Follow by Email

Monday, 23 April 2012

ஹெல்த் டிப்ஸ்

பப்பாளி பழத்தை பார்த்தால்...அப்பாடா... ரெண்டு துண்டு சாப்பிடலாம்ன்னு நாக்குல எச்சி ஊரும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் பார்த்தால் ஏதோ விஷசந்தை பார்ப்பது போல் பயந்து ஒதுங்குவார்கள்.

இதில் பயமோ, ஆசையோ....எந்த ரகத்தில் உள்ளவராக இருந்தாலும் உள்ளே வாருங்கள். உங்களுக்காக தகவல் காத்திருகிறது. 

பாருங்க.. நான் சிம்பிலாதான் சாப்பிடுறேன். இருந்தும் உடம்பு வெயிட் போடுது. என்னங்க செய்றது?

இதுதான் உங்க கவலையா? சரி விடுங்க. பப்பாளி பழம் எபோதும் உங்க வீட்டிலே இருக்கட்டும். அப்பப்ப எடுத்து ஒரு கட்டு கட்டுங்க. வெயிட் போடுற பிரச்சனைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம். 

பப்பாளியில் பல்வேறு வைட்டமின்கள் இருந்தாலும், பேராக்ஸ்நேஸ் என்ற தாது பொருள் இருக்கிறதாம். இதுதான் உடலில் தேங்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பை குறைக்க உதவுகிறது.

பொதுவா கொழுப்பு முதலில் அடிவயிற்று பகுதியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.  முதலில் லேசாக ஒரு தொப்பையின் துவக்கம் தெரியும். அதுதான் பூதாகாரமாக வளர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் எடையை போட துவங்குகிறது.

இந்த பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு பப்பாளி நல்ல அருமருந்து. 

அப்பறம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவே கூடாது.  உவ்வேன்னு உமட்டுராங்களே அது என்ன சம்மச்சாரம் என்பதை பாப்போம்.

கர்ப்பிணி பெண்களும், அல்லது தாய்மையை எதிர்நோக்கி இருப்பவர்களும் பப்பாளி பழத்தை சாப்பிடலாம். தவறேதும் இல்லை. 

ஆனால் ஒன்றிரண்டு துண்டுகளோடு நிறுத்தி விட வேண்டும். கூடுதலாக சாப்பிடும் போதுதான் உடல் வெப்பநிலை அதிகரித்து கர்ப்ப சிதைவு, அல்லது கரு உருவாகுவதில் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சரி... ஏதோ ஆசையில் கொஞ்சம் கூடுதலா பழத்தை சாப்பிட்டு தொலைச்சுட்டேன்  என்னங்க செய்றது?

கவலை வேண்டாம். உடனே ஒரு கப் பசும் பால் குடித்தால் உடல் வெப்பமாகுவதில் இருந்து  தடுத்து விடலாம்.

அடுத்து...ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். சிலர் சும்மாம்காட்டியும் தண்ணீர் குடிக்க முடியாதுன்னு விரதமாகவே இருப்பாங்க.

அப்படி பட்ட நபர்களுக்கு தான் கல்லு, பாறை, பாரங்கல்லு எல்லாம் உற்பத்தி ஆகுது.

நான் என்ன சொல்றேன்னு  உங்களுக்கு  புரியுதா?

கிட்டினியை சட்டினியாக்கும் கல்லு பிரச்சனை வருது இல்லையா? அந்த குறைபாடு உள்ளவர்கள் தினசரி பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லு பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல விலகும்.

நல்ல ருசியா இருந்துச்சு. மூக்கு முட்ட பிடிச்சுட்டேன். இப்ப எண்டானா செரிமானம் ஆகாம படுத்துது. வயிறு கடமுடான்னு கத்துது. என்ன செய்றது?

சரி.. விடுங்க.நாலைந்து பப்பாளி பழ துண்டை சாப்பிடுங்க. சரியாபோயிடும்.
செரிமான சக்தி பப்பாளிக்கு அதிகம். 

மலசிக்கலுக்கு வாழைபழம் மட்டும் இல்லை, பப்பாளிபழமும்  நல்ல மருந்து.

என்னதான் சோப்பு போட்டு கழுவினாலும் முகம் ஆயில் வழியுது. என்ன செய்யலாம்?

ஒன்னும் இல்லை. பப்பாளி பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து  குழாக்கி. அதை முகத்திலே தடவி காயவிட்டு பின் அலசுங்க. முகத்திலே இருக்கிற கரும் புள்ளி, ஆயில் பசை, எல்லாம் போயே போச்சு.  செய்து பாருங்க. 

No comments:

Post a Comment