போலிகள் நிறைந்த உலகம். அதிலும் தரம் குறைந்த எலக்ட்ரானிக் குப்பைகளை தயாரிப்பு உலகம் முழுவதும் அந்தந்த கம்பெனி பெயர்களிலேயே போலியாக நடமாட விடுவதில் சைனா முதலிடம் பெறுகிறது. அடுத்த இடத்தில் கொரியா இருக்கிறது.
இன்று இளைஞர்கள் அதிக விலையுள்ள செல்போன்களை வாங்குவதில் அதிக நாட்டம் கொள்கின்றனர்.
வாங்குவதில் தவறில்லை. அது தரமானதா.. போலியானாதா? எப்படி கண்டு பிடிப்பது?
இப்படித்தான் கண்டுபிடிப்பது.
முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.
சரிங்க ... அதை மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும்.
உங்கள் மொபைலில் *#06# என டைப் செய்யுங்கள் …டைப் செய்த உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக 53235 என்ற எண்ணிற்கு SMS தட்டி விடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும்.
அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr
என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.
கவினிக்க வேண்டியது. IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.
அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.
0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.
0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
1,3 என இருப்பின் சந்தேகமே இல்லை. அது சைனா தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.
இனி உஷாரா இருக்கலாமா?
பயனுள்ள தகவலுக்கு நன்றி...
ReplyDeleteThank you
ReplyDeleteThank you
ReplyDeleteநன்றி
ReplyDelete