உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர் உடல் வளர்த்தேன் என்பது உடலை பேணுதல், உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் செய்யும் செயல்களில் .மனம் ஒருமுகப்படும். வெற்றி கிட்டும்.
மனதும் உடலும் ஒன்றுக்கொன்று இணைத்திருப்பவை.மனம் உற்சாகமாக இருக்கும் போது, நோய்கள் உடலை தாக்குவதில்லை. நாம் நோய்வாய் படுவதற்கு மனபலவீனமும் ஒரு காரணம் என்கிறார்கள் டாக்டர்கள்.
கோபம், பதட்டம் போன்ற தீவிர மன உணர்வுகள் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்ப்பட காரணமாக இருக்கிறது. அதிக்கபடியான கவலை வயிற்று பிரச்சனையை ஏற்படுத்துகிறதாம்.
பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்து பார்த்துக் கொண்டால் மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
உடல்நிலை சீர் கெடுவதற்கு பெரும்பாலும் உணவு பழக்கம் ஒரு காரணம். உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடற்பயிற்ச்சி வேண்டும்.
உணவு கட்டுப்படும், உடற் பயிற்சியும் ஏதோ வயதானவர்களுக்கு மட்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அப்படியல்ல. இவை சிறு வயதில் இருந்தே கடைபிடிக்க வேண்டிய பழக்கம்.
அப்படி பழக்கம் இருப்பவர்கள் உடல் பருமன், நீரழிவு, ரத்த கொதிப்பு பிரச்சனைகள் எதுவும் இன்றி இறுதி வரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். நோய்கள் இவர்களை அண்டுவதில்லை.
நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவு பழக்கத்திற்கு மாறிக்கொள்வதும், ஆன்மீகத்தின் மேல் முழு ஈடுபாடு காட்டுவதும், நமது உடல் மன ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
காய்கறி, கீரைகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியமாகவும், உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றன. இது அன்றைய சித்தர்கள் முதல் இன்றைய மருத்துவர்கள் வரை கூறும் அறிவுரை.
கோவில்களில் இறைவனுக்கு சாற்றிய துளசி, வில்வம், வேப்பிலை, அருகு போன்ற தலங்கள் எல்லாம் நோயை தீர்க்கும் மூலிகைதான்.
வீட்டுக்கு கொல்லைப்புறத்தில் வளர்த்த கீரை வகைகள் உடலுக்கு நல்லதை செய்யும் உணவு பொருள்கள்தான்.
இன்று விரைவு உணவு வகைகளுக்கு (பாஸ்ட் புட் ) மாறிய பின், விரைவாக நோய்வாய்பட்டு, வெகு விரைவாக போய் சேரவேண்டி இருக்கிறது.
சிறுவயதிலேயே எல்லாவித நோய்களின் உறைவிடமாகவும் உடல் மாறிவிட நமது உணவு பழக்கமே காரணமாக இருக்கிறது.
அடுத்து
வயிறு புடைக்க உண்ணுதல் தவறு. முக்கால் வயிறு உணவு, மீதி வயிறு காலியாக இருக்க வேண்டும். பசியோடு உணவுக்கு அமர்ந்து, பசியோடு எழு என்பது சித்தர்கள் கருத்து.
அதாவது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும் போதே உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு வைத்தியரிடம் சென்றார் ஒருவர். ஐயா.. உங்களுக்கு தெரிந்து எல்லா வியாதிகளையும் போக்கும் மருந்து இருக்கிறதா என்றார்.
அதற்கு வைத்தியர் இருக்கிறது. அது வியாதிகளை போக்காது. வியாதி வராமல் பாதுகாக்கும் என்றார்.
உடனே உற்ச்சாகமாக அது என்ன மருந்து என்றார் வந்தவர்.
அதற்கு வைத்தியர் சொன்னார் .. அதன் பெயர் உழைப்பு .
இன்று உழைப்பதற்கு நேரம் இல்லாமல் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாயங்கால நேரத்தில் நடை பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
சரியான உணவு, உடற்பயிற்சி, தேவையான ஓய்வு, இனிய நினைவுகள், எளிமையான வாழ்க்கை, வழிபாடு இவையெல்லாம் இருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. வாழ்க்கையை அருமையாக அமைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment