ads

Wednesday, 25 April 2012

இன்டர்நெட் மோசடி

நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.  அசந்தா ஆழக்குழியில் தள்ளி, மண்ணை போட்டு மூடிட்டு போய்டுவாங்க போல இருக்கு. 

வலைதளத்தில் மோசடி நடக்கிறது என்பது பலருக்கு தெரியும். ஆனால் எனக்கே அந்த அனுபவம் வரும் என்று நினைக்கவில்லை.

என்னாச்சு இப்படி புலம்புறிங்கன்னு கேட்கிறிங்களா? சொல்லறேன் கேளுங்க. தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து வரும் நண்பர்களுக்கு தெரியும் என்னை பற்றி.

முற்றும் செய்ய கற்றுகொள் என்பது என் தாரக மந்திரம். எதை செய்தாலும் அதை 100 % சரியாய் செய்யனும்ன்னு நினைப்பேன்.  அப்படித்தான் இதுவரை செய்து கொண்டு இருக்கிறேன். 

மனித  வாழ்க்கையில் என்ன வேணும்?

வளர்ச்சி. 

இந்த வளர்ச்சியை பெறுவதற்கு முயற்சி என்பது முக்கியம். ஆகாயத்தில் கோட்டை கட்டினாலும் அஸ்திவாரத்தை பூமியில் போடணும் என்பது எனக்கு தெரியும். 

அதனால்  முன்னேற சிறு துரும்பு கிடைத்தாலும் அதை இறுக பிடித்து கொள்வது என் வழக்கம்.  தினம்தோறும் என் பிளாக்கில் நான் எழுதும்  கட்டுரைகளை நீங்கள் படிக்கிறீர்கள் என்பது தெரியும்.

இன்னும் நிறைய நண்பர்கள் jothidasudaroli .blogspot .com க்கு வரவேண்டும். என் பிளாக்கும் பிரபலம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு ஒரு நண்பர் கொடுத்த யோசனைதான் இது.

எது?

tamiltop10 .com என்று ஒரு வலை இருக்கிறது. அதில் போய் உங்கள் blog கை பதிவு செய்து கொண்டால்,  இன்னும் நிறைய பேர் பார்ப்பார்கள். பிரபலம் ஆகும் என்றார்.

ஆசை யாரை விட்டது. நானும் போய் பார்த்தேன். பதிவு செய்ய சொன்னார்கள்.  நானும் பதிவு செய்தேன். 

ஒரு கட்டுரையும் போஸ்ட் செய்தேன். அது அந்த பிளாக்கில் வந்ததா இல்லையா என்பது கூட கண்டு பிடிக்க முடியவில்லை.

என் மெயில் id போய் பார்த்த போது tamil top10 .com என்ற முகவரியில் இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது. 

அதற்கு கிழே ஒரு எச்சரிக்கை இருந்தது. இது tamil10 .com @gmail .com il இருந்து வந்த செய்தியாக இருக்காது என்று இருந்தது. 

என்ன இப்படிகூட நடக்குமா  என்ற  சந்தேகத்தில் போய் பார்த்தால் ஒரு உண்மை தெரிந்தது.  அது இதுதான்.

பிஷிங்கை புகார் செய்ய.

பிஷிங் என்பது ஒரு வகையான ஏமாற்று வேலை. கடவுச்சொல், அல்லது வங்கி கணக்கு எண் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை தர வைக்கவும், பணம் மாற்று தூண்டுதல், அல்லது தீங்கு விளைவிக்கும் மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவ வைத்தல் போன்ற முயற்சியாகும்.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி போலவே நடிப்பார்... என்று நீள்கிறது அந்த விளக்கம்.

உண்மையில் இந்த பெயரில் ஒரு வலை தளம் இருக்கிறது என்பது உண்மை.  அந்த வலைக்கு நான் அனுப்பிய மெயில் எப்படி இடம் மாறி போலியான இன்னொரு tamitop10 .com என்பவருக்கு போனது என்பது தான் கேள்வி.

இந்த தகவல் உண்மையான வலைதள காரருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.  அவர் வலைக்கு வரும் மெயில்கள் இடையில் திசை மாறி போலியான முகவரிக்கு போகிறது.

போலி முகவரியில் உள்ளவரும் மெல்ல தூண்டிலை விரிப்பார் போலிருக்கிறது.  உங்கள் வலையை நான் பிரபல படுத்த பணம் கட்டுங்கள்,  முதல் பத்து இடத்திற்குள் வர வைக்கிறோம்.

அந்த பணத்தை கிரிடிட் கார்ட் மூலம் செலுத்துங்கள் என்று சொல்லி, கார்டில் இருக்கும் மொத்த பணத்தையும் சுருட்டி விடுவார்கள் போல் இருக்கிறது.

பிஷிங்கை புகார் செய்ய என்ற பகுதில் போய் புகார் கொடுத்து விட்டேன். ஜஸ்ட் மிஸ் என்பது போல் கடைசி நேரத்தில் விழித்து கொண்டேன்.  இது போல் போலியான பல நிறுவனங்கள் நெட்டில் இருக்கிறது. விழிப்போடு இருங்கள்.

நான் நேர்மையான வழியில் தான் செல்வேனே தவிர பணம் செலுத்தி குறுக்கு வழியில் முன்னிலை பெற எனக்கு விருப்பம் இல்லை.  அவர்கள் உன்னையும் இல்லை. 

அன்பு நண்பர்களே கவனம். இதுபோன்ற  மோசடிகாரர்கள் நிறைய இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...