ads

Saturday, 7 April 2012

தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்?

ஆவணி மாதம் பொண்ணுக்கு கல்யாணம். நல்ல இடம், நல்ல சம்மந்தம்.  பையன் வேற நல்லா படிச்சு இருக்கான்.  அதுக்காகவே உங்க சக்திக்கு மீறி முப்பது பவுன் நகை போடுறதா ஒத்துகிட்டிங்க. 

கையில இருக்கிற பணம்,  பேங்குல இருக்கிற சேமிப்பு,  இதை வச்சு கடன் வாங்காம கல்யாணத்தை  நடத்திடலாம்னு உள்மனசு சொல்லுது. 

நீங்களும் தங்கநகை வாங்க போறீங்க.  நீங்க என்ன ஏனோதானோன்னு இருக்கிறவரா.  பக்காவா விலையெல்லாம் விசாரிச்சுட்டுதான் கடைக்கு போறீங்க. 

ஆனால்  அங்கேதான் அதிர்ச்சி காத்திருக்குது.  கடைகாரர்... சார் ... நீங்க சொல்றது பழைய விலை சார். 

இப்போ கிராமுக்கு 80 ரூபாய் ஏறிட்டு என்கிறார்.  உங்களுக்கு  கண்ணை கட்டுது. என்ன கொடுமை.  இப்படி விலை ஏற என்ன காரணம் அப்படின்னு மனசுல எண்ணம் வருதா.

வரும்.  பல பேருக்கு வந்தும் இதற்கு விடை காண முடிவதில்லை.  இந்த தங்கத்திருக்கு அப்படி யார்தான் விலையை நிர்ணயம் செய்றாங்க.  ஏன் இப்படி விலைவாசி விஷம்  மாதிரி ஏறிகிட்டே போகுது.  உங்களுக்கு தெரியுமா. தெரியலைன்னா  மேற்கொண்டு தொடருங்கள்.

பொதுவான பொருளாதார விதி என்ன?

உற்பத்தி குறைவாகவும்,  தேவை அதிகமாகவும் இருந்தால் விலை உயரும்.

இது உண்மைதான்,   தங்கத்தை பொறுத்தவரை.  ஆனால் இது மட்டுமே காரணம்  இல்லை விலை  உயர.  திரை மறைவில் சில தகிடு தித்தங்களும் உண்டு.   அதை பற்றிதான் இப்போது ஆராய போகிறோம்.

தமிழர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும்,  இந்தியர்களின்  வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகவும் மாறிவிட்டது தங்கம்.  தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருக்கிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது ஒரு கமிட்டி தான்.  அந்த கமிட்டி லண்டனில்  இருக்கிறது. 

அதன் பெயர் லண்டன் பிர்லியன்ட் அசோசியேசன்.  இதன் ஐந்து பேர் கொண்ட குழு தான் தினசரி காலை மாலை ஓன்று கூடி தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.

என்ன அளவு கோலை கொண்டு இந்த விலை நிர்ணயம் செய்ய படுகிறது.?

நல்ல கேள்வி.  இதுதான் பதில்.

டாலர், யூரோ, பவுண்ட் மதிப்பை பொறுத்து தான் இந்த தங்கத்தின் விலை நிர்ணயம் செய்ய படுகிறது.

டாலர், யூரோ, பவுண்டுக்கும் தங்கத்திருக்கும் என்ன சம்மந்த்தம்?

இருக்கே.  உலகம் முழுவதும் பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல்  தவிக்கும் கோடீஸ்வரர்கள்,  சும்மா பொழுது போக்கா தங்கத்தை வாங்கி வைத்து  கொள்வார்கள்.

அப்படி வாங்கும் போது தங்கத்தின் விலை உயரும்.   அப்படி வாங்கியவர்கள் தங்கம் வேண்டாம் டாலர் வாங்குவோம்  என்று டாலரை வாங்க நினைத்தால்,  டாலரை வாங்கினால் தங்கத்தின் விலை இறங்கும். 

மொத்தத்தில் தங்கத்தில் முதலீடு செய்யும் பணக்கார்கள் நினைத்தால் தங்கத்தின் விலை ஏறவே ஏறாது.

சரி... இந்த தங்கம் வாங்கிற விஷயம் இருக்கே,  அசந்தா ஆப்படிக்கிற கதை .  சிக்கினா சிட்டியை போடுற சமாச்சாரம்.

நீங்கள் உண்மையாக விழிப்புணர்வு உள்ளவர் என்றால்,  பாடு பட்டு உழைத்த பணத்தை, தங்கம் வாங்குறேன் பேர்வழி என்று,  யாரோ ஒருவரிடம் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டுமானால்,  916 முத்திரை பதித்த நகையை வாங்குங்கள். 

விலை குறைவு என்று தரமற்ற தங்கத்தை வாங்க வேண்டாம்.  10 கிராம் சுத்தமான தங்கம் 916 தங்கமாக மாற்றுவதற்கு ௦.70 கிராம்  காப்பரும்,  ௦.14 கிராம் வெள்ளியும் சேர்க்க படுகிறது.  இந்த அளவு கூடினால் தங்கத்தின்  தரம் குறைந்து விடும்.

ஏதாவது விழா காலம்  வந்தால் நகை கடை விளம்பரங்கள் வரும்.  அதில் எங்களிடம் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று யாராவது சொன்னால் அதை நீங்கள்  நம்ப வேண்டாம்.

செய் கூலி இல்லாமல்,  சேதாரம் கணக்கிடப்படாமல் யாராலும் தரமான தங்க நகைகளை தர முடியாது.  நம்ப வேண்டாம்.

கல் எடை சேதாரம் என்று புது யுத்தியை கடை பிடிக்கிறார்கள்.  அதாவது ஒரு பவுன் தோடு செய்ய சொன்னால்,  அதில் பதிக்கப்பட்ட கற்களின் எடையையும் சேர்த்து ஒரு பவுன் என்கிறார்கள்.  இது வாங்குவோருக்கு தான் இழப்பு.

அதனால் முடிந்த வரி கல் வைத்த நகைகளை வாங்க வேண்டாம். வாங்கி ஏமாற வேண்டாம். 

உலகில் தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்க முதலிடம் பெறுகிறது.  அமெரிக்கா இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் எடை  8 .133 .5 டன்.

இந்த வரிசையில் இந்தியாவிற்கு 12 ம் இடம்தான்.   இந்தியா வைத்திருக்கும்  தங்கத்தின் மொத்த எடை 557 .7 டன்தான்.

ஆனால் தனிநபர்கள் இருப்பு என்று பார்த்தால் இந்தியா தான் முதல் இடத்தில் இருக்கிறது.  நம் இந்தியா வைத்திருக்கும் மொத்த எடையை விட,  தனி நபர்களிடம் இருக்கும் தங்கம் பல மடங்கு அதிகம்.   

கடைசியாக ஒரு கொசுறு செய்தி.  கடந்த 2000 ஆண்டு முதல் இந்தியாவில் தங்கத்தின் விலை என்னவாக இருந்தது ஒரு அட்டவணை. 

ஆண்டு                             விலை ரூபாய்களில்
2000                                                 4474 
2001                                                 4579
2002                                                 5332
2003                                                 5718
2004                                                 6145
2005                                                 6900
2006                                                 9240
2007                                                 9995 
2008                                               12889
2009                                               15756
2010                                               19227
2011                                               25048   

இது இத்துடன்  முடிய போவதில்லை.   எதிர் காலத்திலும் விலை ஏற்றம் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். 


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...