Follow by Email

Sunday, 22 April 2012

ஆண்கள் அழகு குறிப்பு

அந்த மழைக்கு நன்றி சொல்லணும்.  

இத்தனை நாளா எப்படியெல்லாம் மேக்கப் போட்டு ஏமாத்தி இருக்கா மச்சான்.

இது இளசுகள் மத்தியில் மிக பிரபலமான SMS . யோசிச்சு பாருங்க. காக்கா கலர் பொண்ணா இருந்தாலும் கலக்கலா ட்ரெஸ் பண்ணும். தூக்கலா மேக்கப் போடுறதும் சகஜம்.

அது என்னவோ தெரியலை. அழகு படுத்திகிறதும், மேக்கப் போடுறதும் பொம்பளைங்க சமாச்சாரம். நமக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு பல ஆண்கள் நினைக்கிறாங்க. 

அதுனாலதானோ என்னவோ பலர் வடிவேலுதனமா ட்ரெஸ் போட்டுக்கிட்டு வலம் வர்றாங்க. 

பொதுவா பொண்ணுங்க ஆம்பிளைங்க ட்ரெஸ் வரைக்கும் போட்டுக்கிட்டு அழகு பாக்குதுங்க.  இந்த ஆண்கள்தான் பாவம். ஒன்னு வேஸ்ட்டி, இல்லைனா பேன்ட். இதை விட்டா வேற வழி இல்லை.

சரி... ஆள் பாதி, ஆடை பாதி. இந்த ஆடைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பது தான் கட்டுரை. 

முதலில் ஆள் பாதி 

அழகு என்பது வம்சாவளியை பொறுத்தது. அப்பா அம்மா அழகா இருந்தால் பிள்ளைங்களும் அழகா இருக்கும். இல்லைனா... அதுக்காக வருத்த பட முடியாது.

இன்னொன்னு அழகுக்கு என்று எந்த அளவு கோலும் இல்லை. இப்படி இருந்தா அழகு,  அப்படி இருந்தா அழகு என்று சொல்ல எந்த விதியும் இல்லை.

அதோட அழகு, உடல் சம்மந்த பட்ட விஷயம் மட்டும் இல்லை.  ஆங்கிலத்தில் அழகை பர்சனாலட்டி என்கிறார்கள்.

ஒருவர் நல்லா பாட்டு பாடினால், அவர் இசைத்துறையில் பர்சனாலட்டி.  கதை எழுதினால் அவர் எழுத்து துறையில் பர்சனாலட்டி.  நடனம் ஆடினால் அவர் கலை துறையில்  பர்சனாலட்டி என்று பேர்.  இங்கே முகபொளிவுக்கு முக்கியத்துவம் இல்லை.

நாம் நடைமுறைக்கு வருவோம்.

ஒருவர் ஆணழகன் அரவிந்த சாமி மாதிரி இருக்க வேண்டியதில்லை. இருக்கும் உடம்பை கொஞ்சம் கட்டு கோப்பா  வச்சு கிட்டா, பார்க்க ஒரு லுக் இருக்கும்.  கண்டதை தின்னு செந்தில் மாதிரி இருக்க கூடாது.  அப்பறம் காமடி பீஸ் மாதிரிதான் இருக்கும். 

பொதுவா உங்க உயரத்திற்கேற்ற எடை இருக்கணும். கூடினால் குண்டு  கல்யாணம்  மாதிரி  தெரியும். குறைஞ்சா ஓமகுச்சி தான்.

இப்ப உயரம் அதற்கு ஏற்ற எடை என்ன என்பதை பார்போம். 

உயரம்   எடை 
157cm . 56 -60 கிலோ
160cm  57 -61கிலோ 
162cm  59 -63 கிலோ 
165cm  61 -65கிலோ 
168cm 62 -67கிலோ 
170cm 64 -68கிலோ
173cm  66 -71கிலோ 
175cm 68 -73கிலோ 
178cm 69 -74கிலோ 
180cm 71 -76கிலோ 
183cm 73 -78கிலோ 
185cm 75 -81கிலோ 
188cm 78 -83கிலோ

இதுதான் சரியான எடை. இதில் ஒன்றிரண்டு கிலோ கூடலாம், குறையலாம் அதனால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது.             

 இனி தலைப்புக்கு வருவோம். ஆடை பாதி 

சிலரை  பார்த்தவுடனே பிடிக்கும். சிலரை பழகினால் தான் பிடிக்கும்.  பார்த்தவுடனே பிடிக்கணும்னா முதல் தாக்கம் நல்லா இருக்கணும்.  பொதுவா கருப்பா இருக்கிறவங்க காமா சோமான்னு ட்ரெஸ் போடுறதை நிறுத்தனும்.

கட்டம் போட்ட சட்டை போட்டு ஜெயில் கைதி மாதிரி இருக்க கூடாது.  வெளிர் நிறங்கள் எடுப்பா இருக்கும். 

அதுக்காக வெள்ளை சட்டை போட்டா வயசு கூடின மாதிரிதான் இருக்கும். இளமையா தெரிய லைட் ரோஸ், இளம் நீலம், வெண்மை கலந்த கத்தரிப்பூ கலர், சந்தன கலர் போன்றவை ஓகே.

வேஸ்டி கட்டினாலே ஒரு முதிய தோற்றம் இயல்பா வந்துடும். வயச குறைச்சு காட்ட ஜீன்ஸ் நல்லது.  

ஜீன்ஸ் போட்டா சட்டை போடக்கூடாது.  டி ஷர்ட்தான் நல்லது.  நீங்க என்ன கலர்ல வேண்டுமானாலும் சர்ட் போடுங்க.  ஆனால் பேன்ட் மட்டும் கருப்பு கலர்ல இருந்தா எடுப்பா இருக்கும்.

எப்போதுமே கருப்பா இருக்கிறவங்க பச்சை, கரு நீலம், கருப்பு கலர் சட்டை போடவே கூடாது.  போட்டால் அமாவாசை இருள் மாதிரி முகம் கருப்பா தான் இருக்கும்.

மாநிறமா... ஓரளவு டார்க் கலர் சட்டை போடலாம்.  போட்டாலும் தப்பில்லை. அதே மாதிரி சிகப்பு கலரா இருக்கிறவங்க டார்க் கலர்ல சட்டை போட்டா அப்படிதான் இருக்கும்.

பொதுவா வயசை குறைச்சு காட்ட முழுக்கை சட்டை போடவே கூடாது.  அரைக்கை சட்டைதான் நல்லது. 

நல்லா தலை வாருங்க. புயல்ல அடிபட்ட மாதிரி இருக்காம சீவிய தலை தான் சிறப்பு.

என்னதான் அழகா உடுத்தினாலும், தலை  சப்பி போட்ட பணம்கொட்டை மாதிரி  இருந்தால் எடுபடாது. 

சிலருக்கு நடு  வாகு   நல்லா இருக்கும்,  சிலருக்கு முடியை தூக்கி சீவினா அழகா இருக்கும்.  சிலருக்கு பக்க வாகுதான் நல்லா இருக்கும்.  கண்ணாடி முன்னே நின்னு சீவி பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி முடிவை எடுங்க.

சின்னதா ஒரு திருநீர் கீற்று வச்சு பாருங்க.  உங்க முகம் பார்க்க ஜொலிப்பா இருக்கும்.

முக்கியமா குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்க. அடிக்கடி சோப்பை மாத்தி போடதிங்க.  இதை சரியாய் கடைபிச்சா நீங்க ஹிரோதான். No comments:

Post a Comment