நான்கு சுவருக்குள் ஆணும் பெண்ணும் நடத்துகிற குடும்ப வாழ்க்கைதான் வாழ்க்கை நெறிகள் அனைத்திலுமே உன்னதமானது என்பதை வலியுறுத்தாத அறிஞர்களே இல்லை.
திருமணம் என்கிற பந்தத்தின் மூலம் பெறுதற்கரிய பேறுகளை பெற முடியும் என்பதே இல்லறம். குடும்ப தர்மம்.
கல்யாணம் என்கிற பெயரில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என லைசன்ஸ் பெற்றுக் கொள்வதால் மட்டும் இல்லறம் பிறந்து விடுவதில்லை.
நிறைவான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்றால் அதற்கும் முயற்சியும் தேவை.
முதலில் இல்வாழ்வு எவ்வாறு துவங்குகிறது என்று பார்ப்போம்.
ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியை உரிமம் பெறுகிற போது அங்கெ முதலில் எழுவது காமமும் மோகமும் சார்புமே. இந்த காமமும் மோகமும் தான் இல்வாழ்க்கையின் முதலீடு. குடும்பத்தின் பிடிமானம். மனித வளத்தின் மூலாதாரம்.
இந்த முதலீட்டை செம்மையாகவும் கவனமாகவும் பயன்படுத்தும் தம்பதிகளின் வாழ்வு செம்மையாக அமைகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏழும் இனக்கவர்ச்சி வெறும் முதலீடு மட்டுமே.
கணவன் மனைவிக்கு இடையே நிகழும் கலவியும் புணர்ச்சியும் தான் ஆளுமையின் அச்சாணி. அந்த அச்சாணியை ஆதராமாக கொண்டு தான் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது.
கலவியில் பரிபூரமான ஈடுபாடும் நேர்மையும் தூய்மையும் அமைந்து விடுமானால் அந்த தம்பதிகளை எந்த தீய சக்தியாலும் திசை திருப்ப முடியாது.
வெற்றி அவர்கள் பக்கம்தான். இந்த தெளிவும், சுதந்திர உணர்வும்தான் காதலை வளர்க்கின்றன.
தேக பரிமாற்றத்தில் தொடங்கிய உறவு ஆன்ம பரிமாற்றத்தில் நிலைக்கிறது. இதுதான் ஆரோக்கிய குடும்பம் என்கிறார் பிரபல டாக்டர் எ. ரேணுகா.
இந்த உறவு நிலையை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி என்பதை பல ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.
அதை படங்களாக இங்கே பிரசுரம் செய்திருக்கிறோம். நீண்ட யோசனைக்கு பிறகு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment