Follow by Email

Monday, 12 March 2012

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

இது பட்டுகோட்டை பிரபாகர் எழுதிய கவிதை.   வரிகள் மாறி இருக்கலாம். நான் படித்து பல வருடங்கள் ஆகி விட்டது.  கவிதை கிழே.

அரசே இவன் திருடினான் 
கையை வெட்டு 
அரசே இவன் கொள்ளை அடித்தான்
அவன் காலை வெட்டு 
அரசே இவன் கற்பழித்தான்
அவன் தலையை வெட்டு 
அரசே இவன் காதலித்தான் 
 அப்படியா 
அழைத்துவா அவனை...
எங்கே எனக்கும் கற்று கொடு 

காதல்.... இதயங்களை மீட்டும் இனிய வார்த்தை.  வைரமுத்து அழகாக சொல்லுவார்.  எப்படித்தான் குடை பிடித்து கொண்டிருந்தாலும், ஏதாவது ஒரு ஓரத்தில் நம் உடையை நனைத்து விட்டு செல்லும் மழையை போல், இந்த காதல் எல்லா மனிதரையும் எதாவது ஒரு சமயத்தில் ஒரு உரசு உரசிவிட்டுத்தான் கடந்து சென்றிருக்கும்.   

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த காதல் அனுபவத்தை கடந்தே வந்திருப்பான்.  காதல் என்ற உணர்வில் அடிபடாமல் யாரும் இந்த பூமியை விட்டு தப்பி போக முடியாது.

உண்மைதான்....

காதலிப்பது சரி... காதலிக்கபடுவதர்க்கு என்று சில தகுதிகள் இருகிறதே அது தெரியுமா?

ஆண்கள் காதலிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம்.  ஆனால் ஒரு பொண்ணு காதலிக்க பொதுவான அம்சம் உண்டு.  அனைத்தும் அறிந்த அரசியல்வாதி மாதிரி,  மதி நுட்பத்தோடு அணுகும் பண்பு பெண்களுக்கே உண்டு.

 அதனால்தான்  பெரும்பாலான ஆண்கள் காதல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த தெரியாமல் தோல்வியை தழுவுகிறார்கள்.

பொதுவாக காதலுக்கு என்று ஒரு களம் வேண்டும். களம் என்பது பார்க்க, பழக, பேச... ஒரு சந்த்தர்ப்பம் வேண்டும்.   அதிகபட்ச காதல் அருகாமையில் இருக்கும் போதுதான் ஆரம்பம் ஆகிறது.

காதல் கோட்டை மாதிரி காதல்,  எப்போதாவது, எங்கேயாவது, ஆரம்பம் ஆகலாம்.

ஆனால் காதலிக்க.... ஒரு களம் வேண்டும்.  அது  பள்ளிகூடம்,  காலேஜ், அலுவலகம், பக்கத்து வீடு இப்படி ஏதாவது ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும்.

சரி உங்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வருகிறது என்று வைத்து கொள்வோம். பொண்ணை பார்த்ததுமே மனசு பச்சை கொடி காட்டுது.   உடனே காதலை சொல்லலாமா?

கூடவே கூடாது.  அப்படி சொன்னால் நிச்சயம் ஒர்க்கவுட் ஆகாது.  அதுக்கு சில  மந்திர, தந்திர, எந்திர உத்திகள்  இருக்கிறது.   அதற்க்கான டிப்ஸ் இதோ.

டிப்ஸ் 1 

எப்போதுமே கலகலப்பாக பேசும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். எப்போதும் மூடு அவுட்டான மாதிரி மூஞ்சை தூக்கி வந்சுகிட்டு இருந்தால் சரியாய் வராது.  

அதுக்காக ஜோக் அடிக்கிறேன் பேர்வழின்னு .....அரைச்ச மாவையே அரைக்காம, அறுவை ஜோக் அடிக்காம பேசி அசத்துனா முதலில் உங்க கூட முகம் கொடுத்து பேச ஆரம்பிக்கும்.  

டிப்ஸ் 2 

பொதுவா பொண்ணுங்க அன்பு பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க.   என்னதான் வசதியான வீட்டில் பிறந்து இருந்தாலும், தன்னை கட்டிக்க போறவர்  தன்னை எப்படி பார்த்துக்குவார் என்பதில் குறியா  இருப்பாங்க.

அதுனால அவங்க மேல உங்களுக்கு அதிக அக்கறை இருக்கு என்பதை புரிய வைக்கணும்.

எப்படி?

அந்த பொண்ணு வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள் வரலாம், சிக்கல்கள் இருக்கலாம்,  குறைந்தபட்சம்  அதை தீர்க்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

அது எப்படிங்க. அந்த பொண்ணுதான் வாய் திறந்து எதையும் சொல்றது இல்லையே.   எப்படி தெரிஞ்சுகிறது.

வாய் திறக்காத பொண்ணா இருந்தாலும் வரவழைக்க ஒரு வசிய மை இருக்கு.  

யாரா இருந்தாலும் கவலையா இருக்கும் போது,  முகத்திலே ஒரு சோகம் இருக்கும்.

 என்னப்பா ஒரு மாதிரியா இருக்கே?  ஒரு வார்த்தையை வீசி பாருங்கள்.

ஒன்னும் இல்லை.  நான் நல்லாத்தான் இருக்கேன். - இது அந்த பொண்ணு.

உன்னை எனக்கு தெரியாதா.  இயல்பா இருந்தா எப்படி இருப்பேன்னு எனக்கு தெரியும்.   இப்போ உன் மனசுல என்னமோ இருக்கு.  பிடிக்கலைனா சொல்லவேண்டாம் என்று சொல்லை பாருங்கள்.

தன்னை புரிஞ்சுக்கிற ஆணின் இந்த அணுகு முறைதான்,  மனதை திறக்க உதவும் மந்திர  சாவி.  அந்த பெண் அப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை என்றாலும்,   உங்களை பற்றிய ஒரு அழுத்தமான பதிவு அவள் மனதில் வந்துவிடும்.

டிப்ஸ் 3 

இது ரொம்ப முக்கியம்.  அந்த பொண்ணுகிட்டே பிடிச்ச விஷயங்கள் எத்தனையோ இருக்கலாம். அதை பாராட்டனும்.

அதை  விட்டுட்டு,  உனக்கு அது நல்லா இருக்கு ,  இது நல்லா இருக்குனு அவள் உடல் பாகத்தை குறிப்பிட்டு  பேசவே கூடாது.  அப்படி பேசுகிற ஆள் நிச்சயம் நல்லவன் இல்லை என்கிற முடிவுக்கு வர வைக்கும்.  அதனால் கண்ணியம் ரொம்ப அவசியம்.

டிப்ஸ் 4

உங்களுக்கு பிடிச்சவங்க, ரொம்ப வேண்டியவங்க என்று நிறைய பொண்ணுங்க இருக்கலாம்.  ஆனால் காதல் வந்த பொண்ணுகிட்டே அவங்களை  பற்றி அதிகம் பேசகூடாது.

கூட இருக்கும் போது,   பக்கத்திலே இருக்கிற பொண்ணை பார்த்தாலே பத்திகிட்டு வரும்.  அதனால் எந்த பொண்ணை பத்தியும் பேசுறது இல்லைன்னு சத்தியம் செய்யணும்.  இது உங்க மனசுக்குள்ள தான். 

எதிர்லே இந்திர லோகத்து பொண்ணுங்க வந்தாலும் ஏதும் தெரியாத மாதிரியே இருக்கணும்.

அந்த பொண்ணு நினைக்கும் அடடா ரொம்ப நலவரு..........  இதை நீங்க கடை பிடிக்கவில்லை என்றால்,  காதல் பூ காம்புலேயே கருகி போய்டும்.

டிப்ஸ் 5 

பொதுவா குடும்ப பாசம் உள்ளவங்களை பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.   அதுக்காக எங்க அம்மா சொல்றதுதான் வேதம்,  அப்பா சொல்றதுதான் சாஸ்த்திரம்ன்னு பீலா விட்டா,  சொந்தமா முடிவெடுக்க தெரியாத ஆள்.  நாளைக்கு அம்மா பேச்சை கேட்டுகிட்டு நம்மை அம்போன்னு விட்டுடுவார்ன்னு யோசிக்கும்.

அதனால் பாசம் இருக்கிறதை சொல்லணும்.  அது ஒவ்வார் டோசா போக கூடாது

டிப்ஸ் 6 

அப்பறம் சம்பாத்தியம் புருஷ லெட்ச்சனம்.  நீங்க என்னதான் விழுந்து விழுந்து லவ் பண்ணினாலும்,  சம்பாதிக்க துப்பில்லாத ஆம்பிளையை பொண்ணுங்க விரும்ப மாட்டாங்க.

நிலையான வேலை, நிரந்தர வருமானம் கண்டிப்பா வேனும்.  பொருளாதார பாதுகாப்புல பொண்ணுங்க ரொம்ப கெட்டி. குறைந்த பட்ச்சம் படிப்பாவது இருந்தால் நம்பிக்கை வரும்.

இதெல்லாம் கடை பிடிச்சா...  கண்டிப்பா அந்த பொண்ணு மனசுல இடம் பிடிக்கலாம்.

எனக்கு தெரிந்த வரை காதல் மூன்று வகைதான் இருக்கு.

1 .  பாமரத்தனமான காதல்.
2 . பணக்காதல்
3 . பக்குவ காதல்.

பாமரத்தனமான காதல்

இது ஒன்னும் இல்லை.  கண்டதும் காதல் வர்றது.  ஆளு கொஞ்சம் மூக்கும் முழியுமா இருந்தால்  போதும்,  காதல் வந்துடும்.  என்ன ஏதுன்னு யோசிக்கிறது இல்லை.  வலையில் விழுறது.

பணக்காதல் 

இதுக்கு விவரம் வேண்டியது இல்லை.  வசதியா வாழ ஒரு வழி தெரிஞ்ச்சா போதும்.  பத்திக்கும்.

பக்குவ காதல் 

இதுதான் நல்ல காதல்.  அலசி ஆராய்ந்து கடைசியா ஒரு முடிவு எடுக்கிறது.  புரிந்து வருகிற காதல்.

ஓகே டிப்ஸ் போதுமா...ஜமாய்ங்க.     

No comments:

Post a Comment