நம்பினால் நம்புங்கள். நிச்சயம், இது தான் உலகின் ஆபத்தான சந்தையாக இருக்கும் என்கிறது சி.என்.என் .
இந்த பிசியான சந்தைப் பகுதி தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Talad Rom Hoop என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்த சந்தையை குறுக்காக வெட்டியது போல் ரயில் செல்கின்றது.
ஒரு நாளைக்கு எட்டு தடவைகளுக்கு மேல் செல்லும் இந்த ரயில் சந்தையில் பொருட்களை வாங்க வருபவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.
இந்தக் காணொளியைப் கவனமாகப் பாருங்கள்…
ரெயில் அடித்தபடி வருகின்றது. மக்கள், வியாபாரிகள் எல்லாம் ஓரமாக நிற்கின்றார்கள்.
ரெயில் கடந்து போனதும் வெயில், மழைக்கு வைத்திருந்த தரப்பாள்களை எடுத்து தண்டவாளத்தில் ஊன்றுகின்றனர்.
என்ன ஒரு மனிதர்கள் இவர்கள்?
இந்த ரயிலால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அநேகம் பேர்.
அனேகமாக எல்லாப் பொருட்களும் இந்த சந்தையில் கிடைக்கின்றது.
இப்படி ஒரு ஆபத்தான சந்தையை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா?
வீடியோ பார்க்க இணைப்பு இதுதான் கிளிக் செய்யுங்கள்
ஆபத்தான சந்தையை பார்த்தீர்கள். அடுத்து ஆபத்தான பள்ளி செல்லும் வழி ஒன்றையும் பாருங்கள்.
இந்த உலகிலேயே இயங்கி வருகின்ற மிகவும் ஆபத்தான பள்ளிக்கூடம் செல்லும் வழி இதுவாகத் தான் இருக்கும்.
ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் பள்ளிப் படிப்பு மிகவும் முக்கியமானது.
ஆனால், இந்தக் குழந்தைகள் படித்து தாங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு எப்படி ஒரு ஆபத்தில் ஒற்றைக் காலில் நிற்கின்றார்கள் என்று பாருங்கள்.
இந்தப் படங்கள் இந்தோனேசியாவின் மேற்கு கடற்கரை ஓரத்தில் உள்ள Sumua Bana என்ற கிராமத்தில் எடுக்கப்பட்டவை. கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது.
உடைந்து தொங்கும் பாலத்தில் மாணவர்கள் ஆபத்தில் பயணிப்பதைப் பார்க்க எங்களின் இதயம் வேகமாகப் படபடக்கின்றது.
2008 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற பாரிய பூகம்ப அழிவுக்குப் பின்னர் இந்தப் பாலம் இன்னும் திருத்தப்படவில்லை என்பது தான் மாணவர்களின் சோகத்துக்கு காரணம்.
வியப்பான தகவல்கள்... நன்றி...
ReplyDelete