Follow by Email

Friday, 6 April 2012

ஏப்ரல் ஓன்று -முட்டாள் தினம் வந்தது எப்படி?

ஈரானில் இருந்து ஈராக்கிற்கு  ஒருவர் வழி தவறி போய்விட்டார். ஈராக்கின் எல்லை காவல் படை அவரை கைது செய்தது. பின்  கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள். 

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு என்ன தெரியுமா? 

 நீ உளவாளி. 

கைது செய்யப்பட்டவர் விளக்கம் சொல்ல முற்பட்டார். 

நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டியதில்லை. நீ குற்றவாளி  உன் குற்றத்தை  ஒத்து   கொள்.  உனக்கு தூக்கு தண்டனை தான்.  நீ பெரிய குற்றத்தை செய்ய துணிந்ததால்,  உன்னை துண்டு துண்டாக வெட்டி தான் தண்டனை கொடுப்பார்கள்.  

அதுவும் ஒரே நாளில் நடக்காது.  வாரம் ஒரு பாகமாக வெட்டுவார்கள். இதுதான் அவருக்கு அளிக்க பட்ட தண்டனை.

அவருக்கு தண்டனை அளிக்கும்  நாள் வந்தது. தண்டனையை நிறைவேற்றும் முன்,  அந்த அதிகாரி கேட்டார்.  இப்போது உன் ஒரு காலை மட்டும் வெட்ட போகிறோம். 

உன் கடைசி ஆசை என்ன என்பதை சொல்.

வெட்டப்படும் என் காலை என் சொந்த ஊரில் புதைக்க வேண்டும்.  அதற்கு ஆவன செய்ய வேண்டும். 

சரி .... என்றார் அந்த அதிகாரி.  

கால் வெட்டப்பட்டது.  அவர் விருப்பப்படியே அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பட்டது.   பின் அடுத்த வாரம்.  அவரின் ஒரு கை வெட்டப்பட்டது. 

மீண்டும் அந்த அதிகாரி கேட்டார்.  உன் விருப்பம் என்ன?  

முன் சொன்ன பதிலையே சொன்னார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.  இப்படியே அவரின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாய் வெட்டப்பட்ட பிறகு கடைசியில் அவர் தலை வெட்ட  பட வேண்டும். 

இப்போதும் அந்த அதிகாரி கேட்டார்.  உன் கடைசி ஆசை என்ன?

என் உடல் என் நாட்டில் புதைக்க பட வேண்டும்.  இதுதான் என் கடைசி ஆசை.

இப்பதானே உன் திட்டம் தெரியுது.  நீ பார்ட் பார்ட்டா தப்பிச்சு போயிடாலாம்ன்னு  நினைக்கிறியா உன் நாட்டிற்கு.  அதுதான் நடக்காது என்றாராம் அந்த அதிகாரி. 

இது எப்படி இருக்கு.  இப்படி முட்டாள் தனமாக யோசிப்பவர்களுக்கு என்றே இருக்கும்  நாள் தான், ஏப்ரல் 1 .

இந்த நாளில் நீங்களும் யாரையாவது முட்டாளாக்க முயற்சி செய்திருப்பிர்கள்.  உங்கள் வலையில் யாரவது சிக்கி இருக்கலாம்.  ஹையா ... ஏப்பரல் பூல் என்று நீங்கள் சிரித்திருக்கலாம்.  

சரி... அந்த நாளின் வரலாறு தெரியுமா?  தெரிந்தால் சந்தோசம்.  தெரியலையா இப்போ தெரிஞ்ச்சுகோங்க. 

முட்டாள் தினம் என்றில்லை.  வருஷம் முழுவதும் இப்படி எதாவது ஒரு நாள் வந்து கொண்டு தான் இருக்கிறது.   இதில் பெரிய விழேஷம் என்னன்னா ... இந்த நாளுக்கு யாரும் உரிமை கொண்டாடுவது இல்லை.

சரி... காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை.  அந்த வகையில் இந்த முட்டாள் தினம் வந்த காரணம் என்ன?  இதோ வரலாறு. 

நான் எப்படி சித்திரை ஒன்றை புத்தாண்டாக கொண்டாடுகிறமோ (சித்திரையா  தை மாதமா ) அதை போல் ஏப்ரல் ஒன்றாம் தேதியை ரோமானியர்கள் புத்தாண்டாக கொண்டாடினார்கள். 

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 25 ம் தேதியே ஆரம்பம் ஆகிவிடும்.  அதன் நிறைவு நாள் ஏப்ரல் 1 .

காலம் காலமாக கடை பிடிக்க பட்ட இந்த நடை முறையை அப்போதைய போப்பாண்டவரான 13 வது கிரகரி 1562 ம் ஆண்டில் மாற்றி அமைத்தார். 

இந்த மாற்றத்தின் படி ஜனவரி ஒன்றாம் தேதிதான் புத்தாண்டு வருகிறது.  ithai நாடு முழுவதும் அறிவிக்கவும் செய்தார்.  

ஆனால் காலம் காலமாக கடை பிடித்த நடைமுறையை மாற்றி புது நடை முறைக்கு மாற பலருக்கு மனம் இடம் தரவில்லை.  கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை  தூக்கி மனையில் வை என்ற கதையாக இது என்ன கூத்து என்று,  பலர் பழைய ஏப்ரல் ஒன்றையே புத்தாண்டாக கொண்டாடினார்கள் . 

இப்படி மாற மறுத்தவர்களை, மாறியவர்கள் முட்டாள்கள் என்றார்கள்.  இது தான் முட்டாள் தினமாக வந்ததற்கு முதல் காரணம்.  இது இப்படியே ரெக்கை முளைத்து பல நாடுகளுக்கும் பரவி விட்டது. 

ஓன்று வந்து விட்டால் அதன் பின்னால் ஆயிரம் கதைகள் பின்னாலையே வந்து விடுமே.  அந்த வகையில் முட்டாள் தினத்திற்கு என்று பல புனை கதைகள் இருக்கிறது.   அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. 

இந்த நடைமுறை வருவதற்கு முன்பே பிலிப்பை  என்ற மன்னனை அவரது அரண்மனை விகடகவி பந்தயம் ஒன்றை வைத்து, அந்த பந்தயத்தில் மன்னனையே  முட்டாளாகினாறாம்.  அந்த நாள் ஏப்ரல் ஓன்று.

முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவை சேர்ந்த மேரிலுயிசை  திருமணம் செய்து கொண்டார்.  அப்போது அந்த பெண்ணின் தோழிகள் உன்னை அவர் உண்மையாக திருமணம் செய்து கொள்ளவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்துள்ளார்  என்று என்றார்களாம்.

காரணம் திருமணம் நடந்த நாள் ஏப்ரல் ஓன்று.   இப்படி சரித்திரத்தின் பக்கங்களில் பல கதைகள் உலா  வருகிறது.  

No comments:

Post a Comment