Follow by Email

Monday, 30 April 2012

நித்தியானந்தாவிற்கு ஒரு கடிதம்

சுவாமிஜி நித்தியானந்தா அவர்களே... வணக்கம்.

முப்பத்துநாலு வயதிற்குள் புகழின் உச்சிக்கு போனதும் நீங்கள்தான். அடி மட்டத்தில் வீழ்ந்து அவமான பட்டதும் நீங்கள்தான்.

இதுவரை உங்களை பற்றி நான் தெரிந்ததும், அறிந்ததும் கொஞ்சம்தான். திருவண்ணாமலையில் பிறந்தீர்கள் என்பது தெரியும். 

ஆதிசங்கரர் மாதிரி பாலய பருவத்திலேயே ஆன்மீகத்தில் அடி எடுத்து வைத்தீர்களாம். உடல் தாண்டி அனுபவம் என்னும் பேரானந்த நிலையை பனிரெண்டு வயது இருக்கும் போதே அருணாச்சலமலை அடிவாரத்தில் பெற்றதாக சொல்கிறார்கள். 

அனேகமாக இது நீங்கள் சொல்லித்தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கும். 

பதினேழு  வயது வயதிலேயே  குடும்பத்தை விட்டு பிரிந்து பிரிவிராஜா வாழ்க்கையை துவக்கிய நீங்கள் இதுவரை தொட்ட வெற்றி படிகள் பல.

முதலில் உங்களை தியான பீட நிறுவனராக தெரியும். பின் பல்வேறு புத்தகங்கள் வழியாக உங்களை தெரியும்.

நானும் உங்களை நேசித்து இருக்கிறேன். அந்த நேசிப்பு என்பது 151 நாடுகளில்,    ஒரு கோடி பேருக்கு மேல் இருக்கும் பக்தர்களில் ஒருவராக இல்லை.

 உங்களை ஒரு அறிவாளியாக, சிந்தனைவாதியாக, தன்முனைப்பு தரும் தத்துவ ஞானியாக பார்த்ததினால் வந்த அன்பு.

உங்களை நீங்கள் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டி கொண்ட விதம் வேறு.

ஒரு பிரம்மசாரியாக, ஒரு சந்நியாசியாக, விவேகானந்தரின் சீடன் போல் மற்றவர்களை நம்ப வைத்தீர்கள்.

உங்களை கடவுளின் மறு அவதாரமாக மக்கள் பார்க்க தொடங்கினார்கள். நீங்கள் அப்படி இல்லை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம், சல்லாபம்.

திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா  மாதிரி பரபரப்பாக இருந்த நீங்கள், ஒரே நாளில் ஓடி ஒளிகிற மாதிரி நிலைமை உருவானது.

ஏற்றதாழ்வுகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. நீங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

ஆனால் அது உங்கள் தகுதிக்கு சரியா என்பதுதான் கேள்வி.

உங்களுக்கு அடங்க மறுத்த ஆண்மை, வடிகால் தேடிய இளமை, இரண்டும் சேர்த்து உங்களை புதை குழியில் தள்ளி விட்டது.

என்ன செய்ய?  உங்கள் கெட்ட காலம் ரஞ்சிதா உருவத்தில் இருந்தது. 

வயசு கோளாறு என்று விட்டு விட முடியவில்லை. உங்கள் தவறு எங்கள் ஹிந்து மதத்திற்கு இழுக்காக இருக்கிறது.

ஹிந்து மதம் ஒன்றும் வாழ்க்கையை வெறுத்துவிட்டு சந்நியாசம்  போ என்று சொல்லவில்லை.

ஹிந்து தெய்வங்கள் எல்லாமே கணவன் மனைவியாகத்தான் காட்சி அளிக்கிறார்கள்.
 குடும்பம் நடத்துகிறார்கள், குழந்தைகள் பிறக்கிறது.  இப்படிதான் புராணங்கள் சொல்கிறது.

அது மட்டும் இல்லை. உயிரின உற்பத்திக்கு ஆண் பெண் கூடல் என்பது அவசியம்.  இதை ஹிந்து மதம் தடுக்கவே இல்லை.

சந்நியாசிக்கு சம்சாரம் அவசியமா என்ற கேள்விக்கும் வேலை இல்லை.  காரணம்.... ரிஷியாக இருந்தாலும் ரிஷி பத்தினிகள் இல்லையா?

அதனால் தவறில்லை. ஆனால் நீங்கள் வெளிப்படையாக இல்லாமல், வேழதாரியாக இருந்ததுதான் குற்றம்.

கல்கி என்று ஒருவர் இருக்கிறாரே... அவர் கணவன் மனைவியாகத்தான் இருக்கிறார்கள்.  யாரும் குற்றம் சொல்லவில்லை.

மேல்மருவத்தூரில் இருக்கிறாரே பங்காரு அடிகள், அவர் கூட குடும்ப வாழ்க்கைதான் நடத்துகிறார்.  யாரும் குறை சொல்லவில்லை. பின் ஏன் உங்களை மட்டும் குற்றம் சொல்கிறார்கள்.

நீங்கள் நாணயம் இல்லாதவர். நம்பியவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். 

கேவலம் மாற்றான் மனையாளை தொடும் போது கூடவா மனசு  கூசவில்லை.

இங்கே ரஞ்சிதாவை வலுகட்டாய படுத்தவில்லை என்பது மட்டும் தான் ஒரே ஆறுதல்.

சரி... உங்கள் போலி முகமூடி  வெளியே தெரிந்த பிறகு என்ன சொன்னீர்கள்.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்றீர்கள். அப்பாண்டம் ஒட்டு வேலை என்றீர்கள். மாற்று மதத்தவர் செய்த  சதி என்று அடுத்த குண்டை தூக்கி போட்டீர்கள்.

நான் ஆண்மை  இல்லாதவன்  என்று அடுத்த பொய். மனதை ஒரு நிலை படுத்த காமசூத்திர பயிற்சி என்று அண்ட புழுகு. ஒரு நாள் உண்மை தெரியும் என்று ஆகாச புழுகு.

கிட்டத்தட்ட அரசியல்வாதி  மாதிரி நீங்களும் பொய் பொய்யாய் புளுகி தள்ளினீர்கள்.

வழக்கு, தலைமறைவு, கைது, ஜாமீன், மீண்டும் ஆன்மீகவாதி என்று பல்வேறு நிலைகளை கடந்தாலும், மிஞ்சியது என்னவோ ரஞ்சிதா உறவு என்பது உங்கள் ஆத்ம திருப்தி.

சாக்கடையில் விழுந்தாலும் சந்தோசம் படுக்கையில் இருக்கிறது இல்லையா. வாழ்க நீவிர்.

இப்போது மீண்டும் பத்திரிக்கையில் எட்டு கால பத்தியில் இடம் பிடித்து விட்டீர்கள்.

இனி நீங்கள் குருஜி   இல்லையாம்.  திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு கல்யாணம் வந்த மாதிரி, இப்போ நீங்கள் மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளாம்.

அடேங்கப்பா... என்ன ஒரு வளர்ச்சி. 


இந்த பதவி வெறும் ஐந்து கோடி பேரத்தில் முடிந்து இருக்காது. திரை மறைவில் கை மாறியது எவ்வளவோ,  அந்த சந்நிதானத்துக்கே வெளிச்சம். காரணம் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆதினத்திற்கு உண்டு.


உண்மையில் இந்த பதவி பணத்திற்காக மட்டும் வரவில்லை. ஜாதி பற்றும் ஒரு காரணம்.


உண்மைதானே நித்தியானந்தா அவர்களே. 

உங்களுக்கு பதவி வந்ததை பற்றி கவலை இல்லை. 

அதற்கு தகுதி ஆனவரா நீங்கள்.  

படுக்கையை பகிர்ந்து கொண்ட பத்தினி தெய்வத்தை பக்கத்தில் வைத்து கொண்டு தானே மகுடம் சூட்டி கொண்டீர்கள்.


சமயகுரவர்களில் ஒருவரான திருஞான சம்மந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு  உருவாக்கப்பட்ட ஆதினத்திற்கு நீங்கள் பொருத்தமானவரா?

சங்ககால தொய்மையான மடத்திற்கு ஒரு கரும் புள்ளி நீங்கள் என்பது எங்கள் எண்ணம். 

மாற்றான் மனையாளை தொட்ட சராசரி மனிதன் நீங்கள் . உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது அந்த பதவியில் அமர. 

காவி வேட்டிகே களங்கம் நீங்கள். எத்தனையோ மகான்களால் போற்றி பாதுக்காக்க பட்ட ஹிந்து மதம் உங்களை போன்றவர்களால் அசிங்க படுகிறது.

நீங்கள் ஹிந்து மதத்தின் களங்கம். 

இருக்கும் கொஞ்சம் நஞ்ச மரியாதையை இழப்பதற்குள் நீங்களாக பதவி விலகுவது நல்லது.  மதுரை ஆதினம் சட்டத்தின் முன் குற்றவாளியாக நிற்பது கேவலம். 

நாளை அது நடக்காமல் இருக்க வேண்டுமானால் இன்றே வெளியே போவது நல்லது. யோசியுங்கள் நித்தியானந்தா.


Saturday, 28 April 2012

நட்சத்திர பழமொழிகள்

படிச்சு வாங்கின பட்டம் இல்லைனாலும் அடிச்சு சொல்லலாம் நம் முன்னோர்கள் அறிவாளிகள்.

சிரிக்க  மட்டும்  இல்லை, சிந்திக்கவும் வைத்தவர்கள். ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்தான்.

அதிசயமான ஊர்ல ஆம்பிள பிள்ளை பிறந்துச்சாம், தொப்புள் கொடி அறுத்தவுடனே கப்பல் ஏறி போச்சுதாம் - நக்கல்.

அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு- யதார்த்தம்

அரிசி கொடுத்து அக்காள் விட்டில் என்ன சாப்பாடு- கேள்வி

என்னை கெடுத்தது நரை. என் மகளை கெடுத்தது அழகு- சோகம்

இப்படி வாழ்க்கையின் எல்லா நிலையிலும் பழமொழியை சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ஜோதிடத்திற்கு மட்டும் சொல்லமால் இருப்பார்களா. இப்ப அந்த பழமொழியைத்தான் பார்க்க போகிறோம்.

பார்ப்போமா?

பரணி தரணி ஆளும்.   

தரணின்னா உலகம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆழ்வார்களாம்.

உலகத்தை ஆள்கிறார்களோ இல்லையோ, சுற்றி இருக்கிற சமூகத்தில், சார்த்து இருக்கிற நண்பர்கள் உறவுகள் மத்தியில் அவருக்கு என்ன கவலைன்னு சொல்கிற மாதிரி ஒரு வாழ்க்கை அமையுமாம். அதைதான் இப்படி சொல்றாங்க.

ரோஹிணியில் பிள்ளை வந்தா ரோதனை மாமனுக்கு 

என்னவாம்?

ரோஹிணி கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம். கிருஷ்ணன் பிறந்து மாமனை கொன்னானோ இல்லையோ...அதான் சொல் வழக்கா வந்துடுத்து.

தாய் மாமனுக்கு ஆகாதாம்.  கொலைவெறி பிடிச்ச பிள்ளை, மாமன் தலைமுறை விளங்கவிடாம பண்ணுமாம்.

உண்மையாவா?

ஊருக்குள்ள அப்படிதான் பேசிக்கிறாங்க. ஆனால் உண்மையில்லை. அது சும்மா?

கொண்டவன் ஆத்தாளை கொண்டே போய்டும் ஆயில்யம்.

இது என்ன கரடி?

கொண்டவன்னா... கல்யாணம் செய்து கொண்ட ஆண்மகன்.  அதாவது கட்டிகிட்ட புருஷன்.

ஆத்தான்னா... அவரோட அம்மான்னு அர்த்தம். இதனால் நமக்கு சொல்ல வருவது என்னவென்றால்... மாமியாருக்கு ஆகாது.

ஆகாது மீன்ஸ்.. மாமியாருக்கு கண்டம்.

இதாவது உண்மையா?

நிறைய மாமியார்... பூவோடும் பொட்டோடும், தீர்க்க சுமங்கலியாய் இருக்காங்க.  இன்னும் விளக்கம் வேணுமா?

மகத்து பிள்ளை ஜகத்தை ஆளும்.

இது என்னவோ?

ஜகம்னா உலகம். மகத்தில் பிறந்த பிள்ளைகள் செல்வத்தோடும், செல்வாக்கோடும், தன்னை சார்ந்தவர்கள் மத்தியில் உள்ளூர் MLA மாதிரி உலா வருமாம்.

நிஜாமாவா?

உண்மையா சொல்லபோனால்... தான் எண்ணற்ற எண்ணம் கொண்டவர்கள். தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள்.  கர்விகள்.

கர்விகள்னா?

கர்வம். மற்றவர்கள் பார்வையில் தலைக்கனம். நான் சொல்லலை அப்படி. பேசிக்கிறாங்க.

அனுசத்திலே மனுஷன் பிறக்கவே கூடாது.

ஏன்?

அனுஷம் சனியோட நட்சத்திரம்.

சனி யாரு?

பாடு பட்டு உழைச்சா பலனில் பாதியை கொடுக்கும் பண்ணையார்.  நூறை எதிர்பார்த்தால் ஆறஅமர 50 அம்பது கொடுக்கும் முதலாளி. அங்கேதான் சந்திரன் நீசமாகிறார்.

நீசம்மா என்ன?

சுத்தமா பவர் போச்சுன்னு அர்த்தம். மனசுல கவலைப்பட ஒரு காரணம் இருந்து கொண்டே  இருக்கும். ஒன்னு போனா ஒன்னு வரும். ஒரு கவலை தீர்ந்தா மறு கவலை வரும்.

மொத்தத்தில் எதிர்காலம் புதிர்காலமாய் காட்சி அளிக்கும்.

உண்மையா?

இது நிஜம்தான்.

கேட்டையில் பிறந்த  பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா? அழிச்சாலும் அழிப்பா.

விளக்கம் தருக.

கோட்டைங்கிறது என்ன?

கௌரவம், அந்தஸ்த்து, புகழ், செல்வாக்கோடு வாழ்வது என்று பொருள். கேட்டை நட்ச்சதிரத்தில் ஒரு பொண்ணு பிறந்தால்,  அவளுக்கு அமைந்த கிரக அமர்வை பொறுத்து,  மெல்ல மெல்ல உயர்ந்து நல்ல வாழ்க்கையை வாழலாம்.

அல்லது....

அவள் பிறந்த பிறகு வாழ்வாங்கு வாழும் அவள் குடும்பம் நலிந்து ஏழ்மை நிலையை அடையலாம். எதுவாக இருப்பினும் கிரக நிலையே காரணம். ஓகே...

ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்

மூலம் என்பது ஆஞ்சநேய பெருமான் பிறந்த நட்சத்திரம். சர்வ வல்லமை பொருந்திய வாயு புத்திரன் மாதிரி தடாலடி செயல்பாடு நிறைந்தவர்கள்.  ஆண்களாக இருந்தால் கூட சரி தொலையுது என்று விட்டு விடலாம்.

அதுவே பெண்களாக இருந்தால். யோசிச்சு பாருங்க சொர்ணக்காவை. வீடு தாங்குமா. பொறுந்து போக முடியுமா?  

கல்யாணம் ஆகி போகுதுன்னு வச்சுக்கோங்க. போன அன்னைக்கு வச்சுருந்து புதன் கிழமை பார்த்து அனுப்பி விட்டுடுவாங்க.

பூராட பொண்ணு உறவாடாது. 

அதாவது பூராடத்தில் பிறந்த பொண்ணு  சுதந்திர பிரியர்கலாம்.  கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு ஆகவே ஆகாதாம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு போற பொண்ணுங்க என்கிறார்கள். ஆனால் நடைமுறைக்கு ஒத்தே வரலை.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் முனையில் கொஞ்சம் நிலமும் இருந்தால் வாழக்கையில் ஒரு கவலையும் இல்லை. 

எவ்வளவு ஏழ்மையான  குடும்பமாக இருந்தாலும், இந்த நட்ச்சதிரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குடும்பம் வளருமாம். அந்த தலைமுறையில் இருந்து வறுமை இல்லாத வாழ்க்கை அமையுமாம்.

அவிட்டத்தில் பிள்ளை பிறந்தால் தவிட்டு பானை எல்லாம் தங்கமாகும்.

தவிட்டு பானை என்பது என்ன. மாட்டு தீவனம். அதை என்ன பொட்டியில் வைத்தா பூட்டி வைக்க  போறாங்க. அது எங்காவது ஒரு ஓரத்திலே இருக்கும்.

அந்த பானை எல்லாம் தங்கமாக இருக்கும் என்றால், வீட்டுக்குள்ள வைக்க இடம் இல்லை என்றுதானே அர்த்தம்.  ஒரு அதிஷ்ட நட்சத்திரம் அவ்வளவுதான்.

எல்லா பழமொழியும் நடை முறைக்கு ஒத்து வரும் என்று சொல்வதற்கில்லை. 

Thursday, 26 April 2012

உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?

எவ்வளவுதான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்தாலும் இந்த கணினி திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து குற்றவாளிகள் தப்பி விடுவது போல், இந்த கணினி திருடர்களும் தப்பி விடுகிறார்கள்.  அதனால்  நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டி இருக்கிறது.

இந்த விஷயத்தில்  ஆனானப்பட்ட அமெரிக்காவே ஆடிபோய்விட்டது. 

விஷயம் இதுதான்.

அமெரிக்காவிற்கு இணையாக சைனாவும் நவீன தொழில் நுட்பத்தில், அறிவியல் வளர்ச்சியில், அணு ஆயுத தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது.

எப்படி?

இங்கேதான்  சைனா தன் தகிடு தித்தங்களை அரங்கேற்றியது. அமெரிக்காவின் ராணுவ கம்யூட்டர்களின் கடவு சொற்களை எப்படியோ தெரிந்து கொண்ட சைனா தினசரி அவர்கள் நடவடிக்கைகளை  கண்காணிக்க தொடங்கியது.

உள்ளது உள்ளபடி சொன்னால்... அமெரிக்க கம்பியூட்டர்களை சைனா இயக்கியது என்று சொல்லலாம்.

ராணுவ ரகசியங்களையும், அறிவியல் தொழில் நுட்ப பைல்களையும் சைனா சுட்டு கொண்டது.

இதை மிக தாமதமாக தெரிந்து கொண்ட அமெரிக்க அதிர்ச்சியில் உறைந்து போனது. இதை வெளியே சொல்லவும் முடியாது.  சொன்னால் வெட்கம், சொல்லாவிட்டால் துக்கம் என்பது போல் ரெண்டும் கெட்டான் மனநிலையில் மாட்டி கொண்டது.

காரணம் ...ஹைடெக் பாதுகாப்பு எங்களுடையது என்று மார்தட்டும் அமெரிக்கா  தன் முகத்தில் சைனா  கரி பூசியது என்று சொல்ல முடியுமா. 

ஆனால் இந்த தகவல் இணையதளங்களில் கசிய தொடங்கியபோது அமெரிக்கா மறுக்கவும் இல்லை. ஒத்து கொள்ளவும் இல்லை.  மவுனமாகி விட்டது.

ராணுவ ரகசியங்களையே திருடும் பலே கெட்டிகார்கள் இருக்கும் நாமெல்லாம் எம்மாத்திரம். 

உண்மையில் ஒரு விஷயத்தை நாம் யோசித்து பார்க்க வேண்டும். நாம் எவ்வளவுதான் ரகசியமாக செய்திகளை பறிமாறி கொண்டாலும், அதையும் தாண்டி நம் செய்திகள் கண்காணிக்க படுகின்றன என்பது உங்களுக்கு  தெரியுமா?

அமெரிக்கா ரஷ்யா சைனா என்றில்லை, நீங்கள்  மன்மோகன் சிங், ஜெயலலிதா, கருணாநிதியாக கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குப்பன், சுப்பன், கோவிந்தனாக இருந்தாலும் கூட உங்கள் கம்பியூட்டர் கண்காணிக்கபடும்..

உங்கள்  வீட்டில்  உள்ள கம்பியூட்டரில் அடிக்கடி நீங்கள் போகும் தளம் என்பது ஓன்று  இருக்கும். 

உதாரணமாக நீங்கள் பேஸ்புக் பிரியர் என்று வைத்து கொள்வோம். நீங்கள் கூகுள் போய்,   சர்ச் பாக்ஸ்யில்   f  என்று முதல் எழுத்தை தட்டியதும் facebook என்று முதலில் வரும். மற்ற வலை தளங்கள் பிறகுதான் வரும்.  

எப்படி?

உங்கள் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வரும் கூகள் தான் காரணம். 

உங்களின் அணைத்து ரகசியங்களையும் அறிந்த கூகுள் தான் இப்படி செய்கிறது.  அதற்காக கூகுள் தான் இப்படி தகிடு தித்தங்களை செய்கிறது என்று சொல்லவில்லை. அவர்களுக்கு தெரியாமல் எதுவும் நாம் செய்யமுடியாது என்பது தான் எதார்த்தம்.

சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.

இன்று பெரும்பாலும் ஜிமெயில் ஆக்கவுட்ன்ட் வைத்திருப்பவர்கள் அதிகம். அதிகம் பாதிக்க படுவதும் இந்த ஜிமெயில் தான். 

பலர் பலரின் மெயில் கணக்குகளை திருடி விடுவது அன்றாட நடவடிக்கையாகி விட்டது. இதை நாம் எப்படி தடுப்பது? இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி எடுப்பது? அதற்கு கூகுள் வலை தளமே டிப்ஸ் தருகிறது அதை பாப்போம்.

இதை பற்றி   நான் சொல்வதை விட நீங்களே போய் விடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் கூகுளே போய் www .google.com goodtoknow என்று டைப் செய்து ஓகே கொடுத்தால் ஒரு விடியோ ஓபன் ஆகும் அதில் டிப்ஸ் இருக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.

அல்லது

u  tub போய் 5 tips for staying safe on tha web என்று டைப் செய்யுங்கள் விடியோ வரும்.  அதில் உங்களுக்கு தேவையான தகவல்கள் இருக்கிறது.

அதை பின் பற்றி உங்கள் mailai பாதுகாத்து கொள்ளுங்கள்.

Wednesday, 25 April 2012

ஜோதிடம் ஒரு விஞ்ஞான கலையா?

 வேதகால  ஜோதிடம் ஏற்ற சொற்தொடர் இன்றைக்கு சர்வ சாதாரணமாக பயன்படுத்த படுகிறது.  வேத காலத்தில் ஜோதிட நம்பிக்கை இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எனவே... ஜோதிடத்தை வேத காலத்தோடு இணைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வேதகால ஜோதிடம் என்பதை விட, புராதன  கால ஜோதிடம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஓன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது. மிக தொன்மையான காலத்தில் இருந்து ஜோதிடத்தில் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. குறிப்பாக நம்முடைய பாரத நாட்டில் இந்த நம்பிக்கை பரவலாகவும், ஆழமாகவும் இருந்து வந்திருப்பதை உணர முடிகிறது.

நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் நாள் நட்சச்திரம் பார்த்து, நல்ல நாள் குறித்து காரியங்கள் செய்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

ஜோதிடத்தை நம்பாதவர்கள்  ராமனுக்கு முடிசூட்ட மகா பெரிய ஞானி வசிட்டர் தானே நாள் குறித்தார்.  ஆயினும் ராமனால் முடி சூட்டி கொள்ள முடியாமல் போனது ஏன்?

மனைவியோடு வனவாசம் செல்ல வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

இராமாயண கதையை படிக்கின்ற போது ஓன்று தெளிவாகிறது. ராமனுக்கு முடி சூட்ட வசிட்டர் நாள் குறிக்கவில்லை என்பது தான் உண்மை. முடி சூட்ட வேண்டிய அவசரத்தில் தசரதரே முடிவு செய்து விட்டு, நாள் குறித்த விவரத்தை ஒரு தகவலாக மட்டுமே வசிட்டரிடம் சொல்கிறார்.

வசிட்டர் அதை ஆட்சேபிக்கவில்லை  என்பது உண்மை. திரிகாலம் உணர்ந்த ஞானியான வசிடருக்கு என்ன நடக்க போகிறது என்பது தெரியாதா? தெரிந்திருக்க வேண்டும் என்று அனுமானிப்பதில் ஒன்றும் தவறில்லை.

பின் ஏன் அவர் அந்த சந்தர்ப்பத்தில் ராமனுக்கு முடி சூட்ட வேண்டாம் என்று தசரதருக்கு ஆலோசனை சொல்லவில்லை?

இதற்கும் பண்டிதர்கள் விளக்கம் சொல்கிறார்கள். ராமன் காட்டிற்கு போகாமலே இருந்திருந்தால் ராமாவாதரத்தின் நோக்கமே நிறைவேறி இருக்காது.

ராமனின் முடி சூடல் தவிர்க்க பட வேண்டும் என்பது விதி. அது இறைவன் போட்ட பாதை.  அது வசிடருக்கு தெரியும். திரிகாலம் உணர்ந்த ஞானி என்பதால்  விதி வழி நடப்பதை தடுக்க முடியாது என உணர்ந்த வசிட்டர் தசரதனின் முடி சூட்டும் முடிவை ஆட்சேபிக்கவில்லை என்ற விளக்கமும் சொல்லபடுகிறது.

இதை இன்னும் விரிவு படுத்தி பார்த்தல் ராமனின் விதி ராவணனின் விதியோடு இணைக்கபட்டு இருந்ததோ என்றும் என்ன வேண்டி உள்ளது. அதாவது வாழ்க்கை நடப்பில் ஒருவரின் விதி இன்னொருவரின் விதியோடு சம்மந்தபட்டதாகவே இருக்கிறது.


பழங்காலத்தில் நிமித்தம் பார்த்தல், சகுனம் பார்த்தல் ஆகியவை பழக்கத்தில் இருந்திருக்கின்றன.  மகாபாரதம் ராமாயணம் ஆகிய இதிகாசங்களில் இது போன்ற  சம்பவங்கள் நிறையவே வருகின்றன.

சித்திர  கூடத்தில் குடில் அமைக்கும்போது கூட ராமன் சகுனம் பார்கிறான். சிலப்பதிகாரம் உருவான பின்னணியை ஆராய்ந்தால் அரசவை நிமித்தன் சொன்ன  ஒரு கூற்று  இளங்கோவடிகளை துறவுபூன வைத்தது.

சேரன் செங்குட்டுவனையும், இளங்கோவடிகளையும் அரசவையில் பார்த்த நிமித்தன் மூத்தவன் சேரன்செங்குட்டுவனை விட இளையவனான இளங்கோ அடிகள்தான் அரசாள்வார் என்று குறி சொன்னான்.

மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டம் என்பதை ஏற்காத இளங்கோவடிகள்  மூத்தவனுக்கு வழி விட்டு துறவியானார் என்பது கதை.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் அடங்கி இருக்கிறது. இளங்கோவடிகள் துறவு கோலம் பூண்டு கண்ணகி காப்பியம் எழுதியதால் தான் சேரன் செங்குட்டுவனையே நமக்கு தெரியும்.

சேரன்செங்குட்டுவன் புகழ் நிலைக்க இளங்கோவடிகள்தான் காரணமானார். ஒரு விதத்தில் பார்த்தால் நிமிதன் கூற்று பொய்யாகி விட்டதாகவும் சொல்ல முடியாது.

ஏனெனில் இன்றுவரை மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அரசனாக  கொலு வீற்றிருப்பவர் இளங்கோவடிகள்தானே தவிர சேரன்செங்குட்டுவன்  இல்லை.

மனிதனுடைய பார்வையில் இருந்து அவனுடைய எதிர்காலம் மறைக்க பட்டு இருக்கிறது. நாளைக்கு என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. அதே சமயம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை படுவது இயல்பு.

ஜோதிடக்கலை அதை கண்டு பிடித்து சொல்ல கூடிய ஒரு சாதனம் என்பதால் உலகெங்கும் உள்ள மக்கள் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  அரசன் முதல் ஆண்டி வரை எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளவே ஆசைபடுகிறான்.

பொதுவாக தங்களுடைய கஷ்டங்களுக்கு ஜோதிடத்தின் மூலம் பரிகாரம் கிடைக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். சில குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் சொன்னால் தான் காரியம் செய்வது என்ற சங்கல்பத்தோடு இருக்கிறார்கள்.

ஜோதிடக்கலை விஞ்ஞான கலையா என்பதை ஆராயும்முன் ஜோதிடக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்து வருவதற்கு என்ன காரணம் என்பதையும்  யோசித்து பார்க்க வேண்டும்.

பயனில்லாத எதையும் மக்கள் தொடர்ந்து வைத்து கொள்வதில்லை. பயனற்ற பொருட்கள் வீட்டில் இருக்குமானால் அவற்றை அழித்து விடுகிறோம். பயனில்லாமல் சேர்ந்து விடுகிற குப்பை கூளங்களை தினமும் கூட்டி அப்பறபடுத்தி  விடுகிறோம்.

பயனற்ற எதையுமே போற்றி பாதுகாக்கிற பழக்கம் மனித இனத்திற்கு இல்லை.இந்த அடிப்படையில் பார்க்கும் போது, ஜோதிடம் முற்றிலும் மூட நம்பிக்கையாக இருக்குமானால், மனிதர்கள் இவ்வளவு காலம் அதை போற்றி பாதுகாத்து வைத்திருக்க மாற்றார்கள்.

ஒரு சில ஜோதிடர்கள் போலித்தனமான நம்பிக்கையை ஏற்படுத்துவதால் ஜோதிடகலையே தவறானது என்று ஆகி விடாது.  மருத்துவம் போன்ற துறைகளிலும் போலிகள் இருப்பது போலவே, ஜோதிட துறையிலும் இருக்கிறார்கள்.

ஜோதிடத்தை ஒரு வழிகாட்டியாக ஏற்று கொள்கிற வரை அதை நம்புகிறவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.

P .C . கணேசன் எழுதிய ஜோதிடம் ஒரு விஞ்ஞான கலையா? என்ற நூலில் இருந்து எடுக்க பட்டது இந்த கட்டுரை.  சுரா புக்ஸ் ( பிரைவேட் ) லிமிடெட் இன் நூலை வெளியிடு செய்திருக்கிறது.


இன்டர்நெட் மோசடி

நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.  அசந்தா ஆழக்குழியில் தள்ளி, மண்ணை போட்டு மூடிட்டு போய்டுவாங்க போல இருக்கு. 

வலைதளத்தில் மோசடி நடக்கிறது என்பது பலருக்கு தெரியும். ஆனால் எனக்கே அந்த அனுபவம் வரும் என்று நினைக்கவில்லை.

என்னாச்சு இப்படி புலம்புறிங்கன்னு கேட்கிறிங்களா? சொல்லறேன் கேளுங்க. தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து வரும் நண்பர்களுக்கு தெரியும் என்னை பற்றி.

முற்றும் செய்ய கற்றுகொள் என்பது என் தாரக மந்திரம். எதை செய்தாலும் அதை 100 % சரியாய் செய்யனும்ன்னு நினைப்பேன்.  அப்படித்தான் இதுவரை செய்து கொண்டு இருக்கிறேன். 

மனித  வாழ்க்கையில் என்ன வேணும்?

வளர்ச்சி. 

இந்த வளர்ச்சியை பெறுவதற்கு முயற்சி என்பது முக்கியம். ஆகாயத்தில் கோட்டை கட்டினாலும் அஸ்திவாரத்தை பூமியில் போடணும் என்பது எனக்கு தெரியும். 

அதனால்  முன்னேற சிறு துரும்பு கிடைத்தாலும் அதை இறுக பிடித்து கொள்வது என் வழக்கம்.  தினம்தோறும் என் பிளாக்கில் நான் எழுதும்  கட்டுரைகளை நீங்கள் படிக்கிறீர்கள் என்பது தெரியும்.

இன்னும் நிறைய நண்பர்கள் jothidasudaroli .blogspot .com க்கு வரவேண்டும். என் பிளாக்கும் பிரபலம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு ஒரு நண்பர் கொடுத்த யோசனைதான் இது.

எது?

tamiltop10 .com என்று ஒரு வலை இருக்கிறது. அதில் போய் உங்கள் blog கை பதிவு செய்து கொண்டால்,  இன்னும் நிறைய பேர் பார்ப்பார்கள். பிரபலம் ஆகும் என்றார்.

ஆசை யாரை விட்டது. நானும் போய் பார்த்தேன். பதிவு செய்ய சொன்னார்கள்.  நானும் பதிவு செய்தேன். 

ஒரு கட்டுரையும் போஸ்ட் செய்தேன். அது அந்த பிளாக்கில் வந்ததா இல்லையா என்பது கூட கண்டு பிடிக்க முடியவில்லை.

என் மெயில் id போய் பார்த்த போது tamil top10 .com என்ற முகவரியில் இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது. 

அதற்கு கிழே ஒரு எச்சரிக்கை இருந்தது. இது tamil10 .com @gmail .com il இருந்து வந்த செய்தியாக இருக்காது என்று இருந்தது. 

என்ன இப்படிகூட நடக்குமா  என்ற  சந்தேகத்தில் போய் பார்த்தால் ஒரு உண்மை தெரிந்தது.  அது இதுதான்.

பிஷிங்கை புகார் செய்ய.

பிஷிங் என்பது ஒரு வகையான ஏமாற்று வேலை. கடவுச்சொல், அல்லது வங்கி கணக்கு எண் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை தர வைக்கவும், பணம் மாற்று தூண்டுதல், அல்லது தீங்கு விளைவிக்கும் மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவ வைத்தல் போன்ற முயற்சியாகும்.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி போலவே நடிப்பார்... என்று நீள்கிறது அந்த விளக்கம்.

உண்மையில் இந்த பெயரில் ஒரு வலை தளம் இருக்கிறது என்பது உண்மை.  அந்த வலைக்கு நான் அனுப்பிய மெயில் எப்படி இடம் மாறி போலியான இன்னொரு tamitop10 .com என்பவருக்கு போனது என்பது தான் கேள்வி.

இந்த தகவல் உண்மையான வலைதள காரருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.  அவர் வலைக்கு வரும் மெயில்கள் இடையில் திசை மாறி போலியான முகவரிக்கு போகிறது.

போலி முகவரியில் உள்ளவரும் மெல்ல தூண்டிலை விரிப்பார் போலிருக்கிறது.  உங்கள் வலையை நான் பிரபல படுத்த பணம் கட்டுங்கள்,  முதல் பத்து இடத்திற்குள் வர வைக்கிறோம்.

அந்த பணத்தை கிரிடிட் கார்ட் மூலம் செலுத்துங்கள் என்று சொல்லி, கார்டில் இருக்கும் மொத்த பணத்தையும் சுருட்டி விடுவார்கள் போல் இருக்கிறது.

பிஷிங்கை புகார் செய்ய என்ற பகுதில் போய் புகார் கொடுத்து விட்டேன். ஜஸ்ட் மிஸ் என்பது போல் கடைசி நேரத்தில் விழித்து கொண்டேன்.  இது போல் போலியான பல நிறுவனங்கள் நெட்டில் இருக்கிறது. விழிப்போடு இருங்கள்.

நான் நேர்மையான வழியில் தான் செல்வேனே தவிர பணம் செலுத்தி குறுக்கு வழியில் முன்னிலை பெற எனக்கு விருப்பம் இல்லை.  அவர்கள் உன்னையும் இல்லை. 

அன்பு நண்பர்களே கவனம். இதுபோன்ற  மோசடிகாரர்கள் நிறைய இருக்கிறார்கள்.

Monday, 23 April 2012

ஹெல்த் டிப்ஸ்

பப்பாளி பழத்தை பார்த்தால்...அப்பாடா... ரெண்டு துண்டு சாப்பிடலாம்ன்னு நாக்குல எச்சி ஊரும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் பார்த்தால் ஏதோ விஷசந்தை பார்ப்பது போல் பயந்து ஒதுங்குவார்கள்.

இதில் பயமோ, ஆசையோ....எந்த ரகத்தில் உள்ளவராக இருந்தாலும் உள்ளே வாருங்கள். உங்களுக்காக தகவல் காத்திருகிறது. 

பாருங்க.. நான் சிம்பிலாதான் சாப்பிடுறேன். இருந்தும் உடம்பு வெயிட் போடுது. என்னங்க செய்றது?

இதுதான் உங்க கவலையா? சரி விடுங்க. பப்பாளி பழம் எபோதும் உங்க வீட்டிலே இருக்கட்டும். அப்பப்ப எடுத்து ஒரு கட்டு கட்டுங்க. வெயிட் போடுற பிரச்சனைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம். 

பப்பாளியில் பல்வேறு வைட்டமின்கள் இருந்தாலும், பேராக்ஸ்நேஸ் என்ற தாது பொருள் இருக்கிறதாம். இதுதான் உடலில் தேங்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பை குறைக்க உதவுகிறது.

பொதுவா கொழுப்பு முதலில் அடிவயிற்று பகுதியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.  முதலில் லேசாக ஒரு தொப்பையின் துவக்கம் தெரியும். அதுதான் பூதாகாரமாக வளர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் எடையை போட துவங்குகிறது.

இந்த பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு பப்பாளி நல்ல அருமருந்து. 

அப்பறம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவே கூடாது.  உவ்வேன்னு உமட்டுராங்களே அது என்ன சம்மச்சாரம் என்பதை பாப்போம்.

கர்ப்பிணி பெண்களும், அல்லது தாய்மையை எதிர்நோக்கி இருப்பவர்களும் பப்பாளி பழத்தை சாப்பிடலாம். தவறேதும் இல்லை. 

ஆனால் ஒன்றிரண்டு துண்டுகளோடு நிறுத்தி விட வேண்டும். கூடுதலாக சாப்பிடும் போதுதான் உடல் வெப்பநிலை அதிகரித்து கர்ப்ப சிதைவு, அல்லது கரு உருவாகுவதில் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சரி... ஏதோ ஆசையில் கொஞ்சம் கூடுதலா பழத்தை சாப்பிட்டு தொலைச்சுட்டேன்  என்னங்க செய்றது?

கவலை வேண்டாம். உடனே ஒரு கப் பசும் பால் குடித்தால் உடல் வெப்பமாகுவதில் இருந்து  தடுத்து விடலாம்.

அடுத்து...ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். சிலர் சும்மாம்காட்டியும் தண்ணீர் குடிக்க முடியாதுன்னு விரதமாகவே இருப்பாங்க.

அப்படி பட்ட நபர்களுக்கு தான் கல்லு, பாறை, பாரங்கல்லு எல்லாம் உற்பத்தி ஆகுது.

நான் என்ன சொல்றேன்னு  உங்களுக்கு  புரியுதா?

கிட்டினியை சட்டினியாக்கும் கல்லு பிரச்சனை வருது இல்லையா? அந்த குறைபாடு உள்ளவர்கள் தினசரி பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லு பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல விலகும்.

நல்ல ருசியா இருந்துச்சு. மூக்கு முட்ட பிடிச்சுட்டேன். இப்ப எண்டானா செரிமானம் ஆகாம படுத்துது. வயிறு கடமுடான்னு கத்துது. என்ன செய்றது?

சரி.. விடுங்க.நாலைந்து பப்பாளி பழ துண்டை சாப்பிடுங்க. சரியாபோயிடும்.
செரிமான சக்தி பப்பாளிக்கு அதிகம். 

மலசிக்கலுக்கு வாழைபழம் மட்டும் இல்லை, பப்பாளிபழமும்  நல்ல மருந்து.

என்னதான் சோப்பு போட்டு கழுவினாலும் முகம் ஆயில் வழியுது. என்ன செய்யலாம்?

ஒன்னும் இல்லை. பப்பாளி பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து  குழாக்கி. அதை முகத்திலே தடவி காயவிட்டு பின் அலசுங்க. முகத்திலே இருக்கிற கரும் புள்ளி, ஆயில் பசை, எல்லாம் போயே போச்சு.  செய்து பாருங்க. 

Sunday, 22 April 2012

ஆண்கள் அழகு குறிப்பு

அந்த மழைக்கு நன்றி சொல்லணும்.  

இத்தனை நாளா எப்படியெல்லாம் மேக்கப் போட்டு ஏமாத்தி இருக்கா மச்சான்.

இது இளசுகள் மத்தியில் மிக பிரபலமான SMS . யோசிச்சு பாருங்க. காக்கா கலர் பொண்ணா இருந்தாலும் கலக்கலா ட்ரெஸ் பண்ணும். தூக்கலா மேக்கப் போடுறதும் சகஜம்.

அது என்னவோ தெரியலை. அழகு படுத்திகிறதும், மேக்கப் போடுறதும் பொம்பளைங்க சமாச்சாரம். நமக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு பல ஆண்கள் நினைக்கிறாங்க. 

அதுனாலதானோ என்னவோ பலர் வடிவேலுதனமா ட்ரெஸ் போட்டுக்கிட்டு வலம் வர்றாங்க. 

பொதுவா பொண்ணுங்க ஆம்பிளைங்க ட்ரெஸ் வரைக்கும் போட்டுக்கிட்டு அழகு பாக்குதுங்க.  இந்த ஆண்கள்தான் பாவம். ஒன்னு வேஸ்ட்டி, இல்லைனா பேன்ட். இதை விட்டா வேற வழி இல்லை.

சரி... ஆள் பாதி, ஆடை பாதி. இந்த ஆடைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பது தான் கட்டுரை. 

முதலில் ஆள் பாதி 

அழகு என்பது வம்சாவளியை பொறுத்தது. அப்பா அம்மா அழகா இருந்தால் பிள்ளைங்களும் அழகா இருக்கும். இல்லைனா... அதுக்காக வருத்த பட முடியாது.

இன்னொன்னு அழகுக்கு என்று எந்த அளவு கோலும் இல்லை. இப்படி இருந்தா அழகு,  அப்படி இருந்தா அழகு என்று சொல்ல எந்த விதியும் இல்லை.

அதோட அழகு, உடல் சம்மந்த பட்ட விஷயம் மட்டும் இல்லை.  ஆங்கிலத்தில் அழகை பர்சனாலட்டி என்கிறார்கள்.

ஒருவர் நல்லா பாட்டு பாடினால், அவர் இசைத்துறையில் பர்சனாலட்டி.  கதை எழுதினால் அவர் எழுத்து துறையில் பர்சனாலட்டி.  நடனம் ஆடினால் அவர் கலை துறையில்  பர்சனாலட்டி என்று பேர்.  இங்கே முகபொளிவுக்கு முக்கியத்துவம் இல்லை.

நாம் நடைமுறைக்கு வருவோம்.

ஒருவர் ஆணழகன் அரவிந்த சாமி மாதிரி இருக்க வேண்டியதில்லை. இருக்கும் உடம்பை கொஞ்சம் கட்டு கோப்பா  வச்சு கிட்டா, பார்க்க ஒரு லுக் இருக்கும்.  கண்டதை தின்னு செந்தில் மாதிரி இருக்க கூடாது.  அப்பறம் காமடி பீஸ் மாதிரிதான் இருக்கும். 

பொதுவா உங்க உயரத்திற்கேற்ற எடை இருக்கணும். கூடினால் குண்டு  கல்யாணம்  மாதிரி  தெரியும். குறைஞ்சா ஓமகுச்சி தான்.

இப்ப உயரம் அதற்கு ஏற்ற எடை என்ன என்பதை பார்போம். 

உயரம்   எடை 
157cm . 56 -60 கிலோ
160cm  57 -61கிலோ 
162cm  59 -63 கிலோ 
165cm  61 -65கிலோ 
168cm 62 -67கிலோ 
170cm 64 -68கிலோ
173cm  66 -71கிலோ 
175cm 68 -73கிலோ 
178cm 69 -74கிலோ 
180cm 71 -76கிலோ 
183cm 73 -78கிலோ 
185cm 75 -81கிலோ 
188cm 78 -83கிலோ

இதுதான் சரியான எடை. இதில் ஒன்றிரண்டு கிலோ கூடலாம், குறையலாம் அதனால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது.             

 இனி தலைப்புக்கு வருவோம். ஆடை பாதி 

சிலரை  பார்த்தவுடனே பிடிக்கும். சிலரை பழகினால் தான் பிடிக்கும்.  பார்த்தவுடனே பிடிக்கணும்னா முதல் தாக்கம் நல்லா இருக்கணும்.  பொதுவா கருப்பா இருக்கிறவங்க காமா சோமான்னு ட்ரெஸ் போடுறதை நிறுத்தனும்.

கட்டம் போட்ட சட்டை போட்டு ஜெயில் கைதி மாதிரி இருக்க கூடாது.  வெளிர் நிறங்கள் எடுப்பா இருக்கும். 

அதுக்காக வெள்ளை சட்டை போட்டா வயசு கூடின மாதிரிதான் இருக்கும். இளமையா தெரிய லைட் ரோஸ், இளம் நீலம், வெண்மை கலந்த கத்தரிப்பூ கலர், சந்தன கலர் போன்றவை ஓகே.

வேஸ்டி கட்டினாலே ஒரு முதிய தோற்றம் இயல்பா வந்துடும். வயச குறைச்சு காட்ட ஜீன்ஸ் நல்லது.  

ஜீன்ஸ் போட்டா சட்டை போடக்கூடாது.  டி ஷர்ட்தான் நல்லது.  நீங்க என்ன கலர்ல வேண்டுமானாலும் சர்ட் போடுங்க.  ஆனால் பேன்ட் மட்டும் கருப்பு கலர்ல இருந்தா எடுப்பா இருக்கும்.

எப்போதுமே கருப்பா இருக்கிறவங்க பச்சை, கரு நீலம், கருப்பு கலர் சட்டை போடவே கூடாது.  போட்டால் அமாவாசை இருள் மாதிரி முகம் கருப்பா தான் இருக்கும்.

மாநிறமா... ஓரளவு டார்க் கலர் சட்டை போடலாம்.  போட்டாலும் தப்பில்லை. அதே மாதிரி சிகப்பு கலரா இருக்கிறவங்க டார்க் கலர்ல சட்டை போட்டா அப்படிதான் இருக்கும்.

பொதுவா வயசை குறைச்சு காட்ட முழுக்கை சட்டை போடவே கூடாது.  அரைக்கை சட்டைதான் நல்லது. 

நல்லா தலை வாருங்க. புயல்ல அடிபட்ட மாதிரி இருக்காம சீவிய தலை தான் சிறப்பு.

என்னதான் அழகா உடுத்தினாலும், தலை  சப்பி போட்ட பணம்கொட்டை மாதிரி  இருந்தால் எடுபடாது. 

சிலருக்கு நடு  வாகு   நல்லா இருக்கும்,  சிலருக்கு முடியை தூக்கி சீவினா அழகா இருக்கும்.  சிலருக்கு பக்க வாகுதான் நல்லா இருக்கும்.  கண்ணாடி முன்னே நின்னு சீவி பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி முடிவை எடுங்க.

சின்னதா ஒரு திருநீர் கீற்று வச்சு பாருங்க.  உங்க முகம் பார்க்க ஜொலிப்பா இருக்கும்.

முக்கியமா குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்க. அடிக்கடி சோப்பை மாத்தி போடதிங்க.  இதை சரியாய் கடைபிச்சா நீங்க ஹிரோதான். Saturday, 21 April 2012

நமக்கு எல்லாமே சாத்தியம்.

இவ்வுலகில் உன் பிறப்பு தற்செயலானது இல்லை. இந்த பிரபஞ்சத்திற்கு நீ தேவை படுகிறாய்.

நீ இல்லாவிட்டால் ஏதோ ஒரு வெற்றிடம் தோன்றுகிறது. வேறு எவராலும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

ஓஷோ 

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள்தான். அவர்களுடிய சிந்தனா சக்தி மூலம் செயல்படுவார்கள். 

இவ்வுலகில் சோம்பேறிகள் வேண்டுமானால் இருக்கலாம். மூடன் என்று ஒருவரும் இல்லை. அறிவில் யாரும் உயர்த்தி தாழ்த்தி இல்லை.

எல்லோருக்கும் மூளையின் எடை 1250 கிராம்தான். 

ஒரு சைக்கிளோட்டி தனக்கு விமானம் ஓட்ட தெரியவில்லையே என்று வருத்த பட தேவை இல்லை. ஒரு விமானிக்கு சைக்கிலோட்ட தெரியாமல் இருக்கலாம்.

ஒரு புட்பால் பிளேயர் பத்தாம் வகுப்பு கூட படிக்காமல் இருக்கலாம். டாக்டருக்கு படித்த ஒருவர் கடிகாரத்திருக்கு பேட்டரி போட தெரியாமல்  திணறலாம்.

ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் திறமைசாலிகள் தான். தனித்தன்மை படைத்தவர்கள் தான்.

ஏர் உழும் விவசாயி பலருக்கு சோறு போடும் அளவிற்கு திறமைசாலி. அவரது பெயரை கூட அவரால் எழுத முடியாமலும் இருக்கலாம். அதற்காக அவரை குறைவாக நினைக்க வேண்டியதில்லை.

எனவே . நாம் அவனை போல் இல்லை, இவனை போல் இருக்க முடியவில்லை என்று வருத்த படவேண்டிய அவசியம் இல்லை.

உன்னிடம் என்ன இல்லை என்று வருந்துவதை விட, உன்னிடம் என்ன இருக்கிறது என்று நினைத்து சந்தோஷபடு.

அடுத்தவர்கள் மட்டமாக நினைகிறார்களோ இல்லையோ, தம்மை தாமே குறைவாக எடை போட்டு கொள்பவர்கள் நிறைய உண்டு.

கவிபேரரசு ஒரு முறை நடிகர் அசோகனை பார்க்க சென்றிருந்தாராம். அவர் கவிஞரிடம் தம்பி.....இந்த ரேடியோவை சென்னை நிலையத்திற்கு மாற்றி தாயேன் என்றாராம்.

வைரமுத்துவுக்கோ ஆச்சரியம்.

எனக்கு இந்த ரேடியோவெல்லாம் வைக்க தெரியாது. என் பேரன்கள்தான் வச்சு தருவாங்க என்றாராம்.

ஒரு விழாவிற்கு சென்றிருந்தாராம் கவிபேரசு. விழா முடிந்து உடன் அமர்ந்து இருந்த ஸ்ரீதரோடு பேசி கொண்டே எழுந்து வெளியில் வந்திருக்கிறார். வைரமுத்துவின் கார் வந்துவிட்டது.

ஸ்ரீதரை தனியே விட்டு விட்டு வர அவருக்கு மனம் வர வில்லை. அப்படி செல்வது அவருக்கு மரியாதையாகவும் படவில்லை. காத்திருந்தார்கள் நேரமாகிவிட்டது.

ஐயா.. உங்கள் கார் எண்ணை சொல்லுங்கள். நான் என் டிரைவரை அனுப்பி வைக்கிறேன். என்று கேட்டிருக்கிறார்.

வைரமுத்து என் கார் நம்பரெல்லாம் எனக்கு தெரியாது என்றாராம் ஸ்ரீதர். இதனால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. அவர்கள் தொழிலில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.

இருந்தாலும் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர்கள் இல்லை. எடிசனுக்கு படிப்பறிவு குறைவு. ஆனாலும் அதை நினைத்து அவர் சோர்ந்து போகவில்லை.  மக்களின் பயன்பாட்டிற்கு அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகளை விட வேறு யாரும் அதிகம் கண்டுபிடிக்கவில்லை.

நமக்கு எதுவும் தெரியவில்லை என்று என்ன வேண்டாம். நம்மிடம் உள்ளதை எண்ணி தன்னம்பிக்கை கொள்வோம். நமக்கு எல்லாமே சாத்தியம்.

கேது பகவான்/ KETHU PAKAVAAN

கேது....

அரக்கர் இனம் என்று அரிச்சுவடி சொல்கிறது. கூடவே பாம்பின வம்சம் என்பதே உண்மை.  அந்த வகையில் பாம்பின ராகுவின் உடன் பிறந்த பங்காளி கேது. இல்லை இல்லை.....அண்ணன் ராகு, தங்கச்சி கேது.

உம்மைத்தானே ராகு ஆண் பாலாம். கேது பென்பாலாம்.  அண்ணன் ராகு கருப்பு என்றால், கேது சிகப்பி. இந்து ஜோதிட  சாஸ்த்திரத்தில் இதற்குரிய இடம் ஒன்பது. 

பின்னால் இடம் பிடித்தாலும் கண்ணால் காண முடியாத அருப உருவம் கொண்டது. இ.பி.கோ மாதிரி ஜோதிட சட்டத்தின் எந்த பிரிவும் கேதுவுக்கு நற்சான்று வழங்கவில்லை.

yes
 ஆதி நூல்கள் அனைத்துமே அசால்ட்டாய் சொல்கிறது.  கேதுவா... அவன் கெட்டவன். அந்த வகையில் ராகு ஒரு ராஜ வீட்டு கன்னுக்குட்டி. கொடுப்பதில் இருக்கும் மும்மரம், கெடுப்பதில் இருக்கும் தீவிரத்தை விட குறைவுதான்.

இருந்தாலும்...நல்லவன், யோகவான், செல்வத்தை அள்ளி தருபவன் என்று ராகுவின் தன்மையே வேறு. ஆனால் கேதுவுக்கு அந்த கொடுப்பினையே இல்லை. மாஸ்டர் டிகிரி கெட்டவன் என்ற பட்டம் தான்.

சரி..கேது நல்லது செய்யுமா செய்யாதா?

ஏன்...செய்யுமே...பொதுவாக மறைவுஸ்தான கேதுவுக்கு மரியாதையே தனி. ஆனால் ஏட்டில் இருக்கும் கேதுவு மட்டும் இந்த சட்டம் செல்லாது. கெட்டவன். ரெண்டும் அப்படிதான்.

ஏன் என்ன செய்யும்?

பணத்திலே புரளுகிற மாதிரி ஒரு பாவனை தெரியுமே தவிர உண்மை இல்லை. பாக்கெட் மணிக்கு எப்போதுமே பற்றாக்குறைதான். 12 இல் இருந்தாலும் நிலைமை மாறாது.

பிளே கிரவுண்ட் அளவுக்கு வாழக்கையில் ரவுண்ட் கட்டி அடிக்கும்.

நல்லதாவா?

அட உங்க வீட்டிலே தங்கம் விலையோ.... கேதுவா...நல்லதா...நல்ல கதை போங்க. கெடுக்கிறதுக்காக கொடுக்கும் பாருங்க ராசா. அனுபவசாலிகளை கேட்டு பாருங்க தெரியும்.

ஆனால் பாவர்கள் சாப விமோச்சனம் பெறுகிற 3 .6 ,11 ஆக இருந்தால் நிலவரம் முன்னேற்றம்தான். அந்த இடத்தில் போதுமான அளவிற்கு போதிமரம் இருக்குமோ என்னமோ, பாவத்தன்மையை குறைத்து கொண்டு சுபதன்மையை விருத்தி செய்கின்றன.

மேலும் சுபர்கள் பார்வை பெற்ற கேது கொடுக்கா விட்டாலும் கெடுப்பதில்லை. ஆனால் சின்ன வயசு கேது திசைக்கு சிக்கல் அதிகம். பிள்ளையை பெற்ற மகாராஜனுக்கு தொல்லைகள் அதிகம்.

வாலிபத்தில் வரும் கேது திசை ஒரு மார்க்கமானது. காதல் சாம்ராட், காதல் இளவரசு,  காதல் சிற்றசு, காதல் ஜமீந்தார், காதல் பண்ணையார் இப்படி எல்லாமாய் உலாவருவார்.

பள்ளி பட்டிப்பு காலமாக இருந்தால் சொந்த புத்தி மறைந்து மந்த புத்தி வந்து விடும். படிப்பில் பாஸ் பன்றது பார்டர் மார்க்குலதான்.

ஆனால் முதுமையில் வரும் கேது திசை பக்தி மார்க்கத்தை தரும். வீட்டு நிர்வாகத்தில் இருந்து விருப்ப ஒய்வு பெற வைக்கும்.

பொதுவாக கேது திசை நடக்கும் போது நல்லதல்ல என்று சொல்லக்கூடிய எத்தனையோ விஷயங்களை  சந்திக்க வேண்டி இருக்கும்.

எப்படி?

வியாதிகளால் பீடிக்க  படலாம்.கடன் தொல்லையில் சிக்குண்டு கழுத்து நெரிபடலாம். உற்ற உறவுக்குள் உரசல் ஏற்பட்டு பிரிய நேரலாம்.

சரி

செய்யாத தப்புக்கு ஐயா மாட்டிக்க நேரலாம். என்ன வாழ்க்கையது என்று விரக்கதி கொள்ளும் அளவிற்கு சோதனைகள் தொடரலாம். ஜோதிட சாஸ்த்திரத்தில் கேதுவுக்கு ஒப்படைக்க பட்ட பணி ஞானம்.

ஞானம் என்றால் பக்தி மார்க்கத்தை குறிப்பது. பற்றில்லாத வாழ்க்கையை குறிப்பது. தான்  என்ற அகந்தையை குறிப்பது. அதனால் தான் கேதுவை ஞானகாரகன் என்றும் சந்நியாசி என்றும் அழைக்கிறார்கள்.

அப்படியானால் இல்லறத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாதா?

நேரடி தொடர்பு கிடையாது. கொல்லைப்புறத்தில் புகுந்து தொல்லைகள் தருவதுண்டு.

சொல்றேன்.

பொதுவா.. பொண்டாட்டியா ஒரு பொம்பளையை வச்சுகனும்னா அதுக்கு களத்திர பாவம் தான் கண் திறக்கனும். மேலும் இத்துறைக்கு ரீஜனல் மேனேஜர் சுக்கிரன். 

தங்கள் துறை சம்மந்த பட்ட அனைத்து விஷயங்களையும்  பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் போது, இந்த சந்நியாசி கேது இடையில் புகுந்து சடுகுடு விளையாடும்.

எப்படி?

வேறன்ன...கலத்திரபாவத்தில் ஒட்க்கார்ந்து கழுத்தறுக்கும்.எப்படியும் நாற்பது தொடும் வரை நல்லதே நடக்காது.

நம்மாளுக்கு சுமார் ரகம் எல்லாம் சூப்பர் பிகரா தெரியும். ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாம் ஊர்வசிதான்.

அட கடவுளே அப்பறம்.

வேறென்ன செய்றது. கேதுதான் பிகரோட அப்பா மாதிரி பிகு பண்ணுவாரே.

அது சரி அப்பறம்.

சுக்கிரன் கேதுவோட நட்சத்திரத்தில் இருந்தால் திருமணம் ஆகியும் பிரம்மசாரி யோகத்தை தருவார். கணவன் மனைவி ஒற்றுமையா இருக்கிற மாதிரி ஒரு தோற்றம் தெரியுமே தவிர, உள்ளுக்குள் இருக்கும் குடைச்சல் ... வெளியில் இருந்து ஆதரவு தரும் அரசியல்வாதி மாதிரி பெரும் அவஸ்தை.

எப்ப பூகம்பம் வேடிக்கும்ன்னு சொல்லமுடியாது. சுக்கிரனை எடுத்துகோங்க. கேது சாரம் பெற்றால் கெடுதல் ஒன்றும் இல்லை. ஆனால் தாம்பத்திய உறவு மட்டும்  தாமரை இல்லை தண்ணீர் மாதிரிதான்.

ஆனால் ஆன்மீக நாட்டம் இருக்கும். கலைதொழிலில் கவனம் இருக்கும். ஆனால் சுகிரனோடு சேர்க்கை பெற்றால் சங்கதி வேறு.

என்ன?

கண்கள் எபோதுமே பெண்கள் பக்கம் இருக்கும். பலவீனமான பெண்களை சேர்த்து விட்டு இல்லாத வம்பை எல்லாம் இழுத்து விட்டுடும். ,மொத்தத்தில் கேது பொல்லாத கேது.  

Thursday, 19 April 2012

பேஸ் புக்கில் Was tog i தடுப்பது எப்படி?

என் பேஸ்புக் இல் இருந்த நல்ல தகவல்.  அதை உங்களுக்கு அப்படியே தருகிறேன். 

இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு.  அனிஷா பானு என்ற நண்பர்தான் இதை போஸ்ட் செய்திருக்கிறார். அவருக்கு நன்றி.   என் வலை தளத்தை பார்க்க  google sarch வழியே வரும் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே இந்த தகவல்.  

"பேஸ்புக்கில் தொல்லை கொடுக்கும் Photo Tag ஆஃப் செய்வது எப்படி பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும்


Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய்என்னை Tag பண்ணாதேஎன்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்

 இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag ஆஃப் செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம்

 அதாவது ப்ளாக்கில் கமெண்ட் மாடரேஷன் வைப்பது போல :) இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்

 அதில் Privacy Settings செல்லுங்கள் அங்கு Timeline and Tagging என்பதற்கு அருகில் உள்ள Edit Setting என்பதை கிளிக் பண்ணுங்கள் கிளிக் பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ ஒன்று வரும்

 அதில் Review posts friends tag you in before they appear on your timeline என்பதை On செய்யுங்கள். On பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ தோன்றும். அதில் கீழே உள்ள படத்தில் காட்டியது போன்று Review Control Enable செய்துவிட்டால் சரி இப்போது செட்டிங்ஸ் முழுமையடைந்துள்ளது

 இதன் பின்னர் உங்களை யாராவது Tag பண்ணினால் அவை உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும். நீங்கள் அனுமதி அளித்த பின்னரே உங்களை Tag செய்யும். அனுமதிக்காக காத்திருக்கும் Tags உங்கள் ப்ரோபைலில் Activity Log என்ற பகுதியில் காணலாம்.

இறைவனுக்கு வேண்டுகோள்!

இறைவா.....!

உன்னின் அம்சமே நான்.

உன்னின் மிக நுண்ணிய சிறு துகளே என் உயிர் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

என் கல்வி, என் அறிவு, என் ஆற்றல், நற்ச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் நீயே என்பதே நான் அறிவேன். 

இறைவா...

என்னை நான் தேடி கண்டுபிடித்து, உன்னிடம் அழைத்து வர வேண்டும் என்பதற்காகவே இப்பூமியில் என் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதையும் நான் அறிவேன்.

நான் நானாகவே இருக்கிறேன்.  நீ என்னுடன் இருக்கும் வரை.

பசும் புல்லை காட்டி பசு மாட்டை அழைத்து சென்று விடுவதை போல்......

அவ்வப்போது இந்த மனம் என்னை சலனபடுத்தி, அதன் போக்கிற்கே அழைத்து சென்று விடுகிறது.

சுய உணர்வு வந்த பின் நான் அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறேன்.

இறைவா....

உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான்....

எப்போதும் என்னை விட்டு விலகாதிரு.

என்னை எனக்கு ஞாபக படுத்திகொண்டு. 

கடல் கன்னி/ KADAL KANNI

இங்கேன்னு இல்லை. உலகம் முழுவதும் அம்புலிமாமா கதைகள் ஏராளம்.

அதிசயம் ஆனால் உண்மை என்பதில் ஆரம்பித்து, ஆட்டு குட்டி அம்மான்னு சொல்லுது பாருங்க என்பது வரை பல்வேறு புனை கதைகள் உலா வருகிறது.

இதற்கு ஆதாரமாக வலை தளங்களில் விடியோ படங்களும் வரும். இது எப்படி இருக்கு தெரியுமா?

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொன்னால் அது உண்மை ஆயிடும். கடல் கன்னி விஷயத்தில் நடந்து கொண்டிருப்பது அதுதான்.

கடல் கன்னி.

இதுதான் கடல் தேவதை. மனித உருவத்தில் இருந்தாலும் அது மறைந்து வாழ்கிறது.  இதில் ஆண் பெண் இருவகைகள் உண்டு. தண்ணீரில் உல்லாச பறவைகள் மாதிரி உலா வருகிறது என்றெல்லாம் அவ்வப்போது புது செய்திகள் வரும்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் நடுக்கடல் நடந்த சண்டையில் குண்டடி பட்டு இருந்து போன கடல் கன்னியை பாருங்கள் என்று ஒரு வீடியோ தொகுப்பு utub இல் இருக்கிறது.

அந்த வீடியோ குண்டு பல வருஷங்களுக்கு முன்பே போட்ட பழைய குண்டு.


yes
 அது மட்டுமா... 

google வலை தளத்தில் இது பற்றிய கட்டுரைகள் நிறைய இருக்கு. சீனாவில் கடல் கன்னி, சிலோனில் கடல் கன்னி. துபாயில் கடல் கன்னி ஏற்று பல்வேறு கட்டுரைகள் இருக்கிறது.

நான் பார்த்தேன், அவன் பார்த்தான், ஆடிச்சு, ஓடிச்சு, எங்களை பார்த்ததும் மறைசுடிச்சு என்று பல புனை கதைகள் இருக்கிறது.

ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை.  கடல் என்பது ஒரு அதிசய சுரங்கம்.  பூமியில் இருக்கும் உயிரினங்களை விட கடலில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகம்.

இன்னும் கடல் வாழ் உயிரினங்கள்  பற்றி முழுவதும் ஆராய படவில்லை என்பது தான் உண்மை.  இப்போது சொல்லப்படும் கடல் கன்னி என்பது கடல் பசுவைத்தான் அப்படி சொல்கிறார்கள்  இதோ கடல் பசு படம்.

 இந்த கடல் பசுதான் செத்து கரை ஒதுங்கும் போது தான் கடல் கன்னி என்று கதை சொல்ல படுகிறது.

மற்றபடி கடல் கன்னி மனித உருவில் இருக்கிறது என்பது எல்லாம் கட்டு கதை.

அதில் உண்மை இல்லை.

Wednesday, 18 April 2012

புராணங்களில் தந்திரம்

வில்லுக்கு ஒரு விஜயன் என்பார்கள் மகாபாரதத்தில். 

 ராமாயணத்தில் அந்த சொல்லுக்கு சொந்தக்காரன் ராமன்.

ராமன் அம்பை எடுத்தால் எதிரிகளை  கொள்ளாமல்  திரும்பியதில்லை.  ஆனாலும் ராமனிடம் இருந்து ஒருவன் தப்பினான்.  அவன் ஒன்னும் இந்திரனையே வென்ற இந்திரஜித்தும் அல்ல,  சாதாரண போர் வீரன்.

அப்படியானால் அவன் பாலகனா  வயோதிகனா... நோயாளியா... ! 

இல்லை... இல்லை...  அவன் சாதாரண போர் வீரன்.  ராமனால் கொள்ளபடாமல் தப்பி ராவணன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.   நேராக ராவணிடம் ஓடினான்.

இந்த உலகத்தையே எட்டி உதிக்கும் ஆற்றல் பெற்ற மன்னா...  கடல் மாதிரி பெருக்கெடுத்து நின்ற நம் படைகள் முற்றிலும் அழிந்து விட்டன.

ஒருவர் கூட உயிருடன் இல்லை. ராமனின் அம்பு யுத்த களத்தில் கூட்டம் கூட்டமாய் கொண்டு குவிக்கிறது..


ஏ....முடனே... ஒருவர் கூட உயிருடன் இல்லை என்கிறாய். ஆனால் நீ மட்டும் தப்பியது எப்படி.

நான் என் வீரத்தால் தப்பவில்லை. ஒரு தந்திரம் செய்துதான் தப்பினேன்.

தந்திரமா... அப்படி என்ன தந்திரம்?

பிரபு .... போர்க்களத்தில் புடவை கட்டி இருந்தேன்.

புடவையா.. எதற்கு?

ராமன் தன் மனைவியை தவிர வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டானாம்,  என்னையும் ஒரு பெண் என்று நினைத்து விட்டான். அதனால் தப்பினேன் என்றான்.  என்ன ஒரு தந்திரம்.

கிருஷ்ணன் செய்த தந்திரம் 

பிதாமகர் பீஷ்மர்.  மாபெரும் வீரர்.  இவரை வெல்ல யாராலும் முடியாது. இவர் துரியோதனன் பக்கம் இருக்கிறார்.

பாண்டவர்கள் பக்கம் இருப்பது கிருஷ்ணனாக இருந்தாலும் பாண்டவர்களை காக்க கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தான்.

யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் பீஷ்மர் தன் கூடாரத்தில் ஓய்வு   எடுத்து கொண்டிருந்தார். 

கிருஷ்ணன் பாஞ்சாலியை அழைத்தார். பாஞ்சாலி....பீஷ்மருக்கு இணையான வீரன் இதுவரை பிறக்கவில்லை.  இவரை களத்தில் வெல்லவே முடியாது.  உன் கணவன் மார்களுக்கு ஆபத்து என்றால் அந்த கர்ணனால் வரபோவதில்லை,  இந்த பீஷ்மரால் மட்டுமே பாண்டவர்களை கொள்ள முடியும்.

ஐயோ அண்ணா....

பதறாதே.  அதற்க்கு ஒரு வழி சொல்கிறேன்.   அதன்படி நீ நடந்தால் பாண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

சொல்லுங்கள் அண்ணா.

கூடரத்தில் இருக்கும் பீஷ்மரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேள். 

கேட்டால்....

முதலில் கேள்.  நீ ஆசிர்வாதம் வாங்கும் போது, உன் திருமாங்கல்யம் வெளியே  தெரிகிறமாதிரி குனிந்து நமஸ்கரி. 

கிருஷ்ணன் சொன்ன மாதிரியே செய்தால் பாஞ்சாலி.  பீஷ்மர் இருக்கும் கூடாரத்திற்குள் நுழைந்ததும் என்னை ஆசிர்வதியுங்கள் என்று காலில் விழுந்தாள்.

வந்தது யார் என்று கூட சரியாய் அவர் கவனிக்க வில்லை.  ஆனால் ஒரு பெண் என்பது மட்டும் தெரிகிறது.  அவளை கவனிக்கும் போது அவள் கழுத்தில் மாங்கல்யம் தொங்குகிறது/

உடன் பீஷ்மர் தீர்க்க சுமங்கலியாக இரு என்று வாழ்த்துகிறார்.  இந்த வாழ்த்து தான் யுத்த களத்தில் பாண்டவர்கள் உயிரை காக்க கவசமாக இருந்தது. 
 

வாஸ்து புருஷன் நித்திரையிலேயே இருப்பது ஏன்?


 தேடிய செல்வம் எல்லாம் ஓடி ஒளிகிறதே ஏன்? 

வீட்டிற்குள் நுழைந்தாலே காட்டிற்கு போன மாதிரி கவலை சூழ்கிறதே எதனால்?

வருவாய் இருந்தும் வறச்சி, இல்லாமை நடத்தும் புரச்சி, இவற்றோடு மல்லுகட்ட முடியாமல் மனம் நோவதின் காரணம் என்ன?

இந்த கேள்விக்கு விடை தேடி போனால், ஒரு வார்த்தை காரணமாக இருக்கும்.  அது வாஸ்த்து.  

பொதுவாக ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்ச்சத்திரத்தின் அடிப்படையில் வீட்டை அமைப்பார்கள்.  ஆனால் அது அவருக்கு 100 % ராசியான மனையா? வாஸ்த்து குறைபாடு இல்லாமல் இருக்கிறதா, மனையடி குற்றம் நீங்கி விட்டதா, குழி முறிசல் இல்லாமல் இருக்கிறதா என்பது எல்லாம் உறுதி படுத்த முடிவதில்லை. 

காரணம்....?  சுற்று சூழல்.  விளைவு ....  எதிர்காலமே புதிர் காலமாக காட்சியளிக்கிறது.  மனக்குறையும், பணக்குறையும் தொடர்கிறது. 

யாரு இந்த வாஸ்த்து புருஷன்?

இவர்தான் மனைகளுக்கு எல்லாம் மகாராஜன்.

ஓ.... வஸ்த்து புருஷன் நித்திரை விட்டு எழும் நேரம் என்று தினசரி காலண்டரிலும், பஞ்சாங்கத்திலும் குறிக்கபட்டு இருக்கிறதே அவரா?

அவரேதான். 

சரி... அவர் ஏன் குறுப்பிட்ட மாதத்தில் கண் விழித்து மற்ற நேரம் உறங்குவதாக சொல்கிறார்களே ஏன்?  

அதற்க்கு அவரின் சுயசரிதம் தான் விளக்கம் தரும்.  சொல்லவா?

அது ஒரு காலம்.  புராண காலம்.  சூரியன் உதித்தான். அன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை,  திரிதியை திதி, வியதிபாதாம் யோகம், பத்தரை கரணம், கார்த்திகை நட்ச்சத்திரம் கூடிய பொன்னாள்.

ஒரு மாபெரும் சக்தி உதயமாக போகும் நன்னாள் என்று மற்றவர்களுக்கு தெரியாமலே பொழுது புலர்ந்தது. 

அப்போது அந்தகாசுரன் எனும் அசுரன் அகில உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருந்த கால கட்டம். 

அசுரர்களுக்கு எப்போதுமே ஐந்தேமுக்கால் அறிவுதான்.  சிந்திக்கும் ஆற்றலில்  சிறிது குறைபாடு இருப்பதால் நிந்தனை செய்வது தேவர்களைதான். 

எந்த  நேரமும் சோம பானம், சுறா பானம் அருந்தி கொண்டிருப்பார்கள். போதை தலைக்கு ஏறியதும் தேவலோகத்திருக்கான பாதை மட்டும் தெளிவாக தெரியும்.

அப்பறம் என்ன.   படை சேனைகளோடு போய் பலபரிச்சை பார்ப்பதுதான் அவர்கள் வாடிக்கை.  அப்பாவி தேவர்கள் அலறியடித்து கொண்டு மும்மூர்த்திகளில் யார் முதலாக  தென் படுகிறார்களோ, அவர்களிடம் கதறி கலக்கத்திற்கான காரணத்தை சொல்லுவார்கள். 

நம்மை திரிஷ்டித்தவர்கள் அசுரர்களை அழிக்க ஆயத்தமாவார்கள். இதுபோன்ற ஒரு சூழல் அந்தகாசுரனால் வந்தது.

இந்த முறை சிவபெருமான் களத்தில் இறங்கினார்.   வரம் பெற்ற அந்தகாசுரனோடு கடும் போர் புரிந்தார்.

பொதுவாக அசுரர்களுக்கு சக்தி பெற்ற பிறகுதான் புத்தி வேலை செய்வதில்லையே.  ஆனால் வரம் கேட்கும்போது மட்டும் அறிவு சுடர் ஆயிரம் கண் விட்டு பிரகாசிக்கும்.

சாகாமல் தப்புவதற்கு ஏதாவது வழி  இருக்கா என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து தான் வரம் கேட்பார்கள்.  அந்த வகையில் அந்தகாசுரன் பெற்ற வரம் உயிரை   காத்தது. 

இருப்பினும் அந்தகசுரனின் அழிவு காலம் நெருங்கியது. சிதிரகுப்தன் அவன் ஏட்டை எடுத்து பார்த்தான்.  எமனின் பாச கயிறு உயர் குடிக்க தயாரானது.  போர் உச்சகட்டத்தை அடைந்தது. 

கடைசியில் சங்கரனின் பானம் சல்லடையாக துளைத்து அந்தகாசுரன்.

விழுந்தான்.  மீண்டும் எழவே இல்லை. மரணம் அவனை குடித்து தன் தாகத்தை தீர்த்து கொண்டது.

அப்போது சங்கரன் தன் உடலில் இருந்து வழிந்த வியர்வை துளியை வழித்து எறிந்தார். அதில் இருந்து ஒரு மாபெரும் சக்தி வெளிப்பட்டது.  அந்த சக்தியானது பிரம்மாண்டமாக வளர்ந்து அகில உலகத்தையே விழுங்கும் அளவிற்கு பூதமாக வடிவெடுத்து .

பூதம்தானே!  

யுத்த  களத்தில் கிடந்த வஸ்த்துக்களை எல்லாம் வாரியள்ளி  தின்றது.  அப்படியும் பசி அடங்கவில்லை. உடன் சிவனை நோக்கி தவம் செய்ய தொடங்கியது.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவது அவர் இயல்புதானே.  அந்த பூதத்திற்கு முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

உடனே அந்த பூதம் அகில உலகத்தையே அழிக்கும் ஆற்றல் எனக்கு வேண்டும் என்று வரம் கேட்டது. 

சற்றும் யோசிக்காமல் தந்தேன் வரம் என்று சொல்லிவிட்டு சிவ பெருமான் மறைந்து விட்டார்.  அவருக்கு தெரியாதா அடுத்து நடக்க போவது என்னவென்று.

அசுரபுத்தி எப்போதுமே  அர்ப்பமானதுதானே.  உடனே இந்த பூமியை விழுங்க பார்த்து.

விபரீதத்தை உணர்ந்து கொண்ட பிரம்மா, தேவர்களின் துணையோடு பூதத்தை சூழ்ந்து கொண்டு அதனை கட்டி குப்பற தள்ளினார். 

அதன் மேல் தேவர்களும் முனிவர்களும் ஏறி அமர்ந்து கொண்டனர்.  பூதத்தின் மார்பு  பகுதியில் பிரம்மா அமர்ந்து கொண்டார்.

அப்போது அந்த பூதம்.... என்னை படைத்த சிவனே எதன் பொருட்டு எனக்கு இந்த தண்டனை.  பசி பொறுக்கவில்லை.  தங்களால் உருவான எனக்கு ஒரு அவ சொல்லுக்கும், பழி சொல்லுக்கும்  ஆளாக்கி விட்டிர்களே ஏன்? என்று தன் தலையை உயர்த்தியபடி கேட்டது.

அதற்கு பிரம்மன்... கவலை படாதே.  பூமியில் விழுந்து கிடப்பதால் இனிமேல் வீடு கட்டும் அனைவருக்கும் நீ துணையாக இரு.  உன்னை வாஸ்து தேவன் என்றும் வஸ்து புருஷன் என்றும் அழைப்பார்கள். உன்னை பூஜிக்கும் அனைவருக்கும் நம்மையை செய்வாயாக என்று கட்டளை இட்டார்.

என் பசி இன்னும் அடங்க வில்லையே அதற்கு நான் என்ன செய்வது?

அப்போது அங்கே சரிசனம் தந்தார் சிவன்.  கவலைபடாதே.... வீடு கட்டும் மாந்தர்கள் பூஜை அன்று அனைத்து பொருள்களும்  உன்னை சாரும்.  

அணு தினம் தன் நித்திய சடங்குகளை செய்யும் ஆன்மீகவாதிகள் பயன் படுத்தும் அனைத்து பூஜை பொருள்களும் உன்னை சாரும்.

அது மட்டுமல்ல .... உன் பசியை குறைக்கும் முகமாக நீ விழித்திருக்கும் நாட்கள் குறையும். நீ நித்திரைலேயே இருப்பாய் என்று சிவ பெருமான் வரம் அளித்தார். 

உடன் வாஸ்து தேவனின் அகோர பசி அடங்கியது.  தேவர்களும் பிரம்மாவும் பாதம் பதித்து அமர்ந்ததால் புனித தன்மை பெற்றார்.

ஒவ்வொரு குடியிருப்பு மனை சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி,  வாஸ்து புருஷன் கவிழ்ந்த நிலையில் படுத்திருப்பதாக சொல்லபடுகிறது.