ads

Monday 22 April 2013

இந்தியாவின் தலைநகரம் ஸாரி.... தலைக்குனிவு நகரம் டெல்லி!!



இந்தியாவின் தலைநகரம் என்ற தகுதியை இழந்து, தலைகுனிவு நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது டெல்லி.  

மாதத்தில் பாதி நாளாவது அத்துமீறல் தொடர்பான செய்திகள் வராமல் இல்லை. 

ஒவ்வொரு விடியலிலும் இன்று யார்? எத்தனை   பேர்? என்ன வயதுடையவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ என்ற பயத்துடனேயே. அன்றைய செய்தித்தாள்களை, செய்தி அலைவரிசைகளை, இணையதளங்களை பார்க்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.



உங்களுக்கு தெரியுமா? கடந்த ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை மட்டும் 393 பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது டெல்லியில் மட்டும்.  

ஆணும் பெண்ணும் பரிபூரணமான சுதந்திரமாக வாழும் அமெரிக்காவில், ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லாத இங்கிலாந்தில், குறுகிய காலத்தில் குடும்ப வாழ்க்கையை துறந்து விடும் ஜெர்மனியில், வாழ்க்கை வாழ்வதற்கே என்று என்னும் இத்தாலியில் கூட இந்த அளவு அபாயகரமான புள்ளிவிவரங்கள் இல்லை. 

பெண்ணை மதிக்கும் ஒரு தேசத்தில், தாயாக போற்றும் இந்தியாவில், பருவம் எய்யாத சிறுமிகள் கூட பாதிக்கப்படுவதை காணும் பொது அதிர்ச்சி ஒரு புறம், அவமானம் மறுபுறம்தான் ஏற்படுகிறது. 

எத்தனை கொடூரமான, வக்கிர புத்தி கொண்டவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

முதலில் செய்திகள் வருகிறது. ஆவேச அலைகள் எழுகிறது. சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கிறது, போராட்டம் நடத்துகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்.



இதெல்லாம் நடந்து முடிவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறிவிடுகிறது.

மீண்டும் பழைய நிலை. ஆவேச குரல், கண்டனம், போராட்டம், கைது.

ஏன்... ஏன்  இந்த இழிநிலை?

மனிதன் மிருக நிலைக்கு தாழ்ந்து போக என்ன காரணம்?

மாறிவரும் மனித மன கோணல்கள், கலாச்சார சீரழிவுகளுக்கு எப்படி முற்று புள்ளி வைப்பது?

சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும் என்பதுதான் ஏகோபித்த குரலாக இருக்கிறது.

உடனே .... நாகரீக மனித குலத்தின் அடையாளமாக தங்களை உருவகப்படுத்திக் கொள்பவர்கள் கூக்குரல்  இடுவார்கள்.

இந்த மனிதநேய புனிதர்கள், மனிதாபிமான காவலர்கள், மனிதனை மனிதன் கொல்லும் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் உத்தமர்கள். தூக்குத் தண்டனையை  காட்டுமிராண்டித்தனம் என்பார்கள். அந்த  காட்டுமிராண்டித்தனத்தை செய்யக்கூடாது என்று கண்டிப்பார்கள். 



எல்லாம் சரி... ஐந்து வயது சிறுமி. நான்கு நாட்களாக ஒரு அறையில் பூட்டி வைத்து பாலுறவு கொண்டிருக்கிறான் ஒருவன்.

பருவம்    எய்யாத    அந்த      பெண்ணுடன்  உறவு கொள்ள,      மெழுகை உருக்கி  ஊற்றி மென்மை  படுத்திருக்கிறான் அந்த கொடூரன்.  

மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் புத்தர்களே, புனிதர்களே, பதில் சொல்லுங்கள்.  




இவனை, இவன்  போன்றவர்களை  என்ன செய்யலாம்?


சரி ... மரணதண்டனை வேண்டாம்... பொது இடத்தில் வைத்து கல்லால் அடிக்கலாமா? 

கழுமரத்தில் ஏற்றி தொங்க விடலாமா? 

மாறுகால் மாறுகை வாங்கி ஊனப்படுத்தலாமா? 

பாலுறுப்பை நசுக்கி  கசையடிக்கலாமா?

துண்டு துண்டாக வெட்டி கூறு போடலாமா? 

மன்னர்கள் காலத்து தண்டனை மாதிரி கண்களை குருடாக்கலாமா? 

மிருகத்தோலை உப்பு தடவி, உடலோடு வைத்து தைத்து, தனிமை சிறையில் அடைக்கலாமா?  சொல்லுங்கள் என்ன தண்டனை கொடுக்கலாம்?

கொல்வது பாவமென்றால் கூண்டில் அடைத்து காட்சி பொருளாக வைக்கலாமா? இவன்தான் காமகொடூரன், காமுகன் என்று. 

என்ன செய்யலாம்? மரணதண்டனை தவறு என்பது ஒரு வாதமாக வைத்துக் கொண்டாலும், எல்லாக் குற்றங்களுக்கும் பொருந்தாதே. 

சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை பார்க்கும் போது ஒரு சில வினாடியில் முடிந்து போகும் மரணதண்டனையை விட, வேறு தண்டனை கொடுப்பதே சரி என்று படுகிறது.

விடுதலைபுலிகள் கடுமையான குற்றம் செய்தவர்களை தனிமை சிறையில் அடைப்பர்களாம்.

அங்கே எந்த வெளிச்சமும் இருக்காது. வெளிச்சத்தை பார்க்கவும் முடியாது. அப்படியே இருந்து.... இருந்து அவர்கள் பார்வை திறன் இழந்து போவார்கள். தனிமையில் இருந்து பைத்தியமானவர்கள் கூட உண்டாம்.

அவர்கள் ஒரு வேளை விடுதலை செய்யப்பட்டால், சூரிய வெளிச்சத்தை பார்த்தால்,  கண்கள் குருடாக போகுமாம். இந்த குற்றவாளிகளுக்கு, இது போன்ற தண்டனைகளை கூட  அறிமுகப்படுத்தலாம்.

என்ன செய்ய குற்றத்தின் தன்மை அப்படி.


4 comments:

  1. டூமீல்... அவ்வளவு தான்... முடிக்க வேண்டும்... அதிகம் யோசிக்கக் கூடாது...

    ReplyDelete
  2. அணுவாகச் சித்திரவதை செய்து இந்த கொடூரர்களைக் கொல்ல வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இனியும் இப்படிப்பட்ட கொடூரங்களை நிகழ்த்த அஞ்சும்படியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். காந்தி தேசம் இன்று கற்பழிப்புத் தேசமாகி விட்டது.

    ReplyDelete
  3. அதுக்கு பெயர் தண்டனை அல்ல, பரிசு. கூடவே.. கூடாது ஒவ்வொரு வினாடியும் சித்தித்து சிந்தித்து தனிமையில் வருந்த வேண்டும். உயிர் உள்ள வரை.

    ReplyDelete
  4. நிச்சயம் தனிமைபடுத்தி,ஆயுள் முழுதும் வருந்த வேண்டும்

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...