Follow by Email

Wednesday, 18 April 2012

வாஸ்து புருஷன் நித்திரையிலேயே இருப்பது ஏன்?


 தேடிய செல்வம் எல்லாம் ஓடி ஒளிகிறதே ஏன்? 

வீட்டிற்குள் நுழைந்தாலே காட்டிற்கு போன மாதிரி கவலை சூழ்கிறதே எதனால்?

வருவாய் இருந்தும் வறச்சி, இல்லாமை நடத்தும் புரச்சி, இவற்றோடு மல்லுகட்ட முடியாமல் மனம் நோவதின் காரணம் என்ன?

இந்த கேள்விக்கு விடை தேடி போனால், ஒரு வார்த்தை காரணமாக இருக்கும்.  அது வாஸ்த்து.  

பொதுவாக ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்ச்சத்திரத்தின் அடிப்படையில் வீட்டை அமைப்பார்கள்.  ஆனால் அது அவருக்கு 100 % ராசியான மனையா? வாஸ்த்து குறைபாடு இல்லாமல் இருக்கிறதா, மனையடி குற்றம் நீங்கி விட்டதா, குழி முறிசல் இல்லாமல் இருக்கிறதா என்பது எல்லாம் உறுதி படுத்த முடிவதில்லை. 

காரணம்....?  சுற்று சூழல்.  விளைவு ....  எதிர்காலமே புதிர் காலமாக காட்சியளிக்கிறது.  மனக்குறையும், பணக்குறையும் தொடர்கிறது. 

யாரு இந்த வாஸ்த்து புருஷன்?

இவர்தான் மனைகளுக்கு எல்லாம் மகாராஜன்.

ஓ.... வஸ்த்து புருஷன் நித்திரை விட்டு எழும் நேரம் என்று தினசரி காலண்டரிலும், பஞ்சாங்கத்திலும் குறிக்கபட்டு இருக்கிறதே அவரா?

அவரேதான். 

சரி... அவர் ஏன் குறுப்பிட்ட மாதத்தில் கண் விழித்து மற்ற நேரம் உறங்குவதாக சொல்கிறார்களே ஏன்?  

அதற்க்கு அவரின் சுயசரிதம் தான் விளக்கம் தரும்.  சொல்லவா?

அது ஒரு காலம்.  புராண காலம்.  சூரியன் உதித்தான். அன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை,  திரிதியை திதி, வியதிபாதாம் யோகம், பத்தரை கரணம், கார்த்திகை நட்ச்சத்திரம் கூடிய பொன்னாள்.

ஒரு மாபெரும் சக்தி உதயமாக போகும் நன்னாள் என்று மற்றவர்களுக்கு தெரியாமலே பொழுது புலர்ந்தது. 

அப்போது அந்தகாசுரன் எனும் அசுரன் அகில உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருந்த கால கட்டம். 

அசுரர்களுக்கு எப்போதுமே ஐந்தேமுக்கால் அறிவுதான்.  சிந்திக்கும் ஆற்றலில்  சிறிது குறைபாடு இருப்பதால் நிந்தனை செய்வது தேவர்களைதான். 

எந்த  நேரமும் சோம பானம், சுறா பானம் அருந்தி கொண்டிருப்பார்கள். போதை தலைக்கு ஏறியதும் தேவலோகத்திருக்கான பாதை மட்டும் தெளிவாக தெரியும்.

அப்பறம் என்ன.   படை சேனைகளோடு போய் பலபரிச்சை பார்ப்பதுதான் அவர்கள் வாடிக்கை.  அப்பாவி தேவர்கள் அலறியடித்து கொண்டு மும்மூர்த்திகளில் யார் முதலாக  தென் படுகிறார்களோ, அவர்களிடம் கதறி கலக்கத்திற்கான காரணத்தை சொல்லுவார்கள். 

நம்மை திரிஷ்டித்தவர்கள் அசுரர்களை அழிக்க ஆயத்தமாவார்கள். இதுபோன்ற ஒரு சூழல் அந்தகாசுரனால் வந்தது.

இந்த முறை சிவபெருமான் களத்தில் இறங்கினார்.   வரம் பெற்ற அந்தகாசுரனோடு கடும் போர் புரிந்தார்.

பொதுவாக அசுரர்களுக்கு சக்தி பெற்ற பிறகுதான் புத்தி வேலை செய்வதில்லையே.  ஆனால் வரம் கேட்கும்போது மட்டும் அறிவு சுடர் ஆயிரம் கண் விட்டு பிரகாசிக்கும்.

சாகாமல் தப்புவதற்கு ஏதாவது வழி  இருக்கா என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து தான் வரம் கேட்பார்கள்.  அந்த வகையில் அந்தகாசுரன் பெற்ற வரம் உயிரை   காத்தது. 

இருப்பினும் அந்தகசுரனின் அழிவு காலம் நெருங்கியது. சிதிரகுப்தன் அவன் ஏட்டை எடுத்து பார்த்தான்.  எமனின் பாச கயிறு உயர் குடிக்க தயாரானது.  போர் உச்சகட்டத்தை அடைந்தது. 

கடைசியில் சங்கரனின் பானம் சல்லடையாக துளைத்து அந்தகாசுரன்.

விழுந்தான்.  மீண்டும் எழவே இல்லை. மரணம் அவனை குடித்து தன் தாகத்தை தீர்த்து கொண்டது.

அப்போது சங்கரன் தன் உடலில் இருந்து வழிந்த வியர்வை துளியை வழித்து எறிந்தார். அதில் இருந்து ஒரு மாபெரும் சக்தி வெளிப்பட்டது.  அந்த சக்தியானது பிரம்மாண்டமாக வளர்ந்து அகில உலகத்தையே விழுங்கும் அளவிற்கு பூதமாக வடிவெடுத்து .

பூதம்தானே!  

யுத்த  களத்தில் கிடந்த வஸ்த்துக்களை எல்லாம் வாரியள்ளி  தின்றது.  அப்படியும் பசி அடங்கவில்லை. உடன் சிவனை நோக்கி தவம் செய்ய தொடங்கியது.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவது அவர் இயல்புதானே.  அந்த பூதத்திற்கு முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

உடனே அந்த பூதம் அகில உலகத்தையே அழிக்கும் ஆற்றல் எனக்கு வேண்டும் என்று வரம் கேட்டது. 

சற்றும் யோசிக்காமல் தந்தேன் வரம் என்று சொல்லிவிட்டு சிவ பெருமான் மறைந்து விட்டார்.  அவருக்கு தெரியாதா அடுத்து நடக்க போவது என்னவென்று.

அசுரபுத்தி எப்போதுமே  அர்ப்பமானதுதானே.  உடனே இந்த பூமியை விழுங்க பார்த்து.

விபரீதத்தை உணர்ந்து கொண்ட பிரம்மா, தேவர்களின் துணையோடு பூதத்தை சூழ்ந்து கொண்டு அதனை கட்டி குப்பற தள்ளினார். 

அதன் மேல் தேவர்களும் முனிவர்களும் ஏறி அமர்ந்து கொண்டனர்.  பூதத்தின் மார்பு  பகுதியில் பிரம்மா அமர்ந்து கொண்டார்.

அப்போது அந்த பூதம்.... என்னை படைத்த சிவனே எதன் பொருட்டு எனக்கு இந்த தண்டனை.  பசி பொறுக்கவில்லை.  தங்களால் உருவான எனக்கு ஒரு அவ சொல்லுக்கும், பழி சொல்லுக்கும்  ஆளாக்கி விட்டிர்களே ஏன்? என்று தன் தலையை உயர்த்தியபடி கேட்டது.

அதற்கு பிரம்மன்... கவலை படாதே.  பூமியில் விழுந்து கிடப்பதால் இனிமேல் வீடு கட்டும் அனைவருக்கும் நீ துணையாக இரு.  உன்னை வாஸ்து தேவன் என்றும் வஸ்து புருஷன் என்றும் அழைப்பார்கள். உன்னை பூஜிக்கும் அனைவருக்கும் நம்மையை செய்வாயாக என்று கட்டளை இட்டார்.

என் பசி இன்னும் அடங்க வில்லையே அதற்கு நான் என்ன செய்வது?

அப்போது அங்கே சரிசனம் தந்தார் சிவன்.  கவலைபடாதே.... வீடு கட்டும் மாந்தர்கள் பூஜை அன்று அனைத்து பொருள்களும்  உன்னை சாரும்.  

அணு தினம் தன் நித்திய சடங்குகளை செய்யும் ஆன்மீகவாதிகள் பயன் படுத்தும் அனைத்து பூஜை பொருள்களும் உன்னை சாரும்.

அது மட்டுமல்ல .... உன் பசியை குறைக்கும் முகமாக நீ விழித்திருக்கும் நாட்கள் குறையும். நீ நித்திரைலேயே இருப்பாய் என்று சிவ பெருமான் வரம் அளித்தார். 

உடன் வாஸ்து தேவனின் அகோர பசி அடங்கியது.  தேவர்களும் பிரம்மாவும் பாதம் பதித்து அமர்ந்ததால் புனித தன்மை பெற்றார்.

ஒவ்வொரு குடியிருப்பு மனை சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி,  வாஸ்து புருஷன் கவிழ்ந்த நிலையில் படுத்திருப்பதாக சொல்லபடுகிறது.     

No comments:

Post a Comment