ads

Thursday, 18 April 2013

இந்திய அரசியலில் அமெரிக்காவின் தலையீடு -விக்கிலீக்ஸ்



பண்ணையார்த்தனம் என்பது அமெரிக்காவிற்கு அதிகம். தனக்கு ஆமாம் சாமி போடும் நாடுகளுக்கு தாராள நிதி உதவி, அனைத்து நிலைகளிலும் ஆதரவு என்று கரிசனம் கட்டுவதற்கு ஒரு எல்லையே இருக்காது.

எதிராக திரும்பி விட்டால்? எதையும் செய்யும் என்பதற்கு ஏராள உதாரணம் இருக்கிறது.

நம் சிந்தனை அதை பற்றி அல்ல.

அமெரிக்காவின் உளவு ராக்கெட்டுக்கள் விண்ணில் சுழன்றபடி உலக நாடுகள் அனைத்தையும் கண்காணிக்கின்றன.

இந்த கண்காணிப்பு எதற்கு?

அந்தந்த நாட்டின் ராணுவ கேந்திரங்கள், அணுஉலைகள், ஆராச்சி கூடங்களை துப்பறிவது அதன் நோக்கம்.  இதுநாள் வரை உலகமே இப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தது.

இதை தடுக்க முடியாது. இதை பற்றியும் அமெரிக்கா வெளியே சொல்வதும் இல்லை. அதெல்லாம் ராணுவ ரகசியம்.



விண்ணில் இருந்து உளவு பார்ப்பது ஒரு பகுதி தான்.  அந்தந்த நாட்டின் மண்ணில் இருந்து கொண்டு தான் அதிகம் உளவு பார்க்கிறது என்ற உண்மையை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது விக்கிலீக்ஸ்.

உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள், தூதரக வேலையை மட்டும் செய்வதில்லை. அது  அமெரிக்காவின் உளவு அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன என்பதுதான் செய்தியே.

அந்தந்த நாட்டின் அதிபர்கள், தலைவர்கள் என்ன செய்கிறார்கள், யாரை சந்திக்கிறார்கள், அதன் தாக்கம் எப்படி இருக்கிறது, அதனால் வரும் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது முதல், சின்ன சின்ன தகவல்களைக்கூட தூதரக அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள்.

அந்த ஆவணங்கள் தான் இப்போது வெளியே வந்து பலரை தூங்க விடாமல் செய்கிறது.

நமக்கு ஏன் உலக செய்தி? நம்நாட்டு செய்திக்கு வருவோம்.

இந்தியா தொடர்பாக  2011இல் அது வெளியிட்ட ஒரு ஆவணத்தில் பா.ஜ.க. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் எப்படி எல்லாம் இரட்டை நிலைப்பாட்டுடன் வேஷம் போடுகிறது என்பதை அம்பலப்படுத்தியது.

அமெரிக்க தூதரக உயர் பொறுப் பிலிருந்த பீட்டர் பாலிக் அத்வானியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு  2009ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய தினத்தில் நடந்தது.

 இந்த சந்திப்பின்  போது  பீட்டர் பாலிக்கிடம்  அத்வானி, ‘பா.ஜ.க. ஆட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால், அமெரிக்கா-இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எந்த பாதிப்பும் வருகிற மாதிரி நடந்து கொள்ள மாட்டோம் என்று உறுதி அளித்தார் என்கிறது விக்கிலீக்ஸ்.

ஒவ்வொரு நாட்டின் அரசியலிலும் அமெரிக்கா எப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்தின என்பதற்கு இன்னொரு ஆதாரத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ். குறிப்பாக இந்திய அரசியலில்.

2009-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற போது பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறை வழங்கப்பட்டது.

இதை  கேள்விப்பட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சிக்கு ஆளானாராம். என்னது பிரணாப் முகர்ஜியா?  அலுவாலியா அல்லது ப.சிதம்பரத்திற்கு கொடுத்திருக்கலாமே.

ஏன் அப்படி நடக்கவில்லை என்று தன் தூதரக அதிகாரிகளுக்கு கேள்வி கேட்டு அறிக்கை அனுப்பினாராம். நம்ப முடிகிறதா? நம்புங்கள் இதுதான் உண்மை.

கடந்த  வாரம்  மறைந்த ராஜீவ்காந்தி மீதும், அவரது சகோதரர் சஞ்சய் காந்தி மீதும் குற்றசாட்டுக்களை அடுக்கியது விக்கிலீக்ஸ்.   இது இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியது.

அதோடு விடவில்லலை. தமிழ்நாட்டு பக்கமும் அதன் பார்வை திருப்பி இருக்கிறது விக்கிலீக்ஸ்.  கொஞ்சம் காத்திருப்போம். இன்னும் என்னன்ன வருகிறது என்று. அப்பறம் தொகுத்து எழுதலாம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...