மேலே இருக்கும் புகை படங்கள் என்ன? என்ற கேள்வி நிச்சயம் எழும். இது எல்லாமே மலாய் மொழியில் இருக்கிறது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளி வாசலில் உள்ள கல்வெட்டு.
இந்த பூமியில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் ஏவாள் என்கிறது பைபிள். இஸ்லாமிய மார்க்கமும் இதை ஒத்து கொள்கிறது. ஆனாலும் இன்னும் கூடுதலாய் சில தகவல்களை சொல்கிறது.
முதல் மனிதன் பெயர் ஆதாம்.
அவன் பிறந்த இடம் இப்போதைய இந்தியா.
அவன் வாழ்ந்த காலம் மொத்தம் ஆயிரம் ஆண்டுகள்.
அவனுக்கு திருமணம் நடந்தது இந்தியாவில் தான்.
வெள்ளிகிழமையில் மதியம் தொழுகை நேரத்தில் அவனுக்கு திருமணம் நடந்தது.
இந்த பூமியில் 957 ஆண்டுகள் வாழ்ந்தான்.
43 ஆண்டுகள் சொர்க்கத்தில் இருந்தான். சொர்க்கத்தில் அரை மணி நேரம் என்பது பூமியில் இப்போதைய 43 ஆண்டுகளுக்கு சமம்.
இவன் இறை தூதரை சந்தித்தான் என்று அந்த கல்வெட்டு சொல்கிறது. ஹிந்து மதத்தில் முதல் மனித தோற்றம் பற்றி எந்த தகவலும் இல்லை. புல்லாய். பூண்டாய், செடியாய், கொடியை, மரமாய், பின் புழுவாய் பரிணாம வளர்ச்சி பெற்று, பின் மனித இனம் தோன்றியது என்கிறது.
இந்தியா என்பது தெய்வங்கள் தோன்றிய பூமி. இந்தியா என்பது தெய்வங்கள் வாழ்ந்த பூமி. இந்தியா என்பது புண்ணிய புருஷர்கள் உதித்த பூமி. அந்த வகையில் முதல் மனிதன் கூட இந்தியாவில் தான் தோன்றினான் என்பது நமக்கு பெருமையே.
புகைபடங்கள் தந்து உதவியவர் - ராஜேந்திரன், கேரளா
No comments:
Post a Comment