
நேர்த்தியாகவே விரதம் இருந்து 
பார்த்தசாரதி மைந்தனே 
உனை பார்க்கவேண்டியே தவமிருந்து 

- என்று பக்தி பரவசத்தில் தன்னை மறந்து பாட்டு பாடியபடி காட்டு வழி பாதையில் நடக்கிறது ஒரு ஐயப்ப பக்தர் கூட்டம். 

அதில் ஒரு பக்தர் தன தூக்கு பையில் இருந்து குளிர் பானத்தை எடுத்து குடிக்கிறார். அருகில் இருந்த ஐயப்ப பக்தருக்கும் அதேபோல தாகம். 

சுவாமி..எனக்கும் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் கொடுங்களேன் என்று வாய் விட்டே கேட்டுவிட்டார். 

அப்போது முதல் சாமிக்கு முகம் மாறிவிட்டது. சேரியில் பிறந்த உன்னை சேர்த்து அழைச்சுகிட்டு வந்ததே பெரிசு. 

இதில் சாப்பிடும் பொருளையும் உனக்கு கொடுக்க வேண்டுமா? இப்படித்தான்  அவர் என்ன ஓட்டமும் இருந்தது.

அவர் சொன்னார்..... உங்களுக்கு வேன்னும்னா வாங்கிகிட்டு வந்திருக்கணும் என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விட்டு நடந்தார்.

கொஞ்ச தூரம் போனதும் குளிர்பானம் தரமறுத்த சுவாமிக்கு திடீர் வயிற்று வலி.

தலைமை ஏற்று சென்ற குருசாமியை அணுகி, சுவாமி...வயிற்றை கலக்குது. நான் ஓரமாய் ஒதுங்கனும் என்றார்.

சுவாமி... இது காட்டுவழிப்பதை.  கைகால் அலச தண்ணீர் இருக்காது. இன்னும் கொஞ்சதூரம் போனால் அருவிகள் இருக்கு. அங்கே ஒதுங்கலாம் என்றார் குருசாமி.


ஐயோ.. என் நிலைமை தெரியாமல் பேசுறீங்க என்றவர் குருசாமியின் பதிலுக்கு கூட காத்திராமல் காட்டுக்குள் ஒதுங்கினார்.

கடைசியில் என்னவாயிற்று தெரியுமா?

தாகம் என்று கேட்டவருக்கு தர மறுத்த குளிர்பானத்தால் கால் கழுவ வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.

இது ஐயப்ப மகிமைதான்.இதில் சந்தேகமில்லை.

இதில் உணர்த்தப்பட்டது என்ன?

உணர்ந்து கொண்டது என்ன? என்பதுதான் கேள்வி.உண்மையான தெய்வதத்துவத்தை உணர்ந்தவர்கள் ஜாதிபாகுபாடுகள் பார்ப்பதில்லை.


தனக்கு முன்னால் வணங்கி நிற்பவன் எந்த குலத்தை சேர்ந்தவன் என்று எந்த தெய்வமும் ஆராய்ச்சியில் இறங்குவதில்லை.

அது அந்தணரா? செட்டியாரா? ரெட்டியாரா? யாராக இருந்தாலும் ஒன்றாக பார்க்கும் உயரிய குணம்தான், தெய்வகுணம்.

வேடுவகுல கண்ணப்பன் விரும்பி மாமிசம் படைத்த போது, ஏற்றுக்கொண்டு அவனை ஆட்கொண்டவர் சிவபெருமான்.

ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த நந்தன் சிவனை தரிசித்த போது நந்தி மறைக்கிறது என்று வருந்தினாராம்.

உடனே சிவபெருமான் நந்தியை நகர சொல்லி நந்தனுக்கு காட்சி அளித்ததாய் நந்தன் சரிதம் சொல்கிறது.


சேக்கிழாரின் பெரிய புராணம் ஒரு சமத்துவ பக்தி நூல்.

மெய்யான பக்தியை செலுத்தினால் கடவுளின் கருணை கட்டாயம் கிட்டும் என்பதை உணர்த்துகிறது பலரது வாழ்க்கை வரலாறு.

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் மன்னரும் உண்டு, சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும்  உண்டு.

போகட்டும்.  நம் கேள்வி இதுதான்.

ஆதிகாலம் தொட்டே ஜாதி துவேஷங்கள் எழுகிறதே ஏன்?

எந்த மதத்திலும் இல்லாத வேற்றுமைகள் இந்து மதத்தில் இருப்பதின் மர்மம் என்ன?

இதோ தமிழருவி மணியன் சொல்கிறார்... கேட்போம்.


வேத உபநிடங்களை நான் சாதாரணமாக கருதிவிட முடியாது. வேதங்களில் முதல் வேதமான ரிக்வேதத்திலேயே ஞான தேடல் தொடக்கி விடுகிறது.

உலகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மனிதர்கள் சிந்திக்க தொடங்கும் முன்பே இங்கே உள்ளவர்கள், ஞான பாதையில் நடையை துவக்கி, அதன் சிகரத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டார்கள் என்பதற்கு சாட்சியாக இருப்பது ரிக்வேதம். 


அந்த ரிக்வேதத்தின் பத்தாவது பகுதியில் கேள்விகளாலேயே ஒரு வேள்வி நடத்தபட்டிருப்பதை காணும் போது ஆச்சிரியமாக இருக்கிறது.

எப்படிப்பட்ட கேள்விகள்?

இன்று அறிவியல் பெரிய விஸ்வருபம் கொண்ட பின்பும், எந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தினறிக்கொன்டிருக்கிறதோ, எந்த கேள்விக்கு விடை காண முடியாமல் திண்டாடி கொண்டிருக்கிறதோ அந்த கேள்விகள்.


அந்த கேள்விகள் அந்த காலத்திலேயே ரிக் வேதத்தில் எழுப்பட்டிருக்கிறது. 
பிறப்புக்கு முன் இருந்தது என்ன?

இறப்புக்கு பின் இருக்கப்போவது என்ன?

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? இதை உருவாக்கிய ஒருவன் இருக்கிறானா? 

அப்படியானால் அவன் எங்கே இருக்கிறான்?

இப்படி எல்லாம் பல்வேறு வினாக்களை தொடுக்கிறது ரிக் வேதம். 

இன்றைக்கு கூட அறிவாளிகள் இதயத்தை எல்லாம் அரித்து கொண்டிருக்கும் கேள்விகள் இவை.

இந்த கேள்வியை உலகின் மற்ற பகுதிகளில் எல்லாம், அறிவு வெளிச்சம் அறவே எட்டிப் பார்க்காத தருணத்தில் இந்திய மண்ணில் தோன்றிய ரிக் வேதம் எழுப்பி இருக்கிறது.

மற்றவர்கள் எல்லாம் அறிவுக்கடலின் கரையை கூட நனைத்திறாத கால கட்டத்தில், நம்மவர்கள் அதில் மூழ்கி முத்தெடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட தொடக்கி விட்டார்கள் என்பதற்கு சான்றாக விளங்கி கொண்டிருக்கிறது ரிக் வேதம்.
ஆனால் இத்தகைய ரிக் வேதத்தில் தான், வருணாசிரம தருமத்தின் முதல் வித்து ஊன்றப் பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த ரிக் வேதத்தில் மனிதனை தேவநிலைக்கு உயர்த்தும் விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறதோ, அதே ரிக் வேதத்தில் தான் மனிதனை மிருக நிலைக்கு தள்ளப்போகும் விஷயம் என்று தெரியாமல் முதல் பிரிவினை வாதமும் வைக்கப்பட்டு இருக்கிறது.


உலகை படைத்ததாக சொல்லும் பிரம்மனை ஒரு ராட்ச்சச வடிவினனாக உருவகபடுத்தி காட்டும் ரிக் வேதம், அந்த பிரம்மனின் தலையில் இருந்து பிராமணன் பிறந்தான் என்று பேசுகிறது.

சத்திரியர்கள் பிரமனது தோளில் இருந்து பிறந்ததாக சொல்கிறது.

வைசியர்கள் அவனது தொடையில் இருந்து பிறந்ததாக வகைப் படுத்துகிறது.
சூத்திரர்கள் அவனது பாதத்தில் இருந்து படைக்க பட்டதாக ரிக் வேதம் சொல்கிறது.

இப்படி உரைப்பத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையில் பேதத்தை கற்பிப்பதற்கான சாத்திய கூறுகளை உருவகப்படுத்தி கொடுக்கிறது.


பின்னால் வந்த மனுவால் அது ஊதி பெரிதாக்கபட்டது.

சின்னபொறிதான் காட்டு தீய்க்கு காரணமாக அமைகிறது.

சூரியனின் மகனான கர்ணனை, இந்திரனால் உற்பத்தியான அர்ச்சுனன் இகழ்கிறான். அனைத்தும் அறிந்த கிருபர் அரங்கம் அதிர கேட்கிறார்.

கர்ணா ...அர்ச்சுனன் குந்தியின்  இளைய குமரன். பாண்டு புத்திரன். கௌரவ குலத்தை சேர்ந்தவன். அவன் உன்னோடு யுத்தம் செய்ய காத்திருக்கிறான்.

ஆனால் அதற்கு முன் நீ எந்த ராஜ்ஜியத்தின்  அதிபதி என்பதை அறிவிப்பாயாக. உன் குலத்தை அறிந்து கொண்ட பிறகுதான் அர்ச்சுனன் உன்னோடு யுத்தம் செய்ய முடியும்.

பெருமையற்ற பரம்பரையில் வந்தவர்களோடு அரசகுமாரர்கள் சரிசமமாக நின்று யுத்தம் செய்வதில்லை.


ஆகையால் உன்னை முறையாக அறிமுகம் செய்து கொள் என்று கேட்டாரே, அப்போதே ஏற்றதாழ்வுகள் இருந்திருக்கிறது என்பதின் அடையாளம்.

பின்னர் பீமன் ஏளனமாக  சிரித்து கர்ணா..தேரோட்டியின் மகனே... அரசகுமாரனான அர்ச்சுனனோடு யுத்தம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கிறது.

உன் குலத்திற்கு தக்கபடி கையில் சாட்டையை பிடித்து கொள். வில்லை கிழே போடு. உன்னை அர்ச்சுனன் யுத்தத்தில் கொல்ல மாட்டான்.

வேள்வி தீயில் சேர்க்கும் பொருளை உண்ண நாய் தகுதி அற்றது என்று இகழ்ந்த போதே,  உயர்வு தாழ்வு  புரையோடி கிடந்திருக்கிறது என்பது புலனாகிறது.

அதாவது .... உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருந்திருக்கிறது.  அரசன், சாதாரண குடிமகன் என்ற பாகுபாடு.    ஜாதிகள் இல்லை.


ஆனால் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டவை பின்னால்  திரிக்க பட்டிருக்கிறது என்பதே உண்மை.

ஒரு நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டுமானால் நான்கு துறைகள் நல்லவிதமாக இருக்க வேண்டும்.

ஓன்று ஆன்மிக துறை.

இரண்டு நாட்டின் பாதுகாப்பு.

மூன்றாவது ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வாணிபம்.

நான்காவது தொழில்களை இயக்கும் தொழிலாளர்கள்.

ரிக் வேதம் பிரித்தது இதுவாகத்தான் இருக்கும். ஆன்மீக துறை பிராமணர்கள் வசமும், அரசியல் மற்றும் பாதுகாப்பு சத்திரியர்கள் புறமும், வாணிபத்தை வைசியர்களும், தொழில்களை இயக்கும் தொழிலாளர் கட்டமைப்பை சூத்திரர்களும் கையாள வேண்டும்.


இன்னும் விரிவாக சொல்லப்போனால் நம்பிக்கை, நாணயம், நல்லொழுக்கம், கருணை மிக்கவர்கள் பிராமணர்கள் என்றும், அவர்கள் அப்படித்தான் வாழவேண்டும் என்ற நியதிகளை ஏற்ப்படுத்தி, அவர்கள் ஆன்மீக பணிக்கு சிறந்தவர்கள் என்று தீர்மானிக்கப் பட்டது.

போர்த்திறன் கொண்டவர்கள், நிர்வாக திறன் கொண்டவர்கள், பலதரப்பு மனிதர்களை அரவணைத்து செல்லும் ஆற்றல் மிக்கவர்கள் சத்திரியர்கள் என்றும், அவர்களே ஆட்சி செலுத்த உரிமை உள்ளவர்கள் என்றும் முடிவானது.

பொருளீட்டல், வாணிபம், செல்வம் சேர்க்கும் ஆற்றல் மிக்கவர்கள் வைசியர் என்றும் வகைப்படுத்தப்பட்டது.

இறுதியாக  தொழில்களை இயக்கும்  தொழிலாளர்கள் சூத்திரர் என்றும் முடிவானது.

இது சமுதாய கட்டமைப்புக்காக ஏற்ப்படுத்தப்பட்ட முறையே தவிர ஏற்ற தாழ்வுகளை உருவாக்க அல்ல.


நாளடைவில் இந்த கட்டுபாடுகளை மீறுவோர், சட்டதிட்டங்களை புறக்கணிப்போர், அந்தந்த பிரிவுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

தண்டனை கடுமையாகவே அமுல் படுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்டவர்களோடு மற்றவர்கள் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது.  ஊருக்குள் வரக்கூடாது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இதுதான் நாளடைவில் பகைமையாக மாறி, ஒதுக்கப்பட்டவன், தாழ்ந்தவன், தீண்டத்தகாதவன் என்றெல்லாம் பெயரை சூட்டி, அவர் சார்ந்த சமூகம் மற்றவரால் புறக்கணிக்க பட்டது.

அப்படி புறக்கணிக்க பட்டவர்கள் தங்களுக்குள் சிறு சிறு குழுக்களை ஏற்படுத்தி கொண்டார்கள்  அதுதான் ஜாதி என்கிற வர்ணபேதம்.தத்துவம்
Monday, 29 October 2012

அழகு குறிப்பு
உங்கள் பாதங்களை பாதுகாக்க, கால் கப் தயிரில் சில சொட்டுக்கள் வெனிகர் விட்டு நன்றாக கலக்கி, பாதங்களில் குதிகால் விரல்கள், விரலிடுக்குகள் முதலிய பகுதிகளில் தேய்த்து தடவி, ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவி வரலாம்.  

அல்லது வெந்நீர் உள்ள வாளியில் கால்களை வைத்திருக்கலாம். 

இப்படி செய்வதால் பாதங்களில் செதில்  செதிலாக இருக்கும் இறந்து போன திசுக்கள் சுத்தமாகும். பாதங்கள் மிருதுவாகி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பொறித்த வெங்காயத்தை நன்றாக அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவி வர, ஒரு மாதத்தில் காலில் உள்ள வெடிப்புகள் காணாமல் போய்விடும். 


பற்கள் பளிச்சிட நீகள் பல் துலக்கும்போது பற்பசையுடன் சிறிதளவு உப்பையும் தூவி பல் துலக்குங்கள். உங்கள் பற்கள் வெண்மையாய் முத்து போல் பளிச்சிடும். 


பற்களில் படிந்துள்ள கரை நீங்க பற்பசையுடன் ஒரு சொட்டு கிராம்பு தைலத்தை  விட்டுக்கொளுங்கள். பற்களில் படிந்துள்ள கரை நீங்கி விடும். 

நன்றாக காய்ந்த எலும்பிச்சை தோலை பவுடராக்கி சிறிதளவு உப்பு கலந்து இரண்டு மூன்று சொட்டுடன் கடுகு எண்ணெய் விட்டு கலக்கி இதில் பற்கள் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும். வாய் துர்நாற்றம் அகலும். 

டொங்கு காய்ச்சல் - எச்சரிக்கை

நண்பர்களே இதை நீங்கள் மட்டும் படித்து விட்டு போய்விடாமல், உங்கள் நண்பர்களுக்கும் முடிந்தவரை ஷேர் செய்யுங்கள். முடிந்தவரை முன் எச்சரிக்கையாக  இருப்போம்.

Sunday, 28 October 2012

பிதிர் தர்ப்பனம் அவசியமா?நான் ஹிந்துவா பிறந்ததில் பெருமைப்படுகிறேன். இங்கே இல்லாத விஷயம் இல்லை. சொல்லாத தர்ம நியதிகள் இல்லை.

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு உரிய வழிவகைகளை,  உலகிற்கு சொன்ன முதல் மதம்.... ஹிந்து மதம்.

ஆனாலும் சில விஷயங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.  ஏற்றுக்கொள்ள இயலாதவையாக இருக்கிறது. இது தேவையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது - ஒரு அன்பரின் வினா.

அப்படி என்னதான் சொல்லவருகிறார்?  அவரே தொடர்ந்து பேசுகிறார் கேளுங்கள்.

இந்த பிதிர் தர்ப்பணம் என்பது தேவைதானா?  இது அவசியமில்லாத வெற்று சுமையாக தெரிகிறது.

இல்லாத ஒருவருக்காக எதற்கு எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும்? மோச்ச தீபம் ஏற்ற வேண்டும்? சொல்லுங்க!

நல்ல கேள்விதான். இந்த சந்தேகம் வந்ததின் காரணம் என்ன?

அப்பறம் என்னங்க.  மறுபிறவி என்பதிலேயே எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

சரி.. உண்மை என்று  வாதத்திற்காக வைத்து கொண்டாலும், அடுத்த கருத்து அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறதே.

என்ன?

பிறப்பும், பிறப்பிற்கு பின் இறப்பும், இறப்புக்கு பின் பிறப்பும் வருகிறது என்பது ஹிந்து தர்ம கொள்கை.

இது உண்மையானால் இறந்த பின் அவர் மறு பிறவி எடுத்து விடுகிறார். உடனே இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இது நிகழ்ந்து விடும்.

அப்படி இருக்க இந்த பிதிர் தர்ப்பணம் என்ற விஷயமே  அடிபட்டு போகிறதே.

இது அந்த அன்பருக்கு மட்டும் இல்லை. பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. அதனால் இதை பற்றி ஆராய்வோம்.


ஹிந்து மதத்தில் விஞ்சி நிற்பது விஞ்ஞானமா மெய்ஞானமா என்று பட்டிமன்றம் வைத்தால்,  தீர்ப்பு சொல்லும் நடுவர் திருதிருவென விழிக்க வேண்டிவரும். 

அதற்கும் காரணம் இருக்கிறது!

வேத ஆகமங்களாக இருந்தாலும் சரி, சடங்கு சம்பிரதாயங்களாக இருந்தாலும் சரி, பூஜை புனஸ்காரங்களாக இருந்தாலும் சரி, ஆராய்ந்து பார்த்தால் அறிவியல் என்னும் அஸ்த்திவாரத்தில் இருந்து எழுப்பப்பட்டதாக இருக்கும் ஹிந்து மதம்.

அன்று ஆன்மீகம், இன்று அது அறிவியல்.


உண்மையில்  அறிவியலை அடிப்படையாக கொண்டதுதான் ஹிந்துமதம்.  அதில் சொல்லப்பட்ட  மறுபிறவி என்பதிலேயே எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்கிறார் நண்பர்.

அவர் சிந்தனைக்கு ஒரு கேள்வி. அங்கொன்றும், இங்கொன்றும்மாக, முன் பிறவி நினைவுகளை பற்றி பேசுகிறார்கள் என்கிற செய்தி ஊடகங்களில் வந்ததே, வருகிறதே தெரியுமா? இதை கூட மனச்சிதைவு என்று ஒதுக்கி விட்டாலும், நமக்கே பல அனுபவங்கள் வரும்.


நாம்  ஒருவரை பார்த்திருக்க மாட்டோம், பேசியிருக்க மாட்டோம், பழகியிருக்க மாட்டோம், ஆனால் பார்த்த அந்த கணத்தில் உள்மனம் சொல்லும்...! இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று.

சில இடங்களுக்கு வாழ்நாளில் முதல் தடவையாக போவோம். ஆனால் பல நாள் பார்த்து ரசித்த இடம் மாதிரி, வாழ்ந்த இடம் மாதிரி, ஒரு நினைவு வருகிறதே பலருக்கு ஏன்?

அப்படியானால் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கும், அதுவரை பார்த்திராத இடங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அதுதான்  முன்பிறவியா?

யோசித்து பாருங்கள். ஒரு மனிதனுக்கு முன்பிறவி நினைவுகள்  பின்தொடர்ந்தே வருகிறது என்றால், அவரால் இயல்பாக வாழ முடியுமா? சந்தோஷமாக இருக்கமுடியுமா?

நார்க்கூட்டு சாலையில் நான்கு சிக்னல்களும் பச்சையாக எறிந்த மாதிரி ஒரு குழப்பம் வந்து விடாதா? அதனால் தான்  நம் முன்  பிறவி நினைவுக்கு முற்று புள்ளி விழுந்து விடுகிறது.

ஆனால் பிறந்த குழந்தைக்கு ஒரு வயது வரை முன் ஜென்ம நினைவுகள் இருக்குமாம்.

அதனால்தான் தொட்டிலில் இருக்கும் குழந்தை தனக்குத்தானே சிரித்து கொள்கிறது, பழைய நினைவுகளை நினைத்து அழுகிறது என்கிறார்கள்.

அதே போல் பிறவி நினைவுகள் என்பது ஞானிகளுக்கு உண்டு, மகான்களுக்கு உண்டு, ரிஷிகளுக்கு உண்டு, சித்தர்களுக்கு உண்டு.  காரணம் அவர்கள் பற்றற்றவர்கள்.

நாம் மனிதர்கள். பந்த பாசத்தில் உழல்கிறோம், ஆசைகளில் வாழ்கிறோம்.

சரி.. நண்பரின் கேள்விக்கு விடை தேடும் முன் சிறு விளக்கம். தர்ப்பனம் செய்வதின் நோக்கம் என்ன?

விந்து விழுந்த நேரத்தில் வந்துதித்த வாழ்க்கை. பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்க்கையின் இறுதியில் மரணதேவன் கவர்ந்து செல்கிறான்.

அத்துடன் பூலோக வாழ்க்கை நிறைவு பெறுகிறது. அதன் பின் வேறு லோக வாழக்கை ஆரம்பம் ஆகிறது. அப்படித்தான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

அவரை விதைத்தால் அவரை, துவரை  விதைத்தால் துவரையை அறுவடை செய்வது போல், எப்படி வாழ்ந்தோமோ... அதற்கு தகுந்த பலனை பெறுகிற பயணம்.

குற்றம் செய்யும் போது கடவுள் உன்னை பார்க்கிறார்,  தண்டனை பெறும்போது கடவுளை நீ பார்க்கிறாய் என்று சொல்லும் தர்மசாஸ்திர நியதிகளை உறுதிப்படுத்தும் பயணம்.

கருடபுராணம் சொல்கிறது.

உடலில் இருந்து உயிர் பிரிகிறது. பிரிந்த உயிரை எமகிங்கர்கள் கவர்ந்து செல்கிறார்கள் எமபட்டினத்திற்கு.

போகும்பாதை என்பது நல்லவர்களுக்கு துன்பம் இல்லாமலும், தீயவர்களுக்கு பாதை கடினமாகவும் இருக்குமாம்.

இதில் உச்சகட்டமாக வைதரணி என்ற நதியை கடக்க வேண்டிவரும். இங்கும் அவரவர் கர்ம வினை படி கடந்து செல்ல வேண்டிவரும்.இந்த பாதையை, நதியை கடந்து செல்ல பல மாதங்கள் ஆகுமாம்.

இந்த பாதையை கடந்து செல்லும் போது பெரும் துன்பம் வரக்கூடாது. அவர்கள் வாழ்நாளில் செய்த எந்த பாவமாக இருந்தாலும், அதற்கு பரிகாரம் தர வேண்டும் என்பதற்காகவே கரும காரியங்கள் செய்யப்படுகிறது.

எட்டு, பதினாறு அல்லது கருமாதி.

நாம் விஷயத்திற்கு  வருவோம்.  இவருக்கு மறுஜென்மம் ஏற்படுகிறது. சிலருக்கு சற்று தாமதமாகலாம்.

எப்படி இருப்பினும் அவரது வழிதோன்றல்கள் வருடம் தோறும் தர்ப்பனம் செய்கிறார்கள். அதனால் அவர்களின் பாவக்கணக்கு குறைக்கப்படுகிறது என்கிறது ஹிந்து மதம்.

இது எப்படி சாத்தியம். மறுபிறவி எடுத்து விட்டாதாக வைத்து கொண்டால் தர்ப்பனம் செய்வதற்கான அவசியம் இருக்காதே?

இருக்கு. அவசியம் இருக்கு. அமெரிக்காவில் இருக்கும் மகனுக்காக அம்பத்தூரில் இருக்கும் அவரது அம்மா கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்கிறார். அப்படி செய்வதின் பலன் அமெரிக்காவில் இருப்பவருக்கு  போய் சேர்கிறதா இல்லையா?

அதுதானே நம்பிக்கை.

அதை போலத்தான்.  நாம் இப்போது எடுத்திருப்பது மறு பிறவியாக இருந்தாலும், நம் முன் பிறவி வழிதோன்றல்கள் எங்காவது இருந்து, நமக்காக தர்ப்பனம் செய்தால், அந்த பலன் நம்மை வந்து சேரும்.

அதனால் நம் கடந்தகால பாவங்கள் குறைந்து, இப்பிறவியின் நன்மை அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. அதனால் தர்ப்பனம் செய்யுங்கள்.  சரியா?

இந்து தர்ம சாஸ்த்திரம் -2ஒப்பிலியப்பன்


உலக நாடுகளின் நாணயங்கள்


Saturday, 27 October 2012

அழகு குறிப்பு- தலைமுடி பாதுகாப்பு!


தலைமுடியை பராமரிப்பதற்கு நவீன மருந்துகள் மற்றும் வழிமுறைகளை விட, பாரம்பரியமாய் நம் மக்கள் கடைபிடித்து வரும் இயற்க்கை வைத்திய முறைகளே நல்ல பயன் தரக்கூடியதாக இருக்கிறது. 


அந்த வைத்திய குறிப்புக்கள் இங்கே இடம் பெறுகின்றன. 

சமையலுக்கு பயன்படுத்த தேங்காய் உடைக்கும் போது, அதன் தண்ணீரை வீணாக்காமல் தலையில் விட்டு ஊறவைத்து பின் குளித்தால், முடிகள் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். 

முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் பிழிந்து அதை தலையில் ஊற்றி ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.ஒரு கைபிடியளவு பச்சை கறிவேப்பிலையை நூறு மில்லி தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க விட்டு, அந்த எண்ணையை தளிக்கு தேய்த்து வந்தால் முடி கொட்டுவது குறையும். வாரம் இரண்டு முறை இப்படி செய்வது நல்ல பலன் கிடைக்கும். 

கறிவேப்பிலையை அரைத்து அதை தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தேய்த்து உலரவிட்டு குளித்து வந்தால் முடி செம்பட்டையாவது மாறும்.

Thursday, 25 October 2012

தங்க நகைகளை பாதுக்காக்க டிப்ஸ் !


முத்துக்களை பராமரிக்க!


வைரநகைகளோடு முத்துபதித்த அணிகலன்களை எப்போதுமே வைக்காதீர்கள். வைரங்களால் முத்துக்களில் கீறல் ஏற்பட்டு விடும். 

முத்துக்களை, முத்து பதித்த நகைகளை சுத்தம் செய்வதாக இருந்தால் மிருதுவான துணியால் எரிசாராயத்தில் நனைத்து சுத்தம் செய்ய வேண்டும். 

முத்துக்கள் வெண்மையாய், அல்லது அதன் இயல்பான நிறத்துடன் எப்போதுமே பளிச்சிட முத்து நகைகளை தண்ணீர் படாமல் பாதுகாக்க வேண்டும். வெண்பூசணி சாறு முத்துக்களை சுத்தம் செய்ய மிக நல்லது. 

கவரிங் நகைகளை பாதுகாக்க!


கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.

கவரிங் நகைகளை டிஷ்சு பேப்பரில் சுற்றி காற்று புகாத கண்ணாடி பெட்டியில் வைத்து உடன் ஒரு சாக்பீஸ் போட்டு இறுக்கமாக முடிவிட வேண்டும். இப்படி செய்தால் புதிதாய் வாங்கியது போலவே எப்போதும் இருக்கும். 

தங்கநகைகள் தக தகவென பளிச்சிட !


ஒரு சிட்டிகை சோடா உப்புடன் மஞ்சள்தூளையும் சேர்த்து வெது வெதுப்பான நீரில் கலந்து நகைகளை கழுவினால், அவை புதிது போலவே பள பளக்கும்.

தங்க சங்கிலிகள் சிக்கு மாட்டிக்கொண்டால்( முடிச்சு போட்டுக்கொண்டால் ) முகப்பவுடரை அதன் மேல் தடவி பிறகு சிக்கலை பிரியுங்கள். சுலபமாய் அவிழ்ந்து விடும்.

நிறம் மங்கிப்போன தங்க நகைகள் பளிச்சென்று ஒளி விட வேண்டுமா? மஞ்சள்தூளில் இருக்கிறது மகிமை.

சிறிதளவு மஞ்சள்தூளை நகைகளின் மேல் தடவி மெல்லிய துணியால் துடைங்கள். புதுசு போல் ஜொலிக்கும்.

Wednesday, 24 October 2012

சிவ வழிபாடு

அண்டாமாய் அவணியாகி
அறியொண்ணா பொருளுமாகி 
தொண்டர்கள் குருவுமாகி 
தூயதிரு தெய்வமாகி 
எண்திசை போற்ற நிற்கும் 
என்பிரான் நீலகண்டர் சிவனடிபோற்றி 

ஈசனடி போற்றி 
எந்தையடி போற்றி 
தேசனடி போற்றி 
சிவன் சேவடிபோற்றி
மாயபிறப்பருக்கும் மன்னனடி போற்றி ....

அணுவுக்குள் அணுவாக இருந்து அண்டமெல்லாம் ஆட்டிவிக்கும் சிவனுக்கு எட்டு நாட்கள் சிறந்தவை அல்லது உகந்தவை. அதை சிவ விரத  நாட்கள் என்று சொல்வதுண்டு. 

என்னென்ன?

சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேஸ்வரவிரதம், சிவராத்திரி   விரதம், கேதார விரதம், கல்யாண சுந்தர விரதம், சூலவிரதம், இடப விரதம் என எட்டு.பிரதோஷ விரதம் தவிர்த்து. 

அடுத்து விளக்கம்தான். முதலில் சோமவார விரதம் 

வாரம்தோறும் வரும் திங்கள்கிழமைகளில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் கார்த்திகை மாதங்களில் வரும் திங்கள் கிழமைகளில் இருக்கலாம்.

அதனால் என்ன பலன் கிட்டும்?.

கல்வியில் சிறப்புற்று விளங்க வைக்கும். வறுமை இல்லாத வாழ்விற்கு வழிவகுக்கும். அந்தஸ்த்தோடு அதிகார பதவிகளையும், ஆயுளோடு ஆரோக்கியத்தையும் தரும்.


திருவாதிரை விரதம் 

திருவாரூரில் பிறந்தால் மோட்சம். திருவண்ணாமலையை நினைத்தால் மோட்சம்.  சிதம்பரத்தை தரிசித்தால் மோட்சம்.  காசியில் இறந்தால் மோட்சம் என்கிறது புராணங்கள்.

தொல்லைகள் அகற்றும் தில்லைநடராஜரை மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் வணங்கும் வழிபாடே திருவாதிரை விரதம்.


இந்நாளில் சிதம்பரத்தில் இருந்தால் சிறப்பு. முடியாதவர்கள் இருக்கும் இடத்திலேயே அனுஷ்டித்தாலும் சிறப்பு.

பலன் என்ன?

பக்தி செலுத்தும் அத்தனை பேருக்கும் ஆசை என்ன? முக்திதானே. சிவலோக பதவியை பெற்றுத்தரும். தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ செய்கிற பாவங்களை வேரறுத்து முக்தி தருவதால் இவ்விரதம் முக்கியமானது.


உமா மகேஸ்வர விரதம் 

இருமனம் கலப்பது திருமணம். அந்த திருமண பந்தத்தில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கைதான். வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சமாதானம் கொண்டாலும், அது பெரிதாகி பிரிவினை அளவிற்கு செல்லாமல் காப்பதுதான் இந்த விரதத்தின் முக்கியம்.

மாதம்தோறும் பவுர்ணமியில் கார்த்திகை மாதம் தான் இவ்விரத சிறப்பு. அன்று ஒருவேளை விரதம் இருந்து, இரவிலே பால், பழம் மட்டும் பருகி விரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

அனுஷ்டித்தால்?

அன்பு பலப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பெருகும். கசந்த உறவில் வசந்தம் வீசும். வள்ளுவனும் வாசுகிபோல் வளமாய் வாழ இவ்விரதம் முக்கியம்.

அன்றைய தினம்தான் திருகார்த்திகை. அக்கினி சொருப சிவனுக்கு தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் பிறவி இல்லாத பெரும் பலனை பெறலாம்.


சிவராத்திரி விரதம் 

மாதம்தோறும் வரும் தேய்பிறை சதுர்த்தியில், இரவு நேரத்தில் சிவனை வழிபடும் நாள்தான் சிவராத்திரி. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது.

அப்படி பிறந்த இவ்வாழ்வில் எந்தனையோ நிலைகளை கடந்து வர வேண்டி இருக்கிறது. சில சமயம் தெரிந்தும், சில சமயம் தெரியாமலும், எத்தனையோ பாவ காரியங்களை செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த சிவராத்திரி விரதம் மேற்கொள்ளும்போது இந்த பாவங்கள் விலகும். அது மட்டும் அல்ல, பிறப்புக்கு ஒரு அர்த்தம் புரிய வேண்டுமானால் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது.

இரவில் கண் விழித்து நான்கு ஜாமத்தில் நடக்கும் பூஜையிலும் கலந்து கொள்ள  வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவமந்திரங்களை ஜெபித்து வருவது நல்லது.

அன்றுதான் மூவர்களும், தேவர்களும், ரிஷிமார்களும், பூலோகத்தில் வலம் வரும் நாள் என்கிறது உபநிடங்கள்.


கல்யாண சுந்தர விரதம் 

பங்குனி உதிரம் தான் இந்த கல்யாணசுந்தர விரதம். முருகனுக்கு உஅகந்த நாளாக இருந்தாலும் சிவனுக்கு உரிய நாளும் கூட.

பங்குனி மாத உதிரம் நட்சத்திரத்தன்று விரதம் இருந்து இரவில் உணவு உட்கொள்ளாமல் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

அனுஷ்டித்தால்?

வயதை எட்டியும் வரன் அமையவில்லையே என வருத்தபடுபவர்களுக்கு வரன் அமையும். இல்வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகள் மறையும். பிரியும் தருவாயில் இருக்கும் தம்பதிகளுக்கு உறவின் மகத்துவம் புரியும்.

வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். கூடவே மழலை சத்தமும் கேட்கும். வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு வாரிசுகள் கிட்டும். செல்வமும் புகழும் சேர்ந்து கிட்டும். அருளும் ஆரோக்கியமும் நிலைத்து நிற்கும்.


சூல விரதம் 

வாழ்க்கை என்றாலே எதிரிகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் இருக்காது. அதனாலேயே சிலருக்கு தொட்டதில் எல்லாம் தோல்வியாக இருக்கும்.

சிலருக்கு வழக்குகள் வந்து வாழ்க்கை சீரழியும். வழிய வரும் வம்புகளால் நம்பிக்கையை இழக்க வைக்கும். அப்படி நித்தம் நித்தம் கேள்விகுறியோடு பொழுது புலர்பவர்களுக்கு இந்த சூல விரதம் முக்கியமானது.

தைமாதம் அமாவாசை நாளில் தான் சிவன் சூலம் தரித்த நாள். சிவனின் சூலம் எதிர்ப்புகளை முறியடித்து, எதிரிகளை பந்தாடி, தர்மம் தழைக்க செய்வது போல், சுலவிரகாம் அனுஷ்டித்தால் வெற்றித்திருமகள் வீர திலகமிடுவாள்.


எப்படி அனுஷ்டிப்பது?

அன்று பகலிலே உணவு உட்கொள்ளலாம். இரவில் எந்த உணவும் உட்கொள்ளக்கூடாது. சிவ  மந்திரம் சொல்லி சிவவழிபாடு செய்வதும், சிவலிங்க பூஜை செய்வதும் நல்லது.

அன்று முன்னோர் தரப்பான நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மனிதனாக பிறந்தவர்கள் மறக்க கூடாத விஷயம் பிதிர் தர்ப்பணம். இத விரதத்தை தை அமாவாசை நாளில் செய்யலாம்.


இடப விரதம்

வளர்பிறை அஷ்டமி திதியுடன் கூடிய வைகாசி மாதத்தில் ரிஷப வாகன சிவனுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதம்தான் இடப விரதம்.

பகலிலே ஒரு வேலை விரதம் இருந்து சிவ பூஜை செய்ய வேண்டும். வீட்டில் செய்ய முடியாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டு வரலாம்.

மற்ற விரதங்கள் போலவே கணவன் மனைவி உறவில் விரிசல்கள் போக்கும்.


பிரதோஷ விரதம் 

மாதம்  தோறும் வளர்பிறையில் ஒரு முறையும், தேய்பிறையில் ஒரு முறையும் திரயோதசி வரும். இவ்விரண்டு நாட்களும் பிரதோஷ நாட்கள் என்று சொல்லப்படுகிறது.

உலகத்தில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் சிவனுள் அடங்கும் என்ற உயரிய தத்துவத்தை வெளிப்படுத்தும் நாளாக இது அமைகிறது.

இவ்விரண்டு நாட்களிலும் சூரிய அஸ்தமனதிற்கு முந்திய ஒன்னரை மணிநேரமே பிரதோஷ காலம்.

குறிப்பாக  சித்திரை, வைகாசி, ஐப்பசி  கார்த்திகை மதங்களில் வரும் பிரதோஷமும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷமும் மிக முக்கியமானது.


இவிரததை அனுஷ்டிக்க நினைப்பவர்கள் சனி பிரதோஷ நாளில் ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக பிரதோஷ விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்காமலும்  உணவு உள்ளாமலும் இருந்து சிவன்னையும் நந்தியையும் தரிசிக்க வேண்டும்.

எண்ணை தேய்த்து குளிப்பதும், மந்திர ஜபம் செய்வதும் நீக்கப்பட வேண்டும். இவ்விரதத்தை  அனுஷ்டிப்பதால் சகல பாக்கியமும் கிட்டும்.

கிரகமாலிகா யோகம்


வீடுகள் தோறும் கிரகங்கள் இருந்தால் அதற்கு கிரகமாலிகா யோகம் என்று பெயர். இனி  பலன்களை பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் ஓன்று முதல் ஒன்பதாம் இடம் வரை கிரகம் இருந்தால் மகான், ஞானி.

ஒன்றாம் வீடு  முதல் எட்டாம் வீடு வரை கிரகம் இருந்தால் கொடியவர், எதற்கும் துணிந்தவர், எந்த சட்ட திட்டங்களுக்கும் அடங்காதவர், பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற மாதிரி இருப்பார்கள்.

ஓன்று முதல் எழுவரை கிரகம் இருந்தால் உத்தமன், நல்ல நிர்வாகி, நல்லவன் என்று பெயரெடுப்பான்.

ராகு அல்லது கேது தவிர்த்து தொடர்ச்சியாக ஆறு வீடுகளில் கிரகம் இருந்தால் வணக்கத்திற்கு உரியவர். புதிய கண்டுபிப்பாளர். ஊரே மெச்சுகிற  அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும்.

ராகு அல்லது கேது தவிர்த்து தொடர்ச்சியாக ஐந்து வீடுகளில் கிரகம் இருந்தால் செல்வந்தர், ஆடம்பரபிரியர்கள்.  வாழ்க்கை சுபிச்சமாக இருக்கும்.


ராகு அல்லது கேது தவிர்த்து லக்னம் முதல் நான்கு ராசிகளில் கிரகம் தொடர்ச்சியாக இருந்தால் பிறர்மனை நோக்குவார். 

ராகு அல்லது கேது தவிர்த்து, லக்னம் முதல் மூன்று ராசிகளில் கிரகம் இருந்தால் முரட்டு குணம் உடையவர். பிறந்தது முதல் உழைத்து வாழ வேண்டிவரும். 

ராகு அல்லது கேது தவிர்த்து, லக்னம் முதல் இரண்டு ராசிகளில் கிரகம் இருந்தால் நீண்ட ஆயுள் உள்ளவர்கள். அதிக உழைப்பின்றி பணம் சேர்ப்பார். பலதொழில் அமையும்.

ஒன்றில் மட்டும் கிரகம் இருந்தால் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. சாதாரண நிலையில் வாழ்க்கை அமையும்.


Sunday, 21 October 2012

மனிதனாக வாழ்வோம்!

இந்த பூமி தன் இறுதி காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உயரினங்கள் அனைத்தும் அழிந்து போகும் என்கிறார்கள். 

ஆனால் 2012 டிசம்பரில் உலகம் அழியும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லி வைக்கவில்லை. யுகங்களின் முடிவில் மகாபிரலயம் தோன்றும். 

அப்போது உயிர்கள் அழியும். மீண்டும் பிரம்மா முதலில் இருந்து தன் படைப்பு தொழிலை ஆரம்பிப்பார் என்று நமக்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். 

யுக முடிவு வரை  தோன்றும். நாம் இருக்காப்போவதில்லை. அல்லது ஒருகால் பல பிறவிகள் எடுத்து அந்த யுக முடிவின்போது நாம் வாழ்ந்தாலும் ஆச்சரியம் இல்லை. யார் சொல்லமுடியும். 

அதற்கு முன் இந்த பூமி அழிந்தால் அதற்கு காரணம் மனிதனாகத்தான் இருப்பான்.

நேற்று நம்முடன்  பேசிக்கொண்டிருந்தவர்கள் இன்றில்லை. ரெத்தமும் சதையுமாக நம்முடன் பேசிக்கொண்டிருந்தவர் எங்கே போயிருப்பார்?

மறைந்து போன நம் அப்பா, அம்மா சுற்றங்கள், சொந்தங்கள் எங்கே? இந்த வாழ்க்கைக்கு பின் என்ன? என்பதைப்பற்றி எல்லாம் நாம் கவலைபடுவதில்லை. இந்த நொடி வரை நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதே நம் மகிழ்ச்சி.


நமக்கும் ஒரு நாள் மரணம் வரும். அது நாளையோ இல்லை இன்னொரு நாளோ இருக்காலாம்.

சரி... மரணத்திற்கு பின் மனிதர் நிலை என்ன? இறப்புக்கு  பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சிந்தனை எழும்போது, இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் மனதில் ஓடுகிறது.

வயது முதிர்ச்சியடைந்து நம் மனதின் வேகத்திற்கு உடல் ஈடு கிடைக்காமல் போகும்போதே, மனம் இப்படி திரும்பி பார்க்கும் சம்பவங்கள் நடக்கிறது.


ஆனால் ரத்தமும், இளமை துடிப்புடன் இருக்கும் போது, எதுவும் நம் மூளையில் ஏறுவதில்லை. ஆன்மாவின் பயணம் தொடர்க்கிறது.

நம் வினைகளுக்கேற்ப வரும்பிறவி அமைகிறது. எனவே... இந்த வாழ்க்கையை செம்மையாக வாழவேண்டும் என்கிற போதனைகளை எல்லாம் கேட்க நம் காதுகள் விரும்புவதில்லை.

மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்கிற எண்ணமும் தோன்றாமல் போய் விடுகிறது. தன் சுயநலத்திற்காக அடுத்தவனின் நலனை சிதைக்க தயாராகி விடுகிறோம்.

உண்மையில் மனித வாழ்க்கை மிக சிறியது. நம்முடைய ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாளாம். ஒரு மகாயுகம் என்பது பிரம்மாவின் பாதி நாள். இரண்டு மாகாயுகம் பிரம்மாவின் ஒருநாள் .

ஒரு மனிதன் 70 வருடம் வாழ்ந்தாலே முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்ததாய் கருத வேண்டி இருக்கிறது. பிரம்மா கண் சிமிட்டும் நேரத்தில் கழிந்து விடுகிறது நம் வாழ்க்கை.


இந்த சின்ன வாழ்க்கையை நடத்தத்தான் எவ்வளவோ போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. நட்பு, பகை, சண்டை,சச்சரவுகள் என அல்லல் படுகிறோம்.

இந்த வாழ்க்கையை அமைதியாய், சந்தோசமாய் அனுபவித்து நிறைவு செய்ய நமக்கு தெரியவில்லை.

நாமும் சந்தோசமாக இருந்து, அடுத்தவரையும் சந்தோஷமாக்கி செல்லும் வாழ்க்கைதான் உயர்ந்த வாழ்க்கை. அப்படி வாழ நமக்கு தெரியவில்லை. அல்லது பயிற்றுவிக்க படவில்லை.

அன்பும் அமைதியுமாய் மக்கள் இப்பூமியில் வாழ்ந்த யுகம் ஒன்று இருந்ததாம். அதை சத்யுகம் என்றார்கள். படித்திருக்கிறோம், பார்த்தில்லை.

சண்டை சச்சரவு இல்லாமல், மனிதனை மனிதனே கொல்ல ஆயுதம் செய்யாமல், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஏமாற்றி பிழைக்காமல், அன்பு மட்டுமே செலுத்திக்கொண்டு, அமைதியாய் மனிதன் வாழ்ந்த வாழக்கையை எண்ணிப்பார்த்தாலே எத்தனை இனிமையாக இருக்கிறது.

ஒரு வேலை அதுதான் சொர்க்கமோ என்னவோ?

ஒன்றை எப்போதும் நம் ஞாபகத்தில்  வைத்து கொள்ள வேண்டும். நமக்கு மேலான சக்தி ஓன்று உண்டு.

அவனுக்கு இறைவன் என்று நம்முனோர்கள் பெயர் சூட்டினார்கள். இயற்கை சக்தி, பிரபஞ்ச சக்தி என்றும் நாம் அதற்கு பெயர் சொல்லிக்கொள்ளலாம்.


உலகில் உள்ள எல்லா இனத்திற்கும் இறை நம்பிக்கை இருக்கிறது. இறைவன் இருக்கிறான். நம் ஒவ்வொரு செயலும் அவனால் கண்காணிக்கப்படுகிறது.

நம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதே உண்மை.

இறைநம்பிக்கைதான் இந்த உலகில் மனிதனை மனிதனாக வாழவைத்து கொண்டிருக்கிறது. இறைநம்பிக்கைதான் மனிதர்களை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

இறைவன் என்ற ஒருவன் மீது நம்பிக்கை இல்லாமல் போயிருந்தால் இங்கே மனிதர்களில் பலர் மிருகங்களாக திரிந்து கொண்டிருப்பார்கள்.

ஆன்மிகத்தையும், அன்பையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும், மனித சேவையையும் வாழ்க்கையின் அடிப்படையாய் கொண்டு வாழ்ந்தவர்களின்  வழித்தோன்றல்கள் நாம்.

அதனால் தெய்வ பிறவிகளாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம்  மனிதனாக வாழ்வோமே.

-மதிவாணன்
Saturday, 20 October 2012

ஆதிசங்கரர்! adhisankarar


ஞான புலம்பல்!


சங்கரர் ஒரு சமயம் தன் சீடர்களுடன் மேற்கு திசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.  

ஸ்ரீவல்லி என்ற கிராமத்திற்கு சங்கரர் சென்ற போது, அங்கு வசித்து வந்த பிரபாகர் என்ற பிராமணர் தன் 13 வயது மகனை அழைத்து கொண்டு சென்று சங்கரரை வணங்கினார்.

சுவாமி.. இவன் சிறு வயது முதல் பேசவராதவனாய், எதிலும் நாட்டம் இல்லாதவனாய் இருக்கிறான் என்று கலங்கி நின்றார்.  சங்கரர் அந்த சிறுவனை அணைத்துக் கொண்டார்.  

குழந்தையாய் நீ யார்? யாருடைய மைந்தன், நீ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? என்று கேள்விகளை எழுப்பினார். 

அப்போது அந்த சிறுவன் சங்கரரிடம் தன்னை பற்றி சில சுலோகங்களை வடமொழியில் சொல்கிறான்.

நான் மனிதன் அல்ல. தேவனோ, யச்சனோ, அந்தனனோ,அரசனோ அல்ல.

நான் பிரம்மச்சாரியும் இல்லை.  கிரகஸ்த்தணும் இல்லை. பாலபிரயத்தனும் இல்லை.கிழவனும் இல்லை. ஒட்டு மொத்த சன்யாசியும் இல்லை.

யார் ஒருவனும் இல்லை. அல்லேன், நான் ஞான சொருபமானவன் என்று அச்சிறுவன் பதில் சொல்கிறான்.

மண்ணாலான பல பானைகளில் உள்ள நீரில், பல பிரதி பிம்பங்களாக சூரியன்  காணப்பட்டாலும் எல்லாம் ஒரே சூரியன்தான்.

அது போல பல சரீரங்களில் உள்ள பல்வேறு ஜீவர்களாக பிரகாசித்த போதும் அவை அனைத்தும் ஒரே விஷயம்தான்.

இப்படிப்பட்ட ஒருவனாக எவன் சுடர் விட்டு பிரகாசிக்கின்ற ஆன்மாவாக இருக்கிறானோ.... அந்த ஆன்மா நான்.

நான் இன்னது, இவள் இன்னது, அது இன்னது என்ற பிரிவு அபத்தம். ஒன்றே பல விஷயங்களாக இந்த உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. அதுவே வெவ்வேறு வித ரூபமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ரூபமாக நான் இருக்கிறேன் என்பதை ஒருவன் புரிந்து கொண்டால், அவன் மற்றவரை எப்படி அணுகுவான்?

அவருக்கும் மற்றவருக்கும் என்ன வேற்றுமை, எல்லா வேற்றுமைகளையும் உடைத்து எரிந்து விட்டு எல்லாமுமாக ஒருவன் பிரகாசிக்க முடியும் என்றால், அந்த ஆன்மா நான்.

மேலே இருக்கும் சந்திரன் காற்றில் அசையும் அலைகளால் ஆடுவது போல் இருக்கும். ஆனால் சந்திரனா ஆடுகிறான்.

இல்லை இது கண் கொண்ட மயக்கம். இதே மயக்கம் தான் புத்திக்கும் இருக்கிறது.


புத்தி எதிரே   இருப்பவர் அன்னியர் என்று நினைத்து கொள்கிறது. வேறு மதத்தவர், வேறு இனத்தவர், வேறு குலத்தவர் என்று நினைக்கிறது.

உயர்வு தாழ்வு என்றும் பிரித்து கொள்கிறது. இது புத்தியின் ஆட்டம். மாயையான பார்வை.  ஆனால் எல்லா உயிர்களுக்குள்ளும்  இருக்கிற அந்த விஷயம் பேதமற்றது.

அதுதான் உன்னிடத்திலும் சகல இடத்திலும் பரவி இருக்கிறது. இதை தெரிந்து கொண்ட ஆன்மா நான்.

சிறுவன் சொன்ன சுலோகங்களை பார்த்து தந்தை பிரமித்து விடுகிறார். புதல்வனை வெளிக்கொண்டு வந்த குருசங்கரரை பார்த்து கைக்கூப்பி கண்ணீர் மல்க நிற்கிறார்.


இவனை மகனாக அடைந்தது உங்கள் பாக்கியம். இவனால் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. இவன் என்னோடு இருக்கட்டும் என்று தன்னோடு அழைத்துக்கொண்டு போகிறார்.

சீடர்கள்.. சங்கரிடம் இந்த குழந்தை ஏன் இப்படி ஆயிற்று? ஏன் பேசாமல் இருந்தது என்று கேட்டனர்.

இந்த சிறுவன் குழந்தையாய் இருந்தபோது, இவனது தாய் கங்கையில் குளிக்கப்போனாள்.

அப்போது கரையில் இருந்த ஒரு சாதுவின் இடத்தில் இந்த குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டு சென்றாள்.

கரையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அந்த சாது பார்த்து கொண்டிருக்கும்போது தவறி கங்கையில் விழுந்து விட்டது. பதறிப்போன சாது ஓடிப்போய் குழந்தையை தூக்கினார். குழந்தையின் உடலில் உயிர் இல்லை.

சாது கலங்கிப்போனார். பெற்றவளுக்கு என்ன பதில் சொல்வது,என்ன செய்வது என்று தடுமாறிய சாது பெற்றவள் அழக்கூடாது என்று தீர்மானித்து, தன் உடம்பை விட்டு குழந்தையின் உடலுக்குள் புகுந்து கொண்டார்.

அந்த சாதுவே இந்த சிறுவன் என்று பதில் கூறினார் சங்கரர்.