கடவுளே கொடுப்பார்.
அக்பர் ஆட்சி காலத்தில் டெல்லி அருகில் உள்ள ஒரு காட்டில் முஸ்லிம் பக்கிரி ஒருவர் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரை தரிசிப்பதற்காக மக்கள் அங்கே செல்வது வழக்கம்.
ஆனால் அந்த பக்கிரியிடம் பொருள் வசதி கிடையாது. அதனால் தம்மை காண வருபவர்களை உபசரிக்கவும் வந்தவர்கள் தங்க ஒரு கூடம் அமைக்கவும் விரும்பினார்.
அதற்காக உதவியை அக்பர் சக்ரவர்த்தியிடம் பெற விரும்பி அவரை சந்திக்க சென்றார். அப்போது அக்பர் தொழுகையில் இடுபட்டிருந்தார். அந்த சாதுவும் ஒரு பக்கமாக அமர்ந்து தொழுகை செய்தார்.
அக்பர்... இறைவனே ! எனக்கு மேலும் செல்வம், புகழ், ராஜ்ஜியம் ஆகியவற்றை தந்தருள வேண்டும் என கூறி பிராத்தனை செய்வது பக்கிரியின் காதில் விழுந்தது.
அக்பரின் பிராத்தனை வசனங்களை கேட்ட உடனேயே பக்கிரி அங்கிருந்து கிளம்பி போக ஆரம்பித்தார். அதனை கவனித்த அக்பர் சைகை செய்து அவரை அழைத்து திரும்பவும் உட்காரும்படி வேண்டினார்.
தொழுகை முடிந்ததும், தாங்கள் என்னை பார்க்க வந்தீர்கள். ஆனால் என்னிடம் ஒன்றும் சொல்லாமலேயே திரும்பி போக நினைத்ததின் காரணம் என்ன என்று கேட்டார்.
பக்கிரி தயக்கத்துடனே பதில் சொன்னார். அரசே ... தங்களை காண ஒரு நோக்கத்துடனே வந்தேன். அதனை சொல்லி தங்களை சிரம படுத்த விரும்ப வில்லை என்று கூறினார்.
வந்த காரியத்தை கூறுங்கள் என்று அக்பர் வலியுறுத்தி கேட்டார். அதற்க்கு பக்கிரி .... அரசே....பொதுமக்கள் தினமும் என்னிடம் உபதேசம் பெற வருகிறார்கள். அவர்களுக்கு வசதி செய்து தர என்னால் முடியவில்லை. அதற்கு தங்களிடம் பணம் பெற்று செல்ல வந்தேன்.
இதனை கேட்ட அக்பர் அப்படியானால், பிறகு ஏன் தங்களுடைய கருத்தை தெரிவிக்காமல் செல்கிறிர்கள் என்று கேட்டார்.
அதற்கு பக்கிரி அரசே... நீங்கள் செல்வம், செல்வாக்கு, ராஜ்ஜியம் ஆகியவற்றை வேண்டி பகவானிடம் பிராத்திப்பதை கேட்டேன். நீங்களே யாசகம் கேட்கும் போது, ஒரு யசகனிடம் இன்னொரு யாசகன் ஏன் யாசிக்க வேண்டும்.
யாசகம் பெறாமலே காரியத்தை சாதிக்க முடியாது என்றால், பகவானிடமே யேசித்து கொள்ளலாமே என்று நினைத்து நான் புறப்பட்டேன் என்றாராம்.
எது அவசியம்
சிலர் படகில் ஏறி கங்கையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது படகில் பயணம் செய்து கொண்டிருந்த பண்டிதர் தனது கல்வி அறிவு பற்றி தம்பட்டம் அடித்து கொண்டிருந்தார்.
பயணிகளில் ஒருவனிடம் உனக்கு வேதாந்தம் தெரியுமா என்று கேட்டார். அதற்க்கு அவன் தெரியாது என்று பதில் அளித்தான்.
புராணம், இதிகாசம் பற்றி தெரியுமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அவர் கேட்ட கேள்வி அனைத்திருக்கும் தெரியாது என்றே பதில் சொன்னான்.
இதெல்லாம் தெரியாமல் பூமியில் நீ வாழ தகுதி அற்றவன் என்று ஆணவமாக பதில் சொன்னார் பண்டிதர். அந்த நேரத்தில் பலத்த புயல் காற்று வீச தொடங்கியது. படகு நிலை குலைந்து ஆடியது.
அப்போது அந்த மனிதன் பண்டிதரிடம் ... ஐயா பண்டிதரே உமக்கு நீந்த தெரியுமா என்று கேட்டான்.
தெரியாது என்று பதில் சொன்னார். உடனே அவன் ஐயா நீங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் தெரியாது. ஆனால் எனக்கு நீந்த தெரியும். அதனால் பூமியில் வாழ எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால் உங்களுக்கு என்றான்......
பண்டிதர் முகத்தில் பீதி பரவியது.
பரமஹம்சர் சொன்ன கதைகள்
No comments:
Post a Comment