அமெரிக்க சம்பளம்
சீன உணவு
இந்திய மனைவி
இங்கிலாந்து வீடு
இந்த நாலும் சொர்க்கமாம்.
அமெரிக்க மனைவி
இந்திய சம்பளம்
சீன சுகாதாரம்
இங்கிலாந்து உணவு
இந்த நாலும் நரகமாம்.
ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
சரி....சொர்க்கத்தில் வாழ்பவர்கள் யார்? நரகத்தில் வாழ்பவர்கள் யார்? உலகம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வே என்ன சொல்கிறது? ஒரு கண்ணோட்டம் விடுவோமா?
வாழ்க்கையை பற்றி கவலை படாமல் இருக்க வனவிலங்கல்ல. நாம் மனிதர்கள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. எந்த நாட்டில் பிறந்தாலும் இந்த சிந்தனை மாறாது. ஆனால் எந்த அளவிற்கு சந்தோசமாக வாழ்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
கண்ணாடி முன்னாள் நின்று இதுக்கு தானே ஆசைபட்டாய் என்று எத்தனை பேரால் சொல்ல முடிகிறது.
சிலருக்கு மனக்குறை இருக்கும். சிலருக்கு பணக்குறை இருக்கும். சிலருக்கு குடும்ப சந்தோசம் கூடுலதலாய் இருக்கும். சிலருக்கு அந்த குடும்பமே சுமையாய் இருக்கும்.
எப்படியோ... ! அனைத்து நிலையுலும் ஆனந்தமாக இருக்கிறிர்களா என்ற கேள்வியுடன் உலகம் முழுவதும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.
அவர்கள் முன் பத்து கேள்விகள் கேட்கபட்டது.
வேலை, வருமானம், சேமிப்பு, வீடு வாகனம் மற்றும் ஆடம்பர வசதிகள், குடும்ப சூழல், கணவன் மனைவி உறவு, பரிபூரண சுதந்திரம், சுற்று சூழல், சுகாதாரம், மன நிறைவு என்று பத்து கேள்விகள்.
இந்த சர்வேயின் முடிவு இது.
பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாமல் வாழும் மக்கள் உள்ள பத்து நாடு பின்வருமாறு.
1 டென்மார்க்
2 சுசர்லாந்து
3 ஆஸ்த்திரியா
4 ஐஸ்லாந்து
5 பின்லாந்து
6 ஆஸ்த்திரேலியா
7 சுவிடன்
8 கனடா
9 குவாடமேளா
10 லுக்ஸ்சம்பெர்க்
இந்த பத்து நாட்டு மக்கள் தான் உல்லாசமாக வாழ்கிறார்களாம். உலக வல்லரசான அமேரிக்கா இந்த வரிசையில் 17 வது இடத்தில் தான் இருக்கிறது.
பிரிட்டன் 22 வது இடத்திலும், பிரான்ஸ் 39 வது இடத்திலும், சைனா 44 வது இடத்திலும், இந்தியா 45 வது இடத்திலும் ஜப்பான் 46 வது இடத்திலும் இருக்கிறது.
ஆண் பெண் உறவு, கணவன் மனைவி சந்தோசம் என்ற வரிசையில் முதல் பத்து இடம் பிடிக்கும் நாடுகள்.
1 ஆஸ்த்திரியா
2 ஸ்பெயின்
3 கனடா
4 பெல்சியம்
5 அமெரிக்கா
6 ஆஸ்த்திரேலியா
7 மெக்சிகோ
8 ஜெர்மனி
9 சுவிடன்
10 இங்லாந்து
இந்த பத்து நாட்டு மக்கள் தான் பரிபூரணமாக செக்ஸ்சை அனுபவிப்பவர்கள். ஆனால் இந்த சந்தோசம் இல்லாமல் கிட்டத்தட்ட சாமியார் மாதிரி வாழும் நாடுகள் எது தெரியுமா?
தாய்லாந்து
சைனா
இந்தோனோசியா
தைவான்
ஜப்பான்
இதுதான் புள்ளி விவரம் சொல்லும் உண்மை. இந்தியர்களை பொறுத்தவரை மன உளைச்சல், மன அழுத்தம், நிம்மதி குறைவு என்று அல்லாடி கொண்டிருக்கிறார்கள். சந்தோசம் கால், சங்கடம் முக்கால் இதுதான் இந்தியர்களின் வாழ்க்கை சூழல்.
No comments:
Post a Comment