இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூக உறவுகள் குறித்து, பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தொடர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்ற இந்த இரு சமூகங்களும் தமக்கிடையே தற்போது சில முரண்பாடுகளால் விலகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஆயினும், நிலைமை அப்படியல்ல பல்வேறு பிரச்சினைகள் வந்தாலும், உறவு குலையவில்லை என்ற கருத்துக்களும் சிலர் மத்தியில் காணப்படுகின்றன.
அந்த நிலையில், இந்த இரு சமூகங்களின் மத்தியில் காணப்படும் உறவின் தற்போதை நிலைமை என்ன, அதற்கான காரணங்கள் என்ன, நிலைமை சரியில்லை எனில் அதனை எவ்வாறு மாற்றுவது ஆகிய விடயங்கள் குறித்து இந்த பெட்டகத்தொடர் ஆராயவிளைகிறது.
முதலில் வடக்கு கிழக்கில் சில பகுதிகளில் தற்போதை நிலவரம் என்ன என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படுவதுடன், பின்னர், இருக்கக்கூடிய பிரச்சினைகளை எவ்வாறு களைவது என்றும் ஆராயப்படுகிறது.
வழங்குவது லண்டன் BBC

நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன, தமிழ் வெளி ஒரு நல்ல பயனுள்ள வலைத்தளம் ... தமிழ் வெளி நன்றி....
ReplyDeleteஎமது வலைப்பகுதி
தமிழ் வாழ் வலைப்பகுதி
திருக்குறள்