ads

Saturday, 21 April 2012

நமக்கு எல்லாமே சாத்தியம்.

இவ்வுலகில் உன் பிறப்பு தற்செயலானது இல்லை. இந்த பிரபஞ்சத்திற்கு நீ தேவை படுகிறாய்.

நீ இல்லாவிட்டால் ஏதோ ஒரு வெற்றிடம் தோன்றுகிறது. வேறு எவராலும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

ஓஷோ 

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள்தான். அவர்களுடிய சிந்தனா சக்தி மூலம் செயல்படுவார்கள். 

இவ்வுலகில் சோம்பேறிகள் வேண்டுமானால் இருக்கலாம். மூடன் என்று ஒருவரும் இல்லை. அறிவில் யாரும் உயர்த்தி தாழ்த்தி இல்லை.

எல்லோருக்கும் மூளையின் எடை 1250 கிராம்தான். 

ஒரு சைக்கிளோட்டி தனக்கு விமானம் ஓட்ட தெரியவில்லையே என்று வருத்த பட தேவை இல்லை. ஒரு விமானிக்கு சைக்கிலோட்ட தெரியாமல் இருக்கலாம்.

ஒரு புட்பால் பிளேயர் பத்தாம் வகுப்பு கூட படிக்காமல் இருக்கலாம். டாக்டருக்கு படித்த ஒருவர் கடிகாரத்திருக்கு பேட்டரி போட தெரியாமல்  திணறலாம்.

ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் திறமைசாலிகள் தான். தனித்தன்மை படைத்தவர்கள் தான்.

ஏர் உழும் விவசாயி பலருக்கு சோறு போடும் அளவிற்கு திறமைசாலி. அவரது பெயரை கூட அவரால் எழுத முடியாமலும் இருக்கலாம். அதற்காக அவரை குறைவாக நினைக்க வேண்டியதில்லை.

எனவே . நாம் அவனை போல் இல்லை, இவனை போல் இருக்க முடியவில்லை என்று வருத்த படவேண்டிய அவசியம் இல்லை.

உன்னிடம் என்ன இல்லை என்று வருந்துவதை விட, உன்னிடம் என்ன இருக்கிறது என்று நினைத்து சந்தோஷபடு.

அடுத்தவர்கள் மட்டமாக நினைகிறார்களோ இல்லையோ, தம்மை தாமே குறைவாக எடை போட்டு கொள்பவர்கள் நிறைய உண்டு.

கவிபேரரசு ஒரு முறை நடிகர் அசோகனை பார்க்க சென்றிருந்தாராம். அவர் கவிஞரிடம் தம்பி.....இந்த ரேடியோவை சென்னை நிலையத்திற்கு மாற்றி தாயேன் என்றாராம்.

வைரமுத்துவுக்கோ ஆச்சரியம்.

எனக்கு இந்த ரேடியோவெல்லாம் வைக்க தெரியாது. என் பேரன்கள்தான் வச்சு தருவாங்க என்றாராம்.

ஒரு விழாவிற்கு சென்றிருந்தாராம் கவிபேரசு. விழா முடிந்து உடன் அமர்ந்து இருந்த ஸ்ரீதரோடு பேசி கொண்டே எழுந்து வெளியில் வந்திருக்கிறார். வைரமுத்துவின் கார் வந்துவிட்டது.

ஸ்ரீதரை தனியே விட்டு விட்டு வர அவருக்கு மனம் வர வில்லை. அப்படி செல்வது அவருக்கு மரியாதையாகவும் படவில்லை. காத்திருந்தார்கள் நேரமாகிவிட்டது.

ஐயா.. உங்கள் கார் எண்ணை சொல்லுங்கள். நான் என் டிரைவரை அனுப்பி வைக்கிறேன். என்று கேட்டிருக்கிறார்.

வைரமுத்து என் கார் நம்பரெல்லாம் எனக்கு தெரியாது என்றாராம் ஸ்ரீதர். இதனால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. அவர்கள் தொழிலில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.

இருந்தாலும் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர்கள் இல்லை. எடிசனுக்கு படிப்பறிவு குறைவு. ஆனாலும் அதை நினைத்து அவர் சோர்ந்து போகவில்லை.  மக்களின் பயன்பாட்டிற்கு அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகளை விட வேறு யாரும் அதிகம் கண்டுபிடிக்கவில்லை.

நமக்கு எதுவும் தெரியவில்லை என்று என்ன வேண்டாம். நம்மிடம் உள்ளதை எண்ணி தன்னம்பிக்கை கொள்வோம். நமக்கு எல்லாமே சாத்தியம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...