ads

Thursday 1 March 2012

சிந்திக்க சில நிமிடம்

ஆடு ஊடாடிய காடு 
அதர்மன் உறவாடிய வீடு
உழுது அறாத வயல்
எழுதி பார்க்காத கணக்கு 
அடிக்கடி அப்பன் விட்டுக்கு போகும் பெண்
இது எதுவமே சரியாக வராது.

வெள்ளாடு இருக்கே ... ஒரு தோட்டத்துக்குள்ளே நுழைஞ்சா அந்த தோட்டத்தையே அழிச்சுடும்.   

கெட்ட சிந்தனை உள்ளவன் ஒரு வீட்டில் பழகினால் எப்படியாவது அவர்களுக்கு தீங்கிழைத்து விடுவான்.

விவசாயம் செய்றோம்.  முதலில் என்ன செய்யணும்.  வயலை உழனும்.  கலை புல்லின் வேர் அறுந்து போகிற அளவிற்கு ஆழமா உழுது பின் விதை தூவனும்.

அப்பத்தான் விவசாயம் நல்லா இருக்கும்.

அது மாதிரி எந்த செலவாக இருந்தாலும் அதை எழுதி பார்க்கணும்.  அப்பத்தான் வரவு செலவு சரியாய் இருக்கும்.  

சில பேர் நிறைய சம்பாதிக்கிறேன், ஆனால் சேமிக்கவே முடியலைன்னு புலம்புவாங்க.   அவங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?  அவர்களின் அன்றாட செலவுகளை எழுதி பார்க்கணும்.  

ஒரு டி குடிச்சாலும் அந்த கணக்கையும் எழுதுங்க.  மாதம் முடிஞ்சதும்  அந்த கணக்கை பாருங்க.  இதுல எது தேவையான செலவு,  எது தேவை இல்லாத செலவுன்னு பாருங்க.

அதில் தேவை இல்லாத செலவை இந்த மாதம் செய்ய கூடாதுன்னு ஒரு  முடிவுக்கு வாங்க.  செலவு குறையும். 

அப்பறம்.... ஒண்ணான் தேதி சம்பளம் வாங்குறிங்க.  உங்க முதல் செலவு என்னவாக இருக்கும்.

இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.  இனிமேல் உங்க முதல் செலவு சேமிப்பா இருக்கணும்.  

புரியலையா... மாதம் 100 . 200  அது என்ன தொகை என்பது உங்க விருப்பம்.ஆனால் கட்டாயம் உங்க வங்கி சேமிப்பு கணக்குல போட்டே ஆகணும்னு ஒரு முடிவுக்கு வாங்க.  

இது அவசர தேவைக்கு போய் எடுக்குறது இல்லை.  அவசிய பட்டா மட்டும் எடுக்கனும்னு ஒரு முடிவுக்கு வாங்க.  உங்க கிட்டே ஒரு சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும்.  சரியா? 

ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போகுது.  அப்பா வீட்டு சிந்தனை இருக்கும்தான்.  புதிய இடம், புதிய சூழ்நிலை, புதிய நபர்கள்,  அது பழகிக்க கொஞ்ச நாள் ஆகும் தப்பில்லை.  

ஆனால்...  சும்மா சும்மா எங்க அப்பா வீட்டுக்கு போறேன்னு ஒரு பொண்ணு போனா.... அது சரியாய் வராது. 

ஏன்னா.... பொண்ணு பஸுல போயிருக்கும்.  அந்த களைப்புல வீட்டுக்கு போகும்.  பொண்ணோட அம்மா பார்பாங்க.... என்னம்மா.. ஒரு மாதிரியா இருக்கே.  உன் மாமியார் எதுவும் சொன்னாளா.  

இல்லைம்மா... 

இருந்தாலும் கவனமா இரு.  நான் கல்யாணத்தப்பவே  கவனிச்சேன்.  அது கொஞ்சம் சிடு முஞ்சு பொம்பளை.  எதாவது சொன்னா இடம் கொடுத்துடாதே.  வெடுக்குன்னு கேட்டு விட்டுடு.  

உன் புருஷன் எப்படி?

உன் பேச்சை கேட்குறாரா... இல்லை... அம்மா பிள்ளையாவே இருக்காரா? இப்படி எதையாது ஒன்னை சொல்லி அந்த பொண்ணு மனசை கலைச்சு விட்டுவாங்க.  

அதுனால புகுந்த விட்டுக்கு வந்த பொண்ணு, பொறந்த வீட்டுக்கு போகணும்னா ஒரு காரணம் இருக்கணும்.  ஆரம்பத்திலே சரி.  அப்பவும் விட்டுக்கார் இல்லாமல் தனியா போகவே கூடாது.  அப்ப தான் அந்த பொண்ணு ஒழுங்கா குடும்பம் நடத்தும்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...