பிறக்கும் குழந்தைக்கு தாய் தந்தை அல்லது அவர்களது மூதாதையர் குணநலன்கள் சில இருக்கக் கூடும்.
உருவத்திலும் அதன் அப்பா அம்மா போலவோ, அந்த குடும்பத்தின் மூதாதையர் யாரேனும் ஒருவர் உருவத்தை ஒத்து இருக்கலாம். இது இயற்கை.
ஆனாலும் உறுதியாக சொல்ல முடியாது.
அழகான தம்பதியருக்கு அழகில்லாத குழந்தை பிறப்பதை பார்க்கிறோம்.
ஆனால் அறிவு குறைந்த குடும்பத்திலும் மிகவும் புத்திசாலியான ஒரு பையன் தோன்றுகிறான்.
கலையம்ச வாசனையே இல்லாத குடும்பத்தில் கலைமாமணியாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறாள்.
இது எப்படி?
இது வம்சாவளியாக வந்ததுதானா?
அல்லவே அல்ல. முன்பிறவியின் பயனாக கிடைத்தது என்பதை உணரவேண்டும்.
உடற்கூறு ஒரு குழந்தையின் பெற்றோரிடம் இருந்து பதிவாகக்கூடும். ஆனால் அறிவு பண்புகள் அப்படி பதிவாவது இல்லை.
மன அளவிலான ஒரு பதிவு உடற்கூரான ஒரு அணுவில் தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை.
இது மனதிலேயே உருவெடுத்து, பிறவிக்கு பிறவி மனம் மட்டும் தொடர்கிறது.
உடல் தொடர்ந்து செல்வதில்லை. அப்படி செல்லும் போது மனம் தனக்குரிய உடம்பை அடுத்த பிறவியில் தேடிக் கொள்கிறது.
அதாவது ஆத்மாவிற்கு உரிய உடம்பு கிடைத்ததும், அதற்கேற்ற காரியங்களை அது செய்வதும் பிறப்புக்கு உருவம் தரும் உடம்பை பற்றியது அல்ல.
அப்படியானால் அதை நிர்ணயிப்பது என்ன?
பூர்வ ஜென்ம வாசனை என்று நாம் கூறும் முற்பிறவியின் கர்மாக்கள் அளிக்கும் பண்புகளே.
இது முற்றிலும் தீரும் வரை உடம்பு தேவை. அதாவது தொடர்ந்த பிறவிகளும் தேவை. இதையே ஹிந்து சமயம் கூறுகிறது.
No comments:
Post a Comment