இப்போது இலங்கைக்கு எதிரான கோடை மழை கொஞ்சமும் தணிந்த பாடில்லை. மாணவர் போராட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது புது டில்லிக்கு புரிந்ததோ என்னவோ, இலங்கைக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது மத்திய அரசு.
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு புதிய தூதராக ஒருவரை அனுப்பி வைக்க முடிவு செய்த இலங்கை அரசு, அதற்காக இலங்கை தேர்ந்தேடுத்தவர் பெயர் ஏ.சப்ரூல்லா கான்.
தற்சமயம் தற்காலிக பொறுப்பில் இருப்பவர் அமீர் அஜ்வாத்.
புதிய தூதர் வந்ததும் அவரிடம் தன் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு இலங்கை திரும்ப வேண்டும்.
ஆனால் இங்கே தான் சிக்கல்.
தன் புதிய தூதரை இந்தியா அனுப்பி வைக்க இந்திய விசாவுக்கு அனுமதி கேட்டு காத்திருக்கிறது இலங்கை. ஆனால் இதுவரை எந்த பதிலுமே இல்லை இந்தியாவிடம் இருந்து.
இதுதான் இப்போது இலங்கைக்கு புதிய குழப்பம். எப்போதும் ராஜாங்க நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் பதில் வந்து விடும்.
ஆனால் இந்த புது தூதருக்கு விசா கேட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பதில் இல்லை.
ஒரு வேலை, தமிழக சூடு குறையட்டும் பிறகு பார்க்கலாம் என்று நினைக்கிறதா?
அல்லது தமிழ் நாட்டில் இலங்கை தூதரகம் இருப்பது பல தொல்லைகளை ஏற்ப்படுத்துகிறது.
முணுக்கென்றால் இலங்கை தூதரகத்தை நோக்கி போய்விடுகிறார்கள். அதனால் தமிழ் நாட்டில் இலங்கை தூதர்கத்தை எடுத்து விடலாமா? என்று மத்திய அரசு நினைக்கிறதா தெரியவில்லை.
பார்க்கலாம். கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும்.
No comments:
Post a Comment