விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் சுட்டு கொல்லப்பட்ட படம் வெளியான நாள் முதலே உலகம் முழுவதும் தமிழ் ஈழ அலை அடிக்க தொடங்கி விட்டது.
இதன் தாக்கம் தமிழ்நாட்டில் சற்று அதிகம். கல்லூரிமாணவர்களை போராட்டக்களத்திற்கு இழுத்து வந்தது..
பாவம் அரசியல் கட்சிகள். இதை வைத்தே பொழப்பை நடத்தியவர்கள் ஆசையில் மண் விழுந்து விட்டது.
ஆனாலும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மு.க ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அலை வீசுவதை உணர்ந்து கொண்டவர், அதில் இருந்து விலகி வந்து விட்டார்.
இவர் எட்டடி பாய்ந்தால் ஜெயலலிதா பதினாறு அடி பாய்கிறார்.
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் , இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் , ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்குத் தமிழ் நாட்டில் தடை என அடுத்தடுத்து அதிர் வேட்டுக்களை போட்டு கொண்டிருக்கிறார்.
மக்களின் நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்ப்ப முடிவுகளை மேற்கொள்வதுதான் ஆளும் அரசாங்கத்தின் கடமை. அதை மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு மேல் ஒரு படி மேலே சென்று நடத்திக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர்.
ஒரு காலத்தில் ஈழ பிரச்சனயை பற்றி செவி சாய்க்காத ஜெயலலிதா இப்போது போகும் வேகம் புயல் வேகம்.
அடுத்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே எல்லாம் செய்கிறார் என்றாலும், இதனால் மத்திய அரசு இலங்கைக்கு முழு ஜால்ரா போட முடியாத நிலை.
பொதுவாக புலிகள் இயக்கத்தில் இருந்து யாருக்கும் கடித பரிமாற்றங்கள் அதிகம் செய்வதில்லை.
தங்களுக்கு அவசியம் ஏதும் காரியம் ஆக வேண்டி இருந்தால் மட்டும் இது நடக்கும்.
சாவின் விளிம்பில் நின்ற கடைசி காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசன், அ.தி.மு.க. தலைமைச் செயலகத்துக்கு பேக்ஸில் அனுப்பி வைத்த கடிதம் ஒன்றை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தலாம் என்று ஒரு செய்தி சொல்கிறது.
அப்படி என்ன இருக்கிறது அந்த கடிதத்தில். அதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment