எப்படியும் குண்டு வெடிக்காமல் அடங்காது போலிருக்கிறது வடகொரியா தென்கொரியா பிரச்சனை.
இன்னும் நேரடி யுத்தம் தான் ஆரம்பம்மாகவில்லையே தவிர, வடகொரியா மறைமுக யுத்தத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த அந்த மறைமுக யுத்தத்தின் ஒரு பகுதியாக தென்கொரியாவின் மீது தொழில் நுட்ப தாக்குதல் நடத்தி இருக்கிறது வடகொரியா.
அதாவது தென்கொரியாவின் ரேடியோ ஒலிபரப்பு நிறுவனங்கள், மற்றும் வங்கிகளின் கம்ப்யூட்டர்கள். தென் கொரிய டி.வி. சேனல்கள் KBS, MBC மற்றும் YTN, தமது செய்தி சேவை கம்யூட்டர்களை லாக்-இன் செய்ய முடியவில்லை.
அதுமட்டும் அல்ல, வெவ்வேறு வங்கிகளின் கம்ப்யூட்டர்கள் கடந்த இரண்டு முதல் ஐந்து நாட்களாக இயங்கவில்லை.
இந்த தகிடு தித்த வேலையில் கைதேர்ந்தவர்கள் சீனர்கள்தான். அவர்கள்தான் பல நாட்டு ராணுவ ரகசியங்களை திருடுவதில் வல்லவர்கள்.
ஒருவேளை தன் நட்பு நாடான வடகொரியாவிற்கு இந்த தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்து விட்டார்களோ என்னவோ, யார்கண்டா?
இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சனை, நாளுக்கு நாள் சித்திரை மாதத்து வெயில் மாதிரி சூடு ஏறிக்கொண்டே போகிறது.
இதன் கடைசி கட்டம் யுத்தமாக இருக்க கூடாது என்று பிராத்திப்போம். பிராத்தனைக்கு காரணம் இருக்கிறது.
நிச்சயம் வடகொரியாவால், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாது.
ஒரு கட்டத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள வழியிலாமல் போனால், வடகொரியா அணுஆயுத தாக்குதலை தான் கையில் எடுக்கும்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது இன்னொரு உலக போருக்கு கூட வழிவகுத்து விடலாம்.
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
தொடர்புடைய வேறு கட்டுரை
வடகொரியா VS தென்கொரியா - ஆயுதங்கள் ஒப்பிடு
No comments:
Post a Comment