ராமன் ஒழுக்க சீலன். ஏகபத்தினி விரதன். பெரியோர்களை மதித்து போற்றுபவன்.
தந்தை சொல்லை தாரக மந்திரமாக ஏற்று கானகம் சென்றவன்.வசிட்டர், விசுவாமித்திரர், பரத்வாஜர், அகத்தியர் போன்ற முனிவர்களின் ஆலோசனையின் படி கேட்டு நடந்தவன் என்பது ராமாயாணம் படிக்கும் போது தெரியவருகிறது.
குகனை தன் தம்பியரில் ஒருவனாக என்றுக் கொண்டதில் இருந்தும், அனுமனை தந்தையின் ஸ்தானத்தில் வைத்து போற்றியதில் இருந்தும், ராமன் அனைவரையும் வேறுபாடின்றி மதித்து அன்பு செலுத்துபவன் என்று அறிய முடிகிறது.
இத்தகைய குணங்களினால்தான் இப்பூமியிலே அனைத்து குணநலன்களிலும் சிறந்தவனாக யாரும் இருக்கிறார்களா என்று வால்மீகி கேட்கும் போது நாரதர், அப்படி பட்ட ஒருவர் அயோத்தியை அரசாலும் ஸ்ரீராமர் என்று கூறினார்.
அதே போல் மகாபாரதத்தில் கண்ணன் ஆலோசனை சொல்வதில் தந்திரசாலியாக திகழ்கிறான்.
கண்ணனின் ஆலோசனைப்படியே குந்தி கர்ணனிடம் வரம் கேட்கிறாள். அது பாண்டவர்களுக்கு சாதகமாக அமைந்தது.
பாண்டவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படியே செயல்படுகின்றனர். குருசோத்திர போரிலும் தன் உறவினர்களை பார்த்து தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, அவனுடைய கடமையை பற்றி உபதேசம் செய்கிறான்.
அர்ச்சுனனின் சந்தேகங்களை போக்குகிறான். பீஷ்மரை வெல்வதற்கும், துரோணரை மாய்ப்பதற்கும், கர்ணனை சாய்ப்பதற்கும் கண்ணின் ஆலோசனையே உதவி புரிந்தன.
மகாபாரத போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு அவர்கள் கண்ணனின் சொல்படி நடந்ததே காரணம். எனவே தான் கண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று கூறும் வழக்கம் வந்தது.
மதிவாணன்
விளக்கம் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDelete