Follow by Email

Friday, 12 April 2013

ஆதிசங்கரர் வரலாறுஹிந்து மதத்தில் நுழைந்து விட்ட களைகளை களைந்து, ஹிந்து தர்மத்தின் மகத்துவத்தை நிலைநாட்டிய பெருமை ஆதிசங்கரரையே சாரும்.

ஹிந்து மதம் சிதைந்து வேறு மதங்களின் ஆளுகை இந்தியாவில் ஆக்கிரமித்து இருந்த காலகட்டத்தில் அவதரித்து, ஹிந்து மதத்தின் சிறப்பினையும், பெருமையையும் நிலைநாட்டியவர் ஆதிசங்கரர்.

ஹிந்து மதத்தினை ஷன்மதமாய் பகுத்து வைத்தவர். சிவனை வழிபடு செய்பவர்களுக்கு சைவம். 

விஷ்ணு வழிபாட்டிற்கென வைணவம், சக்தியை வழிபட சாக்தம், முழுமுதற் கடவுளாகிய கணபதியை வழிபட காணாபத்தியம்.

முருக பெருமானை வழிபடும் சௌமாரம், சூரிய வழிபாட்டிற்கென சௌரம் என்று ஆறு பிரிவுகளாக பிரித்து வழிபாடுகளை ஒழுங்கு படுத்தி, ஒற்றுமையை ஏற்படுத்தி வைத்தார்.

ஹிந்து மதத்தின் மேல் படிந்து விட்ட இருளை போக்கும் ஆதித்தனாக வந்தவர் ஆதிசங்கரர்.  

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், காலடியில் இருந்து கேதாரம் வரையிலும், துவாரைகையில் இருந்து பூரி ஜெகன்நாத் வரையிலும் ஆன்மீக உணர்ச்சி பரவி தழைக்கிறது   என்றால் அத்வைத தத்துவம் நிலைத்திருக்கிறது என்றால்,. வேத மதம்  வேருன்றி பக்தி செழித்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது மகா புருஷர் ஆதிசங்கரரே ஆகும். 

அவரது வாழ்வில் சில நிகழ்வுகளை காண்போம். 

ஆதி சங்கரர் பிறப்பு.

கேரளத்தில் ஆலவாயில் இருந்து ஆறுமைல் தூரத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் காலடி.  அவ்வூரில் வாழ்ந்து வந்த வித்யாதி ராஜா என்பவரின் மகன் சிவகுரு. அவரின் மனைவி ஆர்யாம்பாள்.

கணவனும் மனைவும் அன்புடன் இல்லறம் நடத்தி வந்தாலும் குழந்தை பேறு இல்லை என்ற கவலை அவர்கள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது.

எனவே அவர்கள் காலடியை விட்டு விருஷாசலம் ( திரிச்சூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது ) என்னும் சிவ தலத்தில் தங்கினார்கள்.

புத்திரபாக்கியத்திற்காக வடக்கு நாதன் என்ற பெயர் பெற்ற சிவனை வேண்டி 48 நாட்கள் விரதமிருந்து தினசரி வழிபாட்டு வந்தனர்.ஒரு நாள் சிவன் அவர்கள் கனவில் தோன்றி நீண்ட ஆயுளுடைய நிறைய பிள்ளைகள் வேண்டுமா? அல்லது சகல ஞானமும் கொண்ட குறுகிய ஆயுளை உடைய ஒரே பிள்ளை வேண்டுமா என்று கேட்க, தம்பதிகள் ஞான மைந்தனையே வேண்டினர்.

நந்தன ஆண்டு, வைகாசி மாதம், சுக்கில பட்சம், பஞ்சமி திதி தினத்தன்று திருவாதிரை நட்சத்திரத்தில் ஆர்யாம்பாள் ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தாள். ஈசனின் அருளால் பிறந்த குழந்தைக்கு ஈசனின்  பெயரான சங்கரன் என்று பெயர் சூட்டினர். 

சங்கரருக்கு நான்கு வயதான போது சிவகுரு மண்ணுலகை விட்டு நீங்கினார். தாயாரால் வளர்க்கப்பட்ட சங்கரன், ஐந்து வயதில் உபநயம் செய்து வைக்கப்பட்டு வேத சாஸ்திர கல்விகளை கற்று தேர்ந்தார். பிரம்மசாரிய வாழ்க்கையை ஏற்றார். 

பிரம்மசாரிய   காலத்தில், பிரம்மசாரிய வாழ்க்கை நெறிப்படி ஒரு நாள் உணவுக்காக ஒரு ஏழை அந்தணரின் வீட்டிற்கு பிச்சைக்கு செல்கிறார். அந்த வீடு சோமதேவர் என்ற ஏழை பிராமணன் வீடு.

வீட்டில் சோமதேவரின் மனைவி தருமசீலை என்று அழைக்கப் படும் பெண்மணி மட்டும் இருக்கிறாள். குடிசையின் முன் நின்ற சங்கரர் பவதி பிச்சாந்தகி  என்று குரல் கொடுக்கிறார்.


சோமதேவரின் மனைவி தருமசீலை பதறிபோகிறார். ஏனென்றால் வீட்டில் ஒன்றுமே இல்லை. துறைவியின் பசிக்கு உணவளிப்பதுதான் இல்லற தர்மம்.

இறைவா.. வந்தவரை வெறும்கையோடு அனுப்புவதா?

வீடிற்குள் பானையெல்லாம் தேடுகிறாள். ஏதாவது இருந்தால் துறவிக்கு அளிக்கலாமே என்று பரபரக்கிறாள்.  ஒரே ஒரு நெல்லிக்கனி கண்களில் தென்படுகிறது. வெளியில் ஆதிசங்கரர் நின்றுக் கொண்டிருக்கிறார்.


துறவிக்கு வயிறார உணவளிக்க வேண்டும். ஒரு நெல்லிக்கனியை அளிப்பதா? பெண்மணியின் மனம் வருந்துகிறது. கூச்சமாகவும்  இருக்கிறது. ஒன்றும் தராமல் வெறும் கையேடு அனுப்ப அவளுக்கு மனம் இல்லை.

தயங்கியபடியே அந்த நெல்லிக்கனியை கொண்டு வந்து சங்கரரின் கையில் இருந்த பிச்சை பாத்திரத்தில் இடுகிறாள். கைகள் நடுங்குகிறது. ஒரு நெல்லிக்கனிதான் இருக்கிறது ஏற்றுக் கொள்ளுங்கள் சுவாமி.

வருத்தத்தால் குரல் உடைந்து கரகரக்கிறது. சங்கரர் அப்பெண்மணியை ஏறிட்டு பார்க்கிறார்.

அவள் கண்களில் துறவிக்கு திருப்தியாய் உணவளிக்க முடியவில்லையே என்ற வேதனை தெரிகிறது. கிழிந்து ஒட்டு போட்ட உடை, அவளது வறுமையை பறைசாற்றுகிறது.

சங்கரர் சிந்தனையுடன் நிற்கிறார். அவளிடம் ஒன்றும் இல்லை. வறுமையின் பிடியில் இருக்கிறாள்.

ஆனாலும் அவளது உதவும்  நோக்கம் உயர்ந்ததாய் இருக்கின்றன.  தர்மம் செய்ய வேண்டும் என்ற நல்ல மனம் இருந்தும் அவளிடம் எதுவும் இல்லை. அவளுக்கு உதவ வேண்டும் ஆதிசங்கரர் மனம் இளகுகிறது.

மகாலக்ஷ்மியை வணங்கி 21 இனிமையான ஸ்தோத்திரங்களை பாடுகிறார்.மகாலக்ஷ்மி இந்த பாடல்களில் மகிழ்ந்து சங்கரர் முன் தோன்றுகிறார்.

இருவருக்கும் இடையே வாதம் நடக்கிறது. கடைசியில் மகாலக்ஷ்மி தங்க நெல்லிக்கனியை மழையாக பொழிகிறாள்.


No comments:

Post a Comment