உங்ககிட்டே ஒரு கேள்வி கேட்க போறேன்.
இந்த அபிப்பிராயம் என்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
நீங்கள் யோசிக்கிறது தெரியுது. அபிப்பிராயம் என்பது உங்கள் மனநிலை, சிந்தனை, கருத்து, தீர்மானம் எப்படி எந்த வார்த்தையை வேண்டுமானாளும் போட்டு பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அதை இப்படி கூட சொல்லலாம். ஒரு விஷயத்தை பற்றி, அல்லது நபரை பற்றி உங்கள் மதிப்பிடு தான் அபிப்பிராயம்.
மனசுங்கிறது ஒரு குரங்காம். குரங்கு என்ன செய்யும்? மரத்திற்கு மரம் தாவும். அதைப்போலத்தான் மனமும் நிலை இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது.
இன்று சரி என்று தோன்றுகிற ஒரு விஷயம், நாளை தவறாக தெரிகிறது. இன்று தவர்க்க தெரிகிற விஷயம் நாளை சரியாக தெரிகிறது. ஒரு சம்பவத்தை கேளுங்க.
கண்ணன்.... படு சுமார்ட்டான நபர். வாலிபம் ததும்பும் வயது. கல்லூரி மாணவன். அதாவது கல்லூரி மாணவன். கனிவான பேச்சும், நுனி நாக்கு ஆங்கிலமும் பார்பவரை கட்டிப்போடும்.
சக மாணவி கவிதாவை கட்டி போட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கவிதாவும் அழகு ராச்சசிதான். அவளுக்கு கண்ணன் மேல் ஒரு ஈர்ப்பு நாளடைவில் வளர்ந்து விஸ்வருவம் எடுத்தது. எப்ப பார்த்தாலும் கண்ணன் புராணம் படுவா.
கவிதா சொல்றா பாருங்க. நீட்டா டிரஸ் போடுறதுன்னா கண்ணன் கிட்டே இருந்து தான் கத்துக்கணும். மேச்சிங் கூட படு தூக்கலா இருக்கும்.
கண்ணன் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடமே சிரிப்பும், ஆர்ப்பாட்டமும் களைகட்டிடும். கண்ணன் சரம்சரமாய் ஜோக்கை எடுத்து விடுவார் பாருங்க. இன்னிக்கெல்லாம் கேட்டு கிட்டே இருக்கலாம்.
டைம் கீப்பிங்னா கண்ணன். கண்ணன்னு சொன்னால் டைம் கீப்பிங் இதை பிரிச்சே பார்க்க முடியாது. பஞ்சுவாலட்டியை கண்ணன் கிட்டே இருந்துதான் கத்துக்கணும்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் ஒரு விஷயம் என்ன தெரியுமா. சோசியல் டைப். உம்முன்னு முஞ்சி தூக்கி வச்சுக்கிறது இல்லை. எல்லார் கிட்டேயும் பிரியா பேசுற டைப்.
இப்படி வாயை திறந்தாலே வர்ற வார்த்தை கண்ணனை பற்றிதான் இருக்கும். முன்பே சொன்ன மாதிரி ஈர்ப்பு காதலாகி, கல்யாணம் வரைக்கும் வந்து, இப்போ இரண்டு பேரும் தம்பதியர்.
காலம் கடந்தது. வருடங்கள் சில கடந்து விட்டன. இப்போ கண்ணனை பார்த்தாலே கவிதாவுக்கு கோவம் கோவமாய் வருது. எதெல்லாம் கண்ணன் கிட்டே பிடிச்சுதோ, அதெல்லாம் இப்போ கண்ணன் கிட்டே பிடிக்கலை.
அதை கவிதா வாயாலேயே கேளுங்க. குற்றசாட்டு ஒன்னு.
நீட்டா ட்ரெஸ் பன்றேன் பேர்வழின்னு சம்பாதிக்கிறதுல பாதி ஜவுளி கடைக்கே போய்டுது. பின்னே எப்படி குடும்பம் நடத்துறதாம்.
குற்றசாட்டு இரண்டு.
ஜோக்குன்னா ஒரு முறை ரசிக்கலாம். சொன்னததையே திரும்ப திரும்ப சொல்லி ஒரே கடி. அறுவை தாங்கலை. மனுஷன் வாயை திறந்தாலே காதை பொத்திக்கலாம் போல இருக்கு. முடியலைடா.... சாமி.
குற்றசாட்டு மூணு.
ஒரு மனுஷிக்கு அலுப்பு சலிப்பு இருக்காதா. தொட்ட தொண்ணுருக்கும் கால நேரம் பார்க்கனுமா. அப்படி பார்களைன்னா என்ன குடியா முழுகி போயிடும். சும்மா பஞ்சுவாளிட்டின்னு படுத்துறார்.
குற்றசாட்டு நாலு
சகஜமா பேசுறேன் பேர்வழின்னு வழியுறார். அதுவும் பொண்ணுங்களை பார்த்தால் மேலே விழாத குறை.... சகிக்கலை.
இப்படித்தான் கவிதா சலிச்சுக்கி றா. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கண்ணன் மேலே ஏதாவது தவறு இருக்கா. காண்ணன் என்கேவது மாறினாரா.
இல்லை. மாறினது கவிதாதான். இது உதாரண கவிதா தான். நம்மை சுற்றி ஓராயிரம் கவிதாக்கள் இருக்கிறார்கள். ஆண்பால் வடிவிலும், பெண்பால் வடிவிலுமாய்.
காரணம் என்ன?
அவசரம் . மேலெழுந்த வாரியா முடிவெடுக்கிறது. அடிக்கடி மனசை மாத்திக்கிறது.
பாருங்களேன் உதாரணத்தை. கேட்ட இடத்தில் பணம் கிடைக்குதுன்னு kadanai வாங்கிகிட்டு அவஸ்தை படுபவர்கள் பலர்.
இத்து போனவன் . பணத்தை கொடுத்துட்டு கண் கொத்தி பாம்பு மாதிரி விடாம துரத்துறான். இதுலே சலிப்பு வேற.
அத்தியாவசிய தேவைகளுக்காக பணம் வாங்குறது ஒன்னும் தப்பு இல்லை. ஆனா கடன் வாங்குறதுக்கு முன்பு, அதை tஹிருப்பி கொடுக்குறதுக்கு ஒரு வழியை யோசிச்சு இருக்கணும்.
பக்கத்து வீட்டு காரன் கார் வாங்கிட்டன், நானும் வாங்குறேன் பேர்வழின்னு தடாலடியா சில பேர் முடிவு எடுப்பாங்க.
பக்கத்து வீட்டு காரர் கார் வச்சு இருக்கார்ன்னா....அலுவலக வேலை, தொலை தூர பயணம், நிர்வாக வசதிக்காக வைத்திருப்பார். இவரு ஊரு மெச்ச காரை வாங்கிகிட்டு, போற இடம் தெரியாம வாசல்ல நிறுத்தி வச்சுருப்பார். இது தேவையா?
என் பங்காளி தன் பிள்ளையை ஆஸ்திரேலியாவில் படிக்க வைக்கிறான். என்னால முடியாதா. நான் லண்டன்ல படிக்க வைக்கிறேன்னு நல்ல படிக்கிற பிள்ளையை நாடு கடத்துவார்.
பையன் மொழி தெரியாத இடம், முகம் தெரியாத இடத்திலே இருந்து, சரியா படிக்க முடியாம அல்லாடி கோட்டை விட்டுடுவான் படிப்பை.
இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு முடிவெடுப்பதால் பலர் வாழ்க்கை முழுவதும் வருந்துகிறார்கள்.
இன்னொரு உதாரணம் பார்ப்போமா.
ஒரு பண்ணையார் இருந்தார். அவர் வெளியே போக வர பல்லக்கில் தான் போவார். அதற்காக திடகாத்திரமான நான்கு பேரை வேலைக்கு வைத்திருந்தார்.
அவர்கள் வேலையே பண்ணையார் வெளியே போகும் போது, பல்லக்கை தூக்கி கொண்டு போவதுதான். மற்றவேலை எதுவும் இல்லை.
ஒருநாள் பண்ணையார் வீட்டில் இருந்த, அவர் கன்றுக்குட்டி காணாமல் போய்விட்டது.
பண்ணையார் மனைவி வந்து கன்றுக்குட்டி காணாமல் போய்விட்டது. போய் தேடி பாருங்கள் என்றாள்.
பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் நம்ம வேலை பல்லக்கு தூக்குறதுதான். கன்றுக்குட்டியை தேடுவது இல்லைன்னு முடிவா சொல்லிடுவோம்ன்னு மற்றவர்களிடம் சொன்னான். அதையே பண்ணையார் மனைவி இடமும் சொன்னான்.
பார்த்தாள் பண்ணையார் மனைவி. நேரே பண்ணையாரிடம் போய் சொல்லி விட்டாள்.
அப்படியா சொன்னாங்க. சரி... நான் பாத்துக்கிறேன் என்று நேராக பல்லக்கு தூக்கிகளிடம் சென்றார். பல்லக்கை தூக்குங்கள் என்றார்.
பல்லக்கு தூக்கிகள் விரைந்து வந்து பல்லக்கை தூக்கினார்கள். அவர்களிடம் பண்ணையார் சொன்னார். நம்ம விட்டு கன்று குட்டி காணாமல் போய் விட்டது. ஊர் முழுவதும் தேட வேண்டும்.
ஆக.... பல்லக்கையும் தூக்கி கொண்டு ஊர் முழுவதும் அலைந்த பல்லக்கு தூக்கிகள் மாதிரி, அவசர முடிவெடுப்பதை தவிர்த்து, ஆழ்ந்து யோசித்து அவசரமில்லாமல், அனுபவ பூர்வமாக முடிவெடுத்தால் வாழ்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது.

No comments:
Post a Comment