அழுதால் கைக்குட்டை!
சிரித்தால் எதிரொலி!
வெய்யிலுக்கு நிழல்!
இருளில் வெளிச்சம்!
நம்பிக்கைத் தோழி!
அவசர வங்கி!
ரகசிய மந்திரி!
ஈடில்லா சமையற்காரி!
காய்ச்சல் வந்தால் மருத்துவச்சி!
நமக்காக வழிபடும் பூசாரி!
இன்னும் இப்படி
எத்தனயோ வேலைகள் செய்தாலும்
சலித்துக் கொள்ளாமல்
சம்பளம் இல்லாத
வேலைக்காரியாய் இருப்பதே
சந்தோஷம்தான் அம்மாவுக்கு!
அம்மா...!
வயதாகி தளர்ந்து விடும்போதும்..!
அவளுக்கு உதவிகள்
தேவைப்படும் போதும்..!
வெளியில் கூட்டிக்கிட்டு போடா என்று
கெஞ்சும்போதும்..!
குழந்தைபோல்
எதையாவது கேட்கும் போதும்!
வாய்க்கு ருசியாய்
உண்ண ஆசைப்படும் போதும்!
அதை நிறைவேற்றுவதே
முதல் கடமை நமக்கு!
இல்லையென்றால்
விமோச்சனமே இல்லை நமக்கு!
-மதிவாணன்
அருமை... சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தமைக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...