ஐயா வாங்க...
அம்மா வாங்க....
அண்ணன் வாங்க....
தம்பி வாங்க..
மச்சான் வாங்க...
மாமி வாங்க....
அக்கா வாங்க....
தங்கச்சி வாங்க....
வாங்க......வாங்க... வாங்க.....
ஏங்க....?
அண்ணன் உங்களுக்கு பில்லி இருக்கு....
சித்தப்பு உங்களுக்கு சூன்யம் இருக்கு....
மாமு... உங்களுக்கு காடு வெட்டி ஐயனார் கோவில்ல காசு வெட்டி போட்டு இருக்காங்க.
யாரு?
எல்லாம் உங்க பங்காளிங்க வேலைதான்.
மாப்பு... உங்களுக்கு இருக்கு பெரிய ஆப்பு. மசான காளியை வச்சு மை வேலை செய்து இருக்காங்க.
என்னங்க காரணம்?
எல்லாம் தொழில் போட்டி. வேற என்ன?
என்னங்க காரணம்?
எல்லாம் தொழில் போட்டி. வேற என்ன?
கண்ணுல கொல்லி கட்டையை வைக்க.... இவனும் இருக்கானான்னு உருகி சாகுரானுங்கோ.
ஐயோ... என்ன செய்யணும்?
வியாதிக்கு மருந்து தராமல் போவேனா?
என்ன மருந்து?
வியாதி பெருசா இருந்தாலும் சின்ன மாத்திரைதானே தீர்வு. அந்த மாதிரிதான் இது.
மை இல்லை, மந்திரம் இல்லை, தகடு இல்லை, தாயத்து இல்லை. தந்திரம் இல்லை, எந்திரம் இல்லை.
அப்பறம் என்ன?
இதோ பார் மோதிரம். யானைமுடி மோதிரம். அடிச்சு சொல்றேன், ஆணித்தரமா சொல்றேன், ஓங்கி சொல்றேன், ஒய்யாராமா சொல்றேன். இதை போடு, காத்து கருப்பு அண்டாது. பில்லி, சூன்யம், செய்வினை கோளாறு எது இருந்தாலும் ஓடி போய்டும்.
இது ஆத்தா மகமாயி, அங்காளம்மா மேல சத்தியம்.
இது ஒன்னும் நாடக டயலாக் இல்லை. ஈரோடு கடைத்தெரு ஒன்றில் நான் கண்ட காட்சி. ஒருவர் கூவி கூவி... விற்றார். பாவி மக்கா... மோதிரம் 50 ரூபாய்ன்னு வித்து தள்ளிட்டார்.
சரி அவர் சொல்வது சரிதானா?
உறுதியான ஆதாரம் ஒன்றும் இல்லை.
நரி பல்லு, புலி நகம் மாதிரி தான் இந்த யானை முடி மோதிரமும். யானையின் காலுக்குள் நுழைந்து வந்தால் கிரக தோஷம் விலகும் என்று சொல்வது மாதிரி, ஒரு குத்து மதிப்பு கணக்காகத்தான் இருக்கிறது.
பில்லி சூன்யம் விலகும், கண் திருச்ட்டி போகும் என்பது எல்லாம், விற்பனைக்கு வந்த கடை சரக்கு.
மார்க்கட்டில் நல்ல மவுசு இருப்பதால் அதற்கு நல்ல கிராக்கி இருக்கிறது. அவ்வளவுதான்.
அதிலும் யானை முடி மோதிரம் என்று கடைகளில் விற்கப்படும் மோதிரங்கள் போலியானவை.
உண்மையான யானை முடி மோதிரம் எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல், பலர் போலியான மோதிரங்களை வாங்கி அணிந்து கொள்கின்றனர்.
இந்த மோதிரம் போலியானது. சாதாரண பேப்பரை எப்படி வெட்டி எடுக்குறோமோ, அதை போல், எருமை மாட்டு கொம்பை செதுக்கி, பேப்பர் சீவுவது போல் சீவி, இந்த மோதிரங்களில் பதிக்க படுகிறது.
ஈரோடு கடை வீதியில் நான் கண்ட மோதிரம் என்பது, பித்தளை மோதிரத்தில் பைபர் ஒயர் சேர்த்து செய்ய பட்டது.
இதை தான் உண்மையான மோதிரம் என்று பலர் வாங்கி அணிந்து கொள்கிறனர். இதனால் எந்த பலனும் இல்லை.
சரி உண்மையான யானை முடி மோதிரம் எப்படி இருக்கும்? படம் இதோ.
உண்மையான யானை முடியை வெறும் கிளிப் கொண்டு பூட்டி வைக்க முடியுமே தவிர, நெருப்பு கொண்டு பத்த வைக்க முடியாது.
அப்படி உண்மையான யானை முடியை வாங்கி, அதை பத்தரிடம் கொடுத்து அணிந்து கொண்டாலும் ஒரு அலங்கார பொருளாக இருக்குமே தவிர, கண் திருச்ட்டி போகும், பில்லி சூன்யம் விலகும் என்று நம்பி ஏமாற வேண்டாம்.
ஐயோ... என்ன செய்யணும்?
வியாதிக்கு மருந்து தராமல் போவேனா?
என்ன மருந்து?
வியாதி பெருசா இருந்தாலும் சின்ன மாத்திரைதானே தீர்வு. அந்த மாதிரிதான் இது.
மை இல்லை, மந்திரம் இல்லை, தகடு இல்லை, தாயத்து இல்லை. தந்திரம் இல்லை, எந்திரம் இல்லை.
அப்பறம் என்ன?
இதோ பார் மோதிரம். யானைமுடி மோதிரம். அடிச்சு சொல்றேன், ஆணித்தரமா சொல்றேன், ஓங்கி சொல்றேன், ஒய்யாராமா சொல்றேன். இதை போடு, காத்து கருப்பு அண்டாது. பில்லி, சூன்யம், செய்வினை கோளாறு எது இருந்தாலும் ஓடி போய்டும்.
இது ஆத்தா மகமாயி, அங்காளம்மா மேல சத்தியம்.
இது ஒன்னும் நாடக டயலாக் இல்லை. ஈரோடு கடைத்தெரு ஒன்றில் நான் கண்ட காட்சி. ஒருவர் கூவி கூவி... விற்றார். பாவி மக்கா... மோதிரம் 50 ரூபாய்ன்னு வித்து தள்ளிட்டார்.
சரி அவர் சொல்வது சரிதானா?
உறுதியான ஆதாரம் ஒன்றும் இல்லை.
நரி பல்லு, புலி நகம் மாதிரி தான் இந்த யானை முடி மோதிரமும். யானையின் காலுக்குள் நுழைந்து வந்தால் கிரக தோஷம் விலகும் என்று சொல்வது மாதிரி, ஒரு குத்து மதிப்பு கணக்காகத்தான் இருக்கிறது.
பில்லி சூன்யம் விலகும், கண் திருச்ட்டி போகும் என்பது எல்லாம், விற்பனைக்கு வந்த கடை சரக்கு.
மார்க்கட்டில் நல்ல மவுசு இருப்பதால் அதற்கு நல்ல கிராக்கி இருக்கிறது. அவ்வளவுதான்.
அதிலும் யானை முடி மோதிரம் என்று கடைகளில் விற்கப்படும் மோதிரங்கள் போலியானவை.
உண்மையான யானை முடி மோதிரம் எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல், பலர் போலியான மோதிரங்களை வாங்கி அணிந்து கொள்கின்றனர்.
![]() |
போலியான யானை முடி மோதிரம் |
ஈரோடு கடை வீதியில் நான் கண்ட மோதிரம் என்பது, பித்தளை மோதிரத்தில் பைபர் ஒயர் சேர்த்து செய்ய பட்டது.
இதை தான் உண்மையான மோதிரம் என்று பலர் வாங்கி அணிந்து கொள்கிறனர். இதனால் எந்த பலனும் இல்லை.
![]() |
(உண்மையான யானை முடி மோதிரம்) |
சரி உண்மையான யானை முடி மோதிரம் எப்படி இருக்கும்? படம் இதோ.
உண்மையான யானை முடியை வெறும் கிளிப் கொண்டு பூட்டி வைக்க முடியுமே தவிர, நெருப்பு கொண்டு பத்த வைக்க முடியாது.
அப்படி உண்மையான யானை முடியை வாங்கி, அதை பத்தரிடம் கொடுத்து அணிந்து கொண்டாலும் ஒரு அலங்கார பொருளாக இருக்குமே தவிர, கண் திருச்ட்டி போகும், பில்லி சூன்யம் விலகும் என்று நம்பி ஏமாற வேண்டாம்.
சரியா சொன்னீங்க
ReplyDeleteவீடியோவில்தான் கலக்கறீங்கன்னா...எழுத்தில் அதைவிட செமயா ...அருமைங்க...படிக்கத்தூண்டும் ஆர்வம் எழுத்தில் இருக்கிறது...தொடர்ந்து எழுதுங்க...நன்றி
ReplyDeleteAnkita dave 10 min video and many more 100% working links click here
ReplyDelete