ads

Tuesday, 9 April 2013

தமிழ் படங்களை திரையிட்டால் நடக்கிறதே வேற? மிரட்டல்!!




இதுக்கு பெயர்தான் ஏட்டிக்கு போட்டி என்று நினைக்கிற மாதிரி இருக்கிறது இப்போது இலங்கையில் நடக்கும்  சம்பவங்கள். 

தமிழ் திரையுலகினர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்கள். 

அப்படியா சங்கதி என்று அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது புத்த துறவிகள் அமைப்பு. 

அது...

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்பது தான் அது.

இது தொடர்பாக இலங்கை திரைப்பட கார்ப்பரேஷனிடம் புத்த துறவிகள் அமைப்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது. 

பெயருக்கு தகுந்தார் போல் அசுர சக்தியாக விளங்கும் ராவண சக்தி என்ற இந்த புத்த துறவிகள் அமைப்பு, இனிமேல் தமிழக திரைப்படங்கள் இலங்கையில் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளது.

அதோடு நிற்கவில்லை. இலங்கை திரைப்பட தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகரவை இன்று சந்தித்த ராவண சக்தி அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். 

இது என் லிமிட்டுக்குள்ள வரலையே என்று கைவிரித்த அவர், இது தொடர்பாக  அரசு மட்டத்தில்தான் இதுகுறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் காமினி சுமனசேகர தெரிவித்தார்.

இன்னிமேல் இலங்கை திரையரங்குகளில் எந்த  தமிழ்நாட்டு திரைப்படங்களும்  திரையிடக்கூடாது.  

முற்றிலுமாக தமிழ் படங்கள்   திரையிடப்படுவது தடை செய்யப்படாவிட்டால், அதை வெளியிடும் திரை அரங்குகளுக்கு  முன்னால் போராட்டம் நடத்தப்படும் என்று  ராவண சக்தி அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

ஓகே..ஓகே.. முதலில் சரக்குகளை இறக்க மாட்டோம் என்று துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல், இப்போது புத்த துறவிகள் மிரட்டல். நடக்கட்டும்.. நடக்கட்டும்.. எங்கே போய் முடியப்போகுதோ. 

3 comments:

  1. இந்த எருமைகளின் தலைக்குள்ளும் ஒன்றுமில்லை தலைக்கு வெளியேயும் ஒன்றுமில்லை. இலங்கையின் அழிவுக்கு இந்த சாபக்கேடான பிக்குகள் தான் மூலகாரணகர்த்தாக்கள்.

    ReplyDelete
  2. அன்பை போதிக்க வேண்டிய பிக்குகள், இப்படி வன்முறை வெறியாட்டம் ஆடுவதை பார்த்தால் புத்தரே அழுவார். காலம் கலி காலம்.

    ReplyDelete
  3. அய்யா,
    இங்கே தமிழ் நாட்டிலும் ஒரு சாரார் விஸ்வரூபம் வெளியிடும் போது இப்படித்தானே சொன்னார்கள்? சொந்த நாட்டிலே சொன்னால் தவறில்லையா? அண்டை நாட்டிலே சொன்னால் தவறா? அயல் நாட்டு பிரச்னையில் நாம் தலையிடும் போது இப்படியெல்லாம் செய்வார்கள் என்பதை அறியாமல் இருப்போமானால் நாம்தான் அறிவீலிகள். நாம் அவர்களை ஒரு விஷயத்தில் எதிர்க்கும் போது, அது நியாயமோ அநீதியோ, அவர்களும் எதிர் வினையை ஏற்படுத்துவார்கள் தானே? நாம் இதை புரிந்துக் கொள்ள வேண்டாமா?

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...