- விளையாட்டாக சொல்லப்படுகிற பொய். உனக்கு அபாயம் ஏற்படும் போது சொல்லப்படுகிற பொய், சொத்தெல்லாம் பறிபோகிற காலத்தில் சொல்லப்படுகிற பொய், விவாக காலத்தில் சொல்லாப்படுகிற பொய் பாவமாகாது.
- பிறருடைய மனைவி, சகோதரி, ஒரே கோத்திரத்தில் பிறந்தவள், மருமகள், வியாதியால் பீடிக்க பட்டவள், இவர்களை சேர்பவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்.
- பல்லில் விஷம் உள்ள பாம்பை காட்டிலும், நான்கு பக்கமும் சுழ்ந்த்துள்ள தீயை காட்டிலும், விரதம் தவறாத மனிதன் புனிதானாவான். பாம்பு கடித்தால் அவன் மட்டுமே சாவான். நல்லவன் சாபம் நல்லதல்ல.
- தர்மம் அறிந்தும் அதர்மம் செய்கிறவன், தனக்கு வசதியான போது மட்டும் தர்மம் செயபவனாகிறான். அப்படிபட்டவன் திருடனுக்கு சமம்.
- பதிவிரதைபோல் வேழம் போடும் பெண்கள், தன் கணவன் அல்லாத ஒருவனது கற்பத்தை தாங்குவதால், தன் கணவனின் குலத்தை அழிக்கிறாள். ஆனால் அம்மாதிரி குழந்தைகள் தந்தையாக நினைக்கும் கணவனுக்கு விரோதியாகும்.
- ஒருவனது வலது தொடையில் மகளும், குழந்தைகளும், மருமகளும் உட்கார கூடியது. இடது தொடை மனைவி அமர கூடியது.
- பாவம் செய்கிறவர்கள் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் சூரியன் , சந்திரன், காற்று, அக்னி, ஆகாயம், பூமி, தண்ணீர், தன்னுடைய மனம் பகல், இரவு, அனைத்தும் ரகசியமாக செய்யும் காரியத்தை அறிந்தே வைத்திருகிறது.
ஒவ்வொரு மனிதனுடைய செயலையும் கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். நம் செய்யும் காரியத்தில் மனசாட்சிக்கு திருப்த்தி உள்ளது என்றால், அந்த பாவம் நம்மை சேராது. இல்லாவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது.
- தாய்க்கு செய்த சேவை தன் காலத்திலும், தந்தைக்கு செய்த சேவை தணல் மூண்ட பின்னாலும், அதாவது அவர் இறப்புக்கு பின்னாலும், குருவுக்கு செய்த சேவை பிரம்மா லோகத்திலும் பலன் தருமாம்.
ஆனால் பெற்றவருக்கு உதவாத பிள்ளை, குரு சேவை செய்யாத சிஷ்யன் இருவரும் பிரம்மக்கத்தி தோஷத்தால் பீடிக்க படுவார்கள்.
- பசு வதை செய்தவன் பாவி. சிசு கொலை செய்தவன் படுபாவி.
- பிறர்மனை சேர்ந்தவன் பாவி, பிதாவை பழித்தவன் படு பாவி. இவர்கள் நரகத்தில் கயறு கட்டி இழுக்க படுவார்கள்.
- தன்னோடு இணையும் பொருளை எரித்து தன் வயமாக்கும் சக்தி பெற்றது நெருப்பு.
- எதோடு இணைகிறதோ அதோடு கலந்து விடும் குணம் பெற்றது தண்ணீர். இவ்விரு குணங்களையும் பெற்ற நல்லவர்களுக்கு சொர்க்கத்தின் கதவு திறந்தே இருக்கும்.
- கொலை பாதகம் புரிந்தவன், கோவில் சொத்துகளை சூறையாடியவன், கைம்பெண்ணின் கைபோருளை அபகரித்தோர், வேதத்தை பழித்தவன் இவர்களை பிரம்மகத்தி தோஷம் பிடித்து கொள்ளுமாம்.
- பிறர் துன்பத்தை அறிந்து அதை போக்க உதவுகிறவன், தண்ணிரில் தத்தளிப்பவனை காப்பாற்றுகிறவன், தன்னால் முடிந்த உதவியை பின்னால் ஆதாயம் என்று பார்க்காமல் செய்கிறவன், காயம் பட்ட பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் மருந்திட்டு கப்பாற்றுகிறவன், புண்ணிய லோகம் போய் சேர்வான்.
No comments:
Post a Comment