Follow by Email

Friday, 19 April 2013

என்னதான் செய்யும் நாகதோஷம்?
கண்ணுக்கு லச்சனமான பையன். கவர்மெண்ட் வேலை. கைநிறைய சம்பளம். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம். 

பெண்ணை கட்டிகொடுத்தால் காலத்திற்கும் கவலை இல்லாம இருக்கலாம்.

இது பெண்ணை பெற்ற பெருமாளின் கணக்கு. ஆனால் ஜோதிட கணக்கு போட்ட ஜோசியர் போட்டார் ஒரு குண்டை. 

பொண்ணு ஜாதகம் கிளின். ஆனால் பையன் ஜாதகத்திலே நாகதோஷம் இருக்கு, சரியா வராதுங்களே. 

அவ்வளவுதான் .. பெருமாள் ஆசையில் மண்ணை போட்டார் ஜோதிடர். ஜோதிட நம்பிக்கை உள்ள பெருமாளுக்கு, அதை மீறி பொண்ணுக்கு கன்னிகாதானம் செய்ய விருப்பம் இல்லை. விழுந்து விட்டது முற்றுப்புள்ளி. 

அப்படி என்னதான் செய்யும் நாகதோஷம்?

அதற்கு முன் சிறு விளக்கம். பொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.

அதோடு இவர்கள் ஓன்று எழில் அல்லது இரண்டு எட்டில் இருந்தால் .கடும் பாதிப்புக்களை தருவதாகவும், நான்கில், பனிரெண்டில் இருந்தால் பாதியளவு பாதிப்பை தருவதாகவும் ஜோதிடம் சொல்கிறது.

அதற்கான விளக்கம் இதுதான்.

தாமத திருமணம், தாம்பத்திய தகராறு, கணவன் மனைவி அன்னியோனியம் குறைவு, பிறதார சேர்க்கை அல்லது பிரிவு என்றெல்லாம் பட்டியலில் ஒரு பகுதி.

ஆராய்ந்து பார்ப்போம். முதலில் லக்னம்.

லக்னம் என்பது என்ன? ஒரு ஜாதகரின் குணத்தை பிரதி பலிக்கும் கண்ணாடி. ( இது முழுமையான கருத்தல்ல. ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளலாம்)

அங்கே பாம்பு கிரகங்கள் அமர்வதால் ஜாதகர் முரண்பட்டவராக காட்சி அளிப்பார். நம்பகத்தன்மை என்பது  குறைவு.

பெரிய வேதாந்திகள் மாதிரி வியக்கியானாம் செய்வார்களே தவிர, அதை வாழ்க்கையில் கடை பிடிக்கிறார்களா என்பதை  சி.பி.சி.ஐ டி, சி.பி.ஐ, போட்டுத்தான் கண்டுபிடிக்க முடியும். அவ்வளவு ரகசியமானவர்கள்.

ஏழில் இவர்களில் ஒருவர் இருந்தால் மணமேடை பாக்கியத்திற்கு தடைஉத்தரவு வந்து விடும்.

முறையற்ற உறவுகளில் முனைப்பும் ஆர்வமும் காட்டுவார்களாம். அது சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் போன்ற ஏதாவது ஒரு கிரகங்களின் சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக மறுபக்கம் என்பது இருந்தே தீரும்.

இது பலன். சரி.. ஒருவருக்கு இந்த அமைப்பு இருந்தால் மற்றவருக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லக் காரணம் என்ன?

ஒருவர் தீய பழக்கம் கொண்டவராக இருந்தால், மற்றவர் நல்லவராக இருந்தால் தானே குடும்ப வண்டி நல்லவிதமாக ஓடும்.

அப்பறம் ஏன் தோஷம் இருந்தால் தோஷம் வேண்டும் என்று வலு கட்டாயமாக இணைக்க வேண்டும்?

நல்ல கேள்விதான்.

பாம்பின் கால் பாம்பறியும். இருவரும் ஒரேகுணம் கொண்டவராக இருக்கும் போது, தவறுகள் நடக்காது. இது திருடன் கையிலே சாவி கொடுத்தால் திருட்டு போகாது என்கிற மாதிரி தான்.

ஆனாலும் இது வேற சங்கதி.

ராகு கேது பாலுணர்வை தூண்டுவதில் வல்லவர்கள். இது ஆணுக்கு இருந்தால் அவர் மன்மதனுக்கு மருமகனாக இருப்பார்.ஆள் அந்த விஷயத்தில் பலே கில்லாடி.

பெண்ணுக்கு இருந்தால் காமனுக்கு மாமன் பெண்ணாக  இருக்கும்.

இவர்கள் ஒன்றிணைந்தால் என் ..இன்டு... என் பிளஸ் ஒன், ஹோல் சோகையர்... பை டூ.. என்ன புரியலையா.. புரியுறவங்களுக்கு புரியும். புரியாதவங்கள் சுட்டி டி.வி பாருங்க.

அப்படியும் புரியலையா?

அதாவது,  ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாவிட்டால் வீட்டு சாப்பாடு வெறுத்து போகும். ஓகே.

ஏழில் ராகு கேது இருந்தால் பார்க்கிற இடத்திலேயே பரிசம் போடுற மாதிரி அழகு பெண்ணா இருந்தாலும் சரி,  டிப் டாப்பா அச்சு அசல்  அரவிந்த சாமி மாதிரி ஆணாக இருந்தாலும் சரி, மாப்பிள்ளையா மணமேடை ஏற முடியாது, மாப்பிள்ளை தோழனா தான் நிற்க முடியும் என்பது அனுபவ உண்மை.

ஆனால் இந்த வீட்டுக்கு உரிய கிரகங்கள் நல்ல நிலையில் இருந்து, குரு பார்வையும் இருந்தால், கரிச்சான் குஞ்சு மாதிரி இருந்தாலும் கல்யாணம் ஆயிடும்ங்கோ.

இரண்டில் ராகு கேது இருந்தால் முன்கோவம், முரட்டுத்தனம், வாய் நீளம்.

அப்போ மற்றவருக்கும் இருந்தால்?

இந்த மனுஷன் இப்படித்தான்...பெண்

இவளை திருத்தவே முடியாது- ஆண்.

சமபலம் பொருந்திய வக்கீல்கள். வாதத்தில் வெல்ல முடியுமா? விட்டுக் கொடுத்துதான் ஆகணும்.

எட்டில்?

பொண்ணுக்கு இருப்பின் மாங்கல்ய பலம் குறைவு. குடும்ப வாழ்வில் குளறுபடி, ஆணுக்கு இருந்தால் நோய், கடன், எதிரி, கண்டம்.

இருவருக்கும் இருந்தால்?

எதுவும்  எல்லை மீறி போகாது. ஆனாலும் பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். கூடிகுறையும் குடும்ப சந்தோசம்.

இதற்கு தனபாவ கிரகங்கள் வலுவாக இருக்கிற மாதிரி பார்த்து இணைத்து விட்டால், எங்கிருந்தோ, எப்படியோ பணம் வரும். ஓகே..

No comments:

Post a Comment