Follow by Email

Saturday, 21 January 2012

செக்ஸ் வக்கிரம்/ SEX VAKKIRAM

ஐயா வணக்கம்.

வணக்கம் சொல்லுங்க.

என்னோட ஜாதகம் பார்க்கணும், அமொண்ட் எவ்வளவு சார்?

300 ரூபாய்.

ஒரே கேள்வி... எஸ் ஆர் நோ பதில்தான்.

ஓகே அனுப்புங்க.

அனுப்பினார்.  வந்தது ஜாதகம்.  பெயர் முகேஷ்.  வயது முப்பது.  ஊர் சென்னை.

கேள்வி இதுதான்.

மாமியாரை அடையும் பாக்கியம் உண்டா?

பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன்.  கேள்வியா இது.  கேவலம். 

நம்மை சுற்றி உள்ள சமுகத்தில் எத்தனை விதமான மனிதர்கள்.  விலங்குகள்
மட்டும் தான்,  பாகுபாடில்லாமல் பாலின உறவு வைத்து கொள்கிறது.

அவற்றின்  செக்ஸ் தேவை என்பது,    இனவிருத்தி என்பதோடு நின்றுவிடும்.

ஆனால் மனிதர்கள்?

இன்று எத்தனையோ கேள்விபடுகிறோம். கருப்பு உறவுகளை, கள்ள தொடர்புகளை பேப்பர்ல பார்க்கிறோம்.  மீடியாக்களில் வருகிறது.  இவை எல்லாம் வயசு கோளாறு என்பதா?  வக்கிர புத்தியா?

சந்தேகம் இல்லாமல் வக்கிரம்தான்.  பொதுவா வக்கிரம் என்பதே இயல்பான  என்பதை தாண்டிய ரகம்.

ஒரு குழந்தை தவறு செய்கிறது.  ஏய்... இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்வது ஒரு ரகம்.  அது வலி தாங்குற அளவுக்கு கையால் சிறு தட்டு தட்டுறது இன்னொரு ரகம்.  ஆனா கொல்லி கட்டையை எடுத்துகிட்டு சூடு போட்டா,  அதுதான் வக்கிர புத்தி.

இங்கே கேள்வி கேட்ட முகேஷ்சும் வக்கிர புத்தி ஆத்மாதான். 

செக்ஸ் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல.  பால்யம் கடந்து பருவம் எய்தும் போது எதிர் பாலினினத்தை பார்த்து ஏற்ப்படும் ஈர்ப்புதான் காதல்.  அதன் அடுத்த நிலை காமம்.

இது இயற்கை.  வரும்.... வரணும்..... வரலேன்னா அவசியம் ஆராயணும்.

பொதுவா சொல்லனும்னா... ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலின உறுப்புக்கள் என்பது,  கழிவு நீர் பாதை. அதனுடைய அத்யாவசிய பணியே அதுதான்.  அதனுடைய உபவேலை தான் கலவியல் தொடர்பு.

இந்த கலவியளை காலம் காலமாக சமூகம் அங்கீகரித்தே வந்திருக்கிறது.

காரணம்.... உயிரின தோற்றம், சந்தத்தி விருத்தி, குழந்தை பேறு, இதற்காக கலவியல் என்பது கட்டாயமே.   புராண காலம் தொட்டே கலவியலை நேரடியாகவும், மறைமுகமாகவும் வலியுறத்த படுகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான், கோவில் கோபுரங்களில் ஆண் பெண் கூடுகிற மாதிரியான மன்மத சிற்ப்பங்கள் மறைக்காமல் வைக்கபட்டன.

இன்னும் சொல்லப்போனால் இந்து மத கடவுள்கள் பெரும் பகுதி, காதலிப்பது போலவும்,  கல்யாணம் செய்து கொண்டது போலவும்,  பிள்ளை பெற்று கொண்டதாகவும் கதை கலங்கள் உள்ளன.

இதோ இந்த கட்டுரையை எழுதி கொண்டிருக்கும் நானும்,  அதை படித்து கொண்டிருக்கும் நீங்களும் கூட,  கலவியல் வழியாக கண்டெடுக்க பட்டவர்கள்தான்.

ஆனால் இது அங்கீகரிக்கப்பட்ட உறவுகள் வழியாக வருவது.  சமுக கட்டமைப்பில்  சில விதி முறைகள் இருக்கிறது. பார்க்கிற நபரை எல்லாம் பாலின பார்வை பார்க்க முடியாது.

பெண்தான்.... தாய்க்கும் தாரத்திர்க்கும் வித்தியாசம் உண்டு.  தங்கைக்கும் தாரத்திருக்கும்  வித்தியாசம் உண்டு.  அந்த வேறுபாடு  தெரியாதவன் மனிதனாக இருக்க முடியாது.  மிருகம்தான்.

குறிப்பிட்ட நேரம் வந்தா வயறு பசிக்குது.  அதை போலவே குறுப்பிட்ட வயதை எட்டும் பொது உடம்பு பசிக்குது.   வயற்று பசிக்கு தீனி போடுவது மாதிரி, உடல் பசிக்கும் தீனி தேவை.  ஆனால் இதற்கு ஒரு எல்லை உண்டு.

தாய்க்கு சமமாக பார்க்கப்படவேண்டிய மாமியார், வெறும் போக பொருளாக இவனுக்கு தெரிகிறது என்றால், அவன் வளர்ந்த விதம் அப்படி.

ஒருவன் வண்டியில் வேகமாக போகிறான்.  அதை பார்த்ததும் எங்காவாது விழுந்து செத்தாதான் புத்தி வரும் என்று முகம் தெரியாத யாரையாவது பார்த்து சொல்வது கூட,  வக்கிரம்தான்.

ஆனால் இந்த செக்ஸ் வக்கிரங்களை அங்கீகரிக்க முடியாது.  இன்னும் சிலருக்கு மனதுக்குள் உறங்கி கொண்டிருக்கும் வக்கரம், பப்ளிக் பாத்ரூம் போனதும் பாடாய் படுத்தும்.

பெற்ற பிள்ளிக்கு ABCD கூட எழுதி காட்டாத நபர்கள், பென்சில் பேனாவால் கழிப்பிட சுவர்களில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டு போவார்கள்.  வர்ற ஆளுக்களுக்கு வாழ்க்கைக்கு பயன்ப்படும்மே அதற்காக.

இந்நிலை மாற வேண்டும்.  மாறுமா? 

1 comment:

  1. சார்

    இந்த மாதிரியான முறையற்ற புணர்ச்சியாளர்களை ஜாதகத்தில் அடையாளம் காண சில ரகசிய வழி முறைகளை கண்டறிந்து வைத்திருக்கிறேன். தாங்கள் விரும்பினால் மின்னஞ்சலில் தங்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்

    நன்றி
    suntaresan@gmail.com

    ReplyDelete