Follow by Email

Thursday, 12 April 2012

இந்தியா சீனா யுத்தம் நடந்தால்?

சீனா. 

தரமற்ற எலட்ட்ரானிக் குப்பைகளை தயாரித்து,  விற்பனை செய்தே கொழுத்த நாடு. 

உலக அளவில் போலியான பொருள்களை உற்பத்தி செய்து கள்ள சந்தையில் உலவ விடும் நாடுகள் இரண்டு.  ஓன்று சீனா.  இரண்டு கொரியா.

சீனாவை பொறுத்தவரை எல்லை பிரச்சனை இல்லாத பக்கமே இல்லை என்கிற மாதிரி நாளா பக்கமும் பகை. 

உலக நாடுகள் மத்தியில் புரியாத புதிராக  இருக்கும் நாடு.  கம்னியூசம் என்ற போர்வையில் எந்த ரகசியத்தையும் வெளியே சொல்லாத நாடு.  இந்தியாவை பொறுத்தவரை சீனா என்பது பசுத்தோல் போர்த்திய புலி.


 இந்தியாவிற்கு இதுவரை நம்ப தகுந்த நண்பர்கள் யாரும் இல்லை. ரஷ்யாவை தவிர.

இந்திய துணை கண்டத்தில்  பலம் மிகுந்த நாடுகள் என்று எடுத்து கொண்டால்  இந்தியாவும் சீனாவும் அந்த இடத்தில் இருக்கும். 

பாகிஸத்தானை பொறுத்தவரை அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்பது தான் அதன் கூடுதல் பலமே.  

நம்மை பொறுத்தவரை சீனா அருகில் இருக்கும் வெடிகுண்டு. எப்போதுமே இரட்டை வேடம் போடுகிறது. இப்போது கூட  அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலத்தை தங்கள் பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது.

அதற்கு சீனா சொல்லும் காரணம் தான்  விநோதத்தின் உச்சகட்டம். இந்த மாநிலங்களில் வசிப்பவர்கள் உருவ அமைப்பில் இருந்து உணவு பழக்கம் வரை சீனர்கள் மாதிரியே இருக்கிறார்களாம்.

அதனால் இது சீனாவின் ஒரு பகுதி என்கிறது.  என்ன ஒரு முட்டாள் தனம்.

சமீபத்தில் சீனா ஒரு எச்சரிக்கையை  விடுத்து.   தென் சீன கடல் பகுதில் இருந்து இந்தியா உடனே வெளியேற வேண்டும்.

இல்ல விட்டால் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். 

இப்படி திருவாய்  மலர்ந்த்திருப்பவர் யார்  தெரியுமா ?

தென்சீனா தேசிய இன்ஸ்டியூட் தலைவர்  ஷூசிஹூன்.

அவர் மேலும் இந்தியாவுடன் , சீனா எந்த வகையிலும் சர்வதேச கடல் பகுதி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை

இங்கு இந்திய எண்ணெய் நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க தார்மீக உரிமை இல்லை.

இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கடி ஏற்படும்

இப்பகுதியில் 40 சதவீத கச்சா எண்ணெய் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக இந்தியா தென்கடல் பகுதியிலிருந்து வெளியே வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.


நான் அந்த எச்சரிக்கையை பற்றி ஆராய வில்லை. ஒரு வேலை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சண்டை நடந்தால் முடிவு எப்படி இருக்கும்.

இரண்டு நாட்டுக்கும் இடையே உள்ள ராணுவ பலம் என்ன என்பது தான் ஆய்வு.

 உலகின் மிக பெரிய ராணுவம் அதாவது ,  ஆள் பலம், படை பலம், ஆயுத பலம், தாக்குதல் கருவிகள், போர் விமானங்கள்,  போர் கப்பல்கள், டாங்கிகள்  ஆகியவற்றை மையபடுத்தி  பட்டியலை போட்டால் முதல் 30  நாடுகள் வரிசை பின்வருமாறு.

1 . அமெரிக்கா
2 . ரஷ்யா
3 . சைனா
4 இந்தியா
5 இங்கிலாந்து
6 துருக்கி
7 சவுத் ஆப்பிரிக்கா
8 பிரான்ஸ்
9 ஜப்பான்   


 
10 இஸ்ரேல் 
11 பிரேசில் 
12 ஈரான் 
13 ஜெர்மனி 
14 தைவான் 
15 பாகிஸ்த்தான் 
16 எகிப்து 
17 இத்தாலி 
18 இந்தநோசியா 
19 தாய்லாந்து  

 20 உக்கிரைன்
 21 போலந்து
 22 வடகொரியா
 23 பிலிப்பைன்ஸ்
 24 ஆஸ்த்ரேலியா
 25 கனடா
 26 சவூதிஅரேபியா
27 மலேசியா
28 சுவிடன்
29 ஸ்பெயின்
30 மேக்ச்சிகோ

நம்பர் எண்ணிக்கையில் இந்தியாவும் சீனாவும் முன்னும் பின்னும் இருக்கிறது.  ஆயுத பலத்திலும். இந்த வித்தியாசம் வரவே செய்யும்.

ஆனால் 1962 இல் நடந்தது போல் ஒரு நிலை வரும் என்று சீனா தப்பு கணக்கு போடுவதற்கு வாய்ப்பு இல்லை.  இந்தியாவின் பலன் என்ன என்பது அதற்கு தெரியும்.

அன்று இந்தியா வளர்ச்சி பெறவில்லை.  உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவே போதிய பணம் இல்லாத நிலை.  அதனால் ராணுவத்திற்கு என்று எந்த நவீன ஆயுதங்களும் செய்யவோ, வாங்கவோ முடியாத நிலை.

ஒரு பலவீனமான நாட்டின் மீதுதான் பலமான சீனா போர் தொடுத்தது. ஆனாலும் போர் வீரர்கள் தீரத்துடன் போரிட்டார்கள்.  ஆனால் அப்போதைய ஆளும் கட்சி படைகளை பின் வாங்க சொன்னது.

சீனா ஆக்கிரமித்த பகுதிகளை அது வெறும் பனி சூழ்ந்த பகுதி தானே.  இதற்காக எதற்கு சண்டை என்று சமாதானம் சொன்னது.

காரணம் பலவீனமான தலைமை. இப்போது கூட இந்தியாவின் படை பலம் ஒன்றும் குறைவில்லை.

ஆனால் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதற்கு ஒரு உதாரணம் நம் ராணுவ தளபதி.

வாயை திறந்தாலே உளறி கொட்டுகிறார்.  ராணுவத்திடம் இருக்கும் வெடி மருந்துகள் 10 நாட்கள் கூட தாங்காது என்கிறார்.

இது உண்மையாக இருக்க வழி இல்லை .  இது உண்மையா இருந்தாலும் கூட அண்டை நாடு சண்டைக்கு வருகிறாயா என்கிற தொனியில் மிரட்டலை விடும் சமயத்தில் இப்படி திருவாய் மலர வேண்டிய அவசியம் என்ன?

கண்ணும் கண்ணும் வைத்த மாதிரி காரியம் செய்ய வேண்டிய நேரத்தில் தான்தோன்றி தனமாக பேசுவது தவறு. இவரை முதலில் பதவியை விட்டு விரட்ட வேண்டும்.

ஒரு குருட்டு கணக்கு போட்டு பார்த்தால் விடை இப்படி இருக்கும் என்கிறார்கள் விஷயம்  தெரிந்தவர்கள்.

அதாவது இந்த இரண்டு நாடுகளும் ஓன்று சேர்ந்தால் உலகத்தையே அழித்து விடலாமாம்.

அப்படி ஒரு மிருக பலம் இருக்கிறது இவ்விரு நாடுகளிடமும்.   சரி.. உண்மையில் இந்தியா சீனா இவ்விரு நாடுகள் பெற்றிருக்கும் ராணுவ பலம் என்ன என்ற புள்ளி விவரத்தை பார்போம்.

                                                            இந்தியா                                          சீனா


விமான படை விமானங்கள்                        2,462                                                 4,092

தரையில் இருந்து  இலக்கை
 தாக்கும் ஏவுகணைகள்                               75,191                                                22,795

அதி நவீன பீரங்கிகள்                                   10,௦௦௦                                                 2,950

 போர் கப்பல்கள்                                                  324                                                  2,010

விமானம் தாங்கி போர் கப்பல்                           1                                                        ௦

ரேடார் பொறுத்த பட்ட அதி நவீன
போர் கப்பல்கள்                                                      12                                                      58

நீர் முழ்கி கப்பல்கள்                                            15                                                       55

தாக்குதல் கெளிகாப்டர்கள்                           540                                                       712

விமான எதிர்ப்பு பீரங்கி                                 5500                                                     7400 

அணு ஆயுதங்கள்                                     200 - 300                                                      400

 இது கடத்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கு.  இது கூட ஒரு தோராயமாக எடுக்கபட்ட கணக்கு தானே தவிர,  100 %  புள்ளி விபர கணக்கு அல்ல.

இது தவிர்த்து அதி நிவீன துப்பாகிகள், உளவு ராடார்கள், இரவிலும், பகலிலும் செயல்படும் உளவு ராக்கெட்டுகள் என்று பட்டியல் நீளுகிறது.

அதோடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டு நாடுகளிடமும்  இருக்கிறது. ஒரு உண்மையை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.  இங்கே இருக்கும் ஆயுதங்களில் 20 % பயன்படுத்த பட்டாலே இரண்டு நாடுகளும் பாதி அழிந்து விடும்.

இது தான் எதார்த்த நிலை.

சீனாவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. சீனா போர் தொடுத்தால் அதை சந்திக்கும் வல்லமை இந்தியாவிடம் இருக்கிறது.  பழைய கணக்கு இப்போது பலிக்காது.

 அணு ஆயுத பலம் பொருந்திய நாடுகள் எப்போதுமே வீண் வம்புக்கு போவதில்லை.

போனால் அதற்கு விலை  அதிகம்.  சீனா அந்த தவறை செய்யாது என்று நம்புவோம்.  இந்தியா எப்போதுமே வலிய வம்புக்கு போனதில்லை.  1962 இந்தியாவிற்கு இனி கிடையாது.

1 comment:

  1. YOU ARE RIGHT..BUT YOU DONT CONFUSE WITH COMMUNIST RULING IN CHINA..ONCE IN RUSSIA ALSO COMMUNIST RULED THERE..BUT THAT TIME ITS VERY CLOSE TO INDIA..

    ReplyDelete