வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை நீடிக்கிறது.
அப்படி போர் மூண்டால் தென்கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கும் நிலையும் இருக்கிறது.
இந்நிலையில் இவ்விரு நாடுகளின் ராணுவ வலிமை என்ன? என்பதை பார்ப்போம்.
கம்யூனிஸ்டு நாடான வட கொரியாவின் வருடாந்திர தற்காப்பு செலவீனம் 820 கோடி டாலர் ஏன் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவில் அது சுமார் 24 விழுக்காடாகும்.
அதே வேலையில் கடந்தாண்டுக்கான தென்கொரியாவின் 3200 என்பது கோடி டாலர். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 விழுக்காடாகும்.
கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா மூன்றாவது முறையாக அணுவெடி சோதனை செய்து தனது அணு ஆயுத வலிமையை புலப்படுத்தி உள்ளது.
ஆனால் தென்கொரியாவை அனுஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முழு பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது.
வடகொரியாவிடம் 12 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களை தவிர்த்து 70 லட்சம் துணை ராணுவத்தினரும் உள்ளனர்.
அதே வேலையில் தென்கொரியாவிடம் 6.55 லட்சம் ராணுவ வீரர்கள் மட்டுமே உள்ளனர். தென்கொரியாவிடம் 30லட்சம் துணை ராணுவ வீரர்கள் உள்ளனர்.
தென்கொரியாவிற்கு பக்க பலமாக 28,000அமெரிக்க வீரர்களும் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வடகொரியாவிடம் 4,200 போர்டாங்கிகளும், தென்கொரியாவிடம் 2,450 போர்டாங்கிக்களும் உள்ளன.
வடகொரியாவிடம் 2,500 கவச வாகனங்களும், தென்கொரியாவிடம் 2,600 கவச வாகனங்களும் உள்ளன. அமெரிக்காவின் 110 கவச வாகனங்களும் தென்கொரியாவில் உள்ளன.
வடகொரியாவிடம் 8,500 பீரங்கிகளும், தென்கொரியாவிடம் 5,200 பீரங்கிகளும் உள்ளன.
வடகொரியாவின் விமானப்படையில் 820 போர் விமானங்களும், 300 ஹெலிக்காட்டர்களும் உள்ளன். தென்கொரியாவிடம் 460 விமானங்களும், 680 ஹெலிக்காட்டர்களும் உள்ளன.
வடகொரியாவின் கடற்படையில் மூன்று பிரதான போர் கப்பல்களும், 383 ரோந்து கப்பல்களும், 70 நீர் மூழ்கிகளும், 135 ஹேவார் கிராப்ட் கப்பல்களும் உள்ளன.
தென்கொரியாவின் கடற்படையில் 19 பிரதான போர்க்கப்பல்களும், 111 ரோந்து கப்பல்களும், 23 நீர் மூழ்கிகளும், ஐந்து ஹோவார் கிராப்ட் கப்பல்களும் உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் தொலை தூர ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.
இந்த ஏவுகணை 10,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. கடந்த மாதம் மூன்றாவது அனுஆயுத சோதனையை நடத்தியதும் நினைவிருக்கலாம்.
வடகொரியா 1986 இல் புளுட்டோனியம் அணு உலையை தொடங்கியது. அனுஆயுத பரவல் தடை விவாதத்தின் காரணமாக 2007 இல் இந்த அணு ஆலை மூடப்பட்டது.
தற்போது போர் சூழல் உருவாக்கி உள்ள நிலையில் இந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தையும் வடகொரியா மீண்டும் திறந்துள்ளது.
இதனால் அணு குண்டு தயாரிப்பதற்குரிய சூழலை வடகொரியா ஏற்ப்படுத்தி உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
வடகொரியாவின் நட்பு நாடுகளும் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளன.
எங்கே போய் முடியப்போகுதோ.
No comments:
Post a Comment