Follow by Email

Sunday, 1 April 2012

குரு பெயர்ச்சி / KURU TRANSITT

வருட கிரகங்களில் வலிமையானது சனி.

சுப கிரகங்களில் முதன்மையானவர் குரு.  இந்த குரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மறு ராசிக்கு இடம் பெயர்வார்.  இதை குரு பெயர்ச்சி என்பார்கள்.

குறுப்பிட்ட இடத்திற்கு வந்தால் நல்லதும் செய்வார்.  குறுப்பிட்ட இடத்திற்கு குரு வந்தால் தீமையும் செய்வார்.  அதற்காக ஒரு பாடலே இருக்கிறது. 

ஜாதகம் பார்க்க போகும் பொது .  ஜோதிடர் திடிர்ன்னு இந்த  பிட்டு பாடலை பாடலாம்.  .அதுக்கு என்ன அர்த்தம் என்று குழம்பி கொண்டிராமல் இருக்க,  இதோ பாடல் வரிகளும்,  அதற்கான அர்த்தமும்.

பாடல் 

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும்

ராமன்...

அவதார புருஷன்.  மண்ணில் உதித்த மகாவிஷ்ணு.  இராமாயண கதாநாயகன்.  பட்டத்து இளவரசானான ராமனுக்கு பட்டாபிழேக ஏற்பாடுகள் நடக்கிறது.  ஆனால் நாடாள வேண்டிய ராமன் காடாள போகிறான்.  மகுடம் தரிக்க வேண்டியவன் மரவுரி தரிக்கிறான்.

ஏன்?

ராமனின் தந்தையான தசரதனிடம் கைகேகி பெற்ற வரம்தான் காரணம்.

ராமன் மட்டுமா   காட்டுக்கு  போகிறான்?

இல்லை... ராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி.  ராமனோடு அவளும் காட்டிற்கு வருகிறாள்.   இவர்களோடு லெச்சுமணன்.

இன்றும் கூட அண்ணன் தம்பி பாசத்திற்கு அடையாள பெயரே ராமன் லெச்சுமணன் தானே.

காட்டிற்கு வந்தார்கள்.  விதி சூர்ப்பனகை ரூபத்தில் வந்தது.

யாரிந்த சூர்ப்பனகை?

ஆப்பிரிக்க பெண்ணிலும் அழகு என்று சொல்லுகிற மாதிரி,   அரக்கர் இனத்தில் அவள்தான் அழகு.  ராவணனின் தங்கை.

சர்வலெட்சனம் பொருந்திய லெட்சுமணனை பார்த்தாள்.  அடடா.. இவன்னல்லவா ஆண்மகன்,  இவன் அல்லவா மன்மதன்.........சூர்ப்பனகை இப்படித்தான்  நினைத்தாளாம். 

ஆசை வெட்கமறியாது என்பார்கள். இதற்கு சூர்ப்பனகை மட்டும் விதி விலக்கா என்ன!.  உள்ளத்தில் உதித்த ஆசையை லெட்சுமனனிடம் சொன்னாள்.

வானத்து இந்திரனே இரங்கி வந்த மாதிரி இருக்கிறாய்.  உன் கட்டான உடலை பார்த்த என் கண்கள்,   உன்னை விட்டு அகல மறுக்கிறது.  விண்ணில் இல்லை சொர்க்கம்.  மண்ணிலேயே காட்டுகிறேன் வா.. ............வந்து என்னை மணந்து கொள்.......

காதல் மயக்கத்தில் கவிதை மாதிரி பேசுகிறாள் சூர்ப்பனகை. 

ஆனால்........பெண்ணின் குல பெருமையே ஆசைகளை அடக்கி ஆள்வதுதானே.  இதை மறந்தாள்   சூர்ப்பனகை.

இந்த மூஞ்சுக்கு  இதுவேறயா...... அட்டு பிகருக்கு ஆசை ரொம்ப அதிகம் என்று லெச்சுமணன் நினைத்தானோ என்னவோ...அவள் மூக்கை அறுத்து மூளியாக்கி விரட்டி விட்டான்.

செய்தியை அறிந்த ராவணனுக்கு தான் மட்டும் இல்லை,  தன் தசையும் ஆடியது.  கொதித்தான்,  குதித்தான்,  தங்கை பாசத்தில் தவித்தான்.

அண்ணா... உண்மையில் என் பெண்மையை சுட்டான் அந்த மானுடன்.  அவனுடன்,  ஒரு இளைய தம்பதிகள் இருக்கிறார்கள். அவள் அந்த வனத்தில் வன மோகினி மாதிரியே இருக்கிறாள்.

அவள் உன் அந்தபுரத்திற்கு வர வேண்டும்.  அவள் இல்லாத அவன்.... என்னை மாதிரியே தவிக்க வேண்டும்.  

கோவத்தில் இருந்த ராவணனுக்கு சூர்ப்பனகை வைத்த தீ பற்றி எரிந்தது.  உடன் அழைத்தான் மாரீசனை.

மாரிசா ...... உன் மன்னனின் கட்டளை,   மாய மானாக உருவெடு.   யாரோ... வன மோகினி மாதிரி  இருக்கிறாராலாம்.  அவள் முன் துள்ளி விளையாடு.  மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்.

மாரிசன் போனான்.  சீதை அந்த மானை பார்த்தாள்.  பிடித்து கொடுங்கள் என்று ராமனிடம் சொல்கிறாள்.

மனையாள் ஆசையை நிறைவேற்றுவது மணம் முடித்தவன் கடமை அல்லவா.  என்று நினைத்தவன் மானை துரத்தி போகிறான்.   இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீதையை தூக்கிக்கொண்டு போகிறான் ராவணன்.

இது கதை...  சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனபோது ராமன் ஜாதகத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தாராம்.

மனைவியை பிரிந்த ராமனின் மன நிலை எப்படி இருந்திருக்கும்.  அப்படி ஒரு தவிப்பை தருவாராம் குரு.   இதுதான் முதல் வரி சொல்லும் கருத்து.

பாடல் 

தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படை மாண்டதும்....

துரியோதனன்

கௌரவர்களில் முத்தவன்.  பிறக்கும் போதே ராஜகுமாரனாக பிறந்தவன்.  இறக்கும் தருவாய் வரைக்கும்  மன்னனாகவே  இருந்தவன்.  இவன் பரணி நட்சதிரத்தில்  பிறந்தவன்.  இதை வைத்துதான் பரணி தரணி ஆளும் என்று சொல்வார்கள்.

துரியோதனனின் பங்காளிகள் தான் பஞ்சபாண்டவர்கள்.  ஒரு சமயம் இவர்கள் இருவருக்கும் இடையே சூதாட்டம் நடந்தது.  இதில் நாடு நகரங்களை இழந்த பாண்டவர்கள் ,  ஒப்பந்தப்படி வனவாசம் சென்றார்கள்.

வனவாசத்தின் முடிவில் திருப்பவும் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.  இங்குதான் திரியோதனன் தவறு செய்கிறான்.

தூதுவனாக வந்த கண்ணன் பாண்டவர்களின் நாட்டை திரும்ப கேட்கிறான். ஆனால் திரியோதனன் மறுக்கிறான்.  வேண்டுமானால் என்னுடன் சண்டையிட்டு  நாட்டை திரும்ப பெறட்டும் என்று ஆணவமாக சொல்கிறான்.

காரணம் என்ன?

அவனது ஜாதகத்தில் குரு பகவான் முன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்தார்.  அதனால் அவன் மூளை தப்பாக யோசித்தது.  யுத்தம் செய்ய முடிவு செய்கிறான்.

அதனால் அவனும்  இறந்து,   அவனை சார்ந்தவர்களும் இறந்து கௌரவ வம்சமே இல்லாமல் போனது.

பாடல் 

இம்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும் 

வானர  அரசர்களில் வலிமை மிகுந்தவன் வாலி.  கிஷ்கிந்தையின் அரசன். வலிமையுளும, வல்லமையுளும் ராவணனை விட சிறந்தவன்.

 இவன் வாழ்ந்த காலத்தில் இவனுக்கு இணையாக யாருமே இல்லை.  சர்வ லோகங்களும் அஞ்சி நடுங்குகிற மாதிரி இருந்தான். 

நேரடியாக யுத்தம் செய்து இவனை வெல்லவே முடியாது.  வாலியின் தம்பிதான் சுக்ரீவன்.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறாத அன்பு கொண்டவர்கள்.

ஒரு சமயம்.. கிஷ்கிந்தையை அழிக்க வந்த மாயாவி ஒருவனோடு வாலி சண்டையிட்டான்.   சண்டை நடந்தது ஒரு குகையின் உள்ளே.

அந்த குகையின் வாசலில் வானரபடையுடன் சுக்கிரவன் காவல் இருந்தான்.  சண்டை பல நாள் நீடித்து.  ஒரு நாள் குகையின் உள்ளே இருந்து சுக்கிரிவா ஆபத்து என்று வாலியின் குரல் கேட்டது.   அடுத்து சுக்கிரிவா மாயாவிடம் இருந்து உன்னை காத்து கொள் என்று குரல் வந்தது.

வாலியின் குரல் கேட்ட சுக்கிரவன் அதிர்ச்சி அடைந்தான்.  மாயவியால் தன சகோதரன் வாலி கொள்ள பட்டு விட்டான். மாயாவி வெளியே வந்தால்,  தனக்கும், வானற்படைகளுக்கும் ஆபத்து என்று சுக்கிரீவன் நினைக்கிறான்.

உடனே குகையின் வாசலில் பெரிய பாறையை உருட்டி வைத்து,  குகை வாசலை மூடிவிட்டு கிஷ்கிந்தைக்கு திரும்பி விட்டான்.

ஆனால் இது மாயாவின் வேலை.  வாலி மாதிரியே குரல் கொடுத்தான்.  ஆனாலும் தன் பலத்தால் மாயாவியை கொன்று விட்டு,  வாசலை மூடி இருந்த பாறையை உடைத்து வெளியே வந்தான் வாலி.

நேரே கிஷ்கிந்தைக்கு வந்தான்.  அங்கே  சுக்கிரவன் முடி சுட்டிக்கொண்டு மன்னனாக இருந்தான்.  இதை பார்த்த வாலிக்கு கோவம் தலைக்கு ஏறியது. தானே மன்னனாக வேண்டும் வேண்டும் என்ற ஆசையில் குகைக்குள் வைத்து மூடி விட்டான் சுக்கிவன் என்று நினைக்கிறான் வாலி.

அவனை அடித்து விரட்டினான்.  முதலில் அனுமன் நட்பு கிடைத்தது.  அதன் பின்பு ராமனின் நட்பு கிடைத்து.  வாலியை வதம் செய்து கிஷ்கிந்தைக்கு மன்னனாக ஆக்குகிறேன்.  என்று உறுதி அளித்தான் ராமன்.

ராமன் துணை இருக்கும் தைரியத்தால்  வாலியை போருக்கு அழைத்தான் சுக்ரீவன்.  இந்திரன் தனக்கு பரிசாக அளித்த மந்திர மாலையை அணிந்து கொண்டு போருக்கு வந்தான் வாலி.

அந்த மந்திர மாலையை அணிந்து கொண்டால்,  எதிரில் இருக்கும் எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடும்.  

ஆனாலும் ராமன் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே,  ஒரு மரத்தின் பின்னால் மறைந்து  இருந்து வாலி மீது அம்பை செலுத்தி வீழ்த்துகிறான் ராமன்.

ராமன் வாலியை மறைந்தது இருந்து தான் கொன்றான்.  ராமனின் வீரத்திற்கு இது ஒரு இழுக்கு என்று கூட சொல்வார்கள்.

போரில் அடி பட்டு விழுந்து கிடந்தாலும்,  அந்த நேரத்திலும் ராமனை எள்ளி நகையாடுகிறான் வாலி.

ராமா............. நான் உன்னை இதுவரை  பார்த்தது இல்லை.   ஆனால் நீ மனிதருள் மாணிக்கம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.  ஆனால் அதற்கு நீ தகுதி உள்ளவனா என்று யோசித்து பார்.

ராவணன் உன் மனைவியை தூக்கிக்கொண்டு போனான்.  உண்மையில் வானர உதவியை நாடுவதாக இருந்தால்,  கிஷ்கிந்தையின் அரசன் நான்.  என் உதவியை அல்லவா பெற்றிருக்க வேண்டும்.

என்னால் ஒதுக்கப்பட்ட சுக்கிரிவனை  எதற்கு துணைக்கு அழைத்தாய்.  என் பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குவான் ராவணன்,  நான் சொல்லி அனுப்பி இருந்தாலே போதும்,  உன் மனைவியை உன்னிடம் சேர்த்து விட்டு மன்னிப்பு கோரி இருப்பான்.

வாலி உன் வல்லமை எனக்கு தெரியும்.  ராவணை உன் வாலில் கட்டி உலகம் முழுவதும் சுற்றி சுற்றி அடித்தாய்.  உயிர் பிழைத்தால் போதும் என்று ராவணன் ஓடி போனான்.

ஆனால்... நீ யார்... உன் தம்பி சுக்கிரவனின் மனைவியை அபகரித்தவன்.  ராவணனும் பிறர் மனைவியை அபகரித்தவன்.   நீங்கள் இருவருமே ஒரே மாதிரியான குற்றவாளி.

பின் எப்படி உன்னிடம் உதவியை பெற முடியும்.  நான் மனைவியை பிரிந்து எப்படி துன்பபடுகிறனோ,  அதை போலவே சுகிரிவனும் துன்பப்படுகிறான். அதனால் அவன் உதவியை பெற்றேன்.

சரி... உண்மையான வீரனாக இருந்தால்.. என்னுடன் நேருக்கு நேர் மோதாமல், மறைந்து இருந்து தாக்கியதன் காரணம் என்ன?  நீ கோழை. 

வீரத்தை பற்றி பேச உனக்கு அருகதை இல்லை.  நீ இந்திரன் தந்த மந்திர மாலையை ஏன் அணிந்தது கொள்கிறாய். எதிரியின் பலம் பாதி உனக்கு வரும் என்பதால் தானே. 

நீ உண்மையான வீரனாக இருந்தால்,  உன் பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்க வேண்டும்.  உன் உடன் பிறந்தவன் சுக்கிரவன்.  இருந்தும் அவன் பலத்தில் பத்தியை சேர்த்து கொண்டு,  உன்பலத்தையும் சேர்த்து அல்லவா யுத்தம் செய்தாய்.

நான் மந்திர மாலையால் பெற்ற பலத்தை மட்டும் தான் அம்பு எய்து விளக்கினேன்,  நீ தோல்வியை தழுவியதற்கு சுக்கிரிவனின் பலமே காரணம்.

சரி... இத்தனை தத்துவம் பேசும் ராமன் நேருக்கு நேர் நின்று வாலியை எதிர்த்திருக்கலாமே  என்ற கேள்வி எழும். 

வாலி தர்மத்தை தவறியவன்.  அவன் மந்திர மாலையை அணிந்து இருக்கும் போது,  ராமன் எதிரில் இருந்தாலும்,  ராமனின் பலமும் வாலிக்கு சேர்ந்திருக்கும்.

ஒரு கெட்டவனுக்கு தன பலம் போய் சேரக்கூடாது என்ற காரணத்தால் தான் மறைந்து இருந்து வாலியை வதம் செய்தார். 

சரி... இவ்வளவு வல்லமை பெற்ற  வாலி மறைவுக்கு காரணமே குரு அவன் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்ததுதான் காரணம்.

தொடரும் ............ 

No comments:

Post a Comment