Follow by Email

Monday, 16 April 2012

தமிழ்வாணன்/ TAMILVANAN

ஒரு எழுத்தாளரின் வெற்றி எதில் இருக்கிறது?

ஆரம்ப வரிகளை படிக்க துவங்கும் போதே, அடுத்து அடுத்து உள்ளே வா.... என்று உள்ளே அழைத்து செல்ல வேண்டும். அந்த எழுத்து சமுத்திரத்தில் வாசகன் நீந்தி திளைக்க வேண்டும். 

அடடா... என்ன சுவாரசியமான புத்தகம்.  எவ்வளவு அற்புதமான கருத்துக்கள் இதில் அடங்கி இருக்கிறது என்ற பிரமிப்பு வர வேண்டும். 

வந்தால் .... அந்த புத்தகமோ, கட்டுரையோ வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடும். 

அதைவிடுத்து முதல் பாராவை படித்தவுடன் அடுத்த பக்கத்திற்கு தாவினாலோ, புத்தகத்தை மூடி வைத்தாலோ போச்சு.  

ஆரம்ப கால தமிழ் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதது இல்லை.  பத்திரிகை உலகில் இலக்கிய நடை, இலக்கண தமிழ் என்று கடின வார்த்தைகளை போட்டு எழுதி கொண்டிருந்த காலத்தில், பத்திரிகை உலகில் புதுமையை புகுத்தியவர் ஆதித்தனார்.

கத்தியை எடுத்தான்.... சதக் சதக் என்று குத்தினான் என்று பாமர மக்களும் படிக்க தூண்டும் ரசனையை கொண்டுவந்தார்.  அந்த கால கட்டத்தில் தான் தமிழ்வாணனும் அறிமுகமானார். 

தமிழ்வாணன்.
தமிழ்வாணன்

குத்து மதிப்பாக ஒரு தலைப்பை சொல்லி, அந்த தலைப்பில் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டால்,  இதோ இருக்கிறது என்று துக்கி போடும் மணிமேகலை பிரசுரத்தின் உரிமையாளர்.

இன்று நம்மிடையே இல்லை என்றாலும், இவர் விதைத்து விட்டு சென்ற விதைதான்,  ஆயிரம் விழுது விட்ட ஆல மரமாக மணிமேகலை பிரசுரம் என்று எழுந்தது நிற்கிறது.

தேவகோட்டை ராமநாதன் செட்டியார், பிச்சயம்மை தம்பதியருக்கு மகனாக அவதரித்தவர் தம்ழ்வாணன். இது இவரது இயற்பெயரல்ல.  லெச்சுமணன் என்ற பெயரை தமிழ்வாணன் என்று மாற்றி அமைத்தது திரு வி க.

இளமை காலத்தில் கிராம ஊழியன் என்ற பத்திரிக்கையில் ஆரம்பம் ஆனது இவர் எழுத்து துறை.  சம்பளம் ஒன்றும் பெரிய தொகை இல்லை.  வெறும் முப்பது ரூபாயில் ஆரம்பம் ஆனது பணி.

.சரியாக நினைவு இல்லை.  ஒரு சமயம் கர்ம வீரர் காமராஜரை ஒருவர் சந்திக்க சென்றாராம். ( தமிழ்வாணன் அல்ல )  பேச்சு வாக்கில் காமராஜர் என்ன செய்றிங்க என்று கேட்டாராம்.

அதற்கு அவர்.... பத்திர்க்கை நடத்துறேன் என்றாராம்.  அப்படியா சந்தோசம்.  சாப்பாட்டுக்கு என்ன செய்றிங்க என்று அடுத்த கேள்வியை கேட்டாராம் காமராஜர்.

எழுத்தாளர் என்றாலே வருமானத்திற்கு வழியில்லாத வறுமை தொழில் என்று பார்க்கப்பட்ட கால கட்டம் அது.  பத்திர்க்கை நடத்துகிறேன் என்றால் கை காசுக்கு நஷ்டம் என்று சொல்லும் நிலைமை.

இருந்தாலும் அவர்கள் இருந்த எழுத்தார்வம் இந்த துறையை நோக்கி இழுத்து சென்றது.

கிராம ஊழியன் பத்திரிக்கையில் இருந்து வெளியேறி அணில் என்ற சிறுவர் பத்திரிக்கைக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார்.

உழைப்பே துணை என்பது இவரது தாரக மந்திரம்.

உண்மைதான். சும்மா வருவதில்லை எந்த சிம்மாசனமும்.  முன்னணியில்  இருப்பவரின்  பின்னணியை  ஆராய்ந்தால்,  அந்த வெற்றிக்கு கடின உழைப்பு தான் காரணமாக இருக்கும்.

கால நேரம் பார்க்காமல் கடிகார முள்ளு மாதிரி உழைப்பவர்களுக்கு வெற்றி என்பது தொட்டு விடும் தூரத்தில் இருக்கும். இவர் போகாத துறையே இல்லை என்று சொல்லலாம்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் இவரது புதல்வர் லேனா தமிழ்வாணன் முன்னணியில் இருக்கும் தன்முனைப்பு கட்டுரையாளர்.  இவர் எழுதும் ஒரு பக்க கட்டுரைகள் மிக பிரபலம். 

லேனா.... எழுதிய ஒரு கட்டுரையை பார்ப்போமா.

உரிமை உள்ளது என்று வார்த்தைகளை கொட்டுவதா?

இன்னும் சொல்லப்போனால் காயபடுத்த என்றே சில களங்களை உருவாக்குவதும் உண்டு.  நம் நோக்கமே இவர்களை எப்படியும் காய படுத்திவிட வேண்டும் என்பதாக இருக்கிறது.

கேட்டால் சிலர் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று அடங்காத கோவத்துடன் வறட்டு தத்துவம் வேறு உதிர்ப்பார்கள்.

முள்ளை முள்ளால் எடுத்தால் செப்டிக் ஆகிவிடலாம் என்று இவர்களது மருத்துவர்கள் சொன்னால் இவர்களால் அதை மறுக்க முடியுமா.

ஒரு கணவன் என் மனைவியை, என் பிள்ளையை நான் கோவித்து கொள்ள எனக்கு இல்லாத உரிமையா என்று எண்ணுகிறான்.

ஒரு உயர் அதிகாரியோ கோபித்து கொள்ளவே எனக்கு கிழே உள்ள ஊழியர்கள் என்று நம்புகிறார்.  முதலாளிக்கும் இப்படி ஒரு நினைப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

வீட்டுகாரர் என்றால் குடுத்தினகாரரையும்,  கடன் கொடுத்தவர் என்றால் கடன்காரையும் திட்டலாம் என்று எழுதப்பாடாத உரிமையை இந்த சமுகம் வழங்கி இருக்கிறது. அல்லது உரியவர்கள் அப்படி நினைக்கிறார்கள்.

இந்த காட்சிகளுக்கு நேர்மாறாக கோவித்து கொள்ளும் உரிமை உள்ளது என்று நம்புகிறவர்களின் அன்புக்கு நாம் பாத்திரமானவர்களாக இருக்கிறோம்.  இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.  கோவித்து கொள்ளபடுபவர்களுக்கும் இவ்வித எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பு இருப்பதாலோ   என்னவோ இவர்கள் தங்கள் மேலிடத்தால் கோபித்து கொள்ளப்படும் பொது இரு மடங்கு காய பட்டு போகிறார்கள்.

அதே நோக்கத்தில் கோபிக்கும் உரிமை உள்ள போதும் இப்படி அன்பானவர் சொல்கிறாரே என்ற  என்னத்தை கோபிக்கிறவர்கள் உருவாக்கினால் அது தான் எதிர் பார்க்கவே இல்லாத நல்ல மன மாற்றத்தை மற்றவர் மனதில் ஏற்படுத்தும்.

மாறாக கொபிப்பதையே வாடிக்கையாக கொண்டு விட்டால் எருமை மாடு மீது விழுந்த மழையின் கதைதான் நிகழும்  

No comments:

Post a Comment