பொதுவா கன்னி ராசியில் பிறப்பதற்கு புண்ணியம் செய்திருக்கணும்.
ஏன்?
கற்ற கல்வியும், பெற்ற ஞானமும் யாருக்கு முழுமையாக பயன் படுகிறது என்று பார்த்தால், சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கன்னி ராசியே முன்னிலை பெரும்.
உங்கள் ஆற்றலும் அறிவும் போற்றுதலுக்கு உரியது. வெற்று கோழத்தையும், வீர வசனத்தையும் நம்பாமல், காரியத்தில் கண் வைக்கும் காரியவாதிகள்.
அறிவாளிகள், அறிவுஜீவிகள், திறமை, திட்டமிடல் நிறைந்தவர்கள். சுயநலமும் பொது நலமும் சரிக்கு சரி. படிப்பு என்பது நடிப்பல்ல. உயிர் துடிப்பு. கண்டதை தின்றால் குண்டாகலாம். கண்டதை படித்தால்?
பண்டிதனாகலாம். நீங்கள் பல்கலை வித்தகர். இல்லை... இல்லை.. பல்கலைகழகம். மனதை ஆராய மருத்துவ கருவி எல்லாம் தேவை இல்லை. துல்லியமாக எடை போடுவீர்கள்.
எல்லாம் தெரிந்தவர்கள். வெறும் பள்ளி படிப்போடு நின்றவராக இருந்தாலும், புள்ளி வைத்து பேச ஆரம்பித்தால் வெல்வது கடினம்.
எந்த முயற்சி இருப்பினும் சொந்த முயற்சி இல்லாவிட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதவை. அதிமேதாவியான நீங்கள் இதை உணர்ந்ததாலோ என்னவோ சுய முயற்சி என்பது மற்றவர்களை விட அதிகம்.
பழமைகளை விரும்பினாலும், புதுமையானவர்கள். அதனால் கானா பாடலும் பிடிக்கும், காதல் பாடலும் பிடிக்கும்.
உண்மையான அன்பை மற்றவர்களுக்கு கொடுத்து பார், அதைவிட அதிகமான அன்பை அவர்களிடம் இருந்து பெறுவாய் என்பது உங்கள் சித்தாந்தம். ஆனாலும் கலகலன்னு பேசுறதும் நீங்கதான். தொட்டால் சிணுங்கி மாதிரி கவுந்தடிச்சு படுத்துகிறதும் நீங்கதான்.
தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்பதில் கறார் பேர்வழிகள். அதனால் மற்றவர்கள் சுயநலவாதிகள் என்று சொல்வதுண்டு. சொன்னால் சொல்லிவிட்டு போகட்டுமே. அதைப்பற்றி நீங்கள் அதிகம் அலட்டி கொள்வது இல்லை.
கட்டான உடல்வாகு இருக்கும். கருப்பாக இருந்தாலும் கலையான தோற்றமும் பெற்றுருப்பிர்கள். வயது முதிர்ந்தாலும் கூட தோற்றத்திற்கும் வயதிற்கும் இடைவெளி அதிகம்.
என்றும் பதினாறு வரம் பெற்ற மார்கண்டேயன் மாதிரி இளமை ததும்பும் உடல்வாகு பெற்றவர்கள். சில சமயம் வறட்டு பிடிவாதமும் நிறைந்தவர்கள்.
எப்படியோ காலத்தை கழித்து விட்டு, கண்ணை மோதினால் சரி என்றிராமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்கள்.
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள். மற்றபடி அழகை ரசிப்பவர்கள், அழகை ஆராதிப்பவர்கள், உல்லாசத்தை ஒரு கண்ணாகவும், உற்சாகத்தை மறு கண்ணாகவும் நினைப்பவர்கள். இதுதான் என் கணிப்பு.
எப்படியோ காலத்தை கழித்து விட்டு, கண்ணை மோதினால் சரி என்றிராமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்கள்.
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள். மற்றபடி அழகை ரசிப்பவர்கள், அழகை ஆராதிப்பவர்கள், உல்லாசத்தை ஒரு கண்ணாகவும், உற்சாகத்தை மறு கண்ணாகவும் நினைப்பவர்கள். இதுதான் என் கணிப்பு.
No comments:
Post a Comment