வணக்கம். இந்த இனிய தருணத்தில் உங்கள் அனைவருக்கும் நந்தன வருஷ புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று, சீரும் சிறப்புடன், செல்வ செழிப்புடன் வாழ நான் வணங்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி, உங்களுக்கும் அருள வேண்டுமாய் கேட்டு பிராத்திக்கிறேன்.
சரி...இந்த புத்தாண்டில் என்ன செய்ய போறீங்க?
என்ன புது சட்டை எடுத்து இருப்பிங்க. கோவிலுக்கு போவிங்க, நண்பர்களை போய் பார்ப்பிங்க. பீச்சுக்கு போவிங்க, சினிமாவுக்கு போவிங்க. நான் அதை கேட்கலை. இதெல்லாம் சாதாரண நிழ்வுகள்.
நான் கேட்பது வேற. உங்கள் எதிர் கால லெட்ச்சியம் என்ன? அதற்காக எதையாவது செய்தீங்களா.
அல்லது குறைந்த பச்சம் முடிவு எடுத்திங்களா?
புத்தாண்டு சபதம் எடுத்தாச்சா....
சந்தோசம்.
எடுக்கலையா? உடனே எடுங்க.
நீங்க யாருன்னு தெரியுமா? எதிர் காலத்தில் என்னவாக போறிங்கன்னு முடிவு பண்ணிடிங்களா. கண்ணதாசன் பாட்டு வரியை உங்களுக்கு நினைவு படுத்துறேன்.
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
வாழ்ந்தாலும் தாழ்த்தாலும் தலை வணங்காமல்
நீ வாழலாம்.
மாபெரும் சபையில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று
போற்றி புகழ வேண்டும்.
இன்று முதல் இந்த வரிகள் உங்கள் வாழ்க்கையில் தேசிய கீதமாகட்டும்
ஆண்டுகள் பிறக்கிறது என்றால் வயதில் ஓன்று வற்றி விட்டது என்று பொருள். ஆனால் வாழ்கை படியில் நீங்கள் ஒரு அடி மேலே போயிருந்தால் சந்தோசம்.
உங்களிடம் சில குறைகள் இருக்கலாம். இருந்தால் திருத்தி கொள்ளுங்கள். குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைத்து கொள்ளாதவன் மனிதனே இல்லை.
சரிதானே.
இல்லாதவருக்கு இயன்றவரை உதவி செய்யுங்கள். யாரையும் காய படுத்ததிங்க. அன்பா பேசுங்க, அன்பா பழகுங்க, அன்பு செய்ய கற்று கொண்டால், உங்கள் வாழ்க்கையில் எல்லாம் சாத்தியம்.
உலகம் வசப்படும், உறவுகள் வசப்படும், உங்கள் வாழ்க்கையும் அர்த்தப்படும்.
மேற்கே மறைந்த சூரியன் கிழக்கே உதிப்பது போல், கீழ்வானம் சிவப்பது போல் உங்கள் வாழ்க்கையில் வெளிச்ச புள்ளிகள் விழட்டும். வாழ்க நீவீர். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment