ads

Friday, 12 April 2013

2000 இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை உத்தரவு!!




பிரபாகரன் இறப்பின் போது கூட இந்த அளவிருக்கு எதிர்ப்பலைகள்  வீசவில்லை தமிழகத்தில். 

ஆனால் அவரது இளையமகன்   பாலச்சந்திரன் இறப்புதான் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது.  

அதனால் மத்திய அரசு முன்பு போல் இலங்ககையின்  நட்பை வெளிப்படையாக காட்ட முடியாத சூழல்.

இதை நன்கு உணர்ந்து கொண்டார் ராஜபச்சே.  அதோடு தழிகத்தில் சிங்களவருக்கு எதிரான தாக்குதல்களில் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதும் வெளிப்படை.  . 

அவர் தான் காய்கள் கூட்டத்தில் கனிகளை பறிப்பதில் வல்லவராச்சே. அதனால் இந்தியாவிருக்கு எதிராக சில காரியங்களை செய்ய துவங்கிருக்கிறார்.  

இது ஆரம்பம் தான். 

அப்படி என்னதான் செய்கிறார்?

இலங்கை கொழும்புவில்  கப்பல் கட்டும் அரசு நிறுவனம்  டொக்யார்ட்டில். இதில் இந்தியாவில் இருந்து சென்று  பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 2000 பேர்.



நமக்கு ஆதரவாக இல்லாத இந்தியர்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

இந்த யோசனையின் விளைவு, அங்கு பணியாற்றும் இந்த 2000 போரையும் வெளியேற்றப்படலாம் என்ற முதல் அறிகுறி ஆரம்பமாகிவிட்டது.

முதலில்,  கொழும்புத் துறைமுக போர்ட்டர்கள்  சங்கத்தின் தலைவர் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தமிழிகத்தில்   சிங்களர்கள் இனியும் தாக்கப்பட்டால், தமிழ்நாட்டில் இருந்து கப்பல்களில் வரும் எந்த பொருள்களையும் துறைமுகத்தில் இறக்க மாட்டோம் என்று  எச்சரித்திருந்தார். அவர் அரசு சார்பு சங்கத்தின் தலைவர்.

அடுத்து தமிழ் திரை உலகம் போராட்டம் நடத்துகிறது. இவர்கள் இலங்கைக்கு எதிராகவும், விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவும் போராடுகிறார்கள்.

அதனால் தமிழ் படங்களை இனி இலங்கையில் திரையிடக் கூடாது   என்று புத்த பிச்சு அமைப்பு திரைப்பட கண்காணிப்பு ஆணையத்திடம் முறையிட்டது.

அதன் தொடர்ச்சியாக இப்போது 2000 பேரை வீட்டுக்கு அனுப்பும்  நடவடிக்கை எடுக்கப் படலாம் என்றே தெரிகிறது. இதை வெளிப்படையாக  பேசியது இலங்கை தொழில்துறை அமைச்சர் காமினி லொக்குகே.




அவர் மேலும் கூறுகையில் கொழும்பு டொக்யார்ட்டில் சுமார் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்தியத் தொழிலாளர்கள் இங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். இதை மறுப்பதற்கில்லை. அவர்கள் விரைவிலேயே சிங்களம் பேசவும் கற்றுக் கொள்கிறார்கள்.

இருப்பினும் நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கவும், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும்,  இந்தியர்களுக்கு பதிலாக இலங்கையர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட உள்ளது  என்றார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?

இங்கே கால் பதித்து கட்டுமானத்துறையில் கொடி கட்டி பறப்பது சீனா.

இப்போ கணக்கு சரியா வருதா?





No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...