Follow by Email

Friday, 20 January 2012

வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொண்டால் வாலிபம் பறி போகுமா?

காதலுக்கு கண்ணில்லையாம்.  

காதலுக்கு மட்டுமா கண்ணில்லை?  காமத்திருக்கும் கூட கண்ணில்லை.  எத்தனையோ பேருடைய வாழ்க்கை வழிமாறி போனதற்கு,  காமம் ஒரு காரணம்.  

காமத்திருக்கு கண் இருந்திருந்தால்,  சர்வ வல்லமை பெற்ற ராவணன், சர்வேஸ்வர்ணனுக்கு இனையான ராவணன், சீதை அழகில் மயங்கி, செல்வாக்கிழந்து,  சிம்மாசம் இழந்து, கடைசியில் தன் உயிரையும் இழக்கும் அவல நிலை வந்திருக்குமா?

ராவணன் வீணை வாசித்தால் பரமசிவனே சொக்கிபோவாராம்.  பிறப்பில் இல்லை என்றாலும்,  மறுக்க முடியாத பிராமனனாம் ராவணன்.  வேதம் அறிந்த வகையில்.  

ராவணன் ராமனால் வீழ்த்த பட்டு போர்க்களத்தில் மலையென வீழ்ந்து கிடக்கிறான்.  தகவல்  அறிந்த ராவணனின் மனைவி மண்டோதரி போர்க்களத்திருக்கு ஓடி வருகிறாள்.   

ராவணனை பார்த்து கதறுகிறாள்.  தன்னை அடக்கி தவம் செய்த நீங்கள் சீதையை பார்த்து சீரழிந்து விட்டீர்களே.   என்னிடம் இல்லாத எது சீதையிடம் இருக்கிறது.  அல்லது என்னை விட சீதை அழகா? என்று ஓலமிட்டு அழுதாளாம் மண்டோதரி. 

இங்கே ராவணன் இறப்புக்கு காமம் தான் காரணம்.  கொலையில் முடிந்த காமம். தற்கொலையில் முடிந்த காமம் என்று பல கதைகள் உண்டு.  

கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு மாதிரி வப்பாட்டி வேணம்னு சொன்னது கூட காமம் தான் காரணம். 

வைற்றுபசி மாதிரி,  உடல் பசியும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.  ஓரறிவு படைத்த உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை இதில் அடக்கம்.  மறுக்கவில்லை. 

 பொன்னி நதி அவ்வளவு போன ரத்தம் போன பின்பு 
கன்னியரை யேசுதடா உள்ளம் - அது 
காலிடறி யானை விழும் பள்ளம்.

சிற்றின்ப உலகில் ஊறி திளைத்த அனுபவ ஞானி கண்ணதாசன் சொன்ன வைர வரிகள். 

இந்த கட்டுரையின்  நோக்கம் வேறு.   இல்லங்கள் தோறும் நடக்கும் இதற்கு, ஒரு வரைமுறை, ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான்.  

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதான் என்பது,   கேட்க ரசனையா இருக்கும்.  ஆனா நடைமுறைக்கு சாத்தியமா? அது தான் கேள்வி. இல்லற ஒப்பந்தத்தில் இணையும், ஆணுக்கும்  பெண்ணுக்கும் வயது வித்தியாசம்  கண்டிப்பாக வேண்டும்.  

அதுவும் வயதில் பெண் இளையவளாகவும்,  ஆண் முத்தவனாகவும் இருக்க வேண்டும். 

ஏன்?  

வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொண்டால் வாலிபம் பறி போகும். அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த நடைமுறையை கொண்டு வந்தார்கள்.  

ஆனால் காமத்திற்குதான் கண்ணில்லையே? 

சிக்கினா சிட்டையை போடுறது, சந்தர்ப்பம் கிடைச்சா சங்கூதுறது சிலருக்கு சகசம்.  அதனால் வரும் எதிர் விளைவுகள் என்ன?

ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது பெண்ணின் உடலில் இருந்து  சுறேனியம் என்ற திரவம் உற்பத்தி ஆகிறது.  ஆணின் உடலில் சுக்கிலியம் உற்பத்தி ஆகிறது.  

இந்த திரவங்கள் மாறி மாறி ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் பாய்கிறது.  வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொள்ளும் போது,  பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் சுறேனியம் அந்த ஆணுக்குள் செல்லும் போது,  வாலிப தன்மை குறைந்து வயோதிக தன்மை அதிகமாகிறது.  

வயதில் மூத்த பெண்ணுடன் தொடர்ந்து உறவு கொள்ளும் போது,  முப்பது வயது ஆடவன்,  பத்து வயது கூடியமாதிரி தோற்றம் பெறுகிறான்.  நாற்பது வயது ஆடவன் நரைத்து,  தோல் சுருங்கி கிட்ட தட்ட முதுமை தன்மையை அடைகிறான்.  

அப்புறம் மூலிகை மாத்திரை, வயக்கிரா என்று எதையாவது நாட வேண்டிய கட்டாயம் வந்து விடும்.

அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும்.  அதனால் சின்ன வியாதி கூட பெரிய அளவில் பாதிக்கும்.  அதனால் இந்த விசயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  

இல்லைனா.... சொந்த செலவிலேயே சூனியம் வச்ச கதைதான் நடக்கும்.

No comments:

Post a Comment