குழந்தையும் தெய்வமும் ஓன்று என்பார்கள். கராணம் அதற்கு எந்த வஞ்சக குணமும் இருக்காது.
பழிவாங்கும் உணர்வும் இருக்காது. எழுதப்படாத வெற்று காகிதமாக இருக்கும்.
அவர்களுக்கு நல்லதை சொல்லி கொடுக்கலாம், அற உணர்வை உருவாக்கலாம். ஆன்மீகத்தை, மனித நேயத்தை, சகோதரத்துவத்தை ஆழ்மனதில் பதிய வைக்கலாம். ஆனால் அதுவே தீவிரவாதிகளின் பார்வை இந்த குழந்தைகளின் மேல் விழுந்தால்?
Little Commandos என்று பெயரிடப்பட்டு தலிபான்களினால் வெளியிடப்பட்டுள்ள வீடியோக் காட்சி ஒன்றில் 20 க்கும் மேற்பட்ட சின்னம் சிறுவர்கள் சிறு ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள் வரை பாவித்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
குறித்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டு லண்டன் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் படங்களில் நான்கு சிறுவர்கள் பிஸ்டல் துப்பாக்கிகளிலும், ஐந்து சிறுவர்கள் AK 47 ரக துப்பாக்கிகளிலும், ஒருவர் இயந்திரத் துப்பாக்கிகளிலும் பயிற்சிகளைப் பெறுகின்றனர்.
இவர்களில் யாராவது ஒருவர் இந்தியாவில் குண்டு வைக்க வரலாம். நாச வேளையில் ஈடுபடலாம் யாருக்கு தெரியும்?
வீடியோ லிங்க்
No comments:
Post a Comment